கவிதை முதலாம் ஆண்டு மாணவிகளுக்காக... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதை முதலாம் ஆண்டு மாணவிகளுக்காக... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 15 ஜூன், 2016

வரவேற்பு


Image result for கல்லூரி கவிதைகள்

பள்ளியின் நினைவுகளை ரோஜா மலராக
     சூடியிருக்கும் உங்களுக்கு இந்த கல்லூரி
ரோஜா வனமாக அமைந்திட;
     சுற்றி இருக்கும் அனைவரும் தோழியாக பழகிட;
வேப்பங்காயாய் கசக்கும் தருணத்தையும்
     வெல்லமாக இனிக்கும் தருணமாக மாற்றிட;
இந்த கல்லூரி வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடமும்
     நீங்காத நினைவுகளாக மலர்ந்திட!
தாளம் பூவாய் மணந்திட! இன்சுவை நல்கிட!
     குயிலின் குரல் ஆரவாரத்தை கூட்ட
கைத்தட்டல்களையே தாளமாக்கி! எங்கள் அன்பையே
     மல்லிகை மலராகத் தூவி வரவேற்கிறோம்;
சகோதரியாக அல்ல உங்கள் அன்பிற்குறிய தோழியாக!