சனி, 21 மே, 2016

அப்துல் கலாமிற்கு சலாம்..!!!




பாரத தாயின் தவப்புதல்வன்;

ஏழையாய் பிறந்தவன்;

கலத்தில் சிறந்தவன்;

விண்கலத்தின் நாயகன்;

குடியரசை ஆண்டவன்;

எளிமையாய் வாழ்ந்தவன்;

தமிழுக்கு பெருமை சேர்த்தவன் - தமிழனாய்

தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்தவன்;

இளைஞர்களின் முன்னோடியாய்,

இதயத்தில் வாழ்ந்தவன்;

மாற்றம் தந்தவனுக்கு,

ஏனிந்த தாடுமாற்றமோ???

அக்னி சிறகுகளை தந்தவன்,

தன் சிறகுகளை அடக்கிகொண்டானே!

கனவு காண சொன்னவன்,

நிரந்தரமாக உறங்குகிறானே!

சூரியனை மறைக்க முடியுமா?

கடலலைகளை நிறுத்தமுடியுமா?

மண்ணின் மைந்தன் மறைந்தாலும்,

நிரந்தரமாக உறங்கினாலும்,

ஒளி வீசிக்கொண்டே இருப்பான் - எங்கள்

நினைவலையில் தவழ்ந்துகொண்டே இருப்பான்;

அயராது உழைத்தவனுக்கு,

ஓய்வை மறந்தவனுக்கு,

இந்த ஓய்வு தேவைதான்;

உறங்கட்டும் விட்டு விடுங்கள்;

காலம் கலாமை மறைத்தாலும்,

ஞாலம் கலாமை மறவாது!!!

(நீ அமைத்த பாதையில் நாங்கள் பயணிப்போம்;
வல்லரசு இந்தியாவை நோக்கி!!!)

3 கருத்துகள்:

  1. அருமை சகோ இன்றைய இளைய சமுதாயத்திற்க்கு நம்பிக்கை தரும் வரிகள் வாழ்த்துகள் - கில்லர்ஜி

    பதிலளிநீக்கு
  2. அருமை. நம்பிக்கை தரும் வரிகள்.

    பதிலளிநீக்கு
  3. அருமையான பதிவு சகோ.இளைஞர்களால் முடியாது என்பது ஏதுமில்லை.கலாம் ஐயாவின் கனவை நிறைவேற்றுவோம் சகோ.அவரால் விதைக்கப்பட்ட விதைகள் தான் மாணவர்கள்.முடியும் வரை முயற்சிப்போம் இந்தியா வல்லரசு அடைய செய்வோம்.
    கலாமிற்கு சலாம் ஜி..நன்றி.

    பதிலளிநீக்கு