அ.கோகிலா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அ.கோகிலா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வெள்ளி, 1 டிசம்பர், 2017
வியாழன், 6 ஏப்ரல், 2017
உரிமைகள்
காடுகளை அழித்து வீடு கட்டுவோம்..
யானைகள் ஊருக்குள் புகுந்ததாக சொல்வோம்..!
எரி, கம்மாயிகளை ஆக்கிரமித்து வீடுகட்டுவோம்.. தண்ணீர் ஊருக்குள்
புகுந்ததாக சொல்வோம்..!
விளை நிலங்களை மனைகளாக்கி வீடுகட்டுவோம்.. அரிசி பருப்பு விலை
உயர்ந்துவிட்டதாக சொல்வோம்..!
லஞ்சம் கொடுத்து காரியத்தை முடிப்போம்.. காசு வாங்கிக்கொண்டு ஓட்டு
போடுவோம்.. இலவசங்களை வாங்கி பூரிப்பு அடைவோம்.. அரசியல்வாதிகள் நாட்டை
கெடுத்துவிட்டதாக வெக்கமே இல்லாமல் சொல்வோம்..!!
இந்தியா பரிசோதனை!!
இந்தியா பரிசோதனைக்காக விண்வெளிக்கு
ராக்கெட் அனுப்ப தீர்மானித்தது. கூட ஒரு மனிதனையும்....
போகும் மனிதன் திரும்பி வருவான் என எந்தவித நம்பிக்கையும் இல்லாததால்
நஷ்டபரிகாரம் தருவதாக முன்னதாகவே தீர்மானம் செய்யப்பட்டது .
பலியாடு யாரென்று தீர்மானிக்கின்ற இன்டர்வியூவில் முதலில் வந்தது ஒரு சர்தார்ஜி.
இரண்டு லட்சம் ரூபா தன் குடும்பத்திற்கு தந்தால் தான் போகத்தயாரென்று கூறினார்.
ஆனால் அதற்கடுத்து வந்த ஹிந்திக்காரன் சொன்னான் தனக்கு ஒரு லட்சம் தந்தா
தான் போவதாக.
அடுத்த ஆளாக வந்தது ஒரு தமிழன்.
காசு கொடுத்தா எந்த நரகத்துக்கும் போகத்தயாரா இருப்பான் இந்த தமிழன்.
ஐம்பதாயிரத்துக்கு சம்மதிப்பான் அப்படினு நெனச்சார் இன்டர்வ்யூ
நடத்துபவர்.
ஆனால்....
தனக்கு மூனு லட்சம் தந்தா அதுல ஒரு லட்சம் ஆபிசர்க்கு தாரேனு தமிழன்
சொன்னதால ஆபிசர் சம்மதிச்சி தமிழன அனுப்புறதுனு தீர்மானம் ஆனது.
ராக்கெட் வெற்றிகரமாக விண்வெளிக்கு அனுப்பப்பட்டது.
இரண்டு நாட்களுக்குப்பிறகு அதே தமிழன ரோட்ல வச்சி பாத்ததும் அதிர்ச்சி
அடைந்தார் இண்டர்வியூ நடத்திய ஆபிசர்.
அப்ப அந்த தமிழன் சொன்னது ...
"மூணு லட்சத்துல ஒரு லட்சம் உங்களுக்கு தந்தேன். ஒரு லட்சம் கொடுத்து
அந்த ஹிந்திக்காரன ராக்கெட்ல ஏத்தி விட்டேன்.பாக்கி ஒருலட்சம் நா
எடுத்துக்கிட்டேன்."
!!!!!!!!!!!!!!!!!!!
வாழ்க்கை
வாழ்க்கையில் நாம்
சந்தித்தவர்களில்.
சிலர் நம்மை ஏமாற்றிருப்பார்கள்
சிலர் நம்மை சோதித்திருப்பார்கள்
சிலர் நம்மை பயன்படுத்தியிருப்பார்கள்
சிலர் நம்மை அவமானப்படுத்தியிருப்பார்கள்.
சிலர் நமக்கு பாடம்
கற்று கொடுத்திருப்பார்கள்
ஒன்றை மட்டும்
நினைவில் கொள்ளுங்கள்
அவர்கள் தான் நாம்
சிறந்த மனிதர்களாக
மாற முக்கிய காரணமானவர்கள்..
லிச்சிப் பழத்தின் மருத்துவம்
- சீனாவை பூர்விகமாகக் கொண்ட லிச்சி பழம், இந்தியா, வங்கதேசம் போன்ற நாடுகளிலும் அதிகமாக விளைகிறது. இவை தவிர நெதர்லாந்து, ஐக்கிய அரபு நாடுகள், சவுதி அரேபியா, லெபனான், கனடா, ரஷ்யா மற்றும் ஏமன் நாடுகளில் இந்தப் பழம் விளைகிறது.
- பலாப்பழம் போல வெளிப்புறம் பரபரவென கூர்மையான சிவப்பு நிற தோலைக் கொண்டிருக்கும்.
- உள்புறம் நுங்கு போல கொழுகொழுவென இருக்கும் இந்த பகுதிதான் சாப்பிடக்கூடியது. இது இனிப்புச் சுவையுடன் இருக்கும்.
- உடலுக்கு சக்தி அளிக்கக்வல்லதோடு இப் பழம் வைன் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
- பழத்தின் உள்ளே, 2-3 செ.மி. நீளத்தில் இதன் வித்து இருக்கும். அதை சாப்பிடக்கூடாது. லிச்சி பழத்தில் கொழுகொழு சதைப்பகுதிதான் சத்துகளின் இருப்பிடம். இதில் விட்டமின் C சத்து அதிகம் உள்ளதால் தோல் மற்றும் எலும்புக்கு நல்லது.
- கோடை காலத்தில் உடல் நோய் மற்றும் அலர்ஜி போன்றவற்றிற்கு எதிர்ப்பு சக்தியை அளிக்கக்கூடியது.
- அதிக கலோரி இல்லை என்பதால், நீர்ச்சத்து மிகுந்தது முடியும் அளவு சாப்பிடலாம்.
- இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இதனால் மலச்சிக்கலைப் போக்குகிறது.
“எனக்கு பிடித்த பூ-வின் குணங்களிள் உள்ள பெண்”
எனக்கு பிடித்த ‘பூ’ “தாமரை” ஆகும். ஏன் தாமரை
மலர்களிடம் உள்ள குணங்களை பெண்களோடு ஒப்பிடுகிறேன் என்றால், தாமரை என்பது ஒரு பெரிய
அழகான பூ. அதன் இலைகளில் தண்ணீர் விழுந்தால், அது அதை ஒரு பொருட்டென எடுத்துக் கொள்ளாது,
கீழே விழச்செய்துவிடும். அதுபோல, பெண்ணானவள் அந்த தண்ணீர் துளிப்போல் இருக்கும் பிரச்சனைகளை,
ஒரு பொட்டாக எடுத்துக்கொள்ள மாட்டால்.
தாமரை மலரை சுற்றியும் தண்ணீர் நிரம்பிக்கிடந்தாலும்,
மூழ்காமல் தனித்து நின்று மலர்களுக்கே பெருமை சேர்க்கும். அதுபோல, பெண் இந்த சமுதாயத்திலும்
இந்த உலகத்தில் தனித்து ஓங்கி நிற்பால்.
இதுவே , எனக்கு பிடித்த பூவின் குணங்களின் உள்ள
பெண்.
மனித கண்களை பற்றிய சில உண்மைகள்
1] ஒரு சராசரி மனிதன் நிமிடத்துக்கு பன்னிரண்டு முறை கண்
சிமிட்டுவான்.
2] 2 மில்லியனுக்கும் அதிகமான வேலை செய்யும் பாகங்களை
கொண்டது.
3] மனிதனுடைய கண் 576 மெகா பிக்சல்.
4] விழி வெண்படலம் திசுக்களுக்கு மட்டுமே ரத்தம் தேவை இல்லை.
5] இது 36000 பிட் தகவல்களை ஒரு மணி நேரத்திற்கு செயல்படுத்த
முடியும்.
6] மனிதனின் கண் விழிகள் ஏறத்தாழ 28 கிராம் எடை கொண்டது.
7] கண்ணை துறந்துகொண்டு இரும முடியாது.
8] மனிதன் ஒரு நாளைக்கு 10,000 முறை கண் சிமிடுகிறான்.
பண்பாடுகள்
மனித குலத்தின் மிகப்பழமையான பண்பாடுகளில் இந்தியப் பண்பாடும் ஒன்றாகும். ஒரு நிலையில் இந்தியா பல பண்பாடுகள் அல்லது கலாச்சாரங்களின் கலவை என்றாலும், சீன, ஐரோப்பிய, முஸ்லீம், ஆப்பிரிக்க, பூர்வீக அமெரிக்க பண்பாடுகள் போன்ற ஒரு தனித்துவமான பொது பண்பாடு இந்தியாவுக்கு உண்டு. இப்பண்பாடு பல முனைவுகளில் இருந்து பெறப்பட்ட தாக்கங்களை உள்வாங்கி வெளிப்பட்டு நிற்கின்றது.
வட இந்தியா ஆசிய பெரு நிலப்பரப்பை அண்மித்து இருந்ததால், அது தென் இந்தியாவைக் காட்டிலும் பல்வேறு ஆளுமைகளுக்கு அல்லது தாக்கங்களுக்கு உட்பட்டது எனலாம். சில வரலாற்று அறிஞர்கள் தென் இந்தியா தொடர் வெளி ஆக்கிரமிப்புக்களுக்குள் உள்ளாகாததால், உண்மையான இந்திய பண்பாடு தென் இந்தியாவிலேயே கூடுதலாக வெளிப்பட்டு நிற்கின்றது என்பர். எனினும், தென் இந்தியாவின் தென் கிழக்கு ஆசிய தொடர்புகள், இலங்கையுடான உறவு, பிற கடல் வழி தொடர்புகள் இந்திய பண்பாட்டின் உருவாக்கத்தில், பரவுதலில் முக்கிய கூறுகள்.
எடிசன் குறிப்பு
ஒரு நாள் பள்ளியிலிருந்து வந்த தாமஸ் ஆல்வா எடிசன் கையில் ஒரு கவரில் உள்ள
கடிதத்தை தன் அம்மாவிடம் மட்டுமே கொடுக்க வேண்டும்
என தன் ஆசிரியர் கூறியதாக சொல்லி கொடுத்தான். அந்த கடிதத்தை அந்த தாய் கண்ணீரோடு சத்தம்
ஆக தன் மகன் கேட்கும்படி இப்படி படித்தாள்.
“உங்கள் மகனின் அறிவுத்திறமைக்கு முன் எங்கள் பள்ளி
மிகவும் சிறியது அவனுக்கு கற்பிக்க திறமையான ஆசிரியர்கள் எங்களிடமில்லை அதனால் தயவுசெய்து
நீங்களே உங்கள் மகனுக்கு கற்பிப்பது நல்லது” என்று பல ஆண்டுகளுக்கு பிறகு எடிசனின்
தாயாரும் காலமாகி விட்டார்.
எடிசனும்
அந்த நூற்றாண்டின் சிறந்த ஆராய்ச்சியாளராக கண்டுபிடிப்பாளராகவும் ஆனார். இப்படி இருக்கையில்
ஒரு நாள் தனது வீட்டின் பழைய சமான்களை எடுத்துவைத்துக் கொண்டிருந்தபோது அவர் தன் அம்மாவிடம்
முன்பு ஒரு முறை பள்ளியிலிருந்து கொண்டுவந்து
கொடுத்த கடிதம் எதேச்சை ஆக கண்ணில் பட அதை எடுத்து படித்துப்பார்த்தார்.
அதில் இப்படி எழுதியிருந்தது
”மூளை வளர்ச்சி குன்றிய உங்கள் மகனை இனிமேல் எங்கள்
பள்ளிக்கு நீங்கள் அனுப்ப வேண்டாம்.” என்று இதைப்படித்த எடிசன் கதறி அழுதார்” பின்
அவரது டைரியில் கீழ்க்கண்டவாறு எழுதினார்.
மூளை வளர்ச்சியற்ற தாமஸ் ஆல்வா எடிசன் தனது “தாயாலேயே” மாபெரும் கண்டுபிடிப்பாளனான். என்று
தன் பிள்ளைகள் மீதான “உயர்வான எண்ணங்கள்”.
அவர்களை மிக உயரத்துக்கு கொண்டு செல்லும் குழந்தைகள் மனதில் தன்னம்பிக்கையை விதைப்போம்.
எஸ்.பவித்ரா,
முதலாம் ஆண்டு
கணினிப் பயன்பாட்டியல் துறை.
உலகின் முதல் மருத்துவமனை
பின்னாளில், ரோமானியர்கள் சிறந்த ராணுவ மருத்துவமனைகளை
உருவாக்கினர்.
’ஹாஸ்பிடல்’ என்கிற
ஆங்கில வார்த்தை ’ஹாஸ்பிடாலியா’ என்ற லத்தீன் வார்த்தையில் இருந்து தோன்றியது. அதற்கு,’விருந்தினர்
தங்குமிடம்’ என்று பொருள்.
பாலிதானா கோயில்கள் - ஒரே மலையில் 900 கோயில்கள்!!!
குஜராத்தின் பாவ்நகர் மாவட்டத்தில் உள்ள ஷத்ருஞ்சயா எனும் மலைகளில்தான் பாலிதானா கோயில்கள் என்று அறியப்படும் 900 ஜைனக் கோயில்கள் அமைந்துள்ளன. உலகிலேயே 900 கோயில்கள் உள்ள ஒரே மலையாக ஷத்ருஞ்சயா விளங்குகிறது. இந்தக் கோயில்கள் அனைத்தும் மார்பிள் கற்களைக் கொண்டு கட்டப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல் 3000-த்துக்கும் அதிகமான படிக்கட்டுகளை கடந்து சென்று இந்தக் கோயில்களை அடைவது ஒரு டிரெக்கிங் அனுபவம் போலவே இருக்கும். இங்கே இளம் பெண்கள் முதல் முதிய பெண்கள் வரை ஜைனத்துறவிகள், வெள்ளை நிற உடையில் காட்சியளிக்கின்றனர். இப்பெண் துறவிகள் தங்களுடைய தலைமுடியை தாங்களே ஒரு வகை செய்முறையால் பிய்த்து எறிவதாக சொல்லப்படுகிறது. இங்குதான் ஜைன மத தீர்த்தங்கரர்கள் நிர்வாணா எனும் சமாதி நிலையை எய்தியாகக் நம்பப்படுகிறது. இதன் காரணமாக ஜைன மத ஐதீகங்களின் அடிப்படையில் பண்டைய காலம் முதலே இந்த இடம் பாவ விமோச்சனம் அளிக்கும் புண்ணியத் தலமாக இடமாக கருதப்படுகிறது.
சனி, 18 மார்ச், 2017
வியாழன், 29 டிசம்பர், 2016
விருதுகள் மற்றும் தொடங்கப்பட்ட ஆண்டு
விருதுகள் மற்றும் தொடங்கப்பட்ட ஆண்டு
அசோக சக்ரா விருது -
1952
சாகித்ய விருது -
1954
ஞான பீட விருது -
1961
தாதாசாகிப் விருது -
1969
வியாஸ் சம்மான் விருது -
1991
சரஸ்வதி சம்மான் விருது - 1991
விளையாட்டு விருதுகள்
அர்ஜூனா விருது -
1961
துரோனாசார்யா விருது -
1985
தயான் சந்த் விருது -
2002
விருதுகள்
Ø சாகித்ய விருது
Ø தமிழக அரசின் விருதுகள்
Ø இயல் விருது
Ø எர்ன்ஸ்ட் மற்றும் யங் விருது
Ø வியாஸ் சம்மான் விருது
Ø சரஸ்வதி சம்மான் விருது
Ø சாந்தாராம் விருது
Ø இந்திய பெருமை விருது
Ø தாதாசாகிப் பால்கே விருது
Ø ஞான பீட விருது
Ø அசோக சக்ரா விருது
சனி, 17 டிசம்பர், 2016
பெண்ணின் நட்பு..!!
நீ பெண்ணாக இரு
ஆனால்
பெண் அடிமையாக இருக்காதே
நல்ல முறையில் வாழ்
கெட்டதை
செய்ய நினைக்காதே
உறவுடன் இணைந்து இரு
ஆனால்
உறவை பிரிக்காதே
நண்பர்களுடன் பழகு
ஆனால்
நண்பர்களை விட்டு செல்லாதே..!!புதன், 14 டிசம்பர், 2016
காலத்தின் அருமை
- தேர்வில் தவறிவிட்ட மாணவனுக்கு தெரியும் ஓர் ஆண்டின் அருமை..!
- குறை பிரசவத்தில் பிறந்த குழந்தையை பெற்றெடுத்த தாய்க்க தெரியும் ஒரு மாதத்தின் அருமை..!
- வார இதழ் ஆசிரியருக்கு தெரியும் ஒரு வாரத்தின் அருமை..!
- காதலிக்காக காத்திருக்கும் காதலனுக்கு தெரியும் ஒரு மணிநேரத்தின் அருமை..!
- இரயிலைத் தவற விட்ட பயணிக்குத் தெரியும் ஒரு நிமிடத்தின் அருமை..!
- விபத்தில் நூலிலையில் தப்பித்தவற்கு தெரியும் ஒரு வினடியின் அருமை..!
ஐ.ரம்யா,
இரண்டாமாண்டு ஆங்கிலத்துறை.
வெள்ளி, 9 டிசம்பர், 2016
அப்துல்கலாம் நினைவு கவிதை
அன்று என் பிறந்த நாள்
இன்றோ அப்துல்கலாம் இறந்த நாள்
அன்று நான் யோசித்தது என்னமோ
இன்றோ அவர் கூறும் கனவுகள்
கவிதையின் இனிமையில்
சுவைத்தது அவர் கதைகள்
காற்றின் சுவாசத்தில்
மிதந்தது அவர் வார்த்தைகள்
வாழ்வின் எல்லையில்
அவர் எடுத்த முடிவுகள்
2020-ல் வாழ்க இந்தியா என்று கூற
அவர் மறைந்தார் கல்லறையில்.....
சனி, 24 செப்டம்பர், 2016
வானம் தொட்டுவிடும் தூரம்தான்
எங்கள் கல்லூரியின் வணிகவியல் துறை உதவிப் பேராசிரியர் வா.சுரேசு அவர்களால் எழுதப்பட்ட கவிதையினை இங்கு பகிரவுள்ளேன்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)