யுவராணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
யுவராணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 20 மார்ச், 2017

நல்லதை செய் நல்லதே நடக்கும்


                               
  ஒரு வகுப்பில் முத்து, கண்ணன் என்னும் சிறுவர்கள் இருந்தார்கள்.அதில் முத்து என்பவன் நாய், பூனை, அணில், ஓணான் போன்ற வாயில்லா பிராணிகளை கண்டால் கல்லால் அடித்து மகிழ்வான். அவனுடைய பெற்றோர் எவ்வளவோ அறிவுரை கூறியும் அவன் திருந்தவில்லை. ஒரு நாள் அவன் தன் வீட்டின் முன் உட்காந்து வாழைப்பழம் சாப்பிட்டான். சாப்பிட்டு விட்டு அத்தோலை தெருவில் வீசினான். ஒருவர் அதில் வழுக்கி விழுவதைக்கண்டு அவன் சிரித்து மகிழ்ந்தான். மீண்டும் ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டு விட்டு தோலை தெருவில் வீசினான் வழியே வந்த ஒருவர் அதில் வழுக்கி விழுவதைக் கண்ட முத்து மிகவும் மனம் வருந்தி அழுதான் காரணம் அது அவனுடைய ”தந்தை”.

          கண்ணன் என்பவன் அனைவரிடமும் அன்பாக பழகுவான். ஒருவருக்கு உதவி செய்ய எந்த நிலையிலும் தயங்க மாட்டான். ஒருமுறை அவனுடைய நண்பன் ஒருவன் மதிய உணவு கொண்டு வரவில்லை. அவன் மிகவும் பசியினால் வாடினான். அதையறிந்த கண்ணன் தன்னுடைய உணவை நண்பனிடம்  கொடுத்தான். இருப்பினும் அவனுக்கு பசி இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ஒரு மாணவன் கண்ணனை அழைத்து அவனுடைய உணவை இருவரும் பகிர்ந்து உண்டார்கள். இதனால் அவனுடைய பசியும் அடங்கியது.

மையக்கருத்து: நாம் செய்கின்ற செயல் நல்லதாக இருந்தாலும் தீயதாக இருந்தாலும் அது நமக்கே திரும்பும்.

புதன், 15 மார்ச், 2017

முயற்சி

                                             
                               
                            

மாணவப்பருவத்தில் இருக்கும் நாம் அனைவரும் ஏதேனும் ஒரு செயலில் வெற்றி பெற நினைத்தால் அதற்கு தகுந்த பறிற்சி மட்டும் எடுத்தால் போதாது. அதற்கு முறையான பயிற்சியுடன் கூடிய முயற்சியும் எடுக்க வேண்டும். நீங்கள் ஒரு பாடத்தை படிக்கிறீர்கள் என்றால் அதில் பயிற்சியுடன் முயற்சி எடுக்க வேண்டும். நீங்கள் ஒரு விளையாட்டு வீராங்கனையாக இருந்தால் அதில் வெற்றிக் கோப்பையை வெல்ல பயிற்சியுடன் முயற்சி எடுக்க வேண்டும். நாம் அனைவரும் கற்றது கையளவு கல்லாதது உலக அளவு. ஒரு வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவியை பார்த்தீர்கள் என்றால் அவள் பயிற்சியுடன் கூடிய முயற்சி எடுத்திருப்பாள். காந்தியடிகளின் முயற்சிக்கு பின்பு தான் உலகில் ”அகிம்சை கிடைத்தது”, அன்னை தெரசாவின் முயற்சிக்கு பின்பு தான் உலகில் “அன்பு நிலவியது”, காமராசரின் முயற்சிக்கு பின்பு தான் உலகில் உள்ள ஏழை மக்களுக்கு “கல்வி கிடைத்தது”. ஆகையால் மாணவர்களே நாம் செய்கின்ற அனைத்து செயலிலும் பயிற்சிக்கு அதிகமான முயற்சியை எடுத்து வாழ்வில் வெற்றி பெற வேண்டும்..