சிந்தனைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிந்தனைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வெள்ளி, 14 செப்டம்பர், 2018
புதன், 15 ஆகஸ்ட், 2018
பிறப்பின் வலி
நடந்து கொண்டிருக்கிறது பாலியல் பிரச்சினைகளுக்கெல்லாம் என்னுடைய தீர்வு என்னவென்றால்
இனிமேல் ஒவ்வொரு பெண்ணின் பிரசவ அறைகளிலும் கணவன் அணுமதிக்கப் பட வேண்டும்.அந்தப் பெண் படுகின்ற வேதனை காட்சிப் படுத்தப் பட வேண்டும்.
தன்னுடைய மனைவி இவ்வளவு கஷ்டப்பட்டு தன் பிள்ளையைப் பெற்றிருக்கிறாள் என்பதை அறிந்த எந்த ஆணும் வேறொரு பெண்ணின் வாழ்வை சிதைக்க மாட்டான்.
தன்னுடைய தாய் இவ்வளவு வேதனைகளைத் தாங்கி தன்னை பெற்றிருக்கிறாள் என்பதை அறிந்த எந்த பிள்ளையும் வேறொரு பெண்ணின் வாழ்வை சிதைக்க மாட்டான்.
வெளிநாடுகளில் இருக்கிற மருத்துவமனைகளிலெல்லாம் கணவர்கள் அணுமதிக்கப் படுகிறார்கள்.
தமிழகத்திலும் இதை அமுல்படுத்தினால் பாலியல் பிரச்சனைகள் குறையும்.
லேபிள்கள்:
காவியா சரவணன்,
சிந்தனைகள்,
வணிகவியல் துறை
திங்கள், 21 மே, 2018
நீண்ட நாட்களுக்கு பிறகு...
தென்றல் காற்று காதுகளை வருடிக் கொண்டும்..
மழைச்சாரல் உடலை நனைத்துக் கொண்டும்..
எனது உதடுகளோ மெல்லிசை வரிகளை முணுமுணுக்கிறது..
கைகளோ தாளம் இசைக்க கால்களோ துள்ளிக் குதிக்கின்றன..
மிதந்து வரும் மண்வாசனையில் உள்ளம் தொலைந்து போகிறது..
போர்வைக்குள் மறைந்து மறைந்து வெளியில் எட்டிப் பார்க்கிறது உடல்..
மரங்களை வெட்டியதால் கோவம் கொண்டு பொழிகிறதா.?
இல்லை ஏழை விவசாயிகள் சிரிக்கட்டும் என்று பொழிகிறதா.?
நாட்டில் நிலவும் அநியாயத்தை கண்டு அழுகிறதா.?
நீ வந்தாலும் அவஸ்தை தான்...
வராவிட்டாலும் அவஸ்தை தான்...
இயற்கையை செயற்கையால் மறைக்க இயலுமா..?
எவ்வளவுதான் தொழில்நுட்ப வளர்ச்சி கண்டாலும்
குளியலறையில் செயற்கை ஷவரில் குளிப்பதை விட
இயற்கையாக அமைந்த ஷவரில் குளிக்கவே விரும்புகிறது..
என்ன சொல்வது என்று தெரியாமல் எனக்கு எட்டிய வார்த்தைகளை கோர்த்து எழுதிவிட்டேன். . மழையில் நனைந்த படி எனது எழுத்துக்களும் நனைக்கிறது..
வெள்ளி, 30 மார்ச், 2018
கனவுக்கு உயிர் கொடுப்பேன். ..
பசுமையான வயல்வெளிகள்..
பாட்டி தாத்தா சொன்ன கதைகள்..
பள்ளிக்கு போக மறுத்த நாட்கள்..
குச்சிமிட்டாய்க்கும் பஞ்சுமிட்டாய்க்கும் அழுந்த நாட்கள்..
கோயில் கடைகளில் அடம்பிடித்து வாங்கிய பொருட்கள்.
அப்பாகிட்ட அடி வாங்கின நாட்கள்..
அம்மா சமைக்கும் போது ருசித்த நாட்கள்..
ஊர் பெருசுங்க பேசும் வதந்திகள்..
பேருந்தில் பயணச்சீட்டு வாங்காமல் சென்ற நாட்கள்..
நாட்குறிப்பேட்டில் மட்டும் புதைந்து போன விவரம் அறியா காதல் கதைகள்..
நண்பர்களுடன் சமைத்த கூட்டாஞ்சோறு..
பம்பு செட்டில் நீராடிய நாட்கள்..
கில்லி விளையாடிய நாட்கள்..
பட்டம் செய்து தர சொல்லி போட்டி போட்டு விளையாடிய நாட்கள்..
டாம் & ஜெர்ரி பாப்பாய் பார்த்து பொழுது போக்கிய நாட்கள்..பள்ளியில் சென்ற சுற்றுலா பயணங்கள் ..
அப்பா சட்டையில் காசு திருடி உண்டியலில் சேர்த்தது..
நண்பர்களுடன் வீதியில் போட்ட ஆட்டம் பாட்டங்கள்..
பிறந்தநாள் என்றால் புது ஆடையில் ஒரு நாள் கூத்து..
ஒரு ரூபாய்க்கு வாடகை சைக்கிள் வாங்கி ஊரை சுற்றிய நேரங்கள்..பள்ளி தோழனின் மரணம்...
அப்துல் கலாம் வருகையை எதிர்பார்த்து ரோட்டில் காத்திருந்த நேரம்..
வானில் போகும் வான ஊர்திக்கு கை வீசி டாட்டா காட்டிய நேரங்கள்..
அன்றைய இரயில் நிலையம் இன்றைய விமானம் நிலையம் போன்ற பிரமிப்பு..
விருந்தினர் வருகையால் வீட்டில் சமைக்கும் கறிச்சோறு..
அம்மை போட்டால் பள்ளிக்கு விடுமுறை..
மழை வந்தால் பேப்பரில் விட்ட டைடானிக் கப்பல்..
கண்களை மூடியே பார்த்த பேய் படங்கள்..
இரவு நேரங்களில் பாத்ரூம் போக பயந்து படுகையை நனைத்த நாட்கள். .
பள்ளி ஆண்டுவிழாவில் ஆடிய முதல் நடனம் அரங்கேற்றிய நாடகம்..
டிவி பார்க்கையில் இதுக்கு பின்னால் மனிதர்கள் உள்ளனரா என்று பார்த்த நாட்கள்..
விக்கிரமாதித்தன் வேதாளம் தொடர்கதைகள்..
சிந்துபாத் கதைகள்... சாலமன் பாப்பையா தலைமையில் நடந்த பட்டிமன்றங்களே ஞாயிறு தோறும் வீட்டில் பார்க்கப்படும்...
டாப் டென் சினிமா.. டாப் டென் பாடல்கள்..
ஆண் (ம) பெண் நண்பர்களுடன் சேர்ந்து சென்ற திரையரங்குகள்..
விடுமுறைக்கு ஊருக்கு சென்றால் திரும்ப வரவே பிடிக்காத நாட்கள்..
பட்டாசு வெடிக்கையில் ஓட்டையான புது துணி..
பொங்கலுக்கு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி டிவியில் ஒளிபரப்பாகும் நேரங்கள். .
பெரியவள் ஆனதும் பூப்பு நன்னீராட்டு விழா அத்தை மடியில் கொண்டாடிய நேரங்கள். .
வீட்டில் பாம்பு வந்ததும் பக்கத்து வீட்டு அண்ணாவை அழைத்து வந்து பாம்பை அடித்த நாட்கள்..
எதற்கு நடுகிறோம் என்று தெரியாமல் நட்ட மரங்கள். .
டியுசன் டீச்சர் அடித்து சொல்லிக் கொடுத்த பாடங்கள்..
அரசியல் பேச்சு பேசிய டீக்கடை அண்ணாக்கள்..
ஓட்டுக்கு பிரியாணி காசு வாங்கி ஓட்டு போட போனவர்கள்..
கணக்கு வாத்தியாரை பார்த்தாலே கால் நடுங்கும்..
ஆலமரத்தில் ஆடிய ஊஞ்சல். .
புளிக்கொட்டையில் ஆடிய பல்லாங்குழி.. ஐந்தாங்கல் பாம்பு கரம் தாயம் ஆடியது..
மாமா கூட வண்டியில் போன பயணங்கள். .
குமரியை நடுங்க வைத்த சுனாமி. .
கும்பகோணத்தில் கருகிய குழந்தைகள்..
சுதந்திர தின விழாவில் மிட்டாய் வாங்கவே சென்ற நாட்கள்..வாட்ச் கட்டிய முதல் நாள் மணி பார்க்க கூட தெரியாத நாட்கள். .
இப்படி ஓடிக் கொண்டு விளையாடிய நாட்களில் திடீர் திருப்பங்கள் நண்பர்களை பிரிந்து சென்று கல்லூரியில் சேர்ந்த நாட்கள்..
நிமிர்ந்து பார்க்கையில் ஒரு தனி மனிதியாக இனி எதிர்காலத்தின் கனவுகளோடு நான்..
திரும்பி பார்த்தேன் அத்தனையும் கனவு போல வந்து சென்றன..
போட்டிகள் நிறைந்த உலகம்..
முகமூடியை அணிந்த மனிதர்கள். .
ஊழல் இலஞ்சம் உள்ள அரசு மற்றும் அரசியல்..
பணத்தை தேடி ஓடும் ஒரு கூட்டம். .
படிப்பை விற்கும் ஒரு கூட்டம்..
வேலை வாய்ப்பு தேடும் ஒரு கூட்டம். .
உணவு தேடும் ஒரு கூட்டம். .
இப்படி பல கூட்டங்களுக்கு நடுவில் கல்லூரி படிப்பின் இறுதியில் நான். வாழ்க்கையின் உண்மையான காரணம் தேடும் நோக்கில் நான் ..கண்ணில் தைரியத்துடன் மனதில் நம்பிக்கையுடன் அடுத்த கட்டத்துக்கு பயணிக்க உள்ளேன்...
ஒன்றுமட்டும் என் நெஞ்சில் ஒலித்துக் கொண்டு இருக்கிறது...
வீழ்வேன் என்று நினைத்தாயோ...!!!
வியாழன், 6 ஏப்ரல், 2017
விவேகானந்தரின் சிந்தனை துளிகள்..
பிறருடைய தவறைக் காண முயற்சிக்காமல், உங்களுடைய தவறை திருத்திக் கொள்ளுங்கள்.
பொறாமை, ஆணவம் ஆகியவற்றைத் தூக்கி எறிந்து விட்டு, உன் முழுவலிமையுடனும், அளவற்ற ஆர்வத்துடனும், தொழிற்களத்தில் இறங்கினால் இறைவன் நல்வழி காட்டுவான்.
தெளிந்த உண்மையும், கருத்துத் தூய்மையும் மனிதனுக்கு உறுதியான வெற்றியைத் தரும்.
ஒவ்வொரு உயிரிலும் தெய்வத்தன்மை இருக்கிறது, உள்ளேயும், வெளியேயும் இருக்கும் உணர்வுகளைக் கட்டுப்படுத்தி, உள்ளத்தில் குடி கொண்டுள்ள தெய்வத்தன்மையை மலரச் செய்வது தான் ஒருவருக்கு லட்சியமாக இருக்கவேண்டும்.
அனைத்தையும் பொறுப்பவளாக இருக்கும் பூமிதேவியைப் போன்று, நீங்களும் பொறுமையுடன் இருந்தால் உலகமே உங்கள் காலடியில் அமரும்.
நம்பிக்கை.. உன்னிடம் நம்பிக்கை; கடவுளிடத்தில் நம்பிக்கை... இதுவே வெற்றி பெறுவதின் ரகசியம்.
துன்பப்படுபவர்களுக்கு உதவி செய்வதன் மூலம் தெய்வீக இயல்பு நம்மிடம் வெளிப்படும்.
பழமொழி கதை..
கள்ளிப்பட்டி என்னும் ஊரில் ராமு அவர்களுடைய குடும்பத்துடன் வசித்து வந்தான். ராமுவின் அம்மா, அப்பா கட்டிட வேலை செய்பவர்கள். ராமு அங்கு பத்தாம் வகுப்பு படித்து வந்தான். அவன் படிப்பில் படுசோம்பேறியாக இருந்தான்.
எல்லா தேர்வுகளிலும் மிகக் குறைந்த மதிப்பெண்களையே பெற்றிருந்தான். ஒரு நாள் அவனுடைய பெற்றோர்கள் வேலைச்செய்யும் இடத்திற்கு சென்றிருந்தான். அங்கு அவன் அம்மா, அப்பா கட்டிட வேலை செய்வதைப் பார்த்தான். அவர்கள் மிகவும் சிரமப்பட்டு செங்கலை மாடிப்படிக்கட்டிற்கு தூக்கிச் செல்வதைப் பார்த்தான்.
அப்பொழுது அவன் கல்வியின் சிறப்பு மற்றும் அவன் பெற்றோரின் கஷ்டத்தை உணர்ந்தான். அடுத்து வரும் தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெற வேண்டும் என எண்ணினான். அன்று முதல் நாள்தோறும் பள்ளி முடிந்ததும் வீட்டிற்கு வந்து படிக்க ஆரம்பித்தான். இடைப்பருவத் தேர்வுகளிலும் நல்ல மதிப்பெண் எடுக்க ஆரம்பித்தான். ஆசிரியர் அவனைப் பாரட்டினார்கள்.
அதைப்போலவே முழுஆண்டு பொதுத்தேர்விலும் முதல் மதிப்பெண் பெற்று அவன் பெற்றோருக்குப் பெருமை சேர்த்தான். அப்போது தான் அவனுக்கு புரிந்தது முயன்றால் முடியாதது எதுவுமில்லை என்று. இதன்மூலம் முயன்றால் முடியாதது எதுவும் இல்லை என அறிந்துக் கொண்டான்.
சனி, 18 மார்ச், 2017
ஆசிரியர்களிடம் மாணவர்கள் எதிர்பார்ப்பது..............
ஒரு ஆசிரியரிடம் அச்சம் இருக்க வேண்டும்
அதே நேரத்தில் ஒரு துன்பத்தில் தோள் கொடுக்கும் தோழன்,
தோழியாகவும்
மற்றும்
நமது திறமைகளை வெளிக்கொணர உறுதுணையாக
இருக்க வேண்டும்.
பாடத்திற்கு அப்பாற்பட்ட விஷயங்களை தெரியப்படுத்த வேண்டும்.
மாணவர்களின் முன் உதாரணமாக ஆசிரியர் திகழ வேண்டும்.
இவ்வாறு இருந்தால்ஒவ்வொரு மாணவனும் வெற்றி இலக்கை நிச்சயம் அடைவான்.
வியாழன், 16 மார்ச், 2017
ஆணுக்கு நிகராக பெண்களும் உயர்வோம்..
பெண்கள் ஆண்களுக்கு நிகராக அனைத்து துறைகளிலும் ஈடுபடுகிறார்கள் என்பது பெருமைக்குரிய விஷயம் தான். ஆனால் ஆண்களின் எண்ணிக்கைக்கு நிகராக பெண்கள் இருக்கிறார்களா என்றால் அது சற்று யோசிக்கவேண்டிய விஷயம் தான். இதற்கு காரணம் ஈடுபாடு இல்லாதது, பெற்றவர்களின் கட்டுப்பாடு என பல காரணங்கள் உண்டு. அதனால் பெண்கள் எல்லாரும் ஈடுபாடு கொள்வோம்! ஆண்களை விட எண்ணிக்கையில் அதிகரிப்போம்!
ஞாயிறு, 25 செப்டம்பர், 2016
வறுமை
கொடிது கொடிது
வறுமை கொடிது என்பது போல் வறுமையிலும் ஏழ்மை கொடிது இந்த ஏழ்மையினால் வாடும் மக்கள்
உணவு இல்லாமல் தவிர்ப்பது மிகவும் கொடிது .நமக்கு கிடைக்கும் உணவை நாம் குப்பை போல்
கொட்டி வீணாக்கிறோம் .இந்த அன்னம் கூட இல்லாமல் தான் ஒரு நாளில் நிமிடத்திற்கு ஒரு
முறை ஏதோ ஒரு இடத்தில் ஒரு மனிதன் இறந்துக்கொண்டே தான் இருக்கிறன் . இதை கவனிப்பதற்கு
யாருக்குமே நேரம் இல்லை என்பது தான் மிகவும் கொடுமையானது. இந்த உலகம் எவ்வளவு மாறியினாலும்
காலமும் நேரமும் ஓடிக்கொண்டே இருந்தாலும் “வறுமை” என்ற சொல் மாறாமல் இன்னும் இருந்துக்கொண்டே
தான் இருக்கிறது. பசியினால் ஏழை குழந்தை கதறி அழுவது இன்னும் என் செவிகளில் ஒலித்துக்கொண்டே
தான் இருக்கிறது. இனியவது உணவை வீணாக்காமால் இருங்கள். இல்லை என்று வருபவருக்கு கொடுத்து
உதவியினால் கூட அந்த ஒரு மனிதன் ஆவது இறக்காமல் இருப்பனோ என்று தான். இந்த பசியின் முக்கிய காரணம் வறுமை தான் இந்த
வறுமையே ஓழித்தால் மட்டுமே பசி என்ற கொடிய நோய் நீங்கும்.
அடுத்த நூற்றாண்டியில்
ஆவது வேறுபாடு இல்லாத மக்களை கொண்டு ஒரே இனம் தமிழினம் எனப்போற்றி வறுமையில்லாத நாட்டை
உருவாக்க வேண்டும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)