ஞாயிறு, 31 ஜூலை, 2022

முத்தின் உறவு

கவிதையின் கண்களைக் 

கண்ணீரில் கண்ட நாட்கள்!

இன்று விழியின் விழிம்பில் நதி

வற்றிக் கிடப்பது ஏனோ... 

தாயின் உறவு கொப்புக்கோடியில்

தந்தையின் உறவு கைப்பிடியில்

 அன்னனின் உறவு அறவணைப்பில்

உறவுகள் சிற்பிக்குள் உள்ளதைப்

போல் ஒன்றாக இருந்த

நாட்கள் ஏனோ!!

சிதறிய முத்துக்கள் 

நாளடைவில் பிறந்தன 

முத்துகளை தேடியே தொலைந்தேன்!!


 விழியில் வழிந்த கண்ணீர் 

வற்றிப் போய் கலைத்தன

முத்துகளைத் தேடி நான்

தொலைந்தேன்

என் கண்ணிள் கவிதையை

காணவில்லை..

என்னோடு சேர்ந்து .

என் கவிலையும் தொலைந்தது.. !!!

சனி, 30 ஜூலை, 2022

கவியின் விழி

இருளில் இருந்த

என்னை

கவியால் விழி 

திறந்த ஒளியே... !

விரைவில் கவிவழி 

விழி திறக்க வை..!

வியாழன், 28 ஜூலை, 2022

அப்பா

ஆசைப்பட்ட 
அத்தனையும் 
தந்தவரே!!
ஆசையாக
 இருக்கிறது
இறுதிவரை
உன் ஆசைமகளாகவே
இருக்க அப்பா!!!

செவ்வாய், 26 ஜூலை, 2022

தங்க மயில்

தோகை இல்லாமல் 
பறக்கிறேன் !!
நகை இல்லாமல்
ஜொலிக்கிறேன்!!
ஒவ்வொரு முறையும்
நீ குறுஞ்செய்தியில்
தங்க மயில் என்கிறபோது!! 

வாடிய மலரே நீ

வாடிய மலரைக் காண சென்றேன்...!

அழகாய் மலர்ந்த மலர்கள் 

ஏனோ 

வினவியது....

உன் கண்களை கவர்வது போல

பல வண்ணங்களாய் பூத்துள்ளேன் !

என் மணம் உன்னை 

ஈர்க்க  வில்லையா? 

என் வண்ணங்கள்

உன் கண்களை

ஈர்க்க வில்லையா ? 

ஏன் என்னை விலக்கி

வாடிய மலரை வர்ணிக்கின்றாய்?

என் கண்கள் 

உன்னைக் காண நினைப்பது 

ஏனோ 

நான் மறைத்த உண்மை மலரே..! 

ஆனால்..

வாடிய மலர் தனிமையில் 

இன்னும் வாடுகின்றன 

வர்ணிக்க யாருமில்லாமல்

அதனை உணர்ந்த என் மனம் .

உன்னைக் காண நான் வருகின்றேன்..

வர்ணிக்க வருகின்றேன்  

வருந்ததே மலரே.... !

நான் கூறியதைக் கேட்ட

வண்ண மலர்கள் புரிந்து கொண்டு

அழைத்துச் செல் என்னையும் 

காண வருகிறேன் அழகிய

வாடிய மலரை...!

அழகின் ரகசியமே 

வாடிய மலரே நீ.... !!

திங்கள், 25 ஜூலை, 2022

தங்கை

தேவையற்ற சேட்டைகள் செய்தாலும்
தேவையான அன்பு கொள்வாள்
என் மேல் ஒரு தங்கையாக
அவளுக்காக திட்டல்கள் ஏற்பேன்
அவளுக்காக விட்டு கொடுப்பேன்
அவளுக்காக அனைத்தையும் செய்வேன்
ஏன் அவளுக்காக தாயாக மாறுவேன் 
அவளுடைய அன்பு அக்காவாக
எக்காலத்திலும் என்றும்...
M.Sanmati
I-BSC Computer science. Ksrcasw

மீனின் மகிழ்ச்சி

நீருக்கு பஞ்சமில்லை..... !!!

மான்போல் துள்ளி ஓடும் நதியில்....!!

ஜொளிக்கும் நட்சத்திரமாய் வாழும்

மீன்கள் ஏனோ 

துள்ளி குதித்து தாவும் 

மீனை வர்ணிக்க வந்தேன்....!!!

நீல நதியில் வசிக்கும்

வண்ண மீன்களே.....!!

என்னிடம் உரையாட வா!!! 

உன்னிடம் விளையாட வருகிறேன்..!!!

என் மனதில் ஏக்கம் 

ஏனோ 

முத்துகளைப் போல்

குவிந்து கிடக்கின்றது...!!

பல வண்ணங்களைக் கொண்ட

உன் மேனியை நேசித்தேன்.....!!!

வசிப்பாயா என்னுடன் ? 

வினவ வந்தேன்

சட்டென்று தடுமாற்றம் படைதேன்....!!!

உன்னை அழைத்துச் செல்ல

மறுக்கிறது என் மனம்...!!

நீ வசிக்கும் உம் இடமே

உன் மகிழ்ச்சிக்கு காரணம்.....!!

நீல நதியில் - நீ !!

துள்ளி விளையாடும்

மகிழ்ச்சியை உன்னிடம் இருந்து

பறிக்கமாட்டேன்......!!!

உன் மகிழ்ச்சியை உன்னிடம் தந்து

உன் மகிழ்ச்சியை கண்டு

நான் மகிழ்ச்சி அடைகிறேன்

கண்ணே !!!

சனி, 23 ஜூலை, 2022

நிலவின் நிழல்

நிலவில்லை ...!!!

என்னுடன் வசிக்கும் 

நிழலில்லை ...!!!

நிழலில்லா   உயிரே 

நிலவைத் தேடிய 

நிலையில்  துடிக்கும் 

என்னவளின் உயிர்

நிலவின் நிழலிற்காக... !!!

வியாழன், 21 ஜூலை, 2022

தொலைந்த அகம்

யாக்கையின்றி 

நான் இல்லை !!!

இன்று 

புறத்தே அலைகிறேன்  

அகம் ஒன்றை 

தொலைத்துவிட்டு!!!

புதன், 20 ஜூலை, 2022

இன்றைய கல்வி

               தனி மனிதனுடைய வாழ்வையும் நாட்டின் வாழ்வையும் உயா்த்துவது கல்வியாம். சங்க இலக்கிய காலங்களில் கல்விக்கு முக்கியத்துவம் வழங்கினா். தமிழ்நூல்கள் பலவற்றில் கல்வியின் சிறப்புகளையும், சிந்தனைகளையும் வளா்த்து வந்துள்ளனா். தனிமனிதன் ஒழுக்கமுடன் வாழ்வதற்கு கல்வி இன்றியமையாதது என மக்கள் நம்பினா். மேலும் தனிமனிதனின்  ஒழுக்கமே சமுதாய ஒழுக்கத்திற்கு வழிவகுக்கும் என கருதினா். சங்க காலங்களில் அரசு பள்ளிகளை நடத்தியதாக அறிய முடியவில்லை. எல்லாம் தனியார் நடத்திய திண்ணைப் பள்ளிகளே எனலாம். மரத்தடியும், ஆசிரியா் வீடும், ஊா் அம்பலமும் பள்ளிகளாக விளங்கின எனலாம். திண்ணைப்பள்ளி ஆசிரியா்கள் எண்ணும் எழுத்தும் கற்பித்தனா். 
        
                எண் என்பது கணக்கையும் எழுத்தென்பது மற்றவற்றையும் குறித்தது. வாயினால் வகு்த பக்கம், கையினால் வகுத்த பக்கம் என்று தொல்காப்பியா் ஏட்டுக்  கல்வியையும் தொழிற்கல்வியையும் தனித்தனியே பிரித்துக் காட்டுகிறார். எண்ணும் எழுத்தும் தவிர வானியல், மருத்துவம், இசை, ஓவியம், சிற்பம், நாட்டியம் முதலியவை பற்றிய கல்வியும் சிறப்புற்றிருந்தது. கல்வியும் சிறந்திருந்தது. ஓவியச்செந்நூல் பற்றி மணிமேகலை கூறுகிறது. கட்டிட நூல் பற்றி நெடுநல்வாடை நூலறிபுலவா் என்று பேசியுள்ளது. இசை நூல் பற்றித் தொல்காப்பியம் யாழின்மறை என்று குறிப்பிட்டுள்ளது. அன்றைய காலகட்டத்தில் கற்றறிந்தவா் கூடிச் சிந்திக்க வாய்ப்பிருந்தது. சங்கம் அதற்காக அமைந்ததேயாகும். பட்டி மண்டபங்கள் வைத்து அறிஞா்கள் பல பொருள்களைப்பற்றி வாதிட்டதற்குச் சான்றுகள் உண்டு.
“பல்கேள்வித் துறைபோகிய
தொல்லாணை நல்லாசிரியா்
உறழ்குறித் தெடுத்த உருகெழு கொடியும்”(பட்டினப்பாலை)
என்பது சான்று. 
அன்றைய காலகட்டங்களில் கல்வியானது ஒழுக்கத்தையும்,அறிவையும் வளா்ப்பதற்காக மட்டும் செயல்பட்டது இன்றைய கல்வி நிலையானது முற்றிலும் மாறுபட்டு காணப்படுகிறது. இன்றைய சூழலில் கல்வி வணிகமயமாக மாறி வருகிறது இத்தகைய நிலை மாறுமா?
தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர்
மு.செல்வி   

புனையா ஓவியம்

 

தமிழா் வளா்த்த நுண்கலைகளின் வரிசையில் ஓவியக்கலை முன்னிலையில் நிற்கிறது. ஆயக்கலை அறுபத்து நான்கில் ஓவியக்கலை சிறப்பிடம் பெறுகிறது. பழங்கால மக்கள் தம் உள்ளக் கருத்துக்களைப் புலப்படுத்த பாறைகளிலும் குகைகளிலும் கீறி எழுதினா். எல்லைகளையெல்லாம் கடந்து எங்கும் பரந்து வாழும் மக்கள் மனங்களைக் கொள்ளை கொண்டு வியக்க வைக்கும் விந்தை மொழி ஓவியம். தமிழ் நாட்டில் சங்க காலத்திற்கு முன்னரே ஓவியங்கள் வரையப்பட்டன. தாம் வரைந்த ஓவியங்களை முதலில்  கண்ணேழுத்து என்றே வழங்கியுள்ளன. வண்ணம் கலக்காமல் கரித்துண்டுகளால் வடிவம் மட்டும் வரைவதைப்  புனையா ஓவியம் என்பா். இன்று மென் கோட்டு ஓவியமாக  உள்ளது.

                                                     

சங்க இலக்கியங்களிலும் காப்பியங்களிலும் காணப்படும் ஓவியங்களில் ஒன்று புனையா ஓவியம் பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றான நெடுநல்வாடையில் தலைவன் வினையின் காரணமாக தலைவியை விட்டு பிரிந்து கார் காலம் வருவதாக கூறிச் செல்கிறான் கூறிச்சென்ற பருவம் வந்தும் தலைவன்  வாராமையினால் தலைவி தன்னை அழகு படுத்தி கொள்ளாமல் புனையா ஓவியம் போல பொலிவிழந்து காணப்படுகிறாள் இதனை

“புனையா ஓவியம் கடுப்ப புனைவு இல்

தளர் ஏா் மேனித் தாய கணங்கின்”

என்ற வரிகளின் மூலம் காண்கிறேம். மேலும் மணிமேகலையில் இரு இடங்களில் இப்பெயா் இடம்பெற்றுள்ளன. ஆதிரை பிச்சையிட்ட காதையில் மணிமேகலை முதன்முதலில் அமுதசுரபி என்னும் பாத்திரத்தில் ஆதிரையிடம் பிச்சை பெரும் பொழுது

“மனையகம் புகுந்த மணிமேகரை தான்

புனையா ஓவியம் போல நிற்றலும்”

புனையா ஓவியம் போல் நிற்கிறாள்.மேலும் சிறை செய் காதையில் விசாகை என்னும் வணிக பெண் ஊா் மக்கள் கூறும்பழி சொல்லிலிருந்து தன்னை காத்துக் கொள்ள கன்னி மாடத்தில் நுழைகிறாள் அவ்வாறு நுழையும் பொழுது தன்னை அழகு படுத்திக் கொள்ளாமல்  புனையா ஓவியம் போல் இருப்பதை

“புனையா வோவியம் புறம்போந் தென்ன

மனையகம் நீக்கி வாணுதல் விசாகை”

என்ற வரி நமக்கு உணா்த்துகின்றது.  இலக்கியங்களில்  புனையா ஓவியம் என் சொல் இது போன்ற இடங்களில் இடம்பெற்றுள்ளன.

திருமதி . ப. நா்மதா

தமிழ்த்துறை உதவிப்பேராசிரியா்

செவ்வாய், 19 ஜூலை, 2022

அவள்

நானும் நுறையாய் கரைந்து போனேன்.....
அவளின் கருங்கூந்தல் கடலில்....
D.Diayana 1St B.A English ksrcasw

வாழும் தெய்வம்

 உயிருக்குள் அடைக்காத்து

உதிரத்தைப் பாலாக்கி

பாசத்தில் தாலாட்டி

பல இரவுகள்

தூக்கத்தை தொலைத்து...

நமக்காகவே

வாழும் அன்பு

தெய்வம் அன்னை!!!!

                           Shastika.s  II BCOM FMA

திங்கள், 18 ஜூலை, 2022

இவளின் நீர்

 கருமேகத்தின் இறுதி மகிழ்ச்சியே....!!

உன்னில் அடை மழையாய் பொழிந்தனவே....!!

உயிரே...!!

தனிமை

அனைவரும் கூடி இருக்க

ஆனந்தம் பெருக 

இன்பங்கள் மகிழ

ஈரம் கண்களில் வர  

தனிமை நிலையில் தவிக்கிறேன்....

R.Shalini 1st.BA.ECONOMICS Ksrcasw

வெள்ளி, 15 ஜூலை, 2022

வெள்ளி, 8 ஜூலை, 2022

அம்மா

பத்து மாதம் சுமந்து பெற்று 
பாதுகாத்து வளர்த்து!....
என் மழலை மொழிகளை கேட்டு மகிழ்ந்து!....
என் குருநடைகளை கண்டு மகிழ்ந்து
எனது நோய் தீர நீ மருந்துண்டு 
என்னை பாராட்டி சீராட்டி வளர்த்து!...
உனது பாசம் என்னும் மழையில் என்னை நனையவைத்தாய் அம்மா.......
M.Ramya 1st CDF ksrcasw

வியாழன், 7 ஜூலை, 2022

வண்ணத்தின் அரசி*

வண்ண விடியலே
மெல்லிய இதழில்
மெல்லிசையோ...!!
வரும் வேளையிலே...!!
தென்றலில் மிதக்கும்
நீ...!!
இன்று யவரால்
சிறையிடப் படுவாயோ...??
இசையை வீழ்த்தி..!!
Yamini. R 1st B. Sc., CDF Ksrcasw

வெற்றி தோல்வி

தீப்பந்தமாய்
எரிய வேண்டுமென்றால்
சில தீக்குச்சிகளை
இழக்க தயாராகுங்கள்...
இங்கு 
வெற்றிகள் தீப்பந்தம்!
தோல்விகள் தீக்குச்சிகள்!!...

M.Sanmati
Ist BSC COMPUTER SCIENCE Ksrcasw

திங்கள், 4 ஜூலை, 2022

பனியினுள் புல்

சுடும் கதிர் வீச்சே 
உன்னை தனிக்க 
பனியாய் மண்ணில் 
வாழ வந்தேன்....!!! 
வசிக்க இடமோ
தேடிய  கண்கள்...!! 
புல்லின் நுணியில் 
பனியே தன்னை
மாய்த்து.... !!!
உன்னை அழகூற்ற
என்னை மாய்த்த 
சுகத்தில் 
சற்றே மறைந்தேன்...!!! 
சிறுபொழுதில்... !!!
Yamini. R  1st B. Sc., CDF. Ksrcasw

ஞாயிறு, 3 ஜூலை, 2022

மழை

நீர் துளி மண்ணை தொட 
மணிப்பற்கள் சிரிப்பில் குவிய
பனி ஊரை கட்டி அணைக்க
காற்று மரத்தை உரசிச்செல்ல 
பிள்ளை தாயின் மடியில் ஒடுங்க
ஓவியன் சாயப்பேனாவால் தீட்டினான்
1st B.A Economics Varsha.P ksrcasw