எம்.கோமதி. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எம்.கோமதி. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திங்கள், 11 ஜூலை, 2016
சனி, 21 மே, 2016
அப்துல் கலாமிற்கு சலாம்..!!!
பாரத தாயின் தவப்புதல்வன்;
ஏழையாய் பிறந்தவன்;
கலத்தில் சிறந்தவன்;
விண்கலத்தின் நாயகன்;
குடியரசை ஆண்டவன்;
எளிமையாய் வாழ்ந்தவன்;
தமிழுக்கு பெருமை சேர்த்தவன் - தமிழனாய்
தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்தவன்;
இளைஞர்களின் முன்னோடியாய்,
இதயத்தில் வாழ்ந்தவன்;
மாற்றம் தந்தவனுக்கு,
ஏனிந்த தாடுமாற்றமோ???
அக்னி சிறகுகளை தந்தவன்,
தன் சிறகுகளை அடக்கிகொண்டானே!
கனவு காண சொன்னவன்,
நிரந்தரமாக உறங்குகிறானே!
சூரியனை மறைக்க முடியுமா?
கடலலைகளை நிறுத்தமுடியுமா?
மண்ணின் மைந்தன் மறைந்தாலும்,
நிரந்தரமாக உறங்கினாலும்,
ஒளி வீசிக்கொண்டே இருப்பான் - எங்கள்
நினைவலையில் தவழ்ந்துகொண்டே இருப்பான்;
அயராது உழைத்தவனுக்கு,
ஓய்வை மறந்தவனுக்கு,
இந்த ஓய்வு தேவைதான்;
உறங்கட்டும் விட்டு விடுங்கள்;
காலம் கலாமை மறைத்தாலும்,
ஞாலம் கலாமை மறவாது!!!
(நீ அமைத்த பாதையில் நாங்கள் பயணிப்போம்;
வல்லரசு இந்தியாவை நோக்கி!!!)
செவ்வாய், 12 ஏப்ரல், 2016
அலுவலகங்கள்
ஹந்தி – கார்யாலய் தமிழ் – அலுவலகங்கள்
1.ஆயகர் கார்யாலய் - வருமானவரி அலுவலகங்கள்
2.ஸர்காரீ தஃப்தர்
சாஸகீய கார்யாலய் - அரசாங்க அலுவலகங்கள்
3.டாக்கர் - தபால் நிலையம்
4.த்தானா - காவல் நிலையம்
5.ரேல்வே ஸ்டேஷன் - ரயில்வே ஸ்டேஷன்
6.புஸ்தகாலய் -நூலகம்
7.பைங்க் - வங்கி
8.அதாலத் நியாலய் - நீதிமன்றம்
9.பத்ரிகா கார்யாலய் - பத்திரிக்கை அலுவலகம்
10.பத்தன் நியாஸ் - துறைமுகம்
திங்கள், 11 ஏப்ரல், 2016
இனியவை நாற்பது
முன்னுரை:
பதிணெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்று இனியவை நாற்பது.
இது நாற்பது வெண்பாக்களை கொண்டது. ஒவ்வொரு வெண்பாவிலும் 3 முதல் 4 கருத்துகள் இடம்
பெறுகின்றன. மக்கள் தங்கள் வாழ்வில் பின் பற்ற வேண்டிய இனிய செயல்கள் இந்நூலில் திரட்டித்
தரப்பட்டுள்ளன.மேலும் சங்க காலத்தில் நடைமுறையில் இல்லாத பழக்கங்கள் பற்றி இந்நூலில்
கூறுகிறது.
நட்பு கொள்ளுதல்:
குற்றங்களை செய்யாமல் தீய வழியை பின் பற்றாமல் நாடோறும்
சென்று கற்றல் மிக இனியவை, பிறரிடம் கடன் வாங்காமல் தன் மாட்டை கொண்டு உழுவுதல் மிக
இனியவை. அது போல் ஒருவரிடம் நட்பு கொள்ளும் போது அவரது குணத்தையும் பழக்கங்களையும்
நன்கு அறிந்து நட்பு கொள்ளுதல் வேண்டும்.
தரும செயல்கள்:
நம்மால் முடிந்தவரை
தரும செயல்களை செய்தல் மிக இனியவை, நன்னெறிப்பட்டார் சொல்லும் பயனுடைய சொல்லைக் கேட்டு
அதன் வழி பின்பற்றுதல் இனியவை.
மாட்சிமையுடைவரின்
செல்வம்:
குழந்தைகள் மிக
ஆரோக்கியத்துடன் எந்த நோய் நொடியும் இல்லாமல்
வாழ்வது இனியவை. சபையில் அஞ்சாதவனாய் சபைகேற்ற கருத்துகளை சொல்பவனின் கல்வி
இனியவை. எந்த பொருளின் மீதும் மயக்கம் இல்லாதவராய் உள்ளத்தில் மாட்சிமை உடையவரை அடையும்
செல்வம் நீங்காமல் இருப்பது இனியவை.
குற்றம் இல்லாமல்
வாழ்தல்:
சமூகத்தில் தனது
மானம் இழந்த பின் உயிர்வாழாமல் இருப்பது இனியவை. தான் பெரியன் என்று கூறிக்கொண்டு வாழாமல்
பிறரிடத்தில் அடங்கி வாழ்வது இனியவை.அது போல் குற்றம் ஒன்றும் செய்யாமல் நல்ல வழியில்
பொருள் ஈட்டியதும் பொருளுடைமையும் எல்லா மக்களுக்கும் இனியவை.
பிறக்கு கொடுத்தல்
இனியவை:
நன்கு கற்றவர்
முன் தன் கல்வியை சொல்லி பெருமையடைவது இனியவை. எள்ளவும் பிறரிடம் இரவாமல் தன்னிடம்
இருப்பதை பிறக்கு கொடுத்து வாழ்வது இனியவை.
ஆராய்ந்து வாழ்தல்:
பிறர் பொருளை அபகரிக்காமல்
தன் பொருளைக் கொண்டு வாழ்வது இனியவை. பாவங்களை செய்து சேர்க்காமல் அறம் செய்து வாழ்வது
இனியவை. மறந்தும் கூட நல்ல குணங்கள் இல்லாதவரிடம் சேராமல் நல்ல வழியை ஆராய்ந்து அறிந்து
வாழ்தல் இனியவை.
வேறுபடாமல் வாழ்தல்:
தனக்கு பொருள்
வருகின்ற நெறியினை அறிந்து பிறக்கு கொடுத்தல் இனியவை. பெரிய பயனையுடைதாம் விரும்பியவற்றை
ஆராய்ந்து செய்யாதவராய் தாயினும் தம்மியல்பின் வேறுபடாமல் வாழ்வது இனியவை.
பொருளை அபகரிக்காமல்
வாழ்தல்:
ஒருவன் செய்த நன்றியின்
பயனைக் கருதி வாழ்வது இனியவை, சபையில் ஒரு சார்பாக மாட்சிமையோடும் வாழ்தல் இனியவை.
அறிவில்லாதவரிடம் இருக்கும் பொருளை அபகரிக்காமல் வாழ்வது மிகவும் இனியவை.
முடிவுரை:
அவ்வாறு கூறப்படும்
கருத்துகளை, நல்ல செயல்களை பின் பற்றி வாழ வேண்டும் என்று பூதஞ் சேந்தனார் கூறுகிறார்.
ஞாயிறு, 20 மார்ச், 2016
ஒரு இந்தியனின் கடமை..!!
- படைபாளர் பலர் உருவாக வேண்டும் .பாரதம் பாரினில் உயர்ந்தாக வேண்டும் .ஒவ்வொரு மனிதனும் படித்தாக வேண்டும் ஊருக்கும் நாட்டுக்கும் உழைத்தாக வேண்டும்.
- எறும்பிடம் நாம் பாடம் கற்றாக வேண்டும். என்றென்றும் ஓய்வின்றி பொருள் தேடவேண்டும். காகங்கள் போல நாமும் ஒற்றுமையுடன் உறவாட வேண்டும்.
- ஒவ்வொரு குடிமகனும் ஒரே வீட்டில் உள்ளோர் போல் இந்தியாவை உருவாக்க வேண்டும். ஒருமைபாட்டால் நாம் ஒன்றாக வாழ வேண்டும்!
திங்கள், 14 மார்ச், 2016
உன்னை உலக்கிற்கு அறிமுகம் செய்
உன்னை உலகிற்கு அறிமுகம்
செய்
v
துன்பத்தை
அனுபவித்த காலத்தை மறந்துவிடு,ஆனால் அது உனக்கு கற்பித்த பாடத்தை மறந்துவிடாதே!
v
ஒரு
முறை வந்தால் கனவு! இருமுறை வந்தால் ஆசை! பலமுறை வந்தால் லட்சியம்!
v
உலகம்
உன்னை அறிவதைவிட உன்னை உலகிற்கு அறிமுகம் செய்துகொள்!
v
வெற்றி
என்பது உன் நிழல் போல, நீ அதை தேடிப்போகவேண்டியதில்லை. நீ வெளிச்சத்தை நோக்கி நடக்கும்போது,
அது உன்னுடன் வரும்!
v
கஷ்டம்
வரும் போது கண்ணை மூடாதே. உன்னை கொன்றுவிடும். கண்ணை திறந்து பார்; காணாமல் போய்விடும்.
-டாகடர் அப்துல் கலாம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)