உதவிப் பேராசிரியர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உதவிப் பேராசிரியர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 13 ஜூலை, 2019

மணப்பெண்ணே! உனக்காக...




தேவையான பொருட்கள்
                                            சமங்கிப்பூ,
                                            கோழிக்கொண்டை,
                                            தங்கநிற நூல்.

செய்முறை
                  முதலில் சமங்கிப்பூ இரண்டு எடுத்துக் கொண்டு அதன் மேல்   சிறதாக கோழிக்கொண்டையை வைத்து 20 செட் தயார்படுத்திக் கொள்ளவேண்டும்.
 
               அதன் பிறகு தங்கநிற நூலை இரண்டாக மடித்து அதனுள் இந்த ஒரு செட் பூவை வைத்து நூலின் நுனியை வைத்து ஒரு முடித்து போட்டுக்கொள்ள வேண்டும்.
 
              இதே போல் 20 முறை நூலில் பூவை வைத்து அந்த நூலில் கட்டிக் கொள்ள வேண்டும்.
 
              பிறகு அது அழகிய அரைவட்டமாக காட்சியளிக்கும். அதனை மணப்பெண்ணின் தலை முடியைப் பின்னிய பிறகு அதனைச்சுற்றி வைத்தால் அழகாக இருக்கும்.
 

வாங்க வீட்டை அலங்கரிக்கலாம்....




இயல்பே! இயற்கை!


வியாழன், 11 ஜூலை, 2019

உடல் மொழி - ஓர் வாசிப்பு


               

மாணவர்களைப் புரிதல்

ஆசியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே புரிதல் என்பது உடல் மொழியில் இருந்தே தொடங்குகிறது. ஒரு மாணவனின் நேர்கொண்ட பார்வை அவனது சீரான நடை தூய்மையான உடை கனிந்த முக பாவனை கை அசைவு போன்றவைதான் அவனைப் பற்றிய ஒரு சரியான கணிப்பை ஆசிரிரிடம் உருவாக்குகிறது.

மாணவனைப் பற்றிய நல்ல அபிப்பிராயத்தை இது ஏற்படுத்தினால் மட்டுமே பின்னர் அவர் அவனிடம் நல்லவிதமான கற்பித்தலைத் தொடர முடிகிறது. அவனது ஒவ்வொரு அசைவையும் சரியான முறையில் நிர்மாணிக்க அவர் மனம் இடம் தருகிறது.

மாணவரின் உயர்வு இதுபோன்ற ஒரு பிள்ளையார் சுழிவுடன்தான் தொடங்குகிறது. அப்படித்தான் அவன் வருங்காலம் நிச்சயிக்கப்படுகிறது. எதிர்காலத்தில் மிகப் பெரிய படிப்புகளைப் படித்து உலகம் போற்றும் உயர்ந்தவனாக அவனை உயர்த்துகிறது.

இது மாணவர்களுக்கு மட்டுமல்ல ஆசியர்களுக்கும் பொருந்தும். அவரது நடை உடை பாவனைகள்தான் ஒரு மாணவனை அவரிடம் ஈர்க்கச் செய்கிறது. அப்போதுதான் அவர் கற்றுத்தரும் எந்தப் பாடத்தையும் அவனால் விருப்போடு கவனிக்க முடிகிறது.

அவரை முதலில் சந்திக்கும்போது அவரது உடல் மொழி மாணவனைக் கவரவில்லை என்றால் அவர் என்னதான் கரடியாகக் கத்தினாலும் பாடம் எதுவும் அவன் தலையில் ஏறாது. அவரது பாடத்தில் மட்டும் அவன் எப்போதும் பின்தங்கிய நிலையிலேயே இருப்பான்.

இப்படிப்பட்ட ஒரு அமைப்பானது மாணவனின் எதிர்காலத்தைப் பாழாக்கி விடுகிறது என்பது மட்டுமல்லாமல் ஆசிரிரின் பெயருக்கும் களங்கம் ஏற்படுகிறது. அவர் மீதான கருத்து சரசரவென்று கீழே இறங்கி விடுகிறது. கல்வி அதிகாரிகள் மற்றும் தாளாளர்களிடம் அவரது மதிப்பு குறைந்துபோய் ஊதிய உயர்வு பதிவு உட்பட அனைத்திலும் அவருக்குப் பாதிப்பு ஏற்பட்டு விடுகிறது.

இப்படி ஆசிரிர் மாணவர் என்று இரு சாராருக்குமே பொருத்தமாக உள்ளது உடல் மொழி.

ஆசியர் ஒருவர் மாணவர்களின் உடல் மொழியைத் தன் அனுபவத்தால் உணர்ந்து வலைப்பதிவு ஒன்றில் எழுதியுள்ளார். இது ஒவ்வொரு மாணவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். இதனைப் பார்த்து அவர்கள் தங்கள் உடல் மொழியைத் திருத்தித் கொள்ளவும் வாய்ப்பு கிடைக்கும்.

மேலும் மாணவர்கள் மட்டுமல்லாமல் ஆசியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் கல்வியாளர்களுக்கும் கூட இந்த டிப்ஸ் பயனுள்ளதாக இருக்கும்.

ஒரு மாணவனிடம் ஏதாவது கேட்கிறபோது அவன் உடனே பதில் சொல்லாமல் தன் தலையைச் சொறிந்து கொண்டிருக்கிறான் என்றால் என்ன அர்த்தம்?

அவன் மறந்து போய்விட்டான் என்று கருதலாம். இல்லையென்றால் பதில் சொல்வதில் ஏதோ ஒரு குழப்பம் அவனுக்கு ஏற்பட்டிருக்கிறது என்றும் நினைக்கலாம். அல்லது வியப்பின் உச்சத்தில் அவன் பதில் சொல்லக்கூடத் தோனுறாமல் இருப்பதாகக்கூட எண்ணலாம்.

ஆசிரிர் மாணவர்களைச் சோதிப்பதற்காகச் சில மாணவர்களிடம் கேள்வி கேட்பார். அந்தச் சமயத்தில் ஒரு மாணவன் மட்டும் ஆசிரியரையே உற்றுப் பார்த்துக் கொண்டே இருக்கிறான் என்றால் என்ன அர்த்தம்?

அன்று அந்த மாணவன் சரியாகப் பாடங்களைப் படிக்காமல் வந்திருக்கிறான். எனவே அவனிடம் எந்தக் கேள்வியைக் கேட்டாலும் நிச்சயமாக விடை சொல்லத் தெரியாமல் திரு-திரு என்று விழிக்கப்போவது உறுதி உறுதி. எனவே அதுபோன்ற தர்மசங்கடமான ஒரு நிலைப்பாட்டைத் தவிர்ப்பதற்காக தயவு செய்து என்னிடம் கேள்வி எதுவும் கேட்டு விடாதீர்கள் ஐயா என்பதுதான் அந்தப் பார்வைக்கான அர்த்தமாக இருக்கும்.

சில மாணவர்கள் ஆசிரிர்கள் கண்களை நேருக்கு நேராகப் பார்க்காமல் தவிர்த்தபடி இருப்பார்கள். அதற்து என்ன அர்த்தம்?
அந்த மாணவன் ஏதோ ஒரு உண்மையை மறைக்கிறான். ஆசிரிரின் கண்களை நேருக்கு நேராகப் பார்த்தால் அவனால் பொய் சொல்ல முடியாது. உண்மையை மறைக்க முடியாமல் உளறிவிடுவான். எனவேதான் அப்படி நேருக்கு நேராகப் பார்ப்பதைத் தவிர்க்கிறான்.

ஆசிரிர் ர்வத்தோடு பாடம் நடத்திக் கொண்டிருக்கும்போது கொட்டாவி விட்டுக் கொண்டே இருப்பான் ஏன் அப்படி?
நீங்கள் நடத்துவது எதுவுமே எனக்குப் புhpயவில்லை; தாலாட்டுவது போல இருக்கிறது. இந்தப் பாடத்தை நிறுத்தி விட்டு ஏதாவது நகைச்சுவையாகப் பேசி கலகலப்பை ஏற்படுத்தினால் என் தூக்கம் கலைய வாய்ப்பிருக்கிறது என்பதன் உடல் மொழி சமிக்ஞைதான் அந்தக் கொட்டாவி.

சில மாணவர்கள் ஆசிரிர் சொல்வதற்கெல்லாம் சம்பந்தா சம்பந்தமில்லாமல் வேகவேகமாகத்தலையை ஆட்டிக் கொண்டே இருப்பார்கள். ஏன்?
இதற்கு மூன்று வகையான அர்த்தங்கள் இருப்பதாகப் பொருள் கொள்ளலாம்.
1.            நீங்கள் நடத்தும் பாடல் அருமையாகப் புரிகிறது என்னை வெகுவாகக் கவர்ந்துள்ளது என்ற ரவனையின் பிரதிபலிப்பாக இருக்கலாம்.

2.            நீங்கள் என்ன பாடம் நடத்துகிறீர்கள் என்றே புரியவில்லை. ஒரே போர். தூங்கிவிடக் கூடாதே என்பதற்காக எல்லாம் புரிந்த மாதிரி தலையை ஆட்டிக் கொண்டே நடிக்கிறேன் என்று அவன் சொல்லாமல் சொல்வதாகவும் இருக்கக்கூடும்.

3.            பாதி தூக்கமும் பாதி விழிப்புமாக இருக்கும் பட்சத்தில் அந்த மாணவன் ஏதோ பாடத்தைத் தலையைத தலையை ஆட்டிக் கொண்டிருப்பான்.

சில பேர் பேசுகிறபோது அடிக்கடி அவர்களது கண்களைச் சிமிட்டிக் கொண்டே இருப்பார்கள். எதனால் அவ்வாறு செயகிறார்கள்?
                நான் உங்களிடம் சொல்வது அத்தனையும் முழுமையான வடிகட்டின பொய் என்பதை அவனையறியாமலேயே அவனது கண்சிமிட்டல்கள் வெளிச்சமிட்டுக் காட்டுகிறது என்றே அதற்குப் பொருள்.

           சரமாரியாகக் கோபத்தில் திட்டுகிறபோதும் சிரித்துக் கொண்டே இருப்பார்கள். ஏன் அப்படி?

நீங்கள் என்ன வேண்டுமானாலும் திட்டுங்கள். அவை என்னைக் காயப்படுத்தவே செய்யாது. ஏனென்றால் இதனை விடவும் மோசமான வசவுகளை என் வீட்டில் தினந்தோறும் வாங்கிக் கொண்டிருக்கிறேன் என்பதுதான் இதன் அர்த்தம்.

அடிக்கடி திருட்டுத் தொழில் செய்து போலீசிடம் மாட்டிக் கொள்கிறவன் போலீசில் அடி வாங்குவதெல்லாம் நமக்குச்சகஜம் தானே என்று சாதாரணமாக எடுத்துக் கொள்வான். உடம்பு மரத்துப் போயிருக்கும். அப்படித்தான் இந்த வகை மாணவர்களும்.

தேர்வு சமயத்தில் தனது பேனாவைச் சுழற்றிக் கொண்டே இருக்கும் மாணவர்களைப் பற்றி….

நன்றாகப் படித்துவிட்டு வந்திருக்கிறார்கள். ஆனால் தக்க சமயத்தில் அது நினைவுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

வகுப்பில் ஆசிரிர் பாடம் நடத்திக் கொண்டிருக்கும் போது சில மாணவர்கள் கன்னத்தில் கையை ஊன்றிக் கொண்டு கவலையோடு காட்சி அளிப்பார்கள். எதனால்?
இந்த வகுப்பு எப்போது முடிவடையும் என்பதே அப்போது அவர்களது பெருங்கவலையாத இருக்கும்.

கடிகாரத்தைத் திரும்பத் திரும்பப் பார்த்துக் கொண்டிருப்பார்கள் சிலர். ஏன்?
மணி நான்கைக் கடந்து கொண்டிருக்கிறது. இன்னும் ஏன் மணி அடிக்காமல் இருக்கிறார்கள்? என்பதுதான் அப்போது அவர்களது சிந்தனையாக இருக்கும்.

இவ்வாறு மாணவர்களைப் பற்றிய ஆசிரிர்களின் கருத்து இருக்கிறது. மாணவர்களும் ஆசிரிர்களின் உடல் மொழியைப் பார்த்து சில கருத்துக்களைக் கொண்டிருக்கிறார்கள்.

ஆசிரிர் வேகமாக வகுப்புக்குள் நுழைந்து உடனே பாடத்தை நடத்த ஆரம்பித்தால் அதற்கு என்ன அர்த்தம்?
அவர் அன்றைய பாடத்தை நன்றாக மனப்பாடம் செய்து வந்திருக்கிறார். தனை ஒப்பிக்கப் போகிறார். சுத்தம். ஒரே போர்தான்.
வகுப்பறைக்குள் நுழைகிறபோதே நெற்றியைத் தடவிக் கொண்டே வருகிறார் என்றால் அதற்கும் அர்த்தம் உண்டு. அவர் மூட் அவுட் டில் வருகிறார். ஏதற்காவது கோபப்பட்டு திட்டவும் அடிக்கவும் போகிறார் ஜாக்ரதை!

கையில் பை ஏதாவது எடுத்துக் கொண்டு உள்ளே வந்தால் அதற்கு என்ன அர்த்தம்?
யாரோ ஒருவன் இன்று சரியாக மாட்டப் போகிறான். அவர் கடைக்குப் போகிறார் என்று அர்த்தம்.

இவ்வாறாக மாணவர்களும் ஆசிரிரின் உடல் மொழியைப் பற்றி நிறைய விஷயங்களைத் தெரிந்து வைத்திருக்கத்தான் செய்கிறார்கள்.

( பாடி லாங்வேஜ் (உடல் மொழி) - குன்றில்குமார் - அழகு பதிப்பகம் - சென்னை - முதல் பதிப்பு- 2012 - ப-110 )