கோயில்கள் என்பவை
மன அமைதிக்கான இடமே தவிர குறைகளை கொட்டும்
இடமல்ல. நம் முன்னோர்களின் சிற்ப கலைகளை
கண்டு ரசிக்கலாம். ஆனால், நாம் அனைவரும்
அங்கும் வணிகத்தையே மேற்க்கொள்கிறோம். இந்த நிலை மாற வேண்டும்.
மாறினால் மட்டுமே மூடநம்பிக்கைகளை ஒழிக்க
முடியும். மன்னர்களின் ஆட்சி முறைகளை
கண்டு பெருமைப்பட வேண்டும். இனிமேலாவது கோயில்களை
மன அமைதிக்கான இடமாக மட்டுமே பாருங்கள்.
வணிகம் செய்யும் இடமாக மாற்றாதிர்கள்.
மோகனப்பிரியா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மோகனப்பிரியா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வியாழன், 6 ஏப்ரல், 2017
அடைமொழியால் குறிக்கப் பெறும் சான்றோர்கள்
1. தமிழ்
தியாகப்பர் - பாபநாசம் சிவன்2. இன்தமிழ்
ஏசுநாதர் - திருஞானசம்பந்தர்3. ஷெல்லிதாசன் - பாரதியார்4. முத்தமிழ்க்
காவலர் - கி.ஆ.பெ.விசுவநாதம்5. தொண்டர்
சீர் பரவுவார் - சேக்கிழார்6. விப்ர நாராயணர் - தொண்டரடிப்
பொடியாழ்வார்7. குழந்தைக்
கவிஞர் - அழ.வள்ளியப்பன்8. ஆட்சி
மொழிக் காவலர் - சி.இராமலிங்கனார்9. தமிழ்நாட்டு
மாப்ஸான் - ஜெயகாந்தன்10. கவியோகி - சுத்தானந்த பாரதியார்
கதை சொல்லும் பழக்கம்
விவேகானந்தரின் சிந்தனை துளிகள்..
பிறருடைய தவறைக் காண முயற்சிக்காமல், உங்களுடைய தவறை திருத்திக் கொள்ளுங்கள்.
பொறாமை, ஆணவம் ஆகியவற்றைத் தூக்கி எறிந்து விட்டு, உன் முழுவலிமையுடனும், அளவற்ற ஆர்வத்துடனும், தொழிற்களத்தில் இறங்கினால் இறைவன் நல்வழி காட்டுவான்.
தெளிந்த உண்மையும், கருத்துத் தூய்மையும் மனிதனுக்கு உறுதியான வெற்றியைத் தரும்.
ஒவ்வொரு உயிரிலும் தெய்வத்தன்மை இருக்கிறது, உள்ளேயும், வெளியேயும் இருக்கும் உணர்வுகளைக் கட்டுப்படுத்தி, உள்ளத்தில் குடி கொண்டுள்ள தெய்வத்தன்மையை மலரச் செய்வது தான் ஒருவருக்கு லட்சியமாக இருக்கவேண்டும்.
அனைத்தையும் பொறுப்பவளாக இருக்கும் பூமிதேவியைப் போன்று, நீங்களும் பொறுமையுடன் இருந்தால் உலகமே உங்கள் காலடியில் அமரும்.
நம்பிக்கை.. உன்னிடம் நம்பிக்கை; கடவுளிடத்தில் நம்பிக்கை... இதுவே வெற்றி பெறுவதின் ரகசியம்.
துன்பப்படுபவர்களுக்கு உதவி செய்வதன் மூலம் தெய்வீக இயல்பு நம்மிடம் வெளிப்படும்.
சாதனைப் பெண்கள்..
சுனிதா வில்லியம்ஸ்..
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ். அமெரிக்காவில் உள்ள `நாசா' விண்வெளி ஆய்வு நிலையத்தில் பணிபுரிந்து வரும் இவர், சமீபத்தில் விண்வெளிப் பயணம் மேற்கொண்டு சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை சென்றடைந்தார். அங்கு பல்வேறு ஆய்வுப் பணிகளை மேற்கொண்ட சுனிதா, 188 நாட்கள் தங்கியிருந்து புதிய உலக சாதனை படைத்தார். விண்வெளியில் மராத்தான் ஓட்டம், விண்வெளியில் அதிக முறை நடந்த வீராங்கனை என்று வேறு பல சாதனைகளையும் அங்கு நிகழ்த்தினார்.
சுருதி வதேரா
இங்கிலாந்தின் புதிய பிரதமரான கார்டன் பிரவுனின் அமைச்சரவையில் முக்கிய பொறுப்பு இந்தியாவை சேர்ந்த சுருதி வதேராவுக்கு வழங்கப்பட்டுள்ளது. பொருளாதார அறிஞரான இவர், சர்வதேச மேம்பாட்டுத் துறையில்,நாடாளுமன்ற துணை அரசு செயலர் பதவி இவருக்கு வழங்கப்பட்டது. இது துணை அமைச்சர் பதவிக்கு சமமானதாகும். நெல்சன் மண்டேலா, கார்டன் பிரவுன் ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்த அனைவருக்கும் கல்வித் திட்டத்தை உருவாக்கியவர் சுருதி வதேரா என்பது குறிப்பிடத்தக்கது.
மகளிர் கிரிக்கெட் தரவரிசையில் சிறந்த வீராங்கனை ஜுலான் கோஸ்வாமி
முதல்முறையாக மகளிருக்கான கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலை ஐ.சி.சி. அறிமுகம் செய்துள்ளது. இதில் பந்து வீச்சாளர் பட்டியலில் இந்தியக் கேப்டன் ஜுலான் கோஸ்வாமி முதலிடத்தைப் பெற்றுள்ளார். 2007-ம் ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீரர்-வீராங்கனைக்கான விருதுகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வழங்கியது. ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் சிறந்த வீரருக்கான விருதையும், இந்திய வீராங்கனை கோஸ்வாமி சிறந்த வீராங்கனைக்கான விருதையும் பெற்றனர்.
சானியாவின் சாதனை
சானியா மிர்சா இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை. இப்பொழுது ஹைதராபாத்தில் வசிக்கிறார். டென்னிஸ் தர வரிசையில் இடம் பிடித்த இந்தியப் பெண்களில் மிக உயர்ந்த தரவரிசையை அடைந்தவர் சானியா மிர்சா. இந்திய அரசாங்கம் அவருக்குப் பத்மசிறீ விருது வழங்கிக் கௌரவித்துள்ளது.இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா.
இன்றைய இளம் பெண்களுக்கு முன்மாதிரி பெண் எனலாம்.
மாணவர்களுக்கு கலாம் கூறிய அறிவுரை
இந்திய விஞ்ஞானத்தின் தந்தை என்றழைக்கப்படும்
டாக்டர் அப்துல்கலாம் மாணவர்களுக்கு சொன்ன அறிவுரை:-
டாக்டர் அப்துல்கலாம் மாணவர்களுக்கு சொன்ன அறிவுரை:-
“வாழ்க்கையில் எதையாவது சாதிக்க வேண்டும்
என நினைத்தால் ஒரு இலக்கு வேண்டும்.
என நினைத்தால் ஒரு இலக்கு வேண்டும்.
ஆனால் அந்த இலக்கு பெரிதாக இருக்க வேண்டும்.
சிறிய இலக்கை வைத்திருப்பது குற்றத்துக்குச் சமம்…
அம்மாவின் பேச்சைக் கேளுங்கள், ஆசிரியர்களை
மதியுங்கள்,”
மதியுங்கள்,”
கவனம் தேவை
ஒரு எளிமையான கதை அதே சமயத்தில் ஆழமான சிந்தனை
தற்போது நல்ல நிலையிலிருக்கும் சில மூத்த மாணவர்கள் ஒன்றாக சேர்ந்து தாங்கள் படித்தப் பல்கலைக் கழகத்தின் பேராசிரியரை சந்திக்க சென்றனர். சந்திப்பின் போது சுவாரஸ்யமாக சென்றுக்கொண்டிருந்த உரையாடல் திடீரென்று வேலை மற்றும் வாழ்க்கையில் ஏற்படும் மன அழுத்தம் பற்றிய விவாதமாக மாறியது.
வந்தவர்களுக்கு காபி கொடுக்க சமையலறைக்கு சென்ற பேராசிரியர் திரும்ப வரும்போது ஒரு பெரிய கூஜாவில் காப்பியையும் பலவிதமான கோப்பைகளையும் எடுத்து வந்தார். அவை பீங்கான், பிளாஸ்டிக், வெள்ளி, எவர்சில்வர், கண்ணாடி கோப்பையென சில விலை உயர்ந்தவைகளாகவும், வேலைப்பாடுகளுடனும் சில சாதாரணமாகவும் பலவிதங்களில் இருந்தன. பேரசிரியர் அவற்றை மேஜை மீது வைத்துவிட்டு, எல்லோரையும் சூடான காப்பியை தாங்களாகவே ஊற்றி குடிக்க சொன்னார்.
எல்லோரும் ஆளுக்கொரு கோப்பையில் காப்பியை ஊற்றி அருந்த தொடங்கும்போது பேராசிரியர் சொன்னார், நண்பர்களே கவனியுங்கள்
"நீங்க எல்லோரும் விலை உயர்ந்த, அழகான கோப்பைகளில் காப்பியை எடுத்திருக்கிறீர்கள். மேஜையில் மீதி இருப்பது மிக சாதாரணமான, விலை மதிப்பற்ற கோப்பைகள். உங்கள் அனைவருக்கும் மிகச் சிறந்த பொருட்கள்தான் தேவைப்படுகின்றன. அதைத்தான் எதிர்ப்பார்க்கிறீர்கள். அது தான் உங்கள் பிரச்சினனகளுக்கும் மன அழுத்தத்திற்கும் காரணம்."
"உண்மையில் நம் அனைவருக்கும் வேண்டியது காப்பி, கோப்பையல்ல. ஆனால் நீங்கள் எல்லோரும் நல்ல விலையுயர்ந்த கோப்பையை தான் எடுக்க முயற்சித்தீர்கள், மேலும் அடுத்தவர் எப்படிப்பட்ட கோப்பையை எடுத்திருக்கிறார் என்பதையும் நோட்டமிட்டீர்கள்."
"இப்பொழுது வாழ்க்கை என்பதை காப்பி என்று வைத்துக்கொண்டால் வேலை, பணம், சமூகத்தில் நமக்குள்ள பொறுப்பு, அந்தஸ்து ஆகியவை கோப்பைகள். இவையெல்லாம் வாழ்க்கையை வாழ்வதற்காக நம்மால் பயன்படுத்தப்படும் கருவிகள். இவற்றால் எல்லாம் வாழ்க்கையின் தரம் மாறாது."
"பொதுவாக நாம் கோப்பையின் மீதே கவனம் வைப்பதால் காப்பியின் சுவையை அனுபவிக்காமல் போய்விடுகிறோம்."
"ஆகவே நண்பர்களே கோப்பையில் உங்கள் கவனத்தை சிதறவிடாமல் காப்பியின் சுவையை அனுபவியுங்கள்."
கல்வி
இன்றைய காலக்கட்டத்தில் கல்வி என்பது வியாபாரமாக
உள்ளது. கல்வி என்பது விலை மதிக்கமுடியாதது.
ஆனால் விலை கொடுத்து
வாங்க வேண்டிய சூழ்நிலை. கல்வியை எப்படி
கற்க வேண்டுமென்றால்,
”கற்க கசடற கற்பவை கற்றப்பின்
நிற்க அதற்கு
தக”
கல்வியை கசடு இல்லாமல் கற்க வேண்டும்.
கசடு இல்லாமல் கற்றால் மட்டுமே
அது மனதில் அழுத்தமாய்
பதியும். எனவே, தவறில்லாமல் கல்வியை கற்போம்.
அறிவை பெருக்குவோம்.
மூடநம்பிக்கைகள்
மூடநம்பிக்கைகளை ஒழிப்பது
என்பது வருங்கால இளைஞர்களின்
கைகளிலே உள்ளது. எப்படியென்றால், இனி வரும் இளைஞர்களாவது
பூனை குறுக்கே போனால்
தடங்கல் என்று நினைப்பது, ஜாதகம் பார்ப்பது, நல்ல நேரம் பார்ப்பது
போன்றவைகளை நம்பாமல் இருக்க
வேண்டும். அதுமட்டுமல்லாமல், பால்குடம்
எடுத்தல், பூ மிதித்தல், பரிகாரம் செய்தல் போன்ற செயல்களில் ஈடுபடாமல்
இருக்க வேண்டும். ஈடுபடாமல் இருந்தாலே
போதும் மூடநம்பிக்கைகள் ஒழிந்துவிடும். எனவே, மூடநம்பிக்கைகளை ஒழிப்போம்! நிம்மதியான
வாழ்வை வாழ்வோம்!!
இந்தியப் பெண்மணிகள்
இந்தியாவின் புனித மண்ணில் பிறந்தவர்கள்
தான் சீதை சாவித்திரி. இந்த நாட்டுப்
பெண்களிடம்தான் சேவை மனப்பான்மை, அன்பு, கருணை, அகமலர்ச்சி, பணிவு ஆகிய பண்புகளைக் காண முடியும்.
இப்படி உலகில் வேறு எங்குமே பார்க்க
முடியாது. மேலைநாட்டுப் பெண்களைப் பார்த்தால்
பல சமயங்களில் பெண்களாகவே
தெரியாது. அவர்கள் முழுக்க முழுக்க
ஆண்களின் நகல் போலவே இருப்பார்கள்.
பெண்ணுக்கு உரிய அச்சம், நாணம் போன்ற பண்புகளை இந்தியப்
பெண்களிடம் மட்டுமே நாம் பார்க்கமுடியும்.”சீதையைப்
போல் வாழ்வாயாக” என்று நம் நாட்டுப்
பெரியோர்கள் பெண்களை வாழ்த்துவது
வழக்கம்.
சமூக ஊடகங்கள்
சமூக ஊடகங்களான வாட்ஸ்அப், பேஸ்புக், டிவிட்டர் போன்ற ஊடகங்கள் தகவல் பரிமாற்றத்திற்காக மட்டுமல்ல தேடலின்
முயற்சியில் ஈடுபடுவதற்காகவும் தான். சமூக ஊடகங்களில் வரும் எந்த ஒரு செய்தியையும் அப்படியே நம்பாமல் அந்த செய்தி உண்மையா? இல்லையா?
என்பதைத் தெரிந்துக்கொள்வதற்காக தேடலின் முயற்சியில் ஈடுபட வேண்டும். தேடலின் முயற்சியில்
ஈடுபடுவது தான் சமூக ஊடகங்களின் நோக்கம். தேடலில் ஈடுபடும் போது நம்மால்
பல விஷயங்களை தெரிந்துக்கொள்ள முடியும். எனவே, தேடலில் ஈடுபடுங்கள்! அறிவை வளர்த்துக்
கொள்ளுங்கள்!.
ஞாயிறு, 19 மார்ச், 2017
தமிழ்
தமிழ் வளர போராடுவோம்!
தமிழ் மறைந்துக்கொண்டுவரும் இக்காலத்தில்
இளைஞர்கள் அனைவரும் ஒன்றுகூடி
தமிழை வளர்க்க வேண்டும்.
எவ்வாறு தமிழர் பண்பாடான ஜல்லிக்கட்டுக்காக ஒன்றுகூடினோமோ
அதே போன்று தமிழுக்காகவும் ஒன்றுக்கூட வேண்டும்.
உதாரணமாக சொல்ல வேண்டுமானால்
தமிழ் என்பது பழச்சாறு மாதிரி,
ஆங்கிலம் என்பது பெப்சி கொக்ககோலா மாதிரி
எது ஆரோக்கியமானது என்று நீங்களே முடிவு செய்யுங்கள்.
தமிழை அழிக்க நினைப்பது
தமிழர்களின் உயிரை எடுப்பது போன்றது.
விடமாட்டோம் தமிழர் உயிர் உள்ளவரை.
வியாழன், 16 மார்ச், 2017
ஆணுக்கு நிகராக பெண்களும் உயர்வோம்..
பெண்கள் ஆண்களுக்கு நிகராக அனைத்து துறைகளிலும் ஈடுபடுகிறார்கள் என்பது பெருமைக்குரிய விஷயம் தான். ஆனால் ஆண்களின் எண்ணிக்கைக்கு நிகராக பெண்கள் இருக்கிறார்களா என்றால் அது சற்று யோசிக்கவேண்டிய விஷயம் தான். இதற்கு காரணம் ஈடுபாடு இல்லாதது, பெற்றவர்களின் கட்டுப்பாடு என பல காரணங்கள் உண்டு. அதனால் பெண்கள் எல்லாரும் ஈடுபாடு கொள்வோம்! ஆண்களை விட எண்ணிக்கையில் அதிகரிப்போம்!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)