அறிவியல்துறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அறிவியல்துறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 3 ஜூன், 2016

சனிக்கிரகத்தில் நிலவுகள்


                    சனிக்கிரகத்தில் நிலவுகள்

முன்னுரை

     இரவு நேரங்களில்  நிலவின் ஒளியை இரசிக்காதவர் யவரேனும்  உண்டா?? இத்தகைய நிலவு பூமியில் மட்டும் தான் உள்ளதா? என்று கேட்டால் இல்லை. சனிக்கிரகத்திலும் நிலவுகள் உள்ளன. அதைப் பற்றி தான் இந்த பதிவில் பார்க்க உள்ளோம்.

ஆறாவதுகோள்

சூரியக் குடும்பத்திலுள்ள ஒன்பது கோள்களில் சனி கிரகம் ஆறாவதாக இருக்கிறது. இது சூரியனில் இருந்து சுமார் 142 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. ஒரு முறை சூரியனை சுற்றி வர 29% ஆண்டுகள் எடுத்து கொள்கிறது. தன்னைத்தானே ஒருமுறை சுற்றிக்கொள்ள 10 மணி 34 நிமிடம் நேரம் ஆகிறது. சூரிய குடும்பத்தில் வியாழனுக்கு அடுத்து இரண்டாவது பெரிய கோள் சனியாகும். சனிக் கோளினுள் சரியாக 763 பூமிகளை உள்ளடக்கிவிடலாம். அவ்வளவு பெரியது. இருந்தாலும் சனியின் எடை பூமியை விட 95 மடங்கு தான் அதிகம். இதிலிருந்து சனி ஒரு பெரிய வாயுக்கோளம் என்பதையும், கடினமாக இருக்கும் அதன் உட்பகுதி மிகச் சிறியது என்பதையும் ஓரளவு அறிந்து கொள்ளலாம்.

ஈர்ப்புவிசை

சனியின் சராசரி அடர்த்தி 0.71 என குறைவாக இருக்கிறது. சனியின் ஈர்ப்பு விசை பூமியிலிருந்து வேறுபடவில்லை. சுமார் 1.17 மடங்கு தான் அதிகம். பூமியில் 70 கிலோ எடையுள்ள ஒரு மனிதன், சனியில் 82 கிலோ இருப்பான். சூரியனில் இருந்து வெகு தொலைவில் இருப்பதால், சனியின் சராசரி வெப்பநிலை மிக மிக குறைவாகவே இருக்கிறது. சனியின் காற்று மண்டலத்தில் அம்மோனியா குறைந்து போவதால் கோளின் மேற்பரப்பு முழுவதும் பனிப்பிரதேசமாக காணப்படுகிறது.

சனிக்கிரகத்தில் நிலவுகள்

நமது பூமிக்கு ஒரு நிலவு என்றால் சனிக்கு 62 நிலவுகள். இந்த நிலவுகளின் மொத்த அளவில் 90% “டைட்டான்” என்ற ஒரு நிலவு மட்டுமே எடுத்துக் கொள்கிறது. இது கிட்டத்தட்ட நமது பூமி அளவுக்கு பெரியது. சனியின் இரண்டாவது பெரிய நிலவான “ரியா”வுக்கு சுற்று வளையங்கள் உண்டு. 10 கி.மீ.க்கும் குறைவான  விட்டம் கொண்ட நிலவுகள் 34 இருக்கின்றன. 10கி.மீ இருந்து 50 கி.மீக்குள் விட்டம் கொண்ட நிலவுகள் 44 இருக்கின்றன. இவை தவிர மீதமுள்ள மிகச் சிறிய அளவுகள் கொண்ட நிலவுகள் சனியில் இருக்கின்றன.

சிறப்பம்சம்

பிற கோள்களில் காணப்படாத ஒரு தட்டையான வளையம் கோளின் நடுப்பகுதியைச் சுற்றி இருப்பது சனியின் சிறப்பம்சமாகும். சனியைப் பற்றி பல புதிர்களில் அதன் வளையம் தான் மிக முக்கியமானது. வியாழனுக்கும், யுரேனசுக்கும் இது போன்ற வளையம் உள்ளது. ஆனாலும் சனிக்கு இருப்பதைப் போல குறிப்பிடும் படியாய் அதுக்கு இல்லை. சனி வளையங்களைப் பற்றிய உண்மைகளை 1981 “வாயேஜர்” விண்கலம் மூலம் ஓரளவு தெரிந்து கொள்ள முடிந்தது. கோடிக்கணக்கான பனிக்கட்டிகள், சிறியதும் பெரியதுமாய் துணைக்கோள்கள் போலச் சுற்றி வருகின்றன. அவை கூட்டம் கூட்டமாக பிரிந்து பரந்த இடைவெளியுடன் கூடிய பல வளையங்களாக தோன்றுகின்றன என்பதும், இவ்வாறு ஆயிரக்கணக்கான வளையங்கள் அதில் உள்ளன என்பதும் தெரிய வந்துள்ளது. சனியின் துணைக்கோள் ஒன்று வெடித்துச் சிதறியதால் இந்த வளையங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. சனிக்கு அருகில் உள்ள வளையங்கள் வட்ட வடிவமாகவும், தள்ளி உள்ளவை முட்டை வடிவமாகவும் காணப்படுகின்றன.

முடிவுரை

சனி வளையத்தின் கட்டமைப்பு சீர்குலையமால், கோடிக்கணக்கான துகள்கள் எப்படி சீராக ஒரு குறிப்பிட்ட வளையத்தினுள் இயங்கி வருகின்றன என்பது இன்றும் புரியாத ஒரு விசயமாகவே இருந்து வருகிறது. வருங்கால விஞ்ஞான வளர்ச்சி இதற்கும் விடை கொடுக்கும். மேலும் சனிக்கிரகத்தில் குடியேறும் நிலை வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

செவ்வாய், 19 ஏப்ரல், 2016

குழந்தைகள் பயத்துக்கு பெற்றோரே காரணம்

                குழந்தைகள் பயத்துக்கு பெற்றோரே காரணம்
முன்னுரை


ஒரு குழந்தைப் பயப்படுகிறது என்றால், உடனே நாம் பயம் அவன் கூடவே பிறந்தது என்கிறோம். உண்மையில் பயம் என்ற உணர்வு குழந்தைகள் பிறக்கும் போது கூடவே பிறந்துவிடுகிறதா? இல்லை என்கிறது உளவியல். பயத்துக்கு காரணம் பொற்றோர்களே என்று மேலும் அது தெரிவிக்கிறது.
இளங்கன்று பயமறியாது

பெற்றோர்கள் தங்கள் குழந்தை தைரியமாக இருக்க வேண்டும் என்று, கருவாக இருக்கும் போதே நினைத்தால், அவர்களுக்கு பிறக்கும் குழந்தை நிச்சயமாக வாழ்வில் வெற்றியாளனாக திகழ்வான் என்று கூறுகிறது. மாறாக பெரியவர்களுக்கு பயந்து  குழந்தை கட்டுப்பாடோடு வளரவேண்டும் என்று நினைப்பவர்களின் குழந்தைகள், பயம் உடன் பிறந்ததாகி விடுகிறது. அதேபோல் குழந்தைகள் வளரும் பருவத்தில் சாப்பிடுவதற்காகவோ அல்லது வேறு எதற்காகவோ “பூச்சாண்டி வருகிறான்” என்று பயமுறுத்தி வளர்த்தாலே வருங்காலத்தில் அவர்களுக்கு பயம் அதிகமாகி, தன்னம்பிக்கை குறையும் வாய்ப்பு இருக்கிறது.
வேப்பமர உச்சியில் நின்று பேயொன்று ஆடுதுன்னு
விளையாட போகும்போது சொல்லி வைப்பாங்க
அவங்க வீரத்தை முளையிலேயே கிள்ளி வைப்பாங்க என்கிறது ஒரு பாடல்.

பயத்தின் அறிகுறிகள்
அதேபோல், “இவனுடன் பேசாதே”, “அவனுடன் பேசாதே” என்று கூறி  வளர்க்கப்படும் குழந்தைகள் ஒருவித பய உணர்ச்சியோடு வளருவார்கள். பயத்தை உளவியலாளர்கள் உடல்ரீதியாக, உணர்வு ரீதியாக என இரண்டு வகையாக பிரிக்கிறார்கள். உடல் ரீதியான பயத்திற்கு அதிக வியர்வை, வழக்கத்தை விட  அதிகமான இதயத்துடிப்பு போன்றவை அறிகுறிகள். எவ்வளவு பெரிய சோகம் என்றாலும் அதை வெளிக்காட்டாமல் உள்ளுக்குள்ளேயே அழுவதும், முகத்தை கடுமையாக உர்ரென்று வைத்துக் கொள்வதும் உணர்வு ரீதியான பயத்தின் வெளிப்பாடுகள். பெரியமீசையோடு திரிபவர்களுக்குத்தான் அதிக பயம் இருக்கும் என்கிறார்கள் உளவியலாளர்கள். பேய்ப் படங்கள் பயத்தை தருவதற்கு மட்டும் அல்ல, பயத்தைப் போக்குவதற்கும் பயன்படுமாம். அதற்காகவே சிலர் பேய்ப் படங்களை விரும்பிப் பார்க்கின்றனர்.
பயத்திற்கான காரணங்கள்
பயத்துக்கான காரணங்களில் ஒன்று, அளவு கடந்த எச்சரிக்கை உணர்வு கொண்டது. ஒரு சம்பவம் நடப்பதற்கு முன்பே எதிர்மறையாக, நடந்து விடுமோ என்று பூதாகரமாக கற்பனை செய்து கொள்வதில் பயம் தொடங்குகிறது. மேலே சுற்றிக் கொண்டிருக்கும் மின்விசிறி கீழே விழுந்துவிடுமோ, பயணம் செய்யும் பேருந்து விபத்தில் சிக்கி விடுமோ, பாலத்துக்கு அடியில் போகும்போது அந்த  பாலம் இடிந்து தம் தலையில் விழுந்து விடுமோ என்றெல்லாம் நிறைய பேர் பயப்படுவதுண்டு. இத்தகைய பயத்தைப் போக்க முதலில் குழந்தைகளை வெளியுலகோடு பழக விட வேண்டும்.
முடிவுரை

 வீட்டுக்குள்ளே அடைத்து வைத்து வீடியோ கேம்ஸ் ஆடவிடும் போது அவர்களுக்கு பயமும் உணர்ச்சிவசப்படும்  தன்மையும் அதிகமாகி விடுகிறது. அதுமட்டுமல்ல, உடன் பழகும் நண்பர்கள் பயம் மிக்கவர்களாக இருந்தால், உங்களுக்கும் அந்த பயம் குணம் தொற்றி கொள்ளும் என்கிறார்கள். மனநல மருத்துவர்கள்.

சனி, 26 மார்ச், 2016

சுற்றுச்சூழலின் வரலாறு




                        சுற்றுச்சூழலின் வரலாறு

முன்னுரை
இன்றைக்கு எல்லோருமே சுற்றுச்சூழல் சீர்க்கேட்டை பற்றி பரவலாக பேசுகிறோம். சமீபத்தில் தான் இது குறித்த விழிப்புணர்வு அதிகமாக ஏற்பட்டிருக்கிறது.  ஒரு புறம் சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டாலும் மறுபுறம் அதை மாசுபடுத்திக் கொண்டு தான் இருக்கின்றன.
கிறிஸ்து பிறப்பதற்கு முன்பு
ஆனால் சுற்றுச்சூழல் சீர்க்கேட்டின் வரலாறு கிறிஸ்துப் பிறப்பதற்கு முந்தைய காலத்தில் இருந்தே தொடங்கிவிட்டது. உலக வரலாற்றில் பல்வேறு நிகழ்வுகளுக்கும் பிள்ளையார் சுழி போட்டார்கள் ரோமானியர்கள் தான். அவர்கள் தான் சுற்றுச்சூழல் சீர்க்கேட்டுக்கும், பிள்ளையார் சுழிப்போட்டனர். ஆனால் அது விவரம் தெரியாத காலத்தில் நடந்த அறியாமை செயல் என்கிறார்கள், சரித்திர ஆய்வாளர்கள். கி.மு.400க்குப் பின் நெடி மிகுந்த மிகப் பழமையான மதுவின் கசப்புச் சுவையை மாற்றுவதற்காக ரோமானியர்கள் அந்த மதுவில் காரியம் கலந்த ஒருவித இனிப்புச் சுவையை கொடுத்தது. இந்த ரசாயனம் உடலுக்கு மட்டுமல்லாமல், மனநிலை பாதிப்புக்கும் காரணமாகிறது. இந்த மது உடலுக்குள் சென்று எலும்புகளை பெரிதாக பாதித்து இருக்கிறது. ரோமபேரரசர்களின் எலும்புக்கூடுகள் மிக அதிக அளவில் காரியம் கலந்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
உயிர்த்தியாகம்
கி.மு.வில் ரோமபேரரசில் இப்படி நிகழ்ந்தது என்றால், கி.பியில் நமது நாட்டில் சுற்றுச்சூழலை காக்க பெரும் உயிர் தியாகமே நிகழ்ந்து இருக்கிறது. 1730-ல் ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூரில், மன்னர் அஜய்ஜிங் என்பவர் தனது அரண்மனையை மேலும் விஸ்தரிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மார்வார் என்ற வனப் பகுதியில் புதிதாக அரண்மனையை அமைக்க நினைத்தார். அரண்மனை அமைக்க வேண்டும் என்றால் அங்குள்ள மரங்களை வெட்டியாக வேண்டும்.அந்த வேலையை செய்ய  மன்னர் தன் வீரர்களை அனுப்பி வைத்தார்.அந்த பகுதியில் வாழ்ந்து வந்த பிஷ்ணோய் என்ற இனமக்கள், இயற்கையை தெய்வமாக வழிபடுபவர்கள். அவர்கள் மரங்களை வெட்ட வந்த வீரர்களை பார்த்ததும் பதறிப்போய் முடிந்தவரை எதிர்ப்பை தெரிவித்தனர். ஆனால் இவர்களின் எதிர்ப்பு மன்னரின் ஆணை முன்பு நமத்துப் போனது. வேறு வழியில்லாமல் ஒவ்வோரு பிஷ்ணோய் இனத்தவரும் ஒரு மரத்தை கட்டிபிடித்தவர்களை வெட்டி போட்ட பின்புதான் மரத்தை வெட்ட முடிந்தது.
சிப்கோ இயக்கம்
363 மரங்களையும் கட்டிப்பிடித்த மனிதர்களையும் சேர்த்து வெட்டிய மன்னனின் மனம் இலேசாக இளகியது. அந்த இடம் வேண்டாம் என்று திரும்பி வர கட்டளை இட்டான்.  பிஷ்ணோய் இன மக்களின் இந்த போராட்டம் தான் சுற்றுச்சூழல் பாதுக்காப்புகான முதல் போராட்டம். அதை நினைவுபடுத்தும் விதமாகத்தான், இந்த நிகழ்வை சிப்கோ இயக்கம் என்று கொண்டாடுகிறார்கள். ஒரு பிரச்சனையைப் பற்றி எதாவது புத்தகம் வந்தால்தான், அந்த நிகழ்வு உண்மையில் பதிவு செய்யப்பட்டதாக அர்த்தம். சுற்றுச்சூழல் குறித்து முதல் விழிப்புணர்வு புத்தகம் 1864-ல் அமெரிக்க தத்துவ சிந்தனையாளர் ஜார்ஜ் பெர்கின்ஸ் மார்ஸ் என்பவர் எழுதினரார். மேன் அன்ட் நேச்சர்என்ற இந்த  புத்தகம் தான் சுற்றுச்சூழலின் அவசியத்தையும், அதன் பாதிப்பையும் முதன் முதலாக சொன்னது.
முடிவுரை
சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தை நன்கு உணரந்த நம் முன்னோர்கள் உயிரைத் தியாகம் செய்தனர். ஆனால் நாமோ அதை புரிந்து கொள்ளாமல்  சுற்றுச்சூழலை மாசுபடுத்திக் கொண்டே போகின்றோம். இதனால் ஏற்படும் விளைவுகளை நன்கு உணர்ந்தும் நாம் அமைதியாக இருக்கின்றோம். தனிமனிதன் மாறினால் சமுதாயம் மாறும் என்று கூறுவர். எனவே நாம் மற்றவர்களை குறை கூறாமல் நாம் இருக்கும் இடத்தை சுத்தமாக வைப்போம். சுற்றுச்சூழலைப் பாதுக்காப்போம்.

வெள்ளி, 25 மார்ச், 2016

நிறங்கள் மூலம் சிகிச்சை



              நிறங்கள் மூலம் சிகிச்சை
முன்னுரை


தொழில்நுட்பம் வளர வளர நோய்களும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் மருத்துவமனைகளும் அதிகரித்து கொண்டே செல்கிறது. நோய்க்கு சிகிச்சை என்றால் நமக்கு தெரிந்தது ஆங்கில மருத்துவம், ஆயுர்வேதம், ஹோமியோபதி என்று பல முறைகள் உள்ளன. ஆனால் நிறங்களைக் கொண்டு பார்க்கப்படும் ஒரு மருத்துவமும் இருக்கிறது. இதற்கு கிரோமோதெரபி என்று பெயர்.
கிரோமோதெரபி
இதுவொரு மாற்று மருத்துவ முறை ஆகும். ஒளியில் இருந்து பெறக்கூடிய வண்ணங்களை வைத்து வைத்தியம் செய்வது ஒரு முறை. தனியே இருக்கிற வண்ணங்களை வைத்து செய்வது இன்னொரு முறை. ஒவ்வோர் உயிரும் ஒளியில் ஏற்படும் மாற்றங்களால் பாதிப்புக்கு உள்ளாகும். நிற மருத்துவத்தின்படி மனித உடல் வண்ணங்களால் தூண்டப்படுகிறது. உடலின் ஒவ்வொரு பகுதியும் முறையாக இயங்க வண்ணங்கள் காரணமாக இருக்கின்றன. ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு நிறம் உண்டு.
நம் முன்னோரின் சிறப்பு
 இதை பல நூற்றாண்டுகளுக்கு முன்பே நமது முன்னோர்கள் அறிவித்திருந்தார்கள் என்கின்ற போதும் அறிவியல் முறையில் எந்த நிறம் உடலின் எந்த பகுதியின் நோயை போக்கப் பயன்படும் என்பது தெரியாமல் இருந்தது. 2 வண்ணங்களை ஒன்று சேர்த்து புதிதாக ஒரு வண்ணம் எப்படி தயாரிப்பது என்பதை அறியாததால் அடிப்படை நிறங்களான சிவப்பு, நீலம், மஞ்சள்,  ஆகியவற்றையே அதிகம் பயன்படுத்தினார்கள். கி.பி 910-ல் அவிசென்னா என்பவர் உடலின் ஒவ்வொரு பாகத்துக்கும் ஒரு நிறத்தைப் பட்டியலிட்டார். உடலின் நிறம் மாறுபட்டால் அது நோய்க்கான அறிகுறி என்று அறிவித்தார்.

உறுப்புகளை காக்கும் நிறங்கள்
1876-ல் பிளிசாண்டன் என்பவர் நீல நிறத்தை மட்டுமே அடிப்படையாக கொண்டு வலி, காயம், எரிச்சல் போன்ற உபாதைகளுக்கு தீர்வு கண்டார். அதன்பிறகு பல மருத்துவர்கள் பல்வேறு ஆய்வுகள் செய்து நிற மருத்துவத்தை மேம்படுத்தினர். சிவப்பு நிறம் ரத்த ஓட்டத்தையும், நீல நிறம் தொண்டைப்பகுதியையும், ஆரஞ்சு நிறம் நுரையீரலையும், இண்டிகா நிறம் சருமத்தையும், ஊதா நிறம் தலைப்பகுதியையும் காப்பதாக இந்த மருத்தவமுறை சொல்கிறது. டிஸ்லெக்சியா  போன்ற கற்றல் குறையாடு உள்ளவர்களுக்கு நிற மருத்துவத்தின் மூலம் தீர்வு காண முடியும் என்கிறார்கள்.
முடிவுரை
ஆனால் நிற மருத்துவத்தைப் பற்றி கற்றவர்கள் மிக குறைவாகவே இருக்கிறார்கள்.  இதனை  அரைகுறையாக தெரிந்து கொண்டு எதையாவது செய்தால் அதன் பின்விளைவுகள் மிக கடுமையாக இருக்கும் என்று எச்சரிக்கிறார்கள் ஆய்வாளர்கள்.

ஞாயிறு, 6 மார்ச், 2016

துர்தேவதை

       Image result for துர்தேவதை

நெமிலிஸிஸ்  என்றால் துர்தேவதை என்று அர்த்தம். கிரேக்கக் கடவுளின் பெயர். பொதுவாக நம்முடைய பிரபஞ்சத்தில் பல இரட்டை நட்சத்திரங்களை காணலாம். அவ்வாறு நம்முடைய சுரியனுக்கும் இன்னொரு துணை நட்சத்திரம் எங்கோ பக்கத்தில் இருக்கிறது. அதை பார்க்க முடியவில்லை. ஏனென்றால் அது தன்னுடைய சக்தி முழுவதையும் தீர்த்துவிட்டு தற்போது ஒரு வெள்ளைக் குள்ளனாக அல்லது பழுப்பு குள்ளனாக ஆகியிருக்கும். அது வியாழனைப்போல ஒரு பத்து மடங்கு நிறை இருப்பதாக இருக்கும்.

நம் சுரியன் பால் வீதி பாதையில் 20 கோடி வருடங்களுக்கு ஒரு முறை சுற்றி வரும்போது சுரியனும் இந்த துர்தேவதையும் ஒன்றையொன்று ஒரு முறை சுற்றி வரும் என்று விஞ்ஞானிகளில் சிலர் நம்புகிறார்கள். இது சுரியனுக்கு அருகில் வரும்போது ஒரு ஒளி ஆண்டு தூரத்திலும் மிக தூரத்தில் செல்லும்போது 2.4 ஒளி ஆண்டு தூரத்திலும் சுற்றி வருவதாக சொல்கிறார்கள்.


இதனுடைய சுற்றுப் பாதை காரணமாகவே யுரேனஸ் போன்ற கிரகங்களில் தடுமாற்றமும், ஆஸ்டராய்டுகள் போன்றவை எதிர்பாராத நேரத்தில் தாக்குதல் நடப்பதாகவும் ஒரு நம்பிக்கை உண்டு. ஆனால் இதுவரை இத்தகைய துர்தேவதை இருப்பதற்கான எத்தகைய சான்றும் அறியப்படவல்லை.

சனி, 27 பிப்ரவரி, 2016

வாஷுங்மெஷுனாக செயல்படும் பை

 வாஷுங்மெஷுனாக செயல்படும் பை

Image result for வாஷிங் மிஷின்

ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆஸ்நியூலேண்ட் என்பவர் ஒரு புதுமையான தோள்பையை வடிவமைத்துள்ளார்.  இது பயணங்களுக்கு கைகொடுக்கும்  வகையில்  இருப்பதுடன் ,தற்காலிக வாஷிங்மெஷினாகவும் செயல்படக்கூடியது.

ஸ்குருபா  எனப்படும்  இந்தப்பை ,பயணங்களுக்கு ஏற்றவகையில் நிறைய பொருட்களை எடுத்துச் செல்ல உதவும் . இதன் உட்புறம் முத்துமணிகள் போன்ற பற்கள் உள்ளன .இதில் அழுக்கு உடைகளைபோட்டு,  சலவை தூளை சேர்த்து ,சிறிது நீர்நிரப்பி குலுக்கினால் அலசப்பட்ட உடைகள் பளிச்சிடும்.  மின்சாரம் இல்லாமல் ,அதிகம் தண்ணிர் செலவிடாமல் எளிதான வாஷிங்மெஷினாக இந்தப் பை செயல்படுகிறது. இந்த பயணப் பையை சுருக்கி மடித்தால் கைக்குள் அடங்கிவிடுகிறது. மலையேற்றவீரர்கள், சுற்றலாபயணிகள், விடுதியில் தங்கும் மாணவர்கள் என அனைவருக்கும் நல்ல பலன் தரக்கூடியது ஸ்குருபா.

Image result for வாஷிங் மிஷின்