செவ்வாய், 24 டிசம்பர், 2019

பயணங்கள்

பயணம் என்றாலே பிடிக்காதவர்கள் உண்டா? 
பேருந்தின் ஜன்னல் ஓர பயணம்..
தொடர்வண்டியின் வளைவுகளுடன் பயணம்..
இருசக்கர வண்டியின் இரவு நேர பயணம்..
நான்கு சக்கர வண்டியின் நெடுந்தூரப் பயணம்..
இருகால் துணையோடு இருகரங்களை இணைந்தபடி  மெல்லிய பயணம்..
குழந்தையின் தத்திதவழும் பயணம்..
ஆகாயத்தில் மேகத்தினுள் நுழைந்தபடி இன்ப பயணம்..
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்..
ஏனென்றால் பயணம் என்பது பிறப்பில் தொடங்கி மரணம் வரை விடைத் தெரியாமல் போகும் ஒரு வழியாகும்..
எனவே போகும்வரை இரசித்து கொண்டே செல்வோம் நமது பயணங்களை ..
பயணங்களை அனுபவத்துடனும் பயனுடவும் சென்றிடுவோம்..வாழ்ந்திடுவோம்..

வெள்ளி, 20 டிசம்பர், 2019

சிறுபஞ்சமூலம்

சிறுவழுதுணை
நெருஞ்சி
சிறுமல்லி
பெருமல்லி
கண்டங்கத்திரி

திருக்குறள் காட்டும் காதல்

கண்ணுள்ளிற் போகார் இமைப்பிற் பருவரார்
நுண்ணியர் எங்காத லவர் 

இயற்கை

மலைக்குப் போர்வை போர்த்தி விட்டது  மேகம்
தாலாட்டுகின்றது  மழை 

வியாழன், 19 டிசம்பர், 2019

காலம்

ஒரு சில நேரங்களில்
ஒரு சில தருணங்களில்
எதிரி நண்பனாகவும்
நண்பண் எதிரியாகவும்
மாற்றிவிடும்

பெண்

மகளிருக்குத் தாய்மை ஒரு பொன்விலங்கு.

விலை பேசாதே

வரதட்சணை
என்ற பெயரில்
பெண்களை
விலைபேசி
விற்பதை நிறுத்திவிட்ட
அற்புத பூமி வேண்டும் 

புதன், 18 டிசம்பர், 2019

படித்ததில் பிடித்தது

"பருத்த  தேங்காயைத் திருகிப் பிட்டு செய்து
  பகற்படத்தை உருவாக்கி
  திருத்தமாகவே  தின்றால்
  இருவேளை  வயிற்று வலி
  தீருமென்றே கும்மி  அடியுங்கடி "

உள்ளுக்குள் புதையல்

நமக்குள் இருக்கும் சுரங்கங்கள் அற்புதமானவை. அவற்றை அன்பெனும் விளக்கு கொண்டு, கனியெனும் கைச்சுடர் கொண்டு,  பணிவென்னும் பார்வை கொண்டு தேடினால் அவை புலப்படும். நம் வாழ்வு திடப்படும்

வெற்றி வாிகள்

இந்த   நிமிடத்தில்  வாழ்க்கை  எவ்வளவு

கடினமாக வேண்டுமானாலும் தொியலாம்

ஆனால் செய்வதற்கும் வெல்வதற்கும்

ஒவ்வொரு நொடியும் ஏதேனும் ஒன்று

இருந்து கொண்டேதான் இருக்கிறது.

                          -ஸ்டீபன் ஹாக்கிங்.

இணையதளம்

பொருள் தேடி சென்றவரையும்
கரை தாண்டி சென்றவரையும்
கப்பலில் கடப்பவரையும்
விண்வெளியில் மிதப்பவரையும்
வீட்டினிலே இணைக்கும்
இன்பத்தினை சுமக்கும் தளமே
இணையதளம் 

செவ்வாய், 17 டிசம்பர், 2019

கலாம் பொன்மொழி

லட்சியத்துடன் வாழவேண்டும்
உயரப் பறந்துகொண்டே இருக்கவேண்டும்
அதனையே இலட்சியமாகக் கொள்ளவேண்டும்

உளியின் வலி

உளியின் வலியாலே
உயிா்த்தெழுந்தன
உயிா் சிற்பங்கள்

அட்டமாசித்திகள்

1.அணிமா
2.மகிமா
3.லகிமா
4.கரிமா
5.பிராத்தி
6.பிரகாமியம்
7.ஈசாத்துவம்
8.வசித்துவம்

குடும்பப் பெண்

சிறு பெண்ணைச் சிறைபிடித்துத்
தாலி  என்ற  விலங்கிட்டு
சமையலறையில் சிறை வைத்து
வேலையென்ற தண்டனைகள்
விஷ நாக்கு சவுக்கடிகள் 

புறமும் - அரிசியும்

ஊன்சோறு
கொழுன்சோறு
நெய்சோறு
புளிசோறு
பால்சோறு
வெண்சோறு
உளுத்தண்சோறு
இவை புறநானுற்றில் குறிப்பிடப்பட்டுள்ளன .

தேர்வு

மகிழ்ச்சி சோகம்
இரண்டையும் ஒரே நேரத்தில்
தருவது

திங்கள், 16 டிசம்பர், 2019

இனிமையான நினைவுகள்

வார்த்தை சொல்லமுடியாத நொடி
உன்னைப் பார்த்தபோது எனக்குள் ஏற்பட்ட வலி
கால்கள் கூறுகின்ற வார்த்தையைக்
கண்கள் கேட்க மறுத்தது
அத்தனைபேர் இருந்தும்
உனக்கும் எனக்கும் ஒரு தனிமை
நீ என்னைப் பார்க்கவில்லை
நான் அந்த இடத்தில்
உன்னை மட்டுமே பார்த்தேன்
பார்த்ததை வெறுக்க முடியவில்லை
நினைத்ததை வெறுக்க முடியவில்லை
இதிலிருந்து மீள்வதற்கும் வழி இல்லையே

-கன்னிகா, இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்.

தேடியது கிடைக்குமா

கண்கள் தேடியபொழுது
பார்வை கிடைக்கவில்லையே
கால்கள் நடக்கும்போது
பாதை தெரியவில்லையே
பேசத் துடித்தபோது
வார்த்தை தோன்றவில்லையே
எண்ணம் மாறிவிட்டது
மனம் மட்டும் மாறவில்லையே

-கன்னிகா, இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்.

கதிரவன்

மலர்கள் பூக்கத் தொடங்கின
சேவல் கூவத் தொடங்கியது
இருள் மறையத் தொடங்கியது
உலகம் விழிக்கத் தொடங்கியது
செங்கதிரவன் வருகிறான்

-கன்னிகா, இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்.

பெண் ஒருத்தி

தேன் வடியும் மலரைச் சூடி
செங்கதிரவனைப் பொட்டாக வைத்து
கார் இருள் மேகங்களைக் கண்களுக்கு மையாகத் தீட்டி
விண்மீனைத் தோடாக அணிந்து
சங்குக்கழுத்தில் முத்துகளைச் சேர்த்து
வானவில்லை வளைக் கரங்களில் பூட்டி
செந்தாமரைபோல் கன்னம் சிவக்கப்
பெண்னொருத்தி வந்தாள்

-கன்னிகா, இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்.

சிவபெருமான்

காலத்தைக் கண்ணில் காட்டியவன்
கதிரவனுக்கே ஒளியைக் கொடுத்தவன்
கங்கையைச் சடைமுடியில் வைத்திருப்பவன்
இதயத்தில் குடிகொண்டவன்
வாழ்க்கையின் அர்த்தத்தைத் தெரிந்தவன்
வானத்தைவிட உயர்ந்தவன்
நெடிய கூந்தலை உடையவன்
நஞ்சினை உண்டு தேவர்களைக் காத்தவன்
நாகத்தை மாலையாகச் சூடியவன்
உமையம்மைக்கு இடது பாகத்தை அளித்தவன்
உள்ளத்தில் சிறந்தவன்
அன்பால் இணைந்தவன்
அறிவில் உலகைவிடப் பெரியவன்
அவரே நம் எம்பெருமான்

செவ்வாய், 10 டிசம்பர், 2019

வல்லவர்கள்

தமிழில் வெண்பா பாடுவதில் புகழ் பெற்றவர்கர் புகழேந்தி
விருத்தம் பாடுவதில் வித்தகர் கம்பர்
அந்தாதி பாடுவதில் உயர்ந்தவர் ஒட்டக்கூத்தர்
வசை பாடுவதில் வல்லவர் காளமேகப்புலவர்

தமிழில் உள்ள மூன்று மணிகள்

பண்டிதமணி - கதிரேச செட்டியார்
கவிமணி - தேசியவினாயகம்பிள்ளை
ரசிகமணி-  டி.கே.சிதம்பரமுதலியார்

வட்டாட்டம்

வட்டாட்டம்  என்பது தரையின் மேல் கிழிக்கப்பட்ட கட்டத்தில் நெல்லி வட்டத்தைப் போட்டு ஒரு  கட்டத்திலிருந்து மறு கட்டத்திற்க்குத் தள்ளி விளையாடுவர். இவ்விளையாட்டில் குறிப்பிட்ட இடத்தை அடைந்தவர்களே வெற்றி பெற்றவர்கள்  ஆவர். 

தமிழில் உள்ள வேதங்கள்

திராவிட வேதம் - திருவாய்மொழி              
வேளாண்வேதம் - நாலடியார்                        
தமிழ் வேதம் - திருமந்திரம்                            
சைவர் தமிழ்வேதம் - திருமுறைகள்

தந்தை

உள்ளே எத்தனை கஷ்டங்கள் இருந்தாலும்
வெளியில் சிரிக்கும் அருமையான ஓர் உறவு
பெண்
வாழ்க்கையிலும் சரி
வார்த்தையிலும் சரி
எதையும் தாங்குபவள்
அதிகாரம்
என்னை தீவிரவாதியாக
மாற்றும் ஓர்
ஆயுதம்

அம்மா            
தாலாட்டு  நீ  பாட 
ஒரு  நொடியும்  நேரமில்லை 
தாய்  மடியில்  நான்  உறங்க 
சொந்தங்கள் விட்டதில்லை 
உன்னுடன் இருக்கையில் 
உனதருமை விளங்கவில்லை 
உன்நிலை வந்தவுடன் 
உணர்கிறேன் இவ்வுலகில் 
உனக்கு நிகர் 
யாருமில்லை......!
காலம்
தோழி கூட
எதிரியாகி விடுவாள்
தாய் மொழி
சிந்தனை எனும் சிற்பத்தை தாய் மொழி  எனும் உழியால் மட்டுமே செதுக்க முடியும்

திங்கள், 25 நவம்பர், 2019

கடினம்

கடினம் ,எது கடினம்?
என்னடா வாழ்க்கை
என்று புலம்புவதா...
அல்ல என்னால் முடியும்
என்று சொல்வதைவிட
செய்து பிறரை மெய்ச்
சிலுக்க வைப்பதா...
எது கடினம்...




வற்றி போனால் தான், கிணற்றின் அருமை தெரியும்  - பிராங்க்ளின் 


வாழ்கையில் வெற்றி பெற தகுதி  அவசியம் அவை                                                                               த-தன்னம்பிக்கை          கு -குறிக்கோள்            தி-திட்டமிடல் 
கல்விதரும் உயர்வு                                            கல்வியும் அறிவும் பெறுவது மனிதன் மற்றவர்களுக்கு தொல்லைக்கொடுக்காமல் மனிதத் தன்மையோடு வாழவே!                                                                     பெரியார்.                    
படித்ததில் பிடித்தது                                           தத்துவஞானி சாக்ரடீஸிடம் ஒருவர் எது அழகு என்று ஒரு கேள்வி கேட்டார். அதற்கு சாக்ரடீஸ் ஒரு பானையில் உணவு இருக்கின்து. அதை எடுக்க உதவுவது எது?தங்கக் கரண்டியா!மரஅகப்பையா...எது பயனுள்ளதாக இருக்கின்தோ அதுவே அழகு...!என்று பதிலளித்தார்.
 ஆயிரம் சந்தோஷம் இருந்தாலும் என் கண்கள் ஏனோ என் அம்மா அப்பாவை தேடுகிறது

செவ்வாய், 19 நவம்பர், 2019

கண்ணாமூச்சி ரே ரே

கண்ணாமூச்சி ரே ரே
கண்டுப்புடி யாரு...
உன் வாழ்வில் 
நல்லவர் யார்?
தீயவர் யார்?
உண்மை எது .
தீமை எது...
அனைத்தையும்
அறிந்திடு...
அன்பின் அடையாளமாக
உருவெடு.....
கண்ணாமூச்சி ரே ரே.....

சனி, 16 நவம்பர், 2019

விதை

விடாமல் முயற்சி செய்.....
விடியலுக்கு காத்திருக்காதே...
திணராமல் பயிற்சி செய்...
தயங்கி பின்வாங்கி 
விடாதே..
ஏன் எனில் ..
இங்கு எவரும் நம்மை 
வளர்த்துவிட மாட்டார்கள்....
நாமே தான் வளரவேண்டும்
அதனால் நீ...
வளர்ந்து பிறை வளர வைக்கும்....
விதையாக உருவெடு

வியாழன், 7 நவம்பர், 2019

புதன், 6 நவம்பர், 2019

அன்பர்கள் இல்லம்

ஆதரவற்றோருக்கு அன்பு இல்லம்
வாழ்க்கையை தானாக வாழக் கற்றுக் கொள்ள வாய்ப்பளிக்கும் இல்லம், உறவினர்கள் அனைவரையும் எதிர்பார்த்தும் ஏற்படுத்தியும் மனவலிமையை வலுவாக்கும் வல்லமை கொண்ட இருப்பிடமே அன்பர்கள் இல்லம், வாழ்க்கையே ஒரு போராட்டமாய் அப்போராட்டத்தில் படைவீரர்களாக தடைகளை அறுத்தெறியும் இவர்களே நமக்கு உண்மையான ஆசான்,வாழ்க்கையை வாழ கற்றுக் கொடுப்பதற்கு.

இன்றைய இளைஞர்களின் மனநிலை.....

பூ என்பது
ஓரெழுத்து...
அதை சூடும் பெண்ணிற்கு
இரண்டெழுத்து...
அதனால் வரும் காதலுக்கு
மூன்றெழுத்து....
காதலால் ஏற்படும் மரணத்திற்கு
நான்கு எழுத்து ...
இது தான் இளைஞர்களின்
தலையெழுத்து....

திங்கள், 4 நவம்பர், 2019

காட்சி

திரைபடங்களை போன்றதே
நம் வாழ்வு...
தினந்தோறும் காட்சிகள்
ஏராளம்....
அதில் வில்லனை‌ போல்
பழிவாங்கும் எண்ணம் இல்லாமல்
காமேடியனை போல் அனைத்தையும்
நகைச்சுவையாக எண்ணி வாழவேண்டும்.....
அப்போது தான் வாழ்க்கை அழகாகும்

வெள்ளி, 1 நவம்பர், 2019

நம் குடியானவன்

நம் நாட்டில் இருக்கும் ஒரு சாதாரணக் குடியானவன் கூட மேலை நாட்டில் உள்ள நன்கு கற்ற சமய அறிஞனை விடப் பல விதங்களில் மேலானவன்.
-விவேகானந்தர் கும்பகோணம் சொற்பொழிவில் கூறியது.

ஜெயகாந்தனின் சுமைதாங்கி


ஒரு சிறுவன் விபத்தில் இறந்துவிட்டான். காவல்துறையைச் சேர்ந்த ஒரு நண்பர் விபத்தில் இறந்தது யாரென்று அறியாமல் திணறினார். வீடுவீடாக ஏறி யார் குழந்தை இறந்தது என்று விசாரித்தார். அவருக்குள்ளும் ஒரு சோகம் உண்டு. திருமணமாகிப் பதினைந்து வருடங்களுக்கு மேல் ஆகியும் அவருக்குப் பிள்ளைப்பேறு இல்லை. நமக்குத்தான் பிள்ளைப்பேறு இல்லை. யாரு பெத்த பிள்ளையோ இப்படி ரோட்டில் அடிபட்டுக் கிடக்குதே என்கிற வருத்தம் அவருக்கு.

வீடுவீடாக ஏறித் தேடுகிறார். அடிபட்டுக் கிடப்பது தன் பிள்ளை இல்லை என்று பலரும் சொல்கிறார்கள். ஒரு பெண் கைக்குழந்தையுடன் அமர்ந்திருந்தாள். அவளிடம் விசாரித்தார். அம்மா உன் பையன் எங்க போயிருக்கான். சார் ஐஸ்கிரீம் வாங்கப் போயிருக்கான் சார் என்று அந்தப் பெண் சொல்ல, ஐயோ அங்க ஐஸ்கிரீமக் கையில ஏந்துன மாதிரி ஒரு பையன் லாரியில அடிபட்டு இறந்து கிடக்கானே என்று  சொல்லிக் கதறுகிறார். அந்தப் பெண் பதறியடித்துக் கொண்டு ஓடினாள். விபத்து நடந்த இடத்தில் இறந்து கிடந்த சிறுவனைத் தழுவிக்கொண்டு வேறொரு பெண் அழுது கொண்டிருந்தாள்.

கைக்குழந்தையோடு ஓடியவள் அதைப் பார்த்துச் சற்று அமைதி கொள்கிறாள்.  இறந்தது என் பையன் இல்ல, உன் அண்ணன் சாகல என்று குழந்தையையும் தன்னையும் ஆசுவாசப்படுத்திக் கொள்கிறாள்.

தாய்ப்பாசம் அவரவர் பெற்ற பிள்ளைக்கு மட்டும்தான் சொந்தமா என்று காவல்காரன் தன்னைத் தானே கேள்வி கேட்டுக் கொண்டான்.

காவல்துறை நண்பனுக்கு ஒரு திடுக்கிடும் காட்சி காத்துக்கொண்டிருந்தது. அங்கு அந்தச் சிறுவனைக் கட்டி அணைத்துக் கொண்டு அழுபவள் அவனது மனைவி. அழுகிறாள், ஐயோ என் பையன், என் பையன் செத்துப் போயிட்டானே, அலறுகிறாள். பிள்ளைப் பேறு இல்லாததால் அவள் மனம் பித்து ஆகிவிட்டதோ...

காவல்துறை நண்பன் அவள் கையைப் பிடித்து இழுத்துத் தூக்கிக்கொண்டு போகிறான்.

பாவி ஒரு குழந்தையைப் பெற்றுக் கொள்வதற்குத்தான் பாக்கியம் செய்யாத மலடி ஆயிட்டேன். செத்துப்போன ஒரு குழந்தைக்கு அழக்கூட எனக்குச் சொந்தமில்லையா என்று திமிறுகிறாள்.

அவளுடைய உடல் சுமை மட்டுமா கையில் கனக்கிறது. இதயத்தில் குடிகொண்டிருக்கும் பிள்ளையில்லாச் சோகச் சுமை அல்லவா அவன் கையில் கனக்கிறது. அந்தச் சுமையைத் தாங்கிக்கொண்டு வீட்டுக்குள் சென்று கதவை அடைக்கிறான் காவல்காரன்.

அவன் வீட்டின்முன் கூடியிருந்த கும்பல் மீண்டும் விபத்து நடந்த இடத்திற்கே ஓடுகிறது. ஆமாம் கும்பலுக்கு எல்லாம் ஒரு வேடிக்கை தானே.

செவ்வாய், 15 அக்டோபர், 2019

அறிந்திடு

வித்தியாசங்களின் விதையாக
நீ இரு..........
விடையாக மட்டும் இல்லாமல்
கேள்வியாகவும் இரு...
தெரிந்ததை பகிர்ந்திடு......
அறிந்தை அள்ளிக்கொடு
ஏன் எனில்
அழிக்க முடியாத ஒரே விசியம்
கற்றதை கற்று தருதல்....
படித்தை பகிர்ந்து தருதல்...

அழகு 

நல்ல வனங்களே நாட்டிற்கு அழகு
நல்ல வண்ணங்களே ஆடைக்கு அழகு
நல்ல குணங்களே நண்பனுக்கு அழகு
என்றும் அழகாய் வாழ பழகு 

திங்கள், 14 அக்டோபர், 2019

திருத்தம்

தினமும் பலரை சந்திக்கும் நாம்
சிலரிடம் சிலவற்றை கற்கிறோம்
அந்த கற்றலை சிலருக்கு கற்றும் தருகிறோம்....
ஆனால் அதை எவரும் நம் வாழ்வில்
பயன்படுத்துவதில்லை...
ஆனால் அறிவுரை கூற நம்மைவிட
ஆள் இங்கு இல்லை....
இனியாவது திருத்திக் கொள்வோம்....

ஆணவம்;
உயரத்தில் இருக்கிறோம் என
ஆட்டம் போடாதே
தவறி விழ நேர்ந்தால்
தரையில் இருப்பவனை
விட உனக்கே பாதிப்பு அதிகம்..

சனி, 12 அக்டோபர், 2019

கௌசிகா குமார்
இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்
கௌசிகா குமார்
இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்
கௌசிகா குமார்
இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்
கௌசிகா குமார்
இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்

வியாழன், 10 அக்டோபர், 2019

இருக்கும் வரை


விடையில்லா பயணம்
விடைகிடைத்தால் மரணம்
இதுதான் வாழ்க்கை...
அதனால் இருக்கும் வரை
இரக்கத்துன் இருப்போம்
இறந்த பின் ..
பலரின் இதயங்களில் வாழ்வோம்
எண்ணம் போல் வாழ்க்கை..
எண்ணம் போல தான் வாழ்க்கை

கௌசிகா குமார்
இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்
கௌசிகா குமார்
இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்
அடுத்தவரோடு ஒப்பிட்டு உன்னை நீயே
தாழ்த்திக் கொள்ளாதே
உலகத்தில் பெஸ்ட் உனக்கு நீயே!!!
கௌசிகா குமார்
இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்
கௌசிகா குமார்
இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்
கொளசிகா குமார்
இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்

புதன், 9 அக்டோபர், 2019

கொலுசு

அவள்தான் !
அவளேதான்!!
என்று காட்டிக்கொடுக்கும் கொலுசே

வாசல் வரை வந்தவள்
வாழ்க்கை வரை வருவாளா

கண்களில் காதலைத் தூவிப்
பேனாவில் பதிலைக் கூறி

என் கையை அவள் கையோடு
இணைத்து நடைபோட ஆசை

அவள் வருவாளா

அவள் விரும்பவில்லை எனில்
இனி வரும் பிறவிகள் அனைத்திலும்
உன்னைப்போல் கொலுசாக மாறி
அவள் விருப்பத்தை மீறி
அவள் காலில் பற்றிக்கொண்டு
அவளுடன் இராஜ நடைப்போடுவேன்
பார்க்கிறாயா

சனி, 5 அக்டோபர், 2019

அன்பு


             

இந்த உலகில் இலவசமாகக் கிடைக்கும் விஷயங்களில் ஒன்று அன்பு. நமக்குச் சிலரைப் பார்த்தவுடன் பிடித்துவிடும். அவர்கள் மீது அளவு கடந்த அன்பு உருவாகும். ஆனால் அந்த அன்பு நமக்கு மீண்டும் கிடைக்காது என்று தெரிந்தும், அவர்கள் மீது செலுத்தும் அன்பைத் தடுக்கமுடியாது. அவர்கள் மீது நாம் அதிகம் உரிமை எடுத்துக்கொள்வோம் ஆனால் அவர்களுக்கு நாம் ஒரு முக்கியமான நபராக இருக்கமாட்டோம்.அதனால் யாரிடமும் அன்புக்காகப் பிச்சை எடுக்காதே. நீ தனித்து இருந்தாலும் தனித்துவமாக இருக்க செய்ய வேண்டியவற்றைச் செய். இருள் நிறைந்த பாதையில் தோன்றும் ஓளிபோல உன் வாழ்க்கையில் உனக்காக ஒருவா் உன்னிடம் மட்டுமே அன்பு செலுத்தக் காத்துக்கொண்டு இருப்பார்.

வெள்ளி, 4 அக்டோபர், 2019

கருமை நிறக் கண்ணா

கருமேகம்தான் மழையை உண்டாக்கும்

கரும்புதான் சுவையை உண்டாக்கும்

கரங்கள்தான் உழைப்பை உண்டாக்கும்

கரும்பலகைதான் கல்வியை உண்டாக்கும்

கருமுடி தான் அழகை உண்டாக்கும்

கருநிறம் தான் ஈர்ப்பை  உண்டாக்கும்

கருவிழி தான் காட்சியை உண்டாக்கும்

கற்பு தான் பெண்மையை உண்டாக்கும்

இவையனைத்தும்
கருக்கொண்ட இடம் எங்கோ
அறியவில்லை

இடம் கொண்டது
உன்னில் தான் என் கண்ணா 

வியாழன், 3 அக்டோபர், 2019

எவன்

ஆளக் கற்றவன் மன்னன்

அடக்கக் கற்றவன் தலைவன்

ஆளாக்கியவன் தகப்பன்

அடைகாத்தவன் தோழன்

அருளியவன் சிவன்

இறுதியில் நம்மை அழைப்பவன் எமன் 

செவ்வாய், 1 அக்டோபர், 2019

பூ மகளே

பூமியின் வெப்பத்தினால்
பனிமலை உருகவில்லை ஏனோ

பூமகளின் வெட்கத்தினால்
படைத் தலைவனும் மிரளுகிறான்

உணர்வுகள் உள்ளத்தைத்
தெளிவடையச் செய்கின்றன

உன் கண்களோ
வீரத்தை உதிரியாய்ச் சரிக்கின்றன  

சங்க இலக்கியங்களில்அரிசிக்கு எத்தனை பெயர்கள் தெரியுமா?

அடிசில்
அமலை
அமிந்து
அயினி
அவி
அடுப்பு
உண்ணா
உண்
கூழ்
சதி
சாதம்
சொண்றி
சோ
துப்பு
தோரி
பருக்கை
பாத்து
புகர்வு
புழுங்கல்
புன்னகை
பொம்மல்
மடை
மிதவை
முரல்
வல்சி

திங்கள், 30 செப்டம்பர், 2019

பணிவு

எங்கு சென்றாலும் பணிவோடு நடக்கக் கற்றுக்கொள் 
ஏனெனில் பணிவே பல இடங்களில் பாராட்டைத் தேடித்தரும்....

மறைந்தாயோ ராணுவ வீரனே

தாயை அழுகையில் சுட்டு
தந்தையின் ஆறுதலை ஏற்று
அண்ணனிடம் தோள்களில் தட்டு
தங்கையிடம் இடத்தினை விட்டு
என் தாய் என் வீடு என் திசை
என்பவற்றை மறந்து
எண்திசைகளும் என் தாய் நாடே
என்பதனை உணர்ந்து
எத்திசைக்குச் செல்கிறேன் என்ற
தெளிவினை இழந்து
ஆசைகள் அனைத்தையும் அடக்கி
ஐம்புலன்களை ஆளுமைப்படுத்தி
அன்றாடம் உன்னை நீயே வருத்தி
உன் மனதை நேர் வழிப்படுத்தி
அறிவினைத் திருத்தி அன்று நீ சென்றாய்
இராணுவ வீரனாய் எமக்காகக்
காட்டில் பதுங்கி,கடலினில் மூழ்கி
மலையினில் ஒதுங்கி வெயிலினில் வருந்தி
பாலை வானத்திலும் பாடு பட்டாய்
நாட்டிற்காக நீ உன் உயிரையே விட்டாய்
நீர் எம்முறவாக இருந்திருந்தால் கூட மறந்திருப்போம்
ஆனால் இன்று எங்களுள் உணர்வென ஆகிவிட்டீர்கள்
உங்கள் ஆத்மா இன்று எங்கள் மனதில்
மகாத்மாவாக மாறிவிட்டது
எங்கள் அஞ்சலியை அன்பு
வேண்டுகோளாக விடுகிறோம்
நீர் அதனை ஏற்க வேண்டி நாங்கள்
இங்கு அமைதி காக்கிறோம்

ஞாயிறு, 29 செப்டம்பர், 2019

நண்பா!! நண்பா!!

நண்பா நண்பா
துவண்டு போகாதே
தோல்வி அடைந்தாய் என்று

நண்பா நண்பா
திகைத்துப் போகாதே
வெற்றி பெற்றாய் என்று

நண்பா  நண்பா
தொலைத்து விடாதே
உன் திறமையை கேலி
செய்பவர்கள் முன்பு

உன்னை அனைவரும் புரிந்துகொள்வார்கள்
உன்னை அறிந்த பின்பு

நண்பா வா
செல்வோம் சரித்திரம் படைக்க

வெள்ளி, 27 செப்டம்பர், 2019

அவள் ❣️

உன் ஒற்றைப் பார்வையில்
என்னைக் கொள்ளையடித்து விட்டாயடி

உன் செய்கையால்
என் நேரங்கள் அனைத்தையும்
உனக்கானதாய் மாற்றி விட்டாயடி

உன் மூச்சினால்
என்னுள் காற்றாகச் சென்று
என்னவள் ஆனாயடி

உன் சிரிப்பினால்
என்னைச் சிறை பிடித்துவிட்டாயடி

என்னை எப்போது விடுவிப்பாய்

என் என்னவளின் விடையோ வியப்பில் தள்ளியது

என் கண்களால் தானே
உன்னைக் கொள்ளையடித்தேன்

என் கண்கள் மூடி நான் கல்லறையில்
உறங்கும் போது விடுவிக்கிறேன் என்றாள்

ப.லட்சுமிப்பிரியா
இளநிலை மூன்றாமாண்டு ஆங்கிலம்

கிருத்திகா தேவராஜன்
இளநிலை முதலாமாண்டு கணினிப் பயன்பாட்டியல்

கிருத்திகா தேவராஜன்
இளநிலை முதலாமாண்டு கணினிப் பயன்பாட்டியல்

எண்ணங்கள்

வண்ணங்கள் அனைத்தும் வானவில் ஆகட்டும்
நம் எண்ணங்கள் அனைத்தும் வான்வரை உயரட்டும்.

தாய்மையை உணர்ந்தேன்

ஒவ்வொரு தாயும்
தன்னைத்  தாயாக உணர்ந்த தினத்தைத்
தனது மகளின் பிறந்தநாளாகக் கொண்டாடுகிறார்கள்

வியாழன், 26 செப்டம்பர், 2019

நான் நானாக இருக்கிறேன்

உன்னிடமே சில கேள்விகளைக் கேட்டுக்கொள் 

ஏனெனில்
உனக்குள் மட்டுமே உனக்கான பதில்களைத்
தேட இயலும்
அவற்றை மூட்டைகட்டிவைக்காமல்
முழுமைப்படுத்து

நீ  யார் என்று முதலில் கண்டறி
பிறகு அனைவரிடமும் கூறு

நான் நானாக இருக்கிறேன் என்று

ப.லட்சுமிப்பிரியா
இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்

புதன், 25 செப்டம்பர், 2019

தொடர்வேன்

தொட முடியாத உயரத்தை 
அன்று உன்னால் தொடமுடிந்தது

உன்னுடன் தொடர்கிறேன் இன்று
என் உயிருடன் தொடர்வேன் என்றும்

பவித்ரா வெங்கடேசன்
இளநிலை மூன்றாமாண்டு கணினிப் பயன்பாட்டியல்

தேடல்

உன்னைக் காணாத காரணமே

என் கண்கள் கலங்க
உன்னுள் வாழ்கின்ற உணர்வுகளே

என் காதல் சிறக்க
உன்னகம் சேர நாடுகிறேன்

உன்னைத்தான்
நான் இங்கு தேடுகிறேன்

பவித்ரா வெங்கடேசன்
இளநிலை மூன்றாமாண்டு கணினிப் பயன்பாட்டியல் 

மறுக்குமோ

காண மறுக்குமோ
நம் கண்கள்

கேட்க மறுக்குமோ
நம் செவிகள்

பேச மறுக்குமோ
நம் இதழ்கள்

என் இதயம் மறுக்குமோ
உன்னை நினைக்க

பவித்ரா வெங்கடேசன்
இளநிலை மூன்றாமாண்டு கணினிப் பயன்பாட்டியல்

சேதி

பாடியது பாதி

பாடுவது மீதி

நாடே நம் வீதி

நன்மை தரும் நீதி

நட்பே நம் ஜாதி

இதுவே என் சேதி

பவித்ரா வெங்கடேசன்
இளநிலை மூன்றாமாண்டு கணினிப் பயன்பாட்டியல்

இல்லை

நீ ஒன்றும் அழகில்லை

அழகால் எதுவும் பயனில்லை

உன் அறிவிற்கோர் எல்லையில்லை

ஆனாலும்
அதை நீ வாடவிடுவதில்லை

நீ அன்பிற்கு அணையிட
அது ஒன்றும் ஆற்றோர அலையில்லை

உனக்கு ஆட்கடலினும்
சுமை கொள்ளை

ஆனாலும்
அதை நீ பொருட்படுத்தவில்லை

எனவே
நீ வெற்றியை  விட்டதில்லை
தோல்வியைத் தொட்டதில்லை

பவித்ரா வெங்கடேசன்
இளநிலை மூன்றாமாண்டு கணினிப் பயன்பாட்டியல்

என் ஆசிரியை

என் செவிலித்தாயே

என்னை நீ
ஜொலிக்கச் செய்தாயே

நீ ஓர் பெண் மகளின் தாயே

எம்முள் ஓர் பொன்மகளும் நீயே

உன் ஆற்றல் உன் மேனி

அச்சமின்றிப் பணியாற்றலாம் வா நீ

உந்தன் சிரிப்பே உனக்குச் சிறப்பு

உந்தன் உன்னதமே -இங்கு
தோன்றுது எனக்கு

பவித்ரா வெங்கடேசன்
இளநிலை மூன்றாமாண்டு கணினிப் பயன்பாட்டியல் 

காலம்

வாழ்ந்த காலம்
கவிதையைப் போன்றது

வாழும் காலம்
கடிதமாய் ஆனது

வாழ்க்கையே ஓர்
கதைபோலத் தோன்றுது

அன்புள்ள ஆசிரியருக்கு

அன்புள்ள ஆசிரியருக்கு

அன்பளிப்பு அளிப்பதற்கு

ஆசான்வில் தொடுப்பதற்கு

அமுதமதில் தெளிப்பதற்கு

அர்த்தங்களை உரைப்பதற்கு

ஆசான்களே கூடி வருக

எமக்கு அறிவுப்பொருள் தந்து அருள்க

பவித்ரா வெங்கடேசன்
இளநிலை மூன்றாமாண்டு கணினிப் பயன்பாட்டியல் 

வீழ்ந்தேன்

என் கண்கள் என்ன பாவம் செய்தன

உன்னைக் காணாது தவிக்கின்றன

என் நெஞ்சம் கொண்ட தவத்தின் வரவோ
உன் நினைவு கொள்கிறது

ஏன் பஞ்சம்
 உன்னை காணாமலா
நீ சொல் கொஞ்சம்

இதுவே முடிவா
நம் காதல் என்ன சிதறிய கடுகா

விரும்பியே விடத்தினை விழுங்கிவிடவா
வீரத்தை இழந்து வீழ்ந்தேன் தலைவா

பவித்ரா வெங்கடேசன்
இளநிலை மூன்றாமாண்டு கணினிப் பயன்பாட்டியல் 

சிறந்தது

குயிலின் அழகை விட
மயிலின் அழகு சிறந்தது

மயிலின் குரலை விட
குயிலின் குரல் சிறந்தது

குறையை நிறையால் வெல்வதே
வாழ்வில்  மிகவும் சிறந்தது

பவித்ரா வெங்கடேசன்
இளநிலை மூன்றாமாண்டு கணினிப் பயன்பாட்டியல்

ஓடு

உயிர்வாழு உறவோடு

உன்னதம் உன் உயர்வோடு

உமக்காக விரைந்தோடு

வேர்த்தாலும் கரைந்தோடு

காற்றோடு கலந்தோடு

காயங்கள் கடந்தோடு

தலைக்கனம் தவிர்த்தோடு

சரிந்தாலும் மீண்டும் - நீ
எழுந்தோடு

பவித்ரா வெங்கடேசன்
இளநிலை மூன்றாமாண்டு கணினிப் பயன்பாட்டியல்
நவரத்தினம்;
மரகதம்
மாணிக்கம்
முத்து
வைரம்
வைடூரியம்
கோமேதகம்
நீலம்
பவளம்
புட்பராகம்

முயற்சி

இயற்கையான அழகைச்
செயற்கையாலே பெறலாம்

தேர்ச்சி என்னும் பலத்தைப்
பயிற்சியாலே பெறலாம்

முயற்சி என்ற கடலே
இமயமலை எனலாம்

பவித்ரா வெங்கடேசன்
இளநிலை மூன்றாமாண்டு கணினிப் பயன்பாட்டியல்

செவ்வாய், 24 செப்டம்பர், 2019

சிரி

சிரித்து கொண்டே இரு
சிலருக்கு புரியட்டும்
உன் மீது உனக்கு இருக்கும்
நம்பிக்கை....

ஆயிரம் உறவுகளால் தர முடியாத பலத்தை ஒரு அவமானம் தரும்...!

ஈரம் காய்ந்த இயந்திர உலகில் காதலா

நீ என்னைச் சந்தித்தாய்
காரும் பாரும் நிறைந்த பாரிலே
ரசாயனக் கலவை நீர் இட்ட முட்டைகள் பறக்க
பாதையின் பள்ளத்தில் இருந்த நீரோ
பணக்காரப் பாரியின் அன்பளிப்பாய்
பாமர மக்கள் படையின் மீது தெறிக்க
கொடைகாத்த வள்ளல் வாழ்ந்த
நம் பாரின் மீது பற்றுடைய நான்
பாலிதின் கவரிலான குடை கொண்டு
பாதையில் சென்ற பள்ளிக் குழந்தையைக் காக்க
நீ என்னைப் பார்க்க 
உன் பருவத்தின் உணர்ச்சி உனைச் சரிக்க
பக்கபலமாய்  உன் பார்வை
என் உருவத்தினைப் பதிவிறக்கியது
4-ஜி  பாஸ்ட் நெட் ஒர்க் போல
மறுபிறப்பு மானுடத்தின் சிறப்பன்றோ
நீ என்னை மீண்டும் சந்தித்தாய்
நான் உனைத் திரும்பிப் பார்க்க வேண்டும் என்ற
ஒருநொடிக்காக ஒருத்தவம் நீயிருக்க
உன் பின்னால் நீ பார்க்கவில்லையே
இயந்திரமாய் வேலைசெய்த வாகன ஓட்டுனர்
ஒரு நொடி இமைக்கு இரக்கம் காட்ட
உன் இரத்தம் ஈரம் காய்ந்த
இயந்திர உலகிற்கு நீரூற்றியது
இப்போது
நான் திரும்பிப் பார்க்கிறேன் உன்னை அல்ல
முன்ஜென்மத்தில் வண்டியிழுத்த மாடு
மஞ்சள் நிற மாறு வேடமிட்டு
வாகனமாய் மறுபிறப்பெடுத்துத்
தன்னை மறந்தவர்களுக்குப் பாடம் புகட்ட
உன்னைப் பலியிட்டு
மரணத்தால் தன்னை நினைவூட்டியது
இன்றாவது திரும்பிப் பார் மானிடா
அழிந்து கொண்டிருப்பது
மாடுகளின் இனம் அல்ல
நன்றி மறந்த மானுடனின் மானம்
சிந்தித்துச் செயல்படுவோம் - நம்
சந்ததியருக்கு வழி கொடுப்போம்

பவித்ரா வெங்கடேசன்,
இளநிலை மூன்றாமாண்டு கணினிப் பயன்பாட்டியல். 

திங்கள், 23 செப்டம்பர், 2019

துணிந்து எழுங்கள்

விடிந்ததும் வருவதோ  சூரியன்
விடிவதற்குள் இருப்பதோ சந்திரன்
இரண்டும் ஒரே இடத்தில் இருக்காது
ஆனால் இரண்டிலும் பயன் உண்டு

இரவில்  வெளிச்சம் தருவது சந்திரன்
பகலில் வெளிச்சம் தருவது சூரியன்
அதுபோலத்தான் நம் வாழ்வில்
வெற்றியும் தோல்வியும்
வெற்றி பெற்றால் வேகம்
தோல்வி அடைந்தால் விவேகம்

அதனால் எதையும் கண்டு துவண்டுபோகாதீர்
துணிந்து எழுங்கள்
வாழ்ந்து காட்டலாம்


ப.லட்சுமிப்பிரியா, 
இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்.
கடவுள் மனிதனுக்குச் சொன்னது பகவத்கீதை .
மனிதன்  கடவுளுக்குச் சொன்னது திருவாசகம்.
மனிதன்  மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்.


வாழ்க்கையில் நம்பிக்கை இருக்கணும்...
யாரையும் நம்பித்தான் இருக்கக் கூடாது..! 

ஞாயிறு, 22 செப்டம்பர், 2019

நாடி!ஓடி !வாடாதே!

எப்போதும் யாரையும் நாடி
அவர்களுக்கு ஏற்றபடி ஓடி
அவர்களுக்கு என வாழாதிர்கள்
எதையும் தானாக செய்யும் ஆற்றலை
வளர்த்து கொள்ளுங்கள்.....
பிறர் மீது வைக்கப்படும் நம்பிக்கையை
உங்கள் மீது வைத்து பழகுங்கள்
பிறரை நேசிக்கும் நீங்கள்
முதலில் உங்களை நேசிங்கள்
எதற்காகவும் ஒருவரை தேடி செல்லாதிர்கள்.‌.....
தேவை என்றால் தேடி வருவார்கள்...
நீங்களாக சென்று, பிறகு
வாடி நிக்காதிர்கள்...

வெள்ளி, 20 செப்டம்பர், 2019

தேவை

அதிகம் பேசாதே
அடக்கம் தேவை
விவாதம் செய்யாதே
விவேகம் தேவை
தயக்கம் காட்டாதே 
தைரியம் தேவை
எதையும் எண்ணாதே
எளிமை தேவை
அலட்சியம் கொள்ளாதே
ஆற்றல் தேவை
முயற்சியை விடாதே
பயிற்சி தேவை
இவை எதையும் மறந்துவிடாதே
ஏனெனில் 
வாழ இவையே தேவை....!!!!!!!!!

ப.லட்சுமிப்பிரியா
இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்

ஆகலாம் அப்துல்கலாம்

இது உன் இளமைக் காலம்
இனிமைக் காலமாக இருக்கலாம்
இகழ்ச்சி அதை நீ இன்று ஏற்கலாம்
இழிவுகளைக் கொன்று புதைக்கலாம்
புகழ்ச்சி அதை மனதில் பதுக்கலாம்
வளர்ச்சி பெற நாளும் உழைக்கலாம்
தோல்விகள் பல நீ கண்டிருக்கலாம்
முயற்சி பல நீ செய்திருக்கலாம்
தன் உயிரைவிட
உன் உறவை வளர்க்கலாம்
உயர்ந்த உச்சிகளும்
உனக்கு உதிரிப்பூக்கள் ஆகலாம்
நல்லதோர் தலைவன் வேண்டி
நாடே இன்று காத்திருக்கலாம்
நிச்சயம் நீயும் ஆகலாம்
நாளை அப்துல்கலாம்

பவித்ரா வெங்கடேசன்
மூன்றாமாண்டு கணினிப் பயன்பாட்டியல்

குறிப்பு: "தினத்தந்தி” நாளேட்டின் 16.09.2019-ஆம் தேதியிட்ட பதிப்பில்  “மாணவர் ஸ்பெஷல்” என்னும் பகுதியில் இக்கவிதை வெளியிடப்பட்டது.

கலாம்

உன் உயிர் விண்ணுக்கு
உன் உடல் மண்ணுக்கு
உன் உயிர் காற்றுக்கு
உன் பகை நெருப்புக்கு

சிறுபொழுதுகள் - 6

வைகறை(விடியல்) - 2 முதல் 6 வரை
காலை - 6 முதல் 10 வரை
நண்பகல் - 10 முதல் 2 வரை
ஏற்பாடு - 2 முதல் 6 வரை
மாலை - 6 முதல் 10 வரை
யாமம் - 10 முதல் 2 வரை

இளம்பெண் பேச்சாளர்கள் தேடல்..




#3teentalk #talkathon #ksrcasw  #2K19

இளம் பெண் பேச்சாளர்களை உருவாக்கும் மேடைகளில் ஒன்றாக எமது கல்லூரியும் செயல்பட்டு வருகிறது என்பதில் பேரின்பம் அடைகிறோம்..

ஒரு மேடை..
மூன்று பரிசுகள்...
மூன்று விருதுகள்..
ஒரு வெற்றியாளர்..

பெண்ணே நீ பேச தொடங்கினால் நாடும் வளர்கிறது என்று ஒரு மறைப்பொருள் உள்ளது.. அதை உணர்ந்து உங்கள் பேச்சாற்றலை வெளிப்படுத்த வாரீர்...

அக்டோபர் 17..
#ksrcasw... #talkathan..
தலைப்பு - இணைய உலகில் பெண்களின் நிலை.

மேலும் விவரங்களுக்கு

முனைவர் பு.பிரபுராம்   - தமிழ்த்துறைத் தலைவர் 

82488-23125

வியாழன், 19 செப்டம்பர், 2019

இப்படிக்கு அனுபவம்

எப்போதும் துணையாக இரு,
ஒருபோதும் துரோகியாக இருக்காதே,
எப்போதும் நண்பனாக இரு,
ஒருபோதும் நயவஞ்சகனாக மாறிவிடாதே,
எப்போதும் அன்பாக இரு ,
ஒருபோதும் அடிமையாக இருக்காதே,
எப்போதும் விழிப்புடன் இரு,
ஒருபோதும் சலுப்போடு இருக்காதே,
எப்போதும் கேள்விக்கு பதிலாக இரு,
ஒருபோதும்  குழப்பத்தின் பதிலாக, இருக்காதே,
எப்போதும் தேடலில் இரு,
ஒருபோதும் தொலத்ததை தேடாதே,
இப்படி அறிவுரை ஆற்றியது
அனுபவம்!!

ஆகலாம் அப்துல்கலாம்

இது உன் இளமைக் காலம்
இனிமைக் காலமாக இருக்கலாம்
இகழ்ச்சி அதை நீ இன்று ஏற்கலாம்
இழிவுகளைக் கொன்று புதைக்கலாம்
புகழ்ச்சி அதை மனதில் பதுக்கலாம்
வளர்ச்சி பெற நாளும் உழைக்கலாம்
தோல்விகள் பல நீ கண்டிருக்கலாம்
முயற்சி பல நீ செய்திருக்கலாம்
தன் உயிரைவிட
உன் உறவை வளர்க்கலாம்
உயர்ந்த உச்சிகளும்
உனக்கு உதிரிப்பூக்கள் ஆகலாம்
நல்லதோர் தலைவன் வேண்டி
நாடே இன்று காத்திருக்கலாம்
நிச்சயம் நீயும் ஆகலாம்
நாளை அப்துல்கலாம்

பவித்ரா வெங்கடேசன்
மூன்றாமாண்டு கணினிப் பயன்பாட்டியல்

குறிப்பு: "தினத்தந்தி” நாளேட்டின் 16.09.2019-ஆம் தேதியிட்ட பதிப்பில்  “மாணவர் ஸ்பெஷல்” என்னும் பகுதியில் இக்கவிதை வெளியிடப்பட்டது.

முருகநாயனார் சிவபெருமானுக்கு நால்வகைப் பூக்களைக் கொண்டு(கோட்டுப்பூ, கொடிப்பூ,  நீர்ப்பூ, நிலப்பூ) மாலை சூட்டி வழிபாடு  செய்தார்.

ஓராண்டின் ஆறு பருவங்களும் பெரும் பொழுதுகள் எனப் பகுக்கப்பெறும்.

கார்காலம் - ஆவணி,புரட்டாசி
கூதிர்காலம் - ஐப்பசி,கார்த்திகை 
முன்பனிக்காலம் - மார்கழி,தை
பின்பனிக்காலம் - மாசி,பங்குனி
இளவேனிற்காலம் - சித்திரை,வைகாசி
முதுவேனிற்காலம் - ஆனி,ஆடி

கார்காலம் என்பது மழைக்காலம்
வேனில் என்பது வெயில் காலம்
கூதிர் என்பது குளிர்காலம்
முன்பனி என்பது மாலையில் பின்பனி
பின்பனி என்பது  காலையில் முன்பனி
எல்லாம் தெரியும் என்று
குழப்பத்துடன் இருக்காதே,
எதுவும் தெரியாது என்று
தெளிவோடு இரு..

புதன், 18 செப்டம்பர், 2019

அழைக்காமல் வருகிறேன்!!

காலை முதல் மாலை வரை ...
கால்கள் இரண்டும் ஓடும் வரை...
கைகள் இரண்டும் மடங்கும் வரை...
பற்கள் எல்லாம் கொட்டும் வரை...
பார்க்கும் கண்கள் மங்கும் வரை...
தலையில் நரை பரவும் வரை....
உயிர் உடலை விட்டு விலகும் வரை....
வா என்று நீ அழைக்காமல்......
வந்துவிடுவேன் என்று ஏளனமாக
உரைக்கிறது துன்பம்!!!!

அப்பா

வெளுத்துப்போன சட்டையில்
வெள்ளை வெள்ளேற்னு தெரியரார் என் அப்பா

அம்மா!


யார் கூறியது?
தேவதையைக் கண்ணில்
கண்டது இல்லையென்று!
தினமும் காண்கிறேன் 
என் அன்னை வடிவில் !



நீ தேவை என்றிருக்கும் வரை உன் தவறுகள் மன்னிக்கப்பட்டுக் கொண்டே தான் இருக்கும்
நீ தேவை இல்லை என்றால் சிறு தவறும் பெரிதாகத் தெரியும்.........!!!
படைத்தவனுக்குத் தெரியும்...
உன்னால் எவ்வளவு
பாரம் சுமக்க
முடியும் என்று...
ஆகவே தளராதே..
Teen Talk 2019 - Season #3

செவ்வாய், 17 செப்டம்பர், 2019

திங்கள், 16 செப்டம்பர், 2019

தாலாட்டு நீ பாட
ஒரு நொடியும் நேரமில்லை
தாய் மடியில் நான் உறங்க
சொந்தங்கள் விட்டதில்லை
உன்னுடன் இருக்கையில்
உணதருமை விளங்கவில்லை
உன் நிலை வந்தவுடன்
உணர்கிறேன், இவ்வுலகில்
உனக்கு நிகர்
யாருமில்லை........அம்மா.....
திராவிடச்சொல் முதன் முதலில் பயன்படுத்தியவர் குமரிலபட்டர்.
எதிர்பார்ப்பதை விட
எதிர்கொள்ளக்
கற்றுக் கொள்ளுங்கள்
இங்கு எதிர்பார்க்கும்
வாழ்க்கை யாருக்கும்
கிடைப்பதில்லை.
எதிர்கொள்ளும்
வாழ்க்கையே கிடைக்கிறது!!!

ஞாயிறு, 15 செப்டம்பர், 2019

உன்னை வீழ்த்தும்
அளவிற்கு விதிகள்
எழுதப்பட்டிருந்தால்...
விதிகளை வீழ்த்தும்
அளவிற்கு வழிகளும்
நிறுவப்பட்டிருக்கும்..

சனி, 14 செப்டம்பர், 2019

ஜெயிப்பது எப்படி என்று யோசிப்பதை விட தோற்றது எப்படி என்று யோசித்துப் பார் ஜெயித்து விடுவாய்...

வெள்ளி, 13 செப்டம்பர், 2019

சி.விஷ்ணுப்பிரியா
மூன்றாமாண்டு வேதியியல்
சி.விஷ்ணுப்பிரியா
மூன்றாமாண்டு வேதியியல்
சி.விஷ்ணுப்பிரியா
மூன்றாமாண்டு வேதியியல்
வி.அக்க்ஷயா
இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்

வியாழன், 12 செப்டம்பர், 2019

நீங்கள் சூரியனைப் போலப் பிரகாசிக்க வேண்டுமானால்  முதலில் சூரியனைப் போல எரிய வேண்டும்.. 

செவ்வாய், 10 செப்டம்பர், 2019

திங்கள், 9 செப்டம்பர், 2019

முடியாது என்பது மூடநம்பிக்கை..  முடியுமா? என்பது அவநம்பிக்கை.. முடியும் என்பது தன்னம்பிக்கை..

சனி, 7 செப்டம்பர், 2019

IMMORTAL LOVE

Sometimes…
           Anger turns into tears,
              Tears turn into affection,
               Affection turns into happy,
           Happy turns into enmity,
           Everything changes in the immortal,
                 World except humanity and love.

வெள்ளி, 6 செப்டம்பர், 2019

அழுவதும் தவறில்லை
விழுவதும்தவறில்லை
ஆனால் அழுதபின்
சிரிக்காமல் இருப்பதும்
விழுந்தபின் எழாமல்
இருப்பதும்தான் தவறு

நாளை கே.எஸ்.ஆர். மகளிர் கல்லூரியில் கல்லூரி அளவிலான கலைவிழா - lCM 2019 நடைபெறவுள்ளது. அவ்விழாவில் நிகழவுள்ள பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளைக் குறிக்கும் வகையில் மாணவர்கள் தயாரிக்கும் அரிய படைப்பு.

வியாழன், 5 செப்டம்பர், 2019

நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம். ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்... அப்துல் கலாம் 
நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும் எப்போதுமே மண்டியிடுவது இல்லை.

To my teachers...

To my universe,

          You cherish me,
             You encourage me,
           You never made me fed,
              Instead you share me
                     Your piece of experience,
           You care for me everyday,
          
            You show me ,the way to success            But,
           you taken & bear
                  the pain of Hardness in that.
           You hide your pain,and  
               Construct our mind with smile,

            You are my honorable teachers,
           Who spread me like a seed,
               And made me a plant today...
I salute you for you
               Ultimate profession

              Hapieee teacher's day to all ....

நூறுமுறை உதவி செய்திருந்தாலும் கடைசி உதவியை வைத்தே எடை போடுகிறான்! மனிதன் என்கிற சுயநலவாதி. 
ஆசிரியர் தின விழாவையொட்டி எங்கள் முதல்வருக்கு ஆங்கிலத்துறை மாணவர்கள் அளித்த அன்புப்பரிசு.
கற்றுக்கொடுப்பதற்கும்
கற்றுக்கொள்வதற்கும்
இயலாத சமுதாயம்
மண்ணில் இருந்தால் என்ன?
மண்ணில் வீழ்ந்து புதைந்தால் என்ன?

ஆசிரியர் தின வாழ்த்துகள்!
ஆ.சாரோன்,
மூன்றாமாண்டு இளநிலை வேதியியல்.
செ.வினிதா,
மூன்றாமாண்டு இளநிலை வேதியியல்.
க.காயத்ரி,
முதலாமாண்டு ஊட்டச்சத்து மற்றும் உணவு முறைகள் துறை.

வெள்ளி, 30 ஆகஸ்ட், 2019

தாகம்

எனக்கு தாகம் தண்ணீருக்கு மட்டும் அல்ல..
தமிழுக்கும் தான்.....
தாயிடம் தாய்பால் குடித்தபோதே
தமிழ்பாலும் குடித்துவிட்டேன்.....
அவளை அம்மா என்று அழைத்தபோது....
அன்று எப்படி தண்ணீருக்கு பஞ்சம் இல்லையோ அதேப்போல்
தமிழுக்கும் பஞ்சம் இல்லை...
ஆனால் இன்றோ...
தரையில் தண்ணீரும் இல்லை
என் தமிழும் இல்லை...
இரண்டிலும் பஞ்சம் சூழ்ந்துவிட்டது...
காசு கொடுத்து தண்ணீரையும் வாங்கிவிட்டேன்....
காற்றில் என் தமிழயும் பறக்கவிட்டு‌.....
காசு கொடுத்து தமிழில்லா கல்வியையும் பயல்கிறேன்
ஆங்கிலேயர் நம் நாட்டைவிட்டு வெளியேறி பல ஆண்டுகள் ஆனாலும்
அவர்கள் மொழிக்கு அடிமைப்பட்டு....
அதுவே பெரிது என்று கருதி ....
என் தமிழை இழுந்து வருகிறேன் என்பது உறுதி.....
தாய் போன்று மொழியை போற்ற வேண்டும் என்பதற்காக தான் அதை தாய்மொழி என்கிறோம்...
ஆனால் அதை இழந்து வருகிறோம்.....
என் தமிழ் மொழி மட்டுமே அல்ல
அதுவே எங்கள் ஒலி...
அதுனால் தான் என் தாகமாக தமிழ் மாறிவிட்டது....