இந்தப் பெயரைக் கேட்டதும் ஒரு சிறுவன் அதுவும்
தமிழ்நாட்டில் சென்னையைச் சேர்ந்த சிறுவன் இந்தியாவிலும் உலக அளவிலும் நடந்த பல நீச்சல்
போட்டிகளிலும் வெற்றி பெற்று பதக்கங்களை வாங்கி வந்து தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும்
பெருமை சேர்த்தவன் என்பதும் அவனது பெயர் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கிறது
என்பதும் பலருக்கும் நினைவுக்கு வரலாம்.
பத்திரிக்கைகள் பாராட்டின. பேட்டிகள் பிரசுரமாயின.
ஆனால், இளம் வயதில் சாதனைகள் பல புரிந்த குற்றாலீஸ்வரனின் வாழ்க்கை வேதனையும் நிறைந்தது.
முதலில் சாதனைகளை பார்ப்போம்…….
சிறு
வயதில் இருந்தே கடலில் நீண்ட தூரம் நீந்தி செல்வதில் ஆர்வம் கொண்டிருந்த குற்றாலீஸ்வரன்
தன்னுடைய 12 வயதில் ஆங்கிலக் கால்வாயில் நீந்தி கின்னஸ் புத்தகத்தில் சாதனையாளராக இடம்
பெற்றார். அதன் பிறகு உலக அளவில் அதிக தூரமாக கருதப்பட்ட 81 கிலோ மீட்டர் தொலைவை மேற்குவங்காளத்தில்
நடந்த போட்டியில் கலந்து கொண்டு தங்கபதக்கம் பெற்றார். அதன் பிறகு ஆஸ்திரேலியாவில்
நடந்த போட்டியிலும் கலந்து கொண்டார். ஜூரிச்சில் நடந்த போட்டியில் தங்க பதக்கம் வென்றார்.
அவரது வெற்றிகள் குவிந்தன. அதன் விளைவாக உலக அளவில்
நடத்தப்பட இருந்த மாரத்தான் நீச்சல் போட்டியில் (2004) கலந்து கொள்ளத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த போட்டிகள் பிரேசிலும், அமெரிக்காவிலும் நடைபெற இருந்தன.
அந்த சமயத்தில் அவர், தான் இனிமேல் நீச்சல் போட்டிகளில்
கலந்துகொள்ளப் போவது இல்லை என்று அறிவித்து விட்டார்.
காரணம்…..
ஒவ்வொரு
போட்டிகளில் கலந்து கொள்ள தேவைப்படும் லட்சக்கணக்கான ரூபாய் செலவை அவரது குடும்பத்தினரால்
சமாளிக்க முடியாததும், அவரை ஊக்குவிக்க தனிப்பட்ட நிறுவனங்கள் ஊக்கத் தொகை (“ஸ்பான்ஸ்ர்”) செய்ய முன் வராததும்
தான் காரணம் என்று அறிகிறோம்.
இந்தியாவில் கிரிக்கெட்டைத் தவிர, இதர விளையாட்டுக்களையும்,
விளையாட்டு வீரர்களையும் ஊக்குவிக்க வேண்டும் என்று நினைப்பவர்களின் எண்ணிக்கை அதிகமானால்
கிரிக்கெட்டைத் தவிர இதர விளையாட்டுகளிலும் இந்தியா சிறந்து விளங்கும்.
(படித்ததில் பிடித்தது)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக