செவ்வாய், 20 ஜூன், 2017

பெண்கள் தலையில் பூ வைப்பதால் இவ்வளவு நன்மைகளா??
.
இனிமே தினமும் வைத்து கொள்ளுங்கள்!!
.
உலகம் முழுவதும் 38 ஆயிரம் கோடிக்கு மேல் பூ வகைகள் உள்ளன.
ஆனால் ஆயிரம் கோடிப் பூக்கள் மட்டுமே தற்போதைய நடைமுறையில் உள்ளன.
அதிலும் 500 கோடி பூக்களே மருத்துவத்துக்குப் பயன்படுத்தப்படுகின்றன.
.
பெரும்பாலான பூக்கள் மணமூட்டிகள் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.
.
பூக்களைச் சூடும் கால அளவு
.
முல்லைப்பூ - 18 மணி நேரம்
அல்லிப்பூ - 3 நாள்கள் வரை
தாழம்பூ - 5 நாள்கள் வரை
ரோஜாப்பூ - 2 நாள்கள் வரை
மல்லிகைப்பூ - அரை நாள்கள் வரை
செண்பகப்பூ - 15 நாள்கள் வரை
சந்தனப்பூ - 1 நாள்கள் மட்டும்
மகிழம்பூ மற்றும் குருக்கத்திப் பூ - சாப்பிடும்போது மட்டும் சூடிக்கொள்ளலாம்.

மந்தாரைப்பூ, பாதிரிப்பூ, மாசிப்பூ - இந்தப் பூக்களின் வாசம் இருக்கும் வரை மட்டும் சூடிக்கொள்ளலாம்.
.
பூக்களின் பயன்கள்:
.
ரோஜாப்பூ - தலைச்சுற்றல், கண் நோய் போன்றவற்றைக் குணப்படுத்தும்.
.
மல்லிகைப்பூ - மனஅமைதிக்கு உதவும். கண்களுக்குக் குளிர்ச்சி தரும்.
.
செண்பகப்பூ - வாதத்தைக் குணப்படுத்தும். பார்வைத் திறனை மேம்படுத்தும்.
.
பாதிரிப்பூ - காது கோளாறுகளைக் குணப்படுத்தும். செரிமானச் சக்தியை மேம்படுத்தும். காய்ச்சல், கண் எரிச்சல் போன்றவற்றைச் சரிசெய்யும்.
.
செம்பருத்திப் பூ - தலைமுடி தொடர்பான பிரச்னைகளை சரிசெய்யும். உடல் உஷ்ணத்தைக் குறைக்கும்.
.
மகிழம்பூ - தலை சம்பந்தப்பட்ட பிரச்னைகளைத் தீர்க்கும். பல் வலி, பல் சொத்தை உள்ளிட்ட பல் குறைபாடுகளை நீக்கும்.
.
வில்வப்பூ - சுவாசத்தைச் சீராக்கும். காச நோயைக் குணப்படுத்தும்.
.
சித்தகத்திப்பூ - தலை வலியைக் குறைக்கும். மூளை சுறுசுறுப்பாக இயங்க உதவும்.
.
தாழம்பூ - நறுமணம் வீசுவதோடு சீரான தூக்கத்துக்கு உதவும். உடல் சோர்வை நீக்கும்.
.
தாமரைப்பூ - தலை எரிச்சல், தலை சுற்றல் போன்றவற்றைச் சரிசெய்யும். மனஉளைச்சலை நீக்கி மனஅமைதிக்கு வழிவகுக்கும். தூக்கமின்மையை நீக்கி, சீரான தூக்கத்தை ஊக்குவிக்கும்.
.
கனகாம்பரம்பூ - தலை வலி மற்றும் தலை பாரத்தைச் சரிசெய்யும்.
.
தாழம்பூ, மகிழம்பூ, சந்தனப்பூ, ரோஜாப்பூ செண்பகப்பூ போன்றவை வாதம், கபத்தைக் குறைக்கக் கூடியவை.
.
பூக்களைச் சூடும் முறை:
.
பூக்களைக் காதின் மேல் மற்றும் கீழ் நுனியின் இடைவெளியில் சூடவேண்டும்.
.
உச்சந்தலையிலோ, கழுத்துப் பகுதியிலோ பூக்கள் தொங்கும்படி சூடக் கூடாது.
.
மணமுள்ள பூக்களை வாசனையில்லாதப் பூக்களுடன் சேர்த்துச் சூடக்கூடாது.
அது கூந்தல் வளர்ச்சியைக் குறைக்கும்.
.
ஜாதி மல்லிகைப்பூ, செவ்வந்திப்பூ, குடசப்பாலைப்பூ, பாதிரிப்பூ, மகிழம்பூ, செண்பகப்பூ, சந்தனப்பூ, ரோஜாப்பூ போன்றவற்றைக் கனகாம்பரத்துடன் சேர்த்துச் சூடினால் மிகவும் நல்லது.
.
மந்தாரை, தாமரை, செவ்வரளி, கருங்குவளைப்பூ போன்றவற்றுடன் கற்பூரத்துடன் சேர்த்துச் சூடினால்
மனம் அமைதி பெற உதவும்.
.
மல்லிகைப்பூவை குளிப்பதற்கு முன் சூட வேண்டும்.
.
முல்லைப்பூ, வில்வப்பூவை
குளித்த பின்பு சூடலாம்.
.
உடலில் எண்ணெய் தேய்க்கும்போது தாழம்பூ சூடலாம்.
.
பூக்களைச் சூடுவதால் ஏற்படும் நன்மைகள்:
.
பூக்களில் உள்ள பிராண ஆற்றல், மூளைச் செல்களால் ஈர்க்கப்பட்டு, நாளமுள்ள மற்றும் நாளமில்லாச் சுரப்பிகளின் சீரான இயக்கத்துக்கு உதவுகிறது.
.
இந்தப் பிராண ஆற்றலானது மனஅழுத்தத்தைக் குறைத்து, மனஅமைதிக்கு உதவுகிறது.
.
தலையில் பூ வைப்பது,
மனமாற்றத்துக்கு உதவும்.
.
ஒரு விஷயத்தைப் பல கோணங்களில் பார்க்கும் தன்மையைக் கொடுக்கும்.
.
மனஅழுத்தத்தால் ஏற்படும் செல் இழப்பைத் தடுக்கிறது.

.
பூவின் மணமானது உடல் செல்களுக்குப் புத்துணர்வை அளிக்கிறது.

மனமாற்றத்துக்கு உதவுகிறது.
.
மனஅழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.
மகிழ்ச்சியை உண்டாக்குகிறது.
.
இருந்தாலும் மற்றவர் காதில் பூ சுத்துவது
நல்லதில்லை.
.
🌺உலக அறிஞர் வாழ்வில் வள்ளுவம்🌺

ஜார்ஜ் பெர்னார்ட் ஷா உலகப் புகழ் பெற்ற ஆங்கில நாடக ஆசிரியர்; 94 ஆண்டுக் காலம் வாழ்ந்தவர்.

அவர் 'காய்கறி உணவு முறையே சிறந்தது' என்னும் கொள்கையினை கடைப்பிடித்து வந்தவர்.

“கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பிஎல்லா உயிரும் தொழும்”

என்னும் குறட்பாவின் கருத்தினை அவர் அடிக்கடி எடுத்துரைப்பதுண்டு.

1948-ல் 'டைம்ஸ் ஆப் லண்டன்' என்னும் பத்திரிகை ஒரு கருத்துப் படத்தினை வெளியிட்டது. அதில் பெர்னார்ட் ஷா ஒரு நாற்காலியில் அமர்ந்து இருப்பார். அவருடைய காலடியில் ஆடு, மாடு, மான், பன்றி, புறா போன்ற விலங்குகளும் பறவைகளும் நன்றிஉணர்வோடு அவரைப் பார்த்த வண்ணம் படுத்துக் கொண்டும் நின்று கொண்டும் இருக்கும்.

அவரைச் சுற்றிலும் சிங்கம், புலி, கரடி போன்ற கொடிய விலங்குகள் அமைதியாக நின்று கொண்டு அவரை ஆர்வத்தோடு நோக்கிய வண்ணம் இருக்கும்.

இந்தக் கருத்துப் படம் வள்ளுவருடைய 'கொல்லான் புலாலை மறுத்தானை' என்னும் குறட்பாவின் கருத்தினைப் புலப்படுத்துவதற்காக வரையப்பட்டது.

பொருள் பொதிந்த இந்தக் கருத்துப் படத்தினை டில்லியில் இருந்து வெளிவரும் 'ஷங்கர்ஸ் வீக்லி' 1949-ல் அப்படியே வெளியிட்டு, படத்தின் கீழே மேலே காட்டிய திருக்குறளைக் குறிப்பிட்டிருந்தது.

'புலால் உணவு உண்பதையே தம் வாழ்க்கைப் போக்காகக் கொண்டுள்ள மேற்கத்திய மக்கள் இடையே புலால் உண்ணாமையே சிறந்த வாழ்க்கை நெறி என்பதனை உணர்த்துவதற்காகப் பெர்னார்ட் ஷா இந்தத் திருக்குறளை மேற்கோள் காட்டி விளக்கி வந்தார்' என்பதனை உணர்த்தவே இந்தக் கருத்துப் படம் வெளியானது.

💐வான்புகழ் வள்ளுவம்💐படம்

ஞாயிறு, 11 ஜூன், 2017

ஊர்களின் பெயர்காரணம்


                       ஊர்களின் பெயர்காரணம்

கோயம்பத்தூர்
         கோவன்களால் உருவாக்கப்பட்ட ஊரானது கோவன்புத்தூர் என்று அழைக்கப்பட்டது.அது பிற்காலத்தில் மருவி கோயம்பத்தூர் என்று மாறிவிட்டதாம்.

திருவான்மியூர்
         வான்மிகம் என்றால் புற்று.புற்றுகள் நிறைந்த பகுதியாக இருந்ததால் இதற்கு திருவான்மியூர் என்று பெயர் வந்தது.

முகலிவாக்கம்
         மௌளி என்றால் கிரிடம்.கோவூர் ஈசனின் கிரிடம் இருந்த இடம் மௌமிவாக்கம்.அது இன்று முகலிவாக்கம் என்று அழைக்கப்படுகிறது.

திருவல்லிக்கேனி
           பார்த்தசாரதி கோவிலின் எதிர் பக்கத்தில் இருக்கும் குளத்தில் நிறைய அல்லி மலர்கள் பூக்குமாம். அதனால் இந்த பகுதிக்கு திருஅல்லிக்கேனி என பெயர் வந்தது.பிற்காலத்தில் அது மருவி திருவல்லிக்கேனி என மாறிவிட்டது.

வேளச்சேரி
        முற்காலத்தில் வேதஸ்ரேணி என்று சொல்லப்பட்ட இடமே இன்று வேளச்சேரி என்று அழைக்கப்படுகிறது.

சனி, 10 ஜூன், 2017

தி கில்டி ப்பர்சன்

                        
அக்ரம் ஒரு பெரிய அரண்மனையில் பணியாளராக பணிபுரிகிறார்.அவர் வேறு வேலைகளையும் அந்த வீட்டில் செய்வார்.அவருக்கு ஒரு கெட்ட பழக்கம் இருக்கிறது.ஒவ்வொரு முறையும் வீட்டில் எதையாவது திருடி சாப்பிடுவார்.ஒரு நாள் அந்த வீட்டின் உரிமையாளர் ஒரு திருமண விழாவில் கலந்து கொள்ள சென்றிருந்தனர்அக்ரம் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.அப்பொழுது அவர் வீட்டில் இருந்த குளிர்சாதன பெட்டியை திறந்தார்.பிறகு அதிலிருந்த பழச்சாற்றையும்,இனிப்புகளையும் சாப்பிட்டார்.பிறகு இரண்டு ஆரஞ்சு பழங்களையும் சாப்பிட்டார்.

            உடனடியாக யாரோ வீட்டின் மணியை அடித்தனர்.பயந்துவிட்டார் அக்ரம்.அவர் ``வீட்டின் உரிமையாளர் வந்துவிட்டாரோ?இந்த ஆரஞ்சுபழத் தொல்லிகளை நான் என்ன செய்வேன்?’’இதனை மறைத்து வைத்தாலும் அந்த நேரத்தில் என்ன செய்து கொண்டிருந்தாய் என்ற கேள்வி எழும்.இதனை இங்கேயே வைத்தாலும் பிடிபட்டு விடவேன்’’என்று எண்ணினார்.ஆகையால் அந்த ஆரஞ்சு பழத்தொல்லிகளையும் சாப்பிட்டுவிட்டு கதவைத்திறந்தார். ஆனால் வந்திருந்தது தபால்காரர்.அக்கனம் அக்ரம் யோசித்தார்``ஒரு திருடன் தான் நாம் என்று பிடி படுவோம் என்று பயந்துகொண்டே இருப்பான் நான் இனி திருட மாட்டேன்’’ என்றார்.

தரவு
                                    டைனி டாட் பெட் டைம் ஸ்டோரிஸ்

தி ப்பாட்டர்ஸ் ப்ரேயர்ஸ்

                            

ஒரு காலத்தில் பானை வியாபாரி ஒருவர் மண்பானைகளை செய்து கொண்டிருந்தார்.அவரது தொழில் நன்றாக தான் போய்க்கொண்டிருந்தது எனினும் சிலர் அவரது பானை எளிதில் உடையக்கூடியதாக இருக்கிறது என்றனர்.ஆகையால் கடவுளிடம் வேண்டினார்.கடவுள் கண் முன்னே தோன்றிய பிறகு``என்னுடைய பானையை உடையாபடி செய்யுங்கள் ஆகையால் எனது வாடிக்கையாளர்கள் புகார் கூற மாட்டார்கள்’’ என்றார்.            கடவுளும் அவரை வாழ்த்தி விட்டு மறைந்தார்.இப்பொழுது அவர் செய்யும் எல்லாப் பானைகளும் உடையாமல் இருந்தன.ஆனால் அவருடைய வாடிக்கையாளர்கள் புதிய பானையை வாங்காமல் இருந்தன.மறுபடியும் கடவுளிடம் தாயே நான் செய்தது பிழை எனது பானையை பழைய படி மாற்றிவிடுங்கள் என்றார்.நான் இயற்கைக்கு புறம்பாக மாற நினைத்தேன் அது எனது தவறுதான் என்னை மன்னித்துவிடுங்கள்.அவரது பிராத்தனையை கேட்டு அவரத் கோரிக்கையை நிறைவேற்றினார்.இப்போழுது அவரது தொழில் பழையபடி நன்றாக சென்றது.சில விஷயங்களை நாம் மாற்ற நினைக்கக் கூடாது.

                               தரவு
                                    டைனி டாட் பெட் டைம் ஸ்டோரிஸ்