ஜனனிஜெயச்சந்திரன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜனனிஜெயச்சந்திரன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 30 டிசம்பர், 2017

இந்தியாவில் மட்டும்தான் இவை உரையாடப்படுபவை!!!

இந்தியாவில் மட்டும்தான் இவை உரையாடப்படுபவை!!!
          
 அம்மா ; என்னங்க எனக்கு இன்னைக்கு ஒடம்பு சரியில்லங்க தல வலிக்குது, வயிரு வலிக்குது, கால் வலிக்குது,மூட்டு வழிக்குது, கண் எரியிது என்னால இன்னைக்கு சமைக்கவே முடியல மதியம் பசங்களுக்கு சாப்பாடு பார்சல்ல வாங்கிட்டு வந்துருங்க.
அப்பா ; எத்தன தடவ சொல்றது வண்டி ஓட்டும்போது கால் பன்னாதனு! வாங்கீட்டு வந்து தொலக்கறேன்.போன வைய்

அப்பா;(மைன்ட் வாய்ஸ்); இவங்களுக்கெல்லாம் வெளிய வந்து ஒரு 5ரூ சம்பாரிச்சாதா என்னோட கஷ்டம் புரியு!
அம்மா;(மைன்ட் வாய்ஸ்); அவங்களுக்கெல்லாம் ஒரு நாள் நா செய்ற வேலையெல்லாம் செஞ்சாத என்னோட கஷ்டம் என்னனு புரியு.



சனி, 10 ஜூன், 2017

தி கில்டி ப்பர்சன்

                        
அக்ரம் ஒரு பெரிய அரண்மனையில் பணியாளராக பணிபுரிகிறார்.அவர் வேறு வேலைகளையும் அந்த வீட்டில் செய்வார்.அவருக்கு ஒரு கெட்ட பழக்கம் இருக்கிறது.ஒவ்வொரு முறையும் வீட்டில் எதையாவது திருடி சாப்பிடுவார்.ஒரு நாள் அந்த வீட்டின் உரிமையாளர் ஒரு திருமண விழாவில் கலந்து கொள்ள சென்றிருந்தனர்அக்ரம் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.அப்பொழுது அவர் வீட்டில் இருந்த குளிர்சாதன பெட்டியை திறந்தார்.பிறகு அதிலிருந்த பழச்சாற்றையும்,இனிப்புகளையும் சாப்பிட்டார்.பிறகு இரண்டு ஆரஞ்சு பழங்களையும் சாப்பிட்டார்.





            உடனடியாக யாரோ வீட்டின் மணியை அடித்தனர்.பயந்துவிட்டார் அக்ரம்.அவர் ``வீட்டின் உரிமையாளர் வந்துவிட்டாரோ?இந்த ஆரஞ்சுபழத் தொல்லிகளை நான் என்ன செய்வேன்?’’இதனை மறைத்து வைத்தாலும் அந்த நேரத்தில் என்ன செய்து கொண்டிருந்தாய் என்ற கேள்வி எழும்.இதனை இங்கேயே வைத்தாலும் பிடிபட்டு விடவேன்’’என்று எண்ணினார்.ஆகையால் அந்த ஆரஞ்சு பழத்தொல்லிகளையும் சாப்பிட்டுவிட்டு கதவைத்திறந்தார். ஆனால் வந்திருந்தது தபால்காரர்.அக்கனம் அக்ரம் யோசித்தார்``ஒரு திருடன் தான் நாம் என்று பிடி படுவோம் என்று பயந்துகொண்டே இருப்பான் நான் இனி திருட மாட்டேன்’’ என்றார்.

தரவு
                                    டைனி டாட் பெட் டைம் ஸ்டோரிஸ்

தி ப்பாட்டர்ஸ் ப்ரேயர்ஸ்

                            

ஒரு காலத்தில் பானை வியாபாரி ஒருவர் மண்பானைகளை செய்து கொண்டிருந்தார்.அவரது தொழில் நன்றாக தான் போய்க்கொண்டிருந்தது எனினும் சிலர் அவரது பானை எளிதில் உடையக்கூடியதாக இருக்கிறது என்றனர்.ஆகையால் கடவுளிடம் வேண்டினார்.கடவுள் கண் முன்னே தோன்றிய பிறகு``என்னுடைய பானையை உடையாபடி செய்யுங்கள் ஆகையால் எனது வாடிக்கையாளர்கள் புகார் கூற மாட்டார்கள்’’ என்றார்.



            கடவுளும் அவரை வாழ்த்தி விட்டு மறைந்தார்.இப்பொழுது அவர் செய்யும் எல்லாப் பானைகளும் உடையாமல் இருந்தன.ஆனால் அவருடைய வாடிக்கையாளர்கள் புதிய பானையை வாங்காமல் இருந்தன.மறுபடியும் கடவுளிடம் தாயே நான் செய்தது பிழை எனது பானையை பழைய படி மாற்றிவிடுங்கள் என்றார்.நான் இயற்கைக்கு புறம்பாக மாற நினைத்தேன் அது எனது தவறுதான் என்னை மன்னித்துவிடுங்கள்.அவரது பிராத்தனையை கேட்டு அவரத் கோரிக்கையை நிறைவேற்றினார்.இப்போழுது அவரது தொழில் பழையபடி நன்றாக சென்றது.சில விஷயங்களை நாம் மாற்ற நினைக்கக் கூடாது.

                               தரவு
                                    டைனி டாட் பெட் டைம் ஸ்டோரிஸ்

வெள்ளி, 9 ஜூன், 2017

தி ஸ்மார்ட் டாக்

                                                          
விவசாயி ஒருவரிடம் ஒரு மந்தை ஆடுகளை வைந்திருந்தார்.அவரும் அவரது மனைவியும் மிக கடினமாக கண்காணித்து வந்தாலும் அவரது ஆடுகளை நரி தின்றுவிடுகிறது .இப்பொழுது மந்தையில் மீதி இருக்கிறது ஒரே ஒரு ஆடுதான்.ஒருநாள் அந்த ஜோடி அமர்ந்து திட்டமிட்டு ஆட்டை விற்றக முடிவுசெய்து விட்டனர்.அவர்களது பேச்சை ஒட்டுக்கேட்ட ஆடு
``நான் கரிகாரனிடம் பலியாவதைவிட சுதந்திரமாக திரிவதையே விரும்புகிறேன்’’.
ஆகையால் அன்று இரவு காவல் நாயுடன் அந்த ஆடு வேளியேர முடிவெடுத்துள்ளது.அந்த வகையில் ஓநாய் ஆடு நாயுடன் செல்வதை பார்த்து அதனை உணவாக்க முடிவெடுத்துவிட்டது.ஆனால், நாய் இருக்கும் வரை ஆட்டை உணவாக்க முடியாது என்று அதற்கு தெரியும்.

            ஆகையால் ஓநாய் ``ஏய்! நான் உனக்கு கொடுத்த சட்டையை திருப்பி கொடு?’’ என்றது.ஆனால் நாய் அதன் உள்நோக்கத்தை அறிந்துகொண்டது.அந்த நாய் அருகில் இருக்கும் வேலியை கவனத்தில் கொண்டு,ஓநாயிடம் ``அங்கு தொங்கிக்கொண்டிருக்கும் புனித கயிற்றை தொட்டால் நாங்கள் உன்னை நம்புகிறோம் என்றது.அந்த நரி அந்த கயிற்றின் அருகில் சென்றதும் வேலியில் சிக்கியது.காலையில் எழுத்தவுடன் அந்த விவசாயிக்கு தனது ஆடுகளை தின்ற ஓநாய் சிக்கிவிட்டது.இப்பொழுது அவை அமைதியாக வீடுதிரும்பின.

                                          தரவு
                                    டைனி டாட் பெட் டைம் ஸ்டோரிஸ்

க்ரீன் கோல்ட்

                                                                           

ரீமா ஒரு யாசகம் கேட்கும் பெண்.ஒரு நாள் அவளுக்கு சில்லறைகளை கொடுப்பதற்கு பதிலாக சில பூச் செடிகளையும்  பல காய்கறிகளின் விதைகளையும் கொடுத்து``இதை நட்டு வை உனக்கு பல மடங்கு திரும்ப கிடைக்கும்’’என்றார்.



            ரீமாவிற்கு எதுவும் தெரியவில்லை ஆனால்,அந்த பெண்மணி கூறியது போல் செய்ய தீர்மானித்தால் ரீமா.அவள் தனது குடிசைக்குச் சென்று மண்ணை தோண்டினால்.அந்த பெண்மணி கொடுத்த விதைகளை தூவி நன்கு வளர்த்தால்.சில நாட்களுக்குப் பிறகு அவை அவளது குடிசையை சுற்றி நன்கு பூத்தது.ஒரு நாள் ரீமாவின் வீட்டிக்கு ஒரு பெண் வந்து அவளது பூக்களை வாங்கிச் சென்றனர்.அந்நாள் முதல் ரீமா பூக்களை விற்கத்தொடங்கினால்.விரைவில் மக்கள் அனைவரும் அவளிடம் பூ தினந்தோறும் வாங்கத் தொடங்கி அவள் பூ விற்கும் சிறுமியாகவே ஆகினாள்.   
                தரவு
                                    டைனி டாட் பெட் டைம் ஸ்டோரிஸ்