நா.ராஜலட்சுமி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நா.ராஜலட்சுமி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 6 ஏப்ரல், 2017

நட்பு..

                                                     
 


நட்பு என்னும் கூட்டில் இணைந்து வேதனையை மறந்து சிரித்திடுவோம்
பேதங்கள் இன்றி பழகிடுவோம்
தாயின் கருவறையில் கிடைக்காத நட்பு கல்லூரி அறையில் கிடைத்தது
ஏங்கோ பிறந்த நாம் நட்பு என்னும் பாதையில்                               கைக்கோர்த்து இணைந்திடுவோம்
சொந்தங்கள் மாறலாம் நட்பு ஒன்று தான் மாறாதது 
தமிழில் இருப்பது வல்லினம் மெல்லினம் நம் இடையில் இருப்பது
நட்பு  னம்.
பூக்கள் கூட உதிரி தான் பூக்கிறது-ஆனால்

நட்பு என்ற பூ உதிராமல் காக்க வேண்டும்.

அப்பா

                         



தாய் என்பாள் குழந்தையை கருவில் பத்துமாதம் மட்டுமே
சுமந்து பெற்று எடுப்பாள்  -ஆனால்
தந்தை  என்பவர்  உணர்வுகளை கொண்டு
பல கனவுகளோடு குழந்தையை  தோள்களில் சுமந்து செல்வர் தந்தை

தந்தை என்பவர் இன்பங்களை மட்டுமே
மாற்றவர்கள் இடம்  பகிர்ந்துக் கொள்வர் –ஆனால்
துன்பங்களை அவர் மனதில் வைத்து புதைத்துக் கொள்வர்
அவர் விடும் கண்ணீர் துளிகள் கூட மாற்றவர்களுக்கு
தெரியாமல் போய்விடும்

அவர் நமக்காக  சிந்தும் வியர்வை துளிகளும்
நமக்காக விடுமும் கண்ணீர்த் துளிகளுக்கு கூட ஈடுகட்ட முடியாது
ஆழ் கடல்போல் அன்பை காட்டி வழி நடத்தியவர்
என் தந்தை

என் தாயையும் சேர்த்து என்னையும் தன் நெஞ்சில் சுமந்தவர்

என் தந்தை  அன்பால் வென்றவர் . 

கண்கள்..

            


வட்ட மான முகத்தில்
     முட்டைக் கண்கள் உள்ளன
முட்டைக் கண்கள் நடுவிலே
     வட்டப் பொட்டு இருக்கிறதே
கறுப்புப் பொட்டு கண்ணிலே
     காண மிகவும் உதவுதே
கறுப்பு விழுகள் பாதித்தால்
     கண்கள் பார்வை இழக்குமே
கிட்ட உள்ள பொருள்களைக்
     கண்டு அறிய உதவுமே
எட்ட இருக்கும் பொருள்களை
     எண்ணிப் பார்க்க உதவுமே
புதுமை யான உலகினைப்
     பார்த்து ரசிக்கும் கண்களைச்
சொத்து போல காத்து நாம்
     சொர்க்கம் போல வாழுவோம்
கண்கள் இரண்டும் மணிகளே
     கடவுள் தந்த விழிகளே
கண்கள் காத்து வாழுவோம்

     காலம் முழுதும் மகிழுவோம்.

தமிழ் புத்தகம்




புத்தகம் நல்ல புத்தகமே
புத்தம் புதிய புத்தகமே
தாய்மொழி தமிழின் புத்தகமே
தரத்தின் சிறந்த புத்தகமே

நம்தமிழ்ப் பாடப் புத்தகத்தை
நாளும் நன்கு படித்திடுவோம்
பாடலை, செய்யுளை அனைத்தையுமே
படித்து மனம் செய்வோமே.

நம்தமிழ்ப் பாடல், செய்யுள்களை
நாளும் இசையுடன் பாடிடுவோம்

பாடப் பாட இசைவளரும்
படிக்கப் படிக்கத் தமிழ்வளரும்.

ஒவ்வொரு தமிழனும் தாய்மொழியை
உணர்ந்து முயன்றுக் கற்றிடுவோம்
நல்ல நூல்பல எழுதிடுவோம்

நற்பணி தமிழுக்குச் செய்திடுவோம்.

அன்புத் தமிழ்



           
அம்மா அப்பா அன்பே வா
ஆசான் தந்த அறிவே வா
இருளை நீக்கும் ஒளியே வா
தந்தை விதையே தமிழே வா
தாயின் மொழியே இசையே வா
மூச்சாய் பேச்சாய் தமிழே வா

முத்தமிழ் நாடே கலையா வா…

முதல் தெய்வம்


             
அம்மா அப்பா முதல் தெய்வம் – அவர்
அடிகளைத் தொழுவதே அருள்பெறுவோம்
இன்றும் என்றும் அவர்வழியில் – நாம்
சென்றே சிறப்பாய் வாழ்ந்துயர்வோம்.

பேசும் தெய்வம் பெற்றோரே – நம்மைப்
பேணிக்ரகாப்பவர் பெற்றோரே
ஊட்டி வளர்ப்பவர் பெற்றோரே – நமக்கு
ஊக்கம் கொடுப்பவர் பெற்றோரே

நல்லதைக் கெட்டதை அறிந்தவர்கள் – இந்த
நாட்டின் நடப்பைத் தெரிந்தவர்கள்
அவர்களைத் தவிர நம்மீது – இங்கு
அக்கறை உள்ளவர் யாருமில்லை.

கல்வியைத் தருபவர் பெற்றோரே – நம்
கவலையைக் களைபவர் பெற்றோரே
அம்மா அப்பா மனம்மகிழ – நாம்

அனைத்தையும் செய்து உயர்வோமே.

நீரோடு

                                                           


அழகாய் பூத்திருக்கும் தாமரையும்
அடி ஆழம் தெரியாமல்  தொட்டுப் பழகும்
தண்டுகள் மிதமாய் மிதந்துபோகும் இலைகள் – எப்போதும்
மலர்ந்து சிரிக்கும் தாமரை ஒன்றோடு ஒன்று  
இணைந்து இருக்கும் நீரோடு

கடல்வாழ் உயிர்யினங்கள் நீர் இல்லாமல்
உயிர்வாழ முடியாது –அதுபோல
மீன்கள் கடல் அடியில் அழகாய் மிதந்து போகும்
இனி  இணைந்தே  இருப்போம் நீரோடு

பரந்த  நிலபரப்பில்  பசுமையான வயல்வெளிகளுக்கு
உணவு  ஆதரமாக விளங்குவது  நீர் மட்டும் தான்
இனி  இனத்தோடு இணைந்து இருப்போம் நீரோடு

மீத்தேன் வாயு  நீரோடு கலப்பதனால்
நீர் கூட விஷமாக மாறிவிடும்
மக்களுக்கு  நோய்வாய்  ஏற்படும்
நிலத்தோடு இணைந்து இருப்பதனால்
நிலம் கூட மாண்டுபோய் விடும்

நீர் நெருப்பாக கூட மாற வாய்ப்பு உண்டு
இதனால்  நம் நாடு  வறண்ட பாலைவனமாக 
மாற வாய்ப்பு உண்டு .
நிலமும்  நீரும் கொஞ்ச கொஞ்சமாக அழிந்து விடும்

நீரியின்றி அமையாது உலகு என்பது போல

நீர் இல்லாமல் நம்நாள் வாழ முடியாது .

இலட்சியம்




நான் ஏறிக்கொண்டே இருக்கிறேன் .
எங்கிருக்கிறது இட்சிய சிகரம்
என் இறைவா !
நான் தோண்டிக்கொண்டே
இருக்கிறேன் , எங்கிருக்கிறது
அறிவுப் பதையல்
என் இறைவா !
நான் பெருங்கடலில் நீந்திக் கொண்டே
இருக்கிறேன் . எங்கிருக்கிறது
அமைதித் தீவு என் இறைவா !
இறைவா , இறேவா , நூறு கோடி
மக்கள் இட்சியம் சிகரத்தையும் ,
அறிவுப்புதையலையும் ,
இன்ப அமைதியையும் இழைத்து

அடைய அருள்வாயாக !

அறிவியல் போன்றது அல்ல தொழில்நுட்பம்




அறிவியல் போன்றது அல்ல
தொழில்நுட்பம் ; இது ஒரு நடவடிக்கை;
தனிப்பட்ட ஒருவரது புத்திக்கூர்மையின்
அடிப்படையில் உருவாவதல்ல
தொழில்நுட்பம் ; பலரது
அறிவாற்றலின் சங்மத்தில்
பிறப்பது இது. சாதனைக் காலவரம்புக்குள்
ஐந்து நவீன ஏவுகணைச் சாதனங்களை
உருவாக்கும் திறன் கொண்டதாக
இந்திய தேசத்தை உயர்த்தியதை
IGMDP யின் மிகப்பெரிய வெற்றியாக
நான் நினைக்கவில்லை . ஆனால்
விஞ்ஞானிகளும் , பொரியாளர்களும்
அடங்கிய அற்புதமான சில அணிகளை
உருவாக்கியிருப்பதைத் தான்
இந்தத் திட்டத்தின் மாபெரும்

வெற்றியாகக் கருதுகிறேன் . 

கிராமத்தின் உயர்வு நாட்டின் உயர்வு...




என்னுடைய உண்மையான உழைப்பு,
என் கிராமத்தின் உயிர் கொடுக்கும்.
     எங்கள் கிராமங்கள் உயர்ந்தால்,
எங்கள் குடும்பங்கள் நல்வாழ்வு கிடைக்கும்.
     எங்கள் குடும்பங்கள் சிறப்பாக வாழ்ந்தால்,
எங்கள் மாநிலம் உயரும்.
     எங்கள் மாநிலம் உயர்ந்தால்,
எங்கள் நாடு வளமான நாடாகப் பரிணமிக்கும்.
     நாம் உழைத்து கிராமத்தை, மாநிலத்தை,

இந்திய நாட்டை உயர்த்துவோம்.

தமிழக விருதுகள்




ü  பாரத ரத்னா விருதுகள் ;
1.   சி. இராஜகோபாலச்சாரி   1954
2.   டாக்டர் சர்.சி.வி.ராமன்  1954
3.   கே. காமராஜர் ( இறப்பதற்குப் பின் )  1976
4.   எம்.ஜி. ராமச்சந்திரன் (இறப்பதற்குப் பின் ) 1988
5.   டாக்டர் ஏ,பி.ஜே. அப்துல்கலாம்  1997
6.   எம். எஸ். சுப்புலட்சுமி  1998
7.   சி. சுப்புரமணியம்  1988
ü  அய்யன் திருவள்ளுவர் விருது ;
2001-ம் ஆண்டில் அய்யன் திருவள்ளுவர் விருது பெருங்கவிக்கோ வா. மு.சேதுராமன் அவர்களுக்கு வழங்கப்பட்டது . ரூ. 1 லட்சம் பரிசும் , தங்கப்பதக்கமும் அடங்கும் . இவ்விருது அன்றைய தமிழக முதல்வர் திரு. மு. கருணாநிதி அவர்களால் 15-01-2001 அன்று சென்னையில் வழங்கப்பட்டது. இதுவரை இவ்விருது பெற்றுள்ளவர்களின் விவரம் ;
1.    தவத்திரு, குன்றக்குடி அடிகளார்  1986
2.   திரு. கி. ஆ. பெ. விசுவநாதம்  1987
3.   திரு. ச. தண்டபாணி தேசிகர்  1988
4.   திரு. வ. சுப. மாணிக்கம்  1989
5.   திரு. கு. ச. ஆனந்தன்  1990
6.   திரு. சுந்தர சண்முகனார்  1991
7.   திரு. நாவலார் நெடுஞிசெழியன்  1992
8.   திரு. கல்லை தே. கண்ணன்  1993
9.   திருக்குறளார் திரு. வீ. முனுசாமி  1994
10. திருமதி. சு. சிவகாமசுந்தரி  1995
11. முனைவர். மு. கோவிந்தசாமி  1996
12. முனைவர். கு. மோகனராசு  1997
13. முனைவர். இரா. சாரங்கபாணி  1998
14. முனைவர். வா. செ. குழந்தைசாமி  1999
15. திரு. வ. மு. சேதுராமன்  2001
16. திரு. த. சி. கண்ணன்  2000
                 குறள்பீட விருது
தமிழக அரசால் நிறுவப்பட்ட இவ்விருது ரூ.2லட்சம் பரிசு மேற்கொண்டதாகும் வாழ்நாள் சாதனைக்காக தமிழறிஞர் அ.ச. ஞானசம்பந்தனுக்கு குறள்பீட விருதை அன்றைய தமிழக முதல்வர் திரு.மு.கருணாநிதி அவர்கள் 15-01-2001 அன்று சென்னையில் வழங்கினார். குறள்பீட வரிசாக ரூ.25ஆயிரம் வழங்கப்பட்டுள்ளவர்களில்
ஈரோடு தமிழன்பன் (கவிதை), மணவைமுஸ்தபா (அறிவியல்), தே.லூர்து (நாட்டுப்புறவியல்), சேஷநாராயணா (மொழி பெயர்ப்பு), கவிஞர்இளவேனில் (திறனாய்வு), சு.ப.செல்வம் (குழந்தை இலக்கியம்),
பா.அண்ணாத்துரை(சிறுகதை), கலைசெழியன் (பொதுக்கட்டுரை), இரா.கீதாராணி (புதினம்), செ.செந்தில்குமார் (மொழிப் பெயர்ப்பு), ஆகியோருக்கு குறள்பீடப் பாராட்ட இதழும், தலா ரூ.5 ஆயிரமும் வழங்கப்பட்டன.


தமிழ்நாட்டின் பிறவிருதுகள்;
     இராஜராஜன் விருது – தஞ்சாவூரில் உள்ள தமிழ்ப் பல்கலைக் கழகத்தால் வழங்கப்படுகிறது.
தமிழ்ச்செம்மல் விருது ;
     மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தால் வழங்கப்படுகிறது.
திருவள்ளுவர் விருது, திரு.வி.க. விருது, பாரதியார் விருது, பாரதிதாசன் விருது, கி.ஆ.பெ.விருது ;
தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறை ஒவ்வொன்றுக்கும் சான்று மற்றும் ரூ.1 லட்சம் ,ரெக்கமும் வழங்குகிறது. சிறந்த, நமிழ் நூல்கள் பரிசு ( முதல் பரிசு ரூ.10,000, இரண்டாம் பரிசு ரூ.5,000, மூன்றாம் பரிசு ரூ.2,000 ). தமிழ் வளர்ச்சித்துறை ( 24 துறைகள் சம்பந்தப்பட்ட புதிய நூல்களுக்கு ) வழங்குகிறது.
    தமிழ்நாடு விஞ்ஞானி விருது ;
தமிழ்நாடு விஞ்ஞான தொழில் நுட்பக்கழகம் வழங்குகிறது.
    டாக்டர்.எஸ்.ராதாகிருஷ்ணன் நினைவு விருது ;
தமிழ்நாடு கல்வித் துறையால் சான்று, வெள்ளிப் புத்தகம் மற்றும்          ரொக்கம் ரூ.2,000 வழங்கப்படுகிறது.
    கலைமாமணி விருது ;
           பொற்பதக்கம், பொற்கிழி, சுழுற்கேடயம் மற்றும்கேடயம் இயல்      இசை – நாடக மன்றத்தால் வழங்கப்படுகிறது.
    பொரியார் விருது ;
பிற்பட்டோர் நலத்துறையால் சான்றும் மற்றும் ரொக்கம் ரூ.1    இலட்சம் வழங்கப்படுகிறது.
    
டாக்டர் அம்பேத்கர் விருது ;
ஆதி திராவிடர் நலத்துறையால் வழங்கப்படும்.


 .



ஞாயிறு, 25 செப்டம்பர், 2016

வறுமை



             
     

 கொடிது கொடிது வறுமை கொடிது என்பது போல் வறுமையிலும் ஏழ்மை கொடிது இந்த ஏழ்மையினால் வாடும் மக்கள் உணவு இல்லாமல் தவிர்ப்பது மிகவும் கொடிது .நமக்கு கிடைக்கும் உணவை நாம் குப்பை போல் கொட்டி வீணாக்கிறோம் .இந்த அன்னம் கூட இல்லாமல் தான் ஒரு நாளில் நிமிடத்திற்கு ஒரு முறை ஏதோ ஒரு இடத்தில் ஒரு மனிதன் இறந்துக்கொண்டே தான் இருக்கிறன் . இதை கவனிப்பதற்கு யாருக்குமே நேரம் இல்லை என்பது தான் மிகவும் கொடுமையானது. இந்த உலகம் எவ்வளவு மாறியினாலும் காலமும் நேரமும் ஓடிக்கொண்டே இருந்தாலும் “வறுமை” என்ற சொல் மாறாமல் இன்னும் இருந்துக்கொண்டே தான் இருக்கிறது. பசியினால் ஏழை குழந்தை கதறி அழுவது இன்னும் என் செவிகளில் ஒலித்துக்கொண்டே தான் இருக்கிறது. இனியவது உணவை வீணாக்காமால் இருங்கள். இல்லை என்று வருபவருக்கு கொடுத்து உதவியினால் கூட அந்த ஒரு மனிதன் ஆவது இறக்காமல் இருப்பனோ என்று  தான். இந்த பசியின் முக்கிய காரணம் வறுமை தான் இந்த வறுமையே ஓழித்தால் மட்டுமே பசி என்ற கொடிய நோய் நீங்கும்.

அடுத்த நூற்றாண்டியில் ஆவது வேறுபாடு இல்லாத மக்களை கொண்டு ஒரே இனம் தமிழினம் எனப்போற்றி வறுமையில்லாத நாட்டை உருவாக்க வேண்டும்.       
       

கால வித்தியாசம்








கால வித்தியாசம்

நீதிகள்  விற்கப்படுகின்றன
விதிகளை  மீறப்படுகின்றன
அரசியியலில் செய்யும் ஊழலுக்கு
அரசு கைதாளம் போடுகிறது
மக்களுக்கு இலவசம் கொடுத்து கொடுத்து
அடிமைப்படுத்தி  வருகிறார்கள்

இக்காலம்

வானத்தில் பட்டம் விட்டது ஒரு காலம்
வானத்திற்கே சென்று ஆராய்ச்சி செய்வது இக்காலம்
பழைய மரபுகளோடு வாழ்ந்தது அக்காலம்
பழைய மரபுகள் இன்றி போனது இக்காலம்
காலங்கள் மாறியினாலும் இலக்கியங்கள் மாறாது
இக்காலத்தில் பணத்திற்குக் கொடுக்கும் மதிப்பு
மனிதனுக்கு  கிடைக்கவில்லை ……………………….
நம் தாய் மொழிக்கு கொடுக்க வேண்டிய மதிப்பை
பிறமொழிக்கு  கொடுக்கிறார் ……………………………
உலகில் எது மாறியினாலும் மாற்றம் ஒன்றே மாறாது .

.