பெங்காலு
என்ற ஒரு வித அவரையிலிருந்து உண்டானதாகும் பெங்களூர். இது கன்னடப் பெயர்.
ஒருகாலத்தில்
மைசூரை ஆண்டு வந்த வீரப்பன்னாளா என்ற அரசன் வேட்டைக்குச் சென்றபோது தன் பரிவாரங்களிலிருந்து
தனியே பிரிந்து, இருளில் வழித்தவறி ஒரு குடிசையை அடைந்தான். அங்கு ஒரு வயதான மூதாட்டி
இருந்ததைக் கண்டு தனக்கு உணவு தரும் படி வேண்டினார் அரசர் .
அந்த
மூதாட்டியிடம் அச்சமயம் பெங்காலி என்ற அவரையைத் தவிர உணவாகக் கொடுக்க வேறொன்றும் இல்லை.
ஆகவே அந்த அவரையை வேகவைத்து அரசனுக்கு பரிமாறினார் மூதாட்டி. அரசனும் அதை உண்டு தன்
குதிரைக்கும் கொடுத்தார். மறுநாள் காலையில் தலைநகருக்கு திரும்பியவுடன் அச்செய்தியை
எல்லாருக்கும் அறிவித்து, தனக்கு உதவி செய்த அந்த மூதாட்டிக்கு சன்மானம் அளித்ததுடன்,
அந்த இடத்தில் ஓர் ஊரையும் உண்டாக்கி, அதற்கு பெங்காலு என்றும் பெயரிட்டார். அப்பெயர்
மாறி பெங்களூர் என்றாயிற்று.
(படித்ததில் பிடித்தது)
(படித்ததில் பிடித்தது)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக