தாயை
அழுகையில் சுட்டு
தந்தையின்
ஆறுதலை ஏற்று
அண்ணனிடம்
தோள்களில் தட்டு
தங்கையிடம்
இடத்தினை விட்டு
என்
தாய் என் வீடு என்
திசை
என்பவற்றை மறந்து
எண்திசைகளும்
என் தாய் நாடே
என்பதனை
உணர்ந்து
எத்திசைக்குச் செல்கிறேன் என்ற
தெளிவினை
இழந்து
ஆசைகள்
அனைத்தையும் அடக்கி
ஐம்புலன்களை
ஆளுமைப்படுத்தி
அன்றாடம்
உன்னை நீயே வருத்தி
உன்
மனதை நேர் வழிப்படுத்தி
அறிவினைத் திருத்தி அன்று நீ சென்றாய்
இராணுவ
வீரனாய் எமக்காகக்
காட்டில்
பதுங்கி,கடலினில் மூழ்கி
மலையினில்
ஒதுங்கி வெயிலினில் வருந்தி
பாலை
வானத்திலும் பாடு பட்டாய்
நாட்டிற்காக
நீ உன் உயிரையே விட்டாய்
நீர்
எம்முறவாக இருந்திருந்தால் கூட மறந்திருப்போம்
ஆனால் இன்று எங்களுள் உணர்வென
ஆகிவிட்டீர்கள்
உங்கள்
ஆத்மா இன்று எங்கள் மனதில்
மகாத்மாவாக
மாறிவிட்டது
எங்கள்
அஞ்சலியை அன்பு
வேண்டுகோளாக
விடுகிறோம்
நீர்
அதனை ஏற்க வேண்டி நாங்கள்
இங்கு
அமைதி காக்கிறோம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக