எங்களின் கிராமத்து வாழ்க்கை மிகவும் அழகானது...
சேவல் கூவும் சத்தத்தில் தான் அந்த நாளின் யுத்தம் தொடங்கும்...
எட்டாத வேப்ப மரத்தை எட்டிப் பிடித்து.. வேப்பங்குச்சி ஒடித்து பல் விலக்கும் காட்சி...
காலையிலே அப்பாவுக்காய் அம்மா ஆசையோடு போடும் நாட்டுச் சக்கரை டீ..
மாட்டுச் சாணம் அள்ளுவதில் இருக்கும் மனமகிழ்வு...
தண்ணீர் கலக்காத சத்தான பாலை மக்களுக்கு தரும் மாண்பு...
லாபமென்றாலும் செயற்கை உரமெனும் விஷத்தை தாயின் மடியிலே தெளிக்க மாட்டேன் எனும் விவசாயி..
சந்தைக்கு போகும் அவசியமில்லை..
காய்கறிகளெல்லாம் எங்கள் தோட்டத்தில் விளைவதனால்...
மருத்துவர் தேவையில்லை ஏனென்றால் பாட்டிகள் எங்களுடன் இருக்கிறார்கள்...
சத்து மாத்திரைகள் தேவையில்லை.
அதைவிட சத்தான கீரைகள் எங்கள் மண்ணிலே விளைகின்றன...
ஆரோ தண்ணீரை விட ஆரோக்கியமான தண்ணி எங்கள் ஆற்றுத் தண்ணீர்...
அனைத்து உணவும் பிறருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதால் குளிர்சாதனப் பெட்டிகளுக்கு வேலை இல்லை...
வீட்டைச் சுற்றியும் மரங்கள் இருப்பதால் நாங்கள் மறந்து கூட ஏசியை ஓசியில் தந்தாலும் வாங்குவதில்லை...
அண்டை வீட்டாரிடமும் அயல் வீட்டாரிடமும் முகம் கொடுத்து பேசுவதனால் அதிக நேரம் முகநூலில் முகம் பதித்து கிடையாது...
தெருவுக்கு நான்கைந்து பாட்டிகள் இருப்பதால் எங்கள் கிராமங்களில் சிசிடிவி க்கும் வேலையில்லாமல் போனது...
உண்மையிலே கிராமத்து வாழ்க்கை மிகவும் அழகானது..
பணம் காசு சொத்து சுகம் எப்போது வேண்டுமானாலும் சம்பாதித்துக் கொள்ளலாம்..
முடிந்த வரை கிராமத்து வாழ்க்கையை வாய்ப்பிருக்கும் போதே அணுபவித்துக் கொள்ளுங்கள்.
கிராமங்கள் நாட்டின் முதுகெலும்பு...
முறித்து விடாதீர்கள்....