திருப்புமுனை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திருப்புமுனை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 6 ஏப்ரல், 2017

கே.எஸ்.ஆர். மகளிர் கல்லூரியின் திருப்புமுனை...


யார் நாங்கள்..?? பெண்கள் என்றால் வீட்டில் அடுப்பு ஊதுபவர்களா..?? பெண்கள் சமுதாயத்தில் சுதந்திரமாக கருத்துகளை தெரிவிக்க கூடாதா..?? பெண்கள் தனது எழுத்துக்கள் மூலம் நல்ல சிந்தனையை வளர்க்க கூடாதா..?? பெண்கள் தனியாக சிந்தித்து செயல்பட முடியாதா..?? பெண்கள் மேடைப்பேச்சுகளில் பேசக் கூடாதா..?? பெண்கள் குறிப்பிட்ட வயது வரைதான் கல்வி கற்க வேண்டுமா..?? எங்கள் பாட்டன் பாரதியின் எண்ணங்களின் படி ரௌத்திர பெண்மணிகளாகவும்,புதுமைப் பெண்ணாகளாகவும்,நிமிர்ந்த நன்னடை மற்றும் நேர்கொண்ட பார்வையுடனும் இந்த சமூகத்தில் ஆணுக்கு நிகராக வரக்கூடாதா..?? இத்தனை கேள்விகளா என்று திகைத்து போக வேண்டாம்..

பெண்களுக்காக உரிமைக் குரல் எழுப்பிய மாபெரும் தலைவர்கள் இராஜராம் மோகன்ராய் முதல் பெரியார் வரை நாம் கேட்டறிந்திருப்போம். பெரியாரின் பெண் ஏன் அடிமையானாள் என்ற நூல் அனைவரும் படிக்க வேண்டிய நூலாக விளங்கி வருகிறது.மேலும் ஆரம்பத்தில் பாரதியே தனது மனைவியை வீட்டினுள் தான் முடக்கி வைத்திருந்தார்.அவர் சென்ற மாநாட்டில் ஒரு ஆங்கிலேயே பெண்மணி நிவேதிதா அவா்களின்
 கேள்வியால் தான் தனது பேனா முனையில் ஒரு உரிமைப் போர் நடத்தினார் அதுவும் பெண்களின் உரிமைக் குரல் என போர்தொடுத்தார்.

இப்படி பலரை நாம் கடந்து வந்திருக்கலாம்.இதனை இங்கு குறிப்பிடுவதற்கு காரணம் எங்கள் கல்லூரியில் குறைந்தபட்சம் 1275 மாணவிகள் உள்ளடக்கிய மகளிர் கல்லூரி.எங்களின் திறமைக்கு வழிகாட்டி வரும் எங்கள் கல்லூரி முதல்வர் மா.கார்த்திகேயன் ஐயா அவர்கள் ஒரு ஆண்.எங்கள் கல்லூரியை தொடங்கிய எங்கள் தாளாளர் அரிமா.கே.எஸ்.ரங்கசாமி ஐயா இவரும் ஒரு ஆண்.ஏன் நான் மற்றும் எனது தோழிகள் வலையுலகில் தனது கருத்துகளை சுதந்திரமாக தெரிவிக்கக் கூடிய அளவில் எங்களை நெறிப்படுத்தி வரும் எனது நெறியாளர் முனைவர் இரா.குணசீலன் ஐயா ஒரு ஆண்.இவர்களை போன்ற பலர் எங்கள் கல்லூரியில் என்னை போல பல மாணவிகளின் ( பெண்களின் ) முன்னேற்றத்துக்கு உறுதுணையாக இருப்பவர்களும் உண்டு.

2009 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட எங்கள் கல்லூரி குறுகியக் காலத்தில் இந்தியாவில் உள்ள கல்லூரிகளின்  தரவரிசைப் பட்டியலில் 76-வது இடமும் மாவட்ட  அளவில் 3-வது இடமும் பல்கலைக்கழக  அளவில் முதலிடமும் பெற்றுள்ளோம்.இதுவே எங்கள் கல்லூரியின் முதல் திருப்புமுனையாகும்.



உன் மனதில் உன் சுதந்திரம் உண்டு நீயே உணர்ந்து கண்டுபிடி மனிதி வெளியே வா.மனிதன் என்ற சொல்லுக்குள்ளே அடங்காதே பெண்ணே…

ஆம் எங்களின் சுதந்திரம் அதனை கண்டுபிடிக்க உதவிய எமது கல்லூரி தாளாளர்,முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் தான் கே.எஸ்.ஆர் மகளிர் கல்லூரியின் இரண்டாவது திருப்புமுனைக்கு காரணம்.அவர்கள் அனைவருக்கும் எமது மாணவிகள் சார்ப்பில் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

சுடர் விளக்காயினும் தூண்டுகோல் ஒன்று வேண்டும்…..