ஞாயிறு, 9 ஏப்ரல், 2023

*பட்டாம்பூச்சி*

 
அகபடாதது என்கையில் அகபட்டு மழலைக்கு பட்டாம்பூச்சியை கையில் பிடித்து விட்டேன் என
கொண்டது என
கொள்ளை சந்தோஷம்...
பிடித்து பறக்க விடும் பட்டாம்பூச்சியோடு சேர்ந்து பறக்கிறது சில கவலைகள்...!
       -ம.சன்மதி   II-BSC CS  Ksrcasw

வெள்ளி, 20 ஜனவரி, 2023

தை மாத மேகமே!

தைமாத மேகமெனத்
  தவழ்ந்தாடும் பூங்கொடியே
கையோடு நீ இணைந்தால்
கற்பனைகள் ஊறுமடி!

முக்காடு நீக்கியுள்ளேன்
  முகநிலவைப் பார்த்த பின்பு
எக்காடு வந்தாலும்
ஏக்கமெனக் கில்லையடி!

ம.சன்மதி II-BSC CS  Ksrcasw

சனி, 3 டிசம்பர், 2022

புங்கை மரம்

புங்கையின் அடியில்
டயரை கட்டி ஊஞ்சலாடினோம்...
ஆயிரம் அரியணையில் 
அமர்ந்தாலும் கிட்டாத மகிழ்வு
வாழ்க்கையைத் திரும்பி பார்த்தேன்
உதடுகளில் பேச்சில்லை
கண்ணீர் நிற்கவில்லை
சில்லென்று தீண்டிச்செல்லும்  
காற்றைப் போல
விரைந்து கடந்ததே 
அந்நாட்கள்........
ஜவ்வு மிட்டைமென்று
நாவைப் பார்த்து 
மகிழ்ந்தோம்......
தாத்தா சட்டையில்
 சில்லறை திருட - பாட்டி பின்னாலே துரத்த
கண்ணாமூச்சி விளையாடினோம்...
ஆற்றங்கரையில் சிப்பிபொருக்க
துணியை வைத்து மீன் பிடிக்க
நாள் முழுதையும் தேய்த்தோம்....
விடுமுறை முடிய இரண்டு நாட்கள்
அப்பா கதவைத் தட்டியதும் 
கண்களின் கதவைக்
கண்ணீர் தட்டியது.... 
ஒரே நொடியில்
பணமரம் ஏறியது,
மாங்காய் திருடியது,
ஊர்ப்பொட்டிக்கடை,
நீச்சலடித்த கிணறு,
கண்முன் வந்து சென்றது....
விருப்பமின்றி கிளம்பினேன் 
இன்று நினைவுகளா ய்
என் ஓரங்களில் 
வடிந்தது......
  D.Diayana   II -BA English.  Ksrcasw

செவ்வாய், 8 நவம்பர், 2022

*சமுதாய கவிதை*

விவசாயி வீட்டில்.....
அடுப்பு எரியவில்லை
வயிறு நன்றாகவே.....
எரிகிறது..........!

நிலம் ....
சேறானால் சோறு.......
வறண்டால்.......
பட்டினி...............!

விவசாயிகளுக்கு.....
பருவ மழை - பன்னீர்
பருவம் தப்பிய மழை....
கண்ணீர்..........!
M.Sanmati II-nd BSC CS   KSRCASW

தவிப்பு

வின் கண்ட நிலவில் 

கணவில் ஒரு பயணம்...!!

நிலையற்ற கால்கள் 

நிலவைத் தேடி 

ஒரு தேடல்....!!! 

உறங்கச் சென்ற விழிகள்... !!

உனைக் காண விளித்தன... !! 

சிறு ஒளியில்

ஒரு விளிப்பு...!!!

நிஜத்தில் கனவாய் 

கறைந்ததேனோ...!!