கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 14 ஏப்ரல், 2021

பேனா

வர்ணிக்க நீ வா!!
வாசிக்க நான் வருகிறேன்!!
வார்த்தைகள் வாடியது!!
சொற்கள் சோர்ந்தது 
என்றது என் பேனா!!!!






புதன், 5 டிசம்பர், 2018

வெற்றிப்பாதை

சிந்தித்து வாழ்வோம் சிதைந்த
நம் வாழ்வை சீர்திருத்த
முயன்று வாழ்வோம் நம்
வாழ்வில் தலைநிமிர
தோல்விகளால் சோர்வடையாமல்
தன்னம்பிக்கையில் துணிந்து
பயணிப்போம் வெற்றியை நோக்கி

வியாழன், 11 அக்டோபர், 2018

எனது மற்றொரு பாதி

எங்கு இருந்தோ வந்து
     ஒன்று கூடினோம்
இக்கல்லூரி தாயின் கருவறையில்
      சிரித்துப் பேசிய நாட்களும்
சிந்தித்து பேசிய நாட்களும்           
      சொல்லும் நம் கல்லூரி தாயின்
கருவறை இரகசியம் என்னவென்று
      வெகுதூரம் செல்லுமா என்று
தெரியாத உறவிது, ஆனால்
      தேன் சிந்தும் மாலையில் கண்ட காதலனை விட, கண்ணீர் சிந்தும்
      வேளையில் யான் கண்ட நட்பு
பெரிதென்று கூறுவேன் நம்
      நட்பின் பெருமையை!!!
       
   

செவ்வாய், 2 அக்டோபர், 2018

மதிப்பு

தெய்வத்திற்கு இவ்வுலகில் உயிர் உண்டா?கற்களையும் ஒளியையும்  தெய்வம் என்று கருதுகிறோம்
ஆனால் உயிரோடு நடமாடும்
நம்மை காக்கும் பெற்றோரை இறைவனாக ஏன் வணங்குவதில்லை? அப்படி
வணங்கினால் ஏன் தோன்றுகிறது
முதியோர் இல்லம்? கற்களுக்கும்
ஒளிக்கும் இருக்கும் மரியாதை
ஏன் நம் பெற்றோருக்கு இல்லை?
எல்லாவற்றையும் இழந்த பின்
திரும்பிப் பார் உன்னை தாங்க
உன்னைப் பெற்ற பெற்றோரே ஆதரவாக இருப்பார்கள்.

ஞாயிறு, 30 செப்டம்பர், 2018

புதுமைப் பெண்

மலர்களில் இதழ்களைப் போல
ஒவ்வொரு பருவ நிலையிலும்
 உதிர்ந்தது என் கனவு,
சோர்வடைந்த பெண்ணாய்          திகழவில்லை
வீழ்ச்சியும் எழுச்சியும் கொண்ட
பெண்மையின் நற்குணத்தின் நறுமணத்தோடு திகழும்
பாரதியின் புதுமைப் பெண்                                    

வெள்ளி, 28 செப்டம்பர், 2018

சூழ்நிலைக் கைதிகள்


சூழ்நிலையில் சுயநினைவை          இழந்த மானிடப் பிறவியே கட்டாயத்தின் அடிப்படையில்  
உன்னை தாங்கிக் கொண்டிருக்கும்
பூமித்தாய் தன் அகங்காரத்தில்
உன்னை எரிக்க முயன்றால்
மண்ணில் வந்த நீ மண்ணாகி விடுவாய்.....உன்னால் அவளை போற்ற இயலவில்லை என்றாலும் அவளை அழிக்க முயலாதே
அதன் பின்விளைவு உன் மரணம்!
                     

வன்கொடுமை

விதையாய் விதைத்து
மரமாய் வளர்ந்தது
பெண் விடுதலை அல்ல
விதைத்து மரமாய் வளர்ந்தது
பெண் வன்கொடுமை
நாகரிகத்தோடு வளர்ந்த சமூகம்
ஏன் நாகரிகம் இழந்து
பெண்ணை தீமை என்னும்
தீயால் துன்புறு செய்கிறது
கேள்விகளுக்கு விடை இன்றி
தவிக்கும் பெண்ணினம்
                     
               

வியாழன், 27 செப்டம்பர், 2018

அடைப்பட்ட பறவைகள்

சாதிக்க முயலும் பெண்களையும்
சபிக்கும் சமூகம்.......
ஆண்களின் அடிமையாக வாழ
விருப்பமின்றியும் வாழும் கைதிகள்
அடிகளையும் முயற்சி படிகளாய்
மாற்றும் ஓரினம்.... என் இனம்
துயரங்கள் பல இருப்பினும்
இன்முகம் சிரிப்புடன் வாழ்ந்து
வரும் இச்சமூக கைதிகள்.....
விடுதலை இல்லா பறவைகள்
சிறகுகள் இருந்தும் பறக்க
முயலா நிலை....என்றுதான் மாறும்?

புதன், 26 செப்டம்பர், 2018

அன்புள்ள அம்மா

உன் கருவரையை எனக்கு
வசிப்பிடம் ஆய் தந்தவள் நீ
நான் கொடுக்கும் வலியிலும்
இன்பம் கண்டவள் நீ
நான் தவழ்ந்து நடக்கும்
நடையில் நயம் கண்டவள் நீ
என் மழலைப் பேச்சினை
ரசித்தவள் நீ....
என் அறியா பருவம் முதல்
இன்றுவரை எந்தவித எதிர்பார்ப்புகளும் இன்றி என்னை
காதலித்ததும் நீ...... என்னுயிர் தாயே

செவ்வாய், 25 செப்டம்பர், 2018

முதல் பிரிவு

என் கண்களில் ஒரு நீர்த்துளி
நம் காதலை எண்ணி....
எனது இதழ்களில் சிறிது சிரிப்பு
நம் கால நினைவுகளை எண்ணி
மறுவாழ்வு தேடி சென்றது
நீயா? அல்லது உன் நிழலா?
நீ சென்றுவிட்டாய்...
இருப்பினும் ஏன் உன் நிழல்
மீண்டும் நான் உன் காதலியாக வேண்டும் என்று
என் பின்னே நிற்கிறது?

புதன், 19 செப்டம்பர், 2018

தித்திக்கும் தமிழே

தித்திக்கும் தேனைவிட சுவையான தமிழே !!!
உன்னை என்னவென்று போற்றுவேன் !!!
திசையெங்கும் தடையின்றி சுலபமாக பரவியிருக்கிறாய் நீ !!!
தினமும் விடையின்றி பலமாக யோசிக்கிறேன் உன்னை மட்டும் எவ்வாறு மக்கள் போற்றுகிறார்கள் என்று!!!
தேசம் முழுவதும் உன் வாசம் வீசுகிறதே!!!
உன்னோடு நட்புக் கொள்ள ஆசை படுகிறேன் நான்!!
செம்மொழியாம் தமிழ் மொழி
என  புகழ்ந்து  பிறநாட்டினர் பெருமைபடுகிறனர் !!!
எம்மொழியாம் தமிழ்மொழி என நான் மகிழ்ந்து பிறநாட்டினரிடம் 
பெருமைப்பேசிவருகிறேன் !!!
   வெறும் பேச்சில் மட்டுமல்ல!!!
       ‌ என் உயிர் மூச்சிலும் !!!
           வாழ்க தமிழ்!வளர்க தமிழ்!!

வியாழன், 16 ஆகஸ்ட், 2018

நட்பு




அப்பாவின் முன்னின்று உரையாட ஒருவீரனால் மட்டுமே முடியும். 

அம்மாவின் முன்னின்று உரையாட  சீரியல்களை பார்த்தாலே முடியும்.

அண்ணனிடம் முன்னின்று உரையாட 
வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் பார்த்தாலே முடியும்.

தங்கையிடம் முன்னின்று உரையாட பேஸ்புக்கில் போஸ்ட் பார்த்தாலே முடியும்.

ஆனால், நண்பனிடம் முன்னின்று உரையாட எந்தவித காரணமும் தேவையில்லை உன்வாழ்க்கையின் சுகம் துக்கம் அனைத்தையும் எந்தவித ஒளிவுமறைவின்றி நண்பனிடம் மட்டுமே உன்னால் பகிர்ந்து கொள்ளை முடியும். 

வாழ்க்கை


வாழ்க்கை என்பது புத்தகம் போல்
அதில் முதல் பக்கம் கருவறை
கடைசி பக்கம் கல்லறை
இடையில் உள்ள பக்கங்களை
கண்ணீரால் வாசிக்காதே
புன்னகையால் வாசி
தவிர்க்க முடியாமல் சில இழப்புகள்
வெளிப்படுத்த முடியாமல் சில உண்மைகள்
அனுபவிக்க முடியாமல் சில சந்தோசங்கள்
இவைகள் நிறைந்தது  தான்
வாழ்க்கை,

கவிதையாக்கம் - 
ப.குமுதம், இரண்டாமாண்டு கணிதவியல்

தட்டச்சு - ச.கீர்த்தனா, முதலாமாண்டு கணிதவியல்


வியாழன், 2 ஆகஸ்ட், 2018

நட்பு

வானையும் பூமியையும் இணைக்கும்
மழை என்னும் சங்கிலியே நட்பு
கடலின் சிறப்பை சொல்ல காற்றில்
கூட கலந்திருக்கும் உப்பே நட்பு
ஒரு மனிதனை பெற்றெடுப்பது தாய்
தோள் தட்டி வளர்ப்பது தந்தை
உயிரையே கொடுத்து உயர்த்துவது நட்பு
ரோஜா மலர்களுக்கு முட்கள் தான் நண்பன்
ஒருவன் மலர்கின்ற ரோஜா என்றால் 
அவன் பாதுகாத்து மலரவைப்பது நட்பு
தாய் கடவுளுக்கு நிகரான வரமாம் 
துணை கடவுள் கொடுத்த வரமாம்
நண்பன் கடவுளுக்கே கிடைக்காத வரமாம்
நட்பை மதித்துப் புரிந்துகொண்வனுக்கு
அது வரமோ- ஆனால்
மதிக்காது மதியிழந்தவனுக்கு அது சாபமே!

ச.கீர்த்தனா
முதலமாண்டு இளங்கலை கணிதம்
கே.எஸ்.ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரி
திருச்செங்கோடு

சனி, 22 ஜூலை, 2017

யார் அவர்?



                                                                               
சுகன சுமையாய் மார்பில் சுமந்து வளர்த்தவர்!
     தொலைநோக்கு சிந்தனைக்கு வித்திட்டவர்!
மிரட்டலில் பயந்து பணிய வைத்தவர்!
     அன்பில் நனைய வைத்தவர்!
தைரியத்தை ஊட்டி வளர்த்தவர்!
     தோள் கொடுத்து வளர்த்த தோழன்!
உன்னால் முடியும்
என்னும் வார்த்தையை அறிமுகப்படுத்தியவர்!
     என்றும் உறுதுனையாக இருப்பவர்;
என்னை நினைத்து என்றும் பெறுமைபடுபவர்!
     நான் செய்யும் தவறை சுட்டி காட்டுபவர்!
என் மேல் எனக்கு இல்லாத நம்பிக்கை
     அவருக்கு என்றும் இருக்கும்!
அவர் யாராக இருக்க முடியும் என் “தந்தை”யை தவிர?