ஒருவர் நம்மை விட்டு விலகும் போது சில விஷயங்களில் விட்டு கொடுத்து அவர்களை தக்க வைத்து கொள்ள முயலுகிறோம். ஆனால் இதற்கு பிரிவு மட்டும் தான் முடிவு என்று தெரிந்த உடன் அவர்களை அவர்கள் போக்கில் விட்டு விட வேண்டும் ஒரு பொருளின் மீது அதிகம் அழுத்தம் செலுத்தும் போது தான் அது வெடிக்கும் அதை விட்டு விட்டால் அதன் வீரியம் குறைந்து விடும். நம் வாழ்க்கையில் ஆயிரம் பொய்யான உறவுகள் இருக்கும், தேவைக்கு மட்டும் பழகும் அதி பயங்கர சுயநலம் மிக்க கூட்டத்தில் நாம் மிகவும் சுயநலமாக இருக்க வேண்டும். அனுதாப பட்டால் நாம் தான் பாவ பட்டவர்கள் ஆகி விடுவோம். தாய் தந்தை மற்றும் சிலரை தவிர எந்த உறவும் நிரந்தரம் இல்லை. சில நண்பர்கள் நம் காலம் முழுவதும் இருப்பார்கள். பத்து நபருடன் பேசி மகிழ்ந்தாள் தான் நட்பு என்று அர்த்தம் அல்ல. நம்மை புரிந்து கொள்ள ஒரு உயிர் இந்த உலகத்தில் இருந்தால் கூட போதுமானது.
நந்திதா கண்ணன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நந்திதா கண்ணன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திங்கள், 24 பிப்ரவரி, 2020
வியாழன், 30 ஜனவரி, 2020
குறுகிய வாழ்க்கை
நாம் ஆசைப்படும் பல விஷயங்கள் கேட்கும்போது கிடைப்பதில்லை
அது நமக்குக் கிடைக்கும்போது தேவையில்லாத ஒன்றாக மாறிவிடுகிறது.
எனவே நாம் வாழும் இந்தக் குறுகிய வாழ்வில் அனைவரிடமும் அன்பாகவும், பிறருக்கு விட்டு கொடுத்து, எதிர்காலைத்தை எண்ணிக் கவலைப்படாமல் இப்போது நம் கையில் உள்ள நிஜமான நிகழ்காலத்தைச் சந்தோசமாக வாழ்வோம்.
சனி, 5 அக்டோபர், 2019
அன்பு
இந்த உலகில் இலவசமாகக் கிடைக்கும் விஷயங்களில் ஒன்று அன்பு. நமக்குச் சிலரைப் பார்த்தவுடன் பிடித்துவிடும். அவர்கள் மீது அளவு கடந்த அன்பு உருவாகும். ஆனால் அந்த அன்பு நமக்கு மீண்டும் கிடைக்காது என்று தெரிந்தும், அவர்கள் மீது செலுத்தும் அன்பைத் தடுக்கமுடியாது. அவர்கள் மீது நாம் அதிகம் உரிமை எடுத்துக்கொள்வோம் ஆனால் அவர்களுக்கு நாம் ஒரு முக்கியமான நபராக இருக்கமாட்டோம்.அதனால் யாரிடமும் அன்புக்காகப் பிச்சை எடுக்காதே. நீ தனித்து இருந்தாலும் தனித்துவமாக இருக்க செய்ய வேண்டியவற்றைச் செய். இருள் நிறைந்த பாதையில் தோன்றும் ஓளிபோல உன் வாழ்க்கையில் உனக்காக ஒருவா் உன்னிடம் மட்டுமே அன்பு செலுத்தக் காத்துக்கொண்டு இருப்பார்.
செவ்வாய், 2 ஏப்ரல், 2019
தவறு
தவறு செய்தவரை ஏன் தவறு செய்தாய் என்று கேட்பவர் குற்றவாளி
நீ ஏமாறபட்டாய் அது குற்றம் அல்ல ஆனால் ஏன் ஏமாற்றினாய் என்று கேட்டால் அது தவறு .
இந்த உலகில் அதிகம் ஏமாற படுபவர்கள் பாவம் பார்பவர்கள் அதனால் யார் மீதும் பாவ படாதே.
தவறை எதிர்த்து கேட்க தயங்காதே துணிந்து நில்.தவறை உணராதவரை மன்னிக்காதே, வாழ்க்கையை விட்டு விரட்டி விடு.
தவறு செய்யாதவன் அல்ல மனிதன், தவறை உணர்ந்து திருந்துபவன் தான் மனிதன்.
வியாழன், 7 மார்ச், 2019
மகளிர் தினம்👰👰👰👰
நாளை நாடு முழுவதும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாட காத்து கொண்டு இருக்கிறோம். அதற்கு முன்பு இதை எதற்காக கொண்டாடுகிறோம். எப்போது தொடங்கப்பட்டது என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
18ஆம் நூற்றாண்டுகளில் அமெரிக்காவில் பெண்களுக்கு சம உரிமை கிடைக்கவில்லை. பின்பு 1857ஆம் ஆண்டு தொழிற்சாலைகள், நிலக்கரி சுரங்ககள் ஆகியவற்றில் பணி செய்ய வாய்ப்பு கிடைத்தது ஆனால் ஊதியத்தில் பெண்களுக்கு அநீதி இளைக்கப்பட்டது. இதனை எதிர்த்து 1857ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8 ஆம் தேதி இந்த போராட்டத்தை துவக்கினார். அப்போது இருந்த அரசாங்கம் இதனை எதிர்த்தது. பெண்களும் பல போராட்டங்களை நடத்தினர்.1910 ஆம் ஆண்டு டென்மார்க் நாட்டில் பெண்களுக்கான மாநாடு நடந்தது. அதில் பங்குபெற்ற ஜெர்மனி கம்யூனிஸ்ட் தலைவர் கிளாரே செர்கினே மார்ச் 8 ஆம் தேதியை மகளிர் தினமாக அறிவிக்க வேண்டும் என்று போராடினார். பின்பு 1920 ஆம் ஆண்டு சோவியத் ரஷ்யாவில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்ட அலெக்ஸ்சாண்டிரா ஆண்டுதோறும் மார்ச் 8 உலக மகளிர் தினமாக கொண்டாட வேண்டும் என்று அறிவித்தார்.
சனி, 2 மார்ச், 2019
அன்றாட வாழ்வில் கணிதம் 2
போரியர் ட்ரான்ஸ்போர்ம்:
ஒரு கீபோர்டில் இடது புறம் உள்ள கீகளை குறைந்த அதிர்வெண் என்றும் வலது புறம் உள்ளதை அதிக அதிர்வெண் என்றும் கூறுவர். இடது புறம் உள்ள கீயை அளுத்தும் போது 30 Hz உருவாகிறது என்று வைத்து கொள்வோம் அப்போது ஒரு நொடிக்கு 30 சைக்கிள்கள் நம் காதிற்குள் செல்லும்.
வல புறம் உள்ள கீயை அழுத்தும் பொது 5000Hz அதாவது 5000 சைக்கிள்கள் நம் காதிற்குள் செல்லும்.
இவை அனைத்தும் சைன் அலைகளை உருவாக்கும். இது போன்ற பல அளவிலான அலைகள் சேரும் போது ஒரு ஒழுங்கற்ற அலைகள் கிடைக்கும்.
அந்த அலைகள் சில தேவை இல்லாத சத்தத்தை உருவாக்கும். அதனால் தரமான ஒளி நமக்கு கிடைக்காது அதை தனி தனி சைன் அலைகளாக பிரிப்பதற்கு பயன்படுவது தான் இந்த போரியர் ட்ரான்ஸ்போர்ம் பின்பு பில்டர்களை கொண்டு தேவை இல்லாத அலைகளை பிரித்து விட்டால் சீரான ஒலி நமக்கு கேட்கும்.
ஒரு கீபோர்டில் இடது புறம் உள்ள கீகளை குறைந்த அதிர்வெண் என்றும் வலது புறம் உள்ளதை அதிக அதிர்வெண் என்றும் கூறுவர். இடது புறம் உள்ள கீயை அளுத்தும் போது 30 Hz உருவாகிறது என்று வைத்து கொள்வோம் அப்போது ஒரு நொடிக்கு 30 சைக்கிள்கள் நம் காதிற்குள் செல்லும்.
வல புறம் உள்ள கீயை அழுத்தும் பொது 5000Hz அதாவது 5000 சைக்கிள்கள் நம் காதிற்குள் செல்லும்.
இவை அனைத்தும் சைன் அலைகளை உருவாக்கும். இது போன்ற பல அளவிலான அலைகள் சேரும் போது ஒரு ஒழுங்கற்ற அலைகள் கிடைக்கும்.
அந்த அலைகள் சில தேவை இல்லாத சத்தத்தை உருவாக்கும். அதனால் தரமான ஒளி நமக்கு கிடைக்காது அதை தனி தனி சைன் அலைகளாக பிரிப்பதற்கு பயன்படுவது தான் இந்த போரியர் ட்ரான்ஸ்போர்ம் பின்பு பில்டர்களை கொண்டு தேவை இல்லாத அலைகளை பிரித்து விட்டால் சீரான ஒலி நமக்கு கேட்கும்.
அன்றாட வாழ்வில் கணிதம் 1
கணிதம் என்றாலே கடினம் தான் என்று நினைக்கும் பலருக்கு தெரியாது கணிதத்தில் உள்ள ஆச்சரியங்கள். ஆம் உதாரணமாக கடைக்கு செல்கிறோம் அங்கு பல விதமான பொருள்கள் உள்ளது ஆனால் அதில் ஒன்றை தான் நாம் தேர்ந்து எடுக்கிறோம். அதை தான் கணிதத்தில் ப்ரொபைபிலிட்டி என்று கூறுவோம்.
இன்டெகரஷன்:
பல துறைகளில் கணிதம் பயன்படுகிறது. கொலை குற்றத்தை கூட கணிதம் மூலம் கண்டு பிடிக்கலாம் எடுத்துக்காட்டக ஒருவர் இறந்து விடுகிறார். அவரை யார் கொலை செய்தார் என்பதை cctv கேமராவில் தேடும் போது அந்த தெரு வழியாக பலர் நடந்து செல்கின்றனர். கொலை செய்ய பட்ட நேரம் தெரிந்தால் தான் குற்றவாளியை கண்டு பிடிக்க முடியும். அதற்கு முதலில் இறந்தவரின் உடல்வெப்பநிலை கடைசியாக எவ்வளவு இருந்தது என்பதை தெரிந்து கொள்ள வெண்டும், பின்பு அறையின் வெப்பநிலையை அறிய வேண்டும் ஏனென்றால் உடலின் வெப்பநிலைகும் அறையின் வெப்பநிலைகும் அதிக இடைவெளி இருந்தால் அது மிக வேகமாக குறையும். இடைவெளி குறையும் போதுஉடலின் வெப்பநிலை மெதுவாக குறையும். பின்பு சிறிது நேர்ம் களித்து அந்த உடலின் வெப்ப நிலையை கண்டறிந்து அதனை joules cooling effect என்ற சூத்திரத்தில் பயன்படுத்தி பின்பு இன்டெகரஷன் செய்தால் கொலை செய்ய பட்ட நேரத்தை கண்டு பிடித்து விடலாம்.
இன்டெகரஷன்:
பல துறைகளில் கணிதம் பயன்படுகிறது. கொலை குற்றத்தை கூட கணிதம் மூலம் கண்டு பிடிக்கலாம் எடுத்துக்காட்டக ஒருவர் இறந்து விடுகிறார். அவரை யார் கொலை செய்தார் என்பதை cctv கேமராவில் தேடும் போது அந்த தெரு வழியாக பலர் நடந்து செல்கின்றனர். கொலை செய்ய பட்ட நேரம் தெரிந்தால் தான் குற்றவாளியை கண்டு பிடிக்க முடியும். அதற்கு முதலில் இறந்தவரின் உடல்வெப்பநிலை கடைசியாக எவ்வளவு இருந்தது என்பதை தெரிந்து கொள்ள வெண்டும், பின்பு அறையின் வெப்பநிலையை அறிய வேண்டும் ஏனென்றால் உடலின் வெப்பநிலைகும் அறையின் வெப்பநிலைகும் அதிக இடைவெளி இருந்தால் அது மிக வேகமாக குறையும். இடைவெளி குறையும் போதுஉடலின் வெப்பநிலை மெதுவாக குறையும். பின்பு சிறிது நேர்ம் களித்து அந்த உடலின் வெப்ப நிலையை கண்டறிந்து அதனை joules cooling effect என்ற சூத்திரத்தில் பயன்படுத்தி பின்பு இன்டெகரஷன் செய்தால் கொலை செய்ய பட்ட நேரத்தை கண்டு பிடித்து விடலாம்.
வெள்ளி, 1 மார்ச், 2019
குயிலி🗡️🗡️ ⚔️
உங்களுக்கு தெறிந்த வீர்மங்கை பெயர்கள் என்று கேட்டதற்கு பலர் கூறிய பதில் ஜான்சி ராணி, சிலர் வேலுநாச்சியார் என்றனர். ஆனால் குயிலி என்ற ஒரு பெண் போராளி இருந்தார் என்பது பலருக்கு தெரியாத உண்மை. ஜான்சி ராணிக்கு முன்பே போர் புரிந்தவர் வேலுநாச்சியார். 1750ஆம் ஆண்டுகளில் மிக அதிகமான போர் வீரர்களை வைத்திருந்தார். அவரது படையான வளரி படை மற்றும் பெண்கள் படை தான் அவரது பலமே. வளரி படையை மருது சகோதரர்களின் கையில் கொடுத்து விட்டு, பெண்கள் படையை ஏற்று நடந்தும் பொறுப்பு குயிலிக்கு வழங்கப்பட்டது.சிறு வயது முதலே வேலுநாச்சியாரை பார்த்து பார்த்து தன் வீரத்தை வளர்த்தி கொண்டார் குயிலி. ஆங்கிலேயருக்கு எதிராக போர் புரிந்து கொண்டு இருந்த போது ஆங்கிலேயரின் ஆயுதங்கள் மிகவும் பலம் கொண்டவையாக இருந்தது அதனை அழித்தால் தான் அவர்களை அழிக்க முடியும் என்ற நிலை உருவாக அதனால் அடுத்த நாள் அரண்மனையில் நடந்த அம்மன் பூஜையில் கலந்து கொள்வது போல் கோட்டைக்குள் நுழைந்தனர். ஆங்கிலேயர் எதிர்பாராத விதமாக நாச்சியரும் அவரது படையும் தாக்க ஆரம்பித்தது. தீடீரென்று உடம்பு முழுவதும் நெய் ஊற்றிய உருவம் ஒன்று ஆயுத கிடங்கில் நுழைந்து நெருப்பு வைத்துக்கொள்ள கிடங்கோடு சேர்ந்து ஆங்கிலேயரும் அழிந்தனர். அந்த தற்கொலை போராளி வேறு யாரும் அல்ல வேலுநாச்சியாரின் தளபதியான குயிலி தான்.உலகில் முதல் தற்கொலை படை போராளியும் நம் தமிழ் வீரமங்கை குயிலி தான்.
18+👆👆👆
இன்றுசமூக வலைத்தளங்களில் பகிரப்படும் ஒரு கேள்வி, 18+ உங்கள் ஓட்டு யாருக்கு என்பது தான். என்னை போன்ற பல கல்லூரி மாணவர்கள் ஓட்டு போடும் முதல் தேர்தல் இது. அடுத்த 5 ஆண்டு நம் நாட்டின் தலை எழுத்தை நிர்ணயிக்கும் அந்த 5 நொடிகள் நாம் தெளிவாக இருக்க வேண்டும்.
நம்மை பாத்து நாம் கேட்டு கொள்ளும் முதல் கேள்வி1. இதற்கு முன் இருந்த அரசால் என்ன ஆதாயம் உண்டு. மக்களுக்காக என்ன செய்தனர். சாதாரண மக்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள் கிடைத்ததா அல்லது பெரிய தலைகளின் குறுக்கீட்டால் நிராகரிக்கப்பட்டதா ?
2. இதற்கு முன் வழங்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதா?
3. தன் கட்சியை பிரபல படுத்தும் விதமாக செய்யப்படும் அனாவசிய செலவுகளுக்கு கூட்டத்திற்கும் ஆறுதல் அளிக்க கூடாது. ஏனென்றால், உண்மையில் நாட்டு மக்களுக்கு சேவை செய்ய விரும்புவார்கள் ஒரு செயலை செய்து விட்டு இதை நான் தான் செய்து உள்ளேன் என்று மேடையில் ஏறி கூவ தேவை இல்லை அது உண்மையில் செய்ய பட்டு இருந்தால் அது தானாகவே மக்களை சென்று அடையும் ஏனென்றால் பூக்கடைக்கு விளம்பரம் தேவை இல்லை.
4. மேலும் இறுதியாக உறுதியாக அழிவின் விழும்பில் இருக்கும் பெண்கள் இனத்தை பாதுகாக்கும் எண்ணம் உள்ளவர்களுக்கு தான் எங்கள் ஓட்டு.
எங்கள் ஓட்டு எங்கள் உரிமை. எங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல.
ஞாயிறு, 24 பிப்ரவரி, 2019
தமிழ் உணவின் சிறப்பு 🌶️🍋🥘
வாகை🏆🏆🏆🏆
நம் வாழ்வில் வெற்றியை தேடி ஓடி கொண்டிருக்கிறோம் ஆனால் இந்த சில விஷயங்களை பின் பற்றினால் நிச்சயம் வெற்றி கிட்டும் என்பதை அனுபவத்தால் உணர்ந்த சில குறிப்புகள் இதோ
1. எந்த பொருளின் மீடும் பற்று கொள்ளாதே. அதற்காக குறிக்கோளை விட்டுவிடாதே.
2.யாரையும் சார்ந்து இருக்காதே. முக்கியமாக நண்பர்களை போல இருக்ககும் வஞ்சகர்களை நம்பாதே.
3. தாய், தந்தை, இறைவன் இவர்களை தவிர வேறு யாரும் உனக்கு நல்லது எண்ண மாட்டார்கள் என்பதை புரிந்து கொள்.
4. காதல், காதல் மாயை இந்த இரண்டிற்கும்உள்ள வேற்றுமையை புரிந்து கொள்.
5.அறிவுரை கூறுபவர்கள் மீது கோபம் கொள்ளாமல் அதை கேட்க பழகு.
6.கோபம் ஏற்படும் நிலையில் கண்களை மூடி பெருமூச்சு விட்டு பின்பு கண்களை விழித்து புன்னகையுடன் அதை எ திர் கொள்.
வியாழன், 14 பிப்ரவரி, 2019
அன்புள்ள அப்பா🏃🏃🏃🏃
நான் உன் மகளாய் பிறந்தது நான் பெற்ற பாக்கியம் என்று எண்ணினேன்.
நீயோ உன் தாயிற்குச் சமமாய் என்னை எண்ணினாய்,
என்னை தாலாட்டி,வழிநடத்தி,என்னை சீர்தூக்கி வாழவைத்தாய்.
நான் தவறு செய்யும்போது என்னை கண்டித்தாய்,நான் மனம் வருந்தினேன் ,
ஆனால் இன்றோ நான் பிறரால் மனம் வாடாமல் தலைநிமிர்ந்து நிற்கிறேன்.
எல்லாம் உன்னாலே !
நான் பிறந்த முதல் நாளில் இருந்து
நான் நேசித்த ஒரே ஆண் நீ மட்டும் தான்,
நான் உனக்கு மகளாய் பிறந்தது நீ செய்த புண்ணியம் என்று கருதினாய்,
நான் உன் மனம் நோகடித்து பாவம் புரிவேனோ?
மகளாய் பிறந்த ஒவ்வொரு பெண்ணிற்கும் இது சமர்ப்பணம்.✍️✍️✍️
செவ்வாய், 5 பிப்ரவரி, 2019
சிறு புறாக்கள்🕊️🕊️🕊️
நம் வீட்டில் பாசமாக வளர்க்கும் புறாக்கள் வெளியே இரை தேடி செல்லும் ஆனால் மீண்டும் வரும் போது சில புறாக்கள் இருக்காதம். வழியில் கழுகுகள் அதை பிடித்து தின்று தன் பசிக்கு உணவாக்கி கொள்ளும். அது போல தான் இன்று மனிதன் என்னும் முகமூடி அணிந்து கொண்டு இருக்கும் பல இரக்கம் இல்லாத கழுகுகள், குழந்தைகளாகிய சிறு புறாக்களின் வாழ்க்கையையும் அவர்களின் கணவுகளையும் சிதைத்து அவர்களின் பசிக்கு உணவாக்குகின்றனர்.இந்நிலை மாற சட்டங்கள் கடுமையாக்க பட வேண்டும்.
சனி, 2 பிப்ரவரி, 2019
என் விடியல் .🌅🌅🌅
என் வீட்டை சுற்றி பூங்காவாக மாற்றிய என் அம்மாவின் வீட்டு தோட்டத்தில் காலை வணக்கம் சொல்லும் குருவிகளின் ஆரவாரம் இல்லாத இனிமையான ஓசையில் என் விடியல் தொடங்க,வீட்டு அருகில் உள்ள புளிய மரத்தில் உள்ள புளியை உலுக்கி பறிக்கும் பாட்டிகளின் பேச்சு சத்தம்.காலையில் கண்களுக்கு குளிர்ச்சியாக உள்ள மலர்கள் அதன் மேல் உள்ள பனி துளிகள்.என் அம்மா தூவிய அரிசியை தின்ன காலையில் கூடும் மயில் கூட்டம். அதில் வெறும் பெண் மயில்கள், ஆண் மயில் வருமா என்று எதிர்பார்க்கும் என் கண்கள். நெல்லுக்கு போகும் நீர் புல்லுக்கும் செல்வது போல மயில்கள் திண்ணு மீதம் உள்ள அரிசியை திங்கும் மைனாக்களும், கொவ்தாரிகளும் அதனை துரத்தி விளையாடும் நாய் குட்டிகள்.இரவு என் வீட்டில் உள்ள பாலை குடித்து விட்டு ஒன்றும் தெரியாதது போல் காலையில் அமர்ந்து இருக்கும் என் பக்கத்து வீட்டு பூனை குட்டி. இதை அனைத்தையும் ரசித்து நின்று போது, நந்து கல்லூரிக்கு நேரமாகிறது கிளம்பு என்றது என் தாயின் குரல். கிராமத்து வாழ்க்கை மட்டும் இன்பம் அளிக்காது கிராமத்தை போல் நம் நகரத்து வீட்டை மாற்றினாலும் இன்பம் கிடைக்கும்.
ஒரு வாழ்க்கை
இந்த உலகத்தில் நல்லவர் கெட்டவர் என்று எவரும் கிடையாது. ஒரு நாள் என்றால் இரவு பகல் இருப்பது போல, ஒரு மனிதற்குள்ளும் நல்லதும் இருக்கும் கேட்டதும் இருக்கும்.ஒருவனின் சூழ்நிலை தான் ஒருவனை மாற்றுகிறது. மேலும் நீ ஒருவருக்கு ஆதரவாக பேசினால் நல்லவர் ஆனால் ஒருவர் செய்த தவறை சுட்டிக்காட்டி அவரை எதிர்த்து பேசினால் நீ கெட்டவர். அதனால் இந்த உலகத்தின் பேச்சுகளை கேட்காமல் நாம் வாழும் இந்த ஒரு நிரந்தரம் இல்லாத வாழ்க்கையை நம் மனதிற்கு பிடித்த படி , உண்மையாகவும் நேர்மையாக வாழ்வோம்.
வியாழன், 31 ஜனவரி, 2019
நம் கடமை
சில நாள்களாக நான் பார்த்து கொண்டு இருக்கும் காட்சி இது. ஆம் ஒரு வயசான தம்பதிகள் தன் விலைநிலத்தில் உள்ள பயிர்களுக்கு குடத்தில் சாலை ஓரத்தில் உள்ள குழாயில் தண்ணீர் பிடித்து ஊற்றும் நிலை.மழையை நம்பி விவசாயம் செய்த நிலை மாறி இந்த நிலை ஏற்பட்டு இருக்கிறது. இது விவசாயிகளின் சாபமா அல்லது தொழிற்சாலைகளின் லாபமா என்று தெரியவில்லை.
விவசயத்தை போற்றுவோம் என்று கூறும் நாம் தான் விவசாயிகளின் விலை பொருள்களுக்கு பேரம் பேசுகிறோம்.பாலிதீன் தீங்கானது மண்ணுக்கும் மனிதனுக்கும் கெடுதல் தரும் என்பதை தெரிந்த நம்மை போன்ற படித்தவர்களே அதை சாலையில் போடுகின்றனர்.
நாட்டின் வளர்ச்சியை அரசாங்க அமைப்பால் மட்டும் பாதுகாக்க முடியாது. குடிமக்களாகிய நமக்கும் சில கடமை உண்டு அதை நாம் முதலில் செய்ய வேண்டும். இந்திய குடிமக்களாகிய நம் கடமை விவசயத்தை பாதுகாப்பது ஆனால் வெறும் வார்த்தையால் அல்ல நம் செயலால்.
விவசயத்தை பாதுகாத்து மனித இனத்தை அழிவில் இருந்து மீட்போம்.
புதன், 30 ஜனவரி, 2019
சாதனை பெண்👩👩
23 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய ராணுவ கார்ப்சுக்கு குடியரசு அணிவகுப்பில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. அதை தலைமை ஏற்று நடத்தும் பொறுப்பு இவருக்கு கிடைத்தது.முதல் முறையாக 144 ஆண்களை தலைமை ஏற்று நடத்தும் பெண் என்ற சாதனையை படைத்தார். இப்போது 26 வயதாகும் இவருக்கு தன் ராணுவ கணவரும் தன் குடும்பமும் பக்க பலமாக இருக்கிறது என்று கூறும் பாவனா ஒரு சாதனை பெண் தான்.
திங்கள், 28 ஜனவரி, 2019
குடியரசு தினம்🇮🇳🇮🇳🇮🇳
15 ஆகஸ்ட் 1947 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்ற நாளாக கருதப்படுகிறது ஆனால் 26 ஜனவரி 1950 குடியரசு தினம் என கொண்டாட காரணம் என்ன என்ற கேள்வியின் பதில் தான் இந்த பதிவு.
பெரும்பாலும் சுதந்திர தினத்தை போலவே கொடியேற்றி இனிப்புகள் பரிமாறி இந்த தினத்தை கொண்டாடுகிறோம். இந்திய உலகளவில் ஒரு போற்றத்தக்க ஒரு குடியரசு நாடாக உள்ளது.சுமார் ஒரு 88 ஆண்டுகளுக்கு முன்பு நம் நாட்டில் நிலவிய பொருளாதார நெருக்கடியும், வறுமையும் மக்களை புரட்சி பாதையில் திசை திருப்பியது. அவர்களை அஹிம்சை நிலைக்கு திருப்ப வேண்டும் என்று எண்ணிய காந்தி அடிகளார் 26 ஜனவரி 1930 அன்று சுதந்திர நாளாக கொண்டாட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். அதன் பின்னர் அந்த நாள் கொண்டாடப்பட்டது. அதற்கு பின்பு 17 ஆண்டுகள் கழித்து உண்மையான முழு சுதந்திரம் கிடைத்தது. அதனால் அந்த நாளை குடியரசு தினமாக கொண்டாட நேரு அமைச்சரவை 26 நவம்பர் 1949 அன்று முடிவு செய்து 26 ஜனவரி 1950ஆம் ஆண்டு குடியரசு தினமாக கொண்டாடப்படுகிறது.
வெள்ளி, 25 ஜனவரி, 2019
வியாழன், 24 ஜனவரி, 2019
நேதாஜி என்னும் சக்தி🔥🔥🔥
பெண்களுக்கு எதிராக பல கொடுமைகள் இருந்த கால கட்டத்தில் பெண்களுக்கும் வீரம் உள்ளது என்பதை இந்த உலகிற்கு உணர்த்த ஒரு சக்தி ஜனவரி 23 1897 ஆம் ஆண்டு பிறந்தது ஆம் அவர் தான் மக்களால் நேதாஜி என்று அன்பாக அழைக்க பட்ட சுபாஷ் சந்திர போஸ். இரண்டாம் உலக போர் நடந்து கொண்டு வந்த கால கட்டத்தில் வெளிநாடுகளில் உள்ள நூற்றுக்கணக்கான போர் கைதிகளை திரட்டி இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கினார். இவர் தான் இந்த ராணுவத்தில் பெண்களுக்கான தனி படை ஆன ஜான்சி ராணி படையை உருவாக்கினார்.1992 ஆம் ஆண்டு இறப்புக்கு பின்னான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது ஆனால் அவரின் இறப்புக்கான ஆதாரங்கள் இல்லாததால் உச்சநீதிமன்ற ஆணைப்படி அந்த விருது திரும்ப பெற பெற்றது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)