ஞாயிறு, 28 மே, 2017

நல்லதை விதைப்போம்..



நாம் என்ன விதைக்கிறோமோ அதை தான் நாளை அறுவடை செய்ய போகிறோம் என்பதை உணர்ந்தால் இன்று நீதியா..? ஆட்சியா..? மாட்டு இறைச்சியா..? கார்ப்பரேட்டா..? பணமா..?  நடிகனா..?  தலைவனா..? தலைமையா..? என்ற பேச்சுக்கு இடமில்லாமல் இருக்கும்.

இன்றைய அரசியல் கட்சிகள் நாட்டை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்வதாக தெரியவில்லை.
மக்களால் மக்களுக்காக மக்களே தேர்தெடுப்பது மக்களாட்சி என்ற நிலைமாறி பணத்தால் மக்களே பணத்துக்காக நாட்டை கட்சிகளுக்கு விற்றது என்ற நிலையில்  இன்றைய (பண)ஆட்சிமுறை.

காமராசர் போன்ற மாமனிதன் விதைத்து சென்ற நல்லாட்சிக்கு இன்றைய சமூகம் செயற்கை உரங்களை தூவிக் கொண்டு வருகிறது. இதன் விளைவு நமக்கும் நமது தலைமுறைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை அறியாத பேதமை மக்கள் தங்களின் அறியாமையை உணர முற்படுவதில்லை.

ஐந்நூறு ரூபாய்க்கும் ஒரு குவாட்டரும் ஒரு பிரியாணியும் இதற்கு ஆசைப்பட்டு குறிப்பாக இலவசம் என்பதற்கு அடிமையாகி தனது ஓட்டையும் உரிமையும் விற்பனை செய்து விட்டு இப்போது ஆட்சி சரியில்லை தலைமை சரியில்லை அரசு செயல்படவில்லை என்று குற்றம் சாட்டி வருகிறார்கள்.. ஆனால் இதில் என்ன வேடிக்கை என்றால் தன்னை தானே விலைக்கு விற்பனை செய்துவிட்டு என் ஓட்டு என் உரிமை என்று பேசிக்கொண்டு இருப்பது தான்.

ஒற்றுமையே பலம் என்றனர் ஆனால் நமக்குள்ளேயே ஒற்றுமை இல்லை.யாதும் ஊரே யாவரும் கேளீர் என்றனர் ஆனால் அண்டை மாநிலத்தில் இருந்து தண்ணீர் கூட தருவதற்கு தயாராக இல்லை. ஒன்றே குலம் ஒருவனே தெய்வம் என்றனர் ஆனால் பள்ளிக்கூடங்களில் சாதிச் சான்றிதழ் கேட்கிறார்கள்.விவசாயம் இந்தியாவின் முதுகெலும்பு என்றனர் ஆனால் நிலங்கள் எல்லாம் கார்ப்பரேட் நிறுவனத்திற்கு என்கிறார்கள்.விளை நிலங்கள் விலை நிலங்களாக உள்ளது.

அரசு மற்றும் அரசியல்வாதிகளிடம் நான் கேட்டுக் கொள்வது  கல்வி மருத்துவம் தண்ணீர் மின்சாரம் இவைகளை இலவசமாக வழங்குங்கள் நாடு செழிப்புடன் இருக்கும்.குறிப்பாக தாய்மொழிக் கல்வியை கட்டாயமாக்க வேண்டும்.

நமது பாட்டன் பாரதியின் எண்ணங்கள் படி எல்லா துறைகளின்  அறிவும் தமிழில் இருக்க வேண்டும் என்பதை நிஜமாக்க வேண்டும். கலாமின் தொலைநோக்கு படி அறிவியலும் தொழில்நுட்பங்களும் அழகுற தமிழில் எழுதப்பட வேண்டும்.

சிந்தியுங்கள் எனது உறவுகளே இதுவரை நமது மூளை பிறரின் கட்டுப்பாட்டில் செயல்பட்டது போதும்.இந்தியா 2020 என்றார் எனது கலாம் ஐயா இன்று அவர் இல்லையென்றாலும் அவரின் நம்பிக்கை விதைகள் நாம் தான் என்பதை உணர வேண்டும். இந்தியா வல்லரசு அவரின் இலட்சியம் இந்தியா நல்லரசு இதுவே நமது முதல் இலட்சியமாக இருக்க வேண்டும்.

நல்லாட்சி மலர்ந்திட நல்ல தலைமையை உருவாக்கிட நல்லரசு அமைத்திட உங்களில் ஒருவராக நான்.

வைசாலி செல்வம்.

சனி, 20 மே, 2017

வெளியே வா...




கோழிக்குஞ்சாக உன்னை
அடைக்காத்தது போதும்..
வெளியே வா ஒரு கழுகு குஞ்சாக..
உன்னை ஒரு வட்டத்தில் சுழலும்
பந்து போல சுழல வைக்க பார்க்காதே..
வெளியே வா சதம் அடிக்கலாம்..
மனிதன் என்ற  ஆணுக்குள் உன்னை சிறைப்பிடித்ததை மறந்திடு..
வெளியே வா மனிதியாக..
பெண்ணே உன் பெண்மை எனும் சிறகுகளை வலிமையாக்கி
விண்ணில் பறக்கலாம் வெளியே வா..
இன்னும் உன்னை அறியாமை என்ற நிலைக்குள் தள்ளி விடாதே..
ஆணுக்கு நிகராக பெண்களும் வளர்ச்சி அடைந்து வரும் தலைமுறையில்
தான் நீ  இருக்கிறாய்..
அன்று நம் பாரதி கண்ட கனவை
இன்று நிறைவேற்றலாம் துணிவோடு.. நிமிர்ந்த நன்னடை கொண்ட பெண்ணாக வெளியே வா நீயாக..
சுதந்திர உலகில் நீ மட்டும் ஏன் உன்னை விடுதலை செய்ய மறுக்கிறாய்..
பேதைமை விடுத்து வெளியே வா..
வாகை சூடலாம் பெண்ணே..
வெளியே வா..

புதன், 3 மே, 2017

வாழ்க்கையை மேம்படுத்தக்கூடியவை

மனைவியை ஆற்றங்கரைக்கு அழைத்துச்சென்ற கணவர்!

👉 நடந்தது என்ன?

ஆற்றங்கரைக்குத் தன் மனைவியை அழைத்துப் போயிருந்தார் கணவர்…

அவளிடம் ஒரு பையைக் கொடுத்தார்.
பெரிய பெரிய கற்களைக் காண்பித்தார்.

இந்தப் பையை அந்தக் கற்களால் நிரப்பு என்றார்.

மனைவி நிரப்பி எடுத்து வந்தாள்.

இதற்கு மேல் நிரப்ப முடியாது என்றாள்.

கணவர் கீழே கிடந்த கூழாங்கற்களில் சிலவற்றை எடுத்தார்.

அதே பையில் போட்டுக் குலுக்கினார்.

அவை பெரிய கற்களுக்கு நடுவில் இருந்த இடைவெளிகளில் உள்ளே இறங்கின.

ஒரு கட்டத்தில் மேற்கொண்டு கூழாங்கற்களைப் போட இடம் இல்லை.

இப்போதாவது நிரம்பிவிட்டதாக ஒப்புக் கொள்வீர்களா ?
” கேட்டாள் மனைவி.

கணவர் அங்கேயிருந்த மணலை அள்ளிப் பையில் போட்டார்.

பையை மேலும் குலுக்கினார்.

கற்கள், கூழாங்கற்கள் இவற்றுக்கு இடையில் இருந்த இடைவெளிகளில் மணல் இறங்கியது.

இதே பையை முதலில் மணலால் நிரப்பியிருந்தால்,
பெரிய கற்களுக்கு இடம் இருந்திருக்குமா ?

என்று கணவர் கேட்டபோது இருந்திருக்காது என்று ஒப்புக் கொண்டாள் மனைவி.

வாழ்க்கையை மேம்படுத்தக்கூடிய

1). அன்பு,கருணை,
உடல்நலம்,மனநலம், போன்ற உன்னதமான விஷயங்கள்,
பெரிய கற்கள் போன்றவை.

2). வேலை,வீடு,கார், போன்ற செல்வங்கள் கூழாங்கற்களுக்குச் சமமானவை.

3). கேளிக்கை,வீண் அரட்டை போன்ற அற்ப விஷயங்கள் இந்த மணல் போன்றவை.

முதலில் பெரிய விஷயங்களுக்கு வாழ்க்கையில் இடம் கொடுங்கள்

அதன் பின்னும் சின்ன சின்ன விஷயங்களுக்கு இடம் இருக்கும்.

ஆனால்,

உங்கள் வாழ்க்கையை அற்பமான விஷயங்களுக்காகச் செலவழித்துவிட்டால்,

👉முக்கியமான விஷயங்களுக்கு இடம் இருக்காது.


கலாமுக்கு வருத்தம் உண்டு..


Image result for அப்துல் கலாம்

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், ஒரே ஒரு வருத்தத்தை வாழ் நாள் முழுவதும் கொண்டிருந்ததாக அவரது உதவியாளர் ஶ்ரீஜன் பால் சிங் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், "கலாமுக்கு தனது வாழ்க்கை முழுவதும் ஒரே ஒரு வருத்தம் உண்டு. அது, 'தனது பெற்றோருக்கு அவர்களது வாழ்நாளில் 24 மணி நேரமும் மின்சார வசதி கிடைக்க செய்யும் வகையிலான வசதியை செய்து கொடுக்க முடியவில்லையே...!' என்பது தான்.

இதனை அவர் அவ்வப் போது என்னிடம் மிகுந்த வருத்தமுடன் பகிர்ந்து கொள்வார். அநேகமாக கலாம் தனது வாழ்க்கையில் கொண்டிருந்த ஒரே வருத்தம் இதுவாகத் தான் இருக்கும் என்று நினைக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

படித்ததில் பிடித்தது



கர்ப்பமாக இருந்த தாய், தன் மகளிடம் கேட்டாள். "உனக்குத் தம்பி வேண்டுமா அல்லது தங்கை வேண்டுமா?"

♥மகள், "தம்பி வேண்டும்" என்றாள்.
"யாரைப் போல் தம்பி இருக்க வேண்டும்?" என்று தாய் கேட்க, "ராவணனைப் போல் இருக்க வேண்டும்" என்றாள் மகள்.

♥திடுக்கிட்ட தாய், "உனக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறதா என்ன? ராமனைப் போல் ஒரு சகோதரன் வேண்டும் என்று சொல்லாமல், ராவணனைப் போல் வேண்டும் என்கிறாயே!" என்றாள்.

♥"அம்மா! நான் சொன்னதில் என்ன தவறு இருக்கிறது? உடன் பிறந்த சகோதரி அவமானப்பட்டாள் என்பதற்காக, ராவணன் தன் அரியணை, ராஜ்ஜியம், உயிர் அனைத்தையும் இழந்தானே! தன் எதிரியின் மனைவியைச் சிறை பிடித்த போதிலும், அவளை ஒரு போதும் தீண்டவில்லையே!

♥ஆனால் ராமன், யாரோ ஒருவன் சொன்னான் என்பதற்காக, கர்ப்பவதியாக இருந்த தன் மனைவியை ஒதுக்கி வைத்தானே! அவளை தீக்குளித்துத் தன் புனிதத்தை நிரூபிக்கச் செய்தானே!
உனக்கு வேண்டுமானால் ராமனைப் போல் மகன் பிறக்கட்டும். ஆனால் எனக்கு ராவணன் போன்ற சகோதரன் தான் வேண்டும்" என்றாள் மகள்.

♥தாயால் பதில் கூற முடியவில்லை. அதிர்ந்து போனாள்.

♥இக்கதை ஒரு விவாதத்தைத் துவக்கலாம். ஆனால் கதையின் உட்பொருளைக் கூர்ந்து நோக்கினால், ஒரு உண்மை புலப்படும்.

♥இவ்வுலகில் நல்லவர், கெட்டவர் என்பது நாம் நம் தனிப்பட்ட அனுமானங்களால் முடிவு செய்வதே.
கேளிக்கைகளில் திளைப்பவன் என்பதால், ஒருவன் கெட்டவன் என்றில்லை. கோவிலுக்குச் செல்பவன் என்பதால், ஒருவன் நல்லவனும் இல்லை.

♥கோவிலுக்கு வெளியே இருக்கும் ஏழையும் சரி, கோவிலுக்கு உள்ளே இருக்கும் பணக்காரனும் சரி - கேட்பதென்னவோ பிச்சை தான்.
நம் எண்ணங்கள் தராசின் முள் போல் இருத்தல் வேண்டும்.

நம் உடம்பிலே மிக முக்கியமான உறுப்பு




'நம் உடம்பிலே மிக முக்கியமான உறுப்பு' என்ற தலைப்பில் ஆசிரியர் தன் மாணவர்களை ஒரு கட்டுரை எழுதச் சொன்னார்.
அந்த வகுப்பில் உடல் ஊனமுற்ற ஒரு சிறுமியும் இருந்தாள்.

கட்டுரைக்கான தலைப்பே அவளுக்கு பிடிக்கவில்லை. தவிர, சக மாணவர்கள் அந்தச் சிறுமியின் ஊனத்தைச் சொல்லி கிண்டல் செய்ய.. அன்றைய வகுப்பு பாவம் அவளுக்கு நரகமாகக் கழிந்தது.

மாலை வீடு திரும்பியதும் அந்தச் சிறுமி தன் தாயின் தோள்களில் சாய்ந்து அழுதபடியே கேட்டாள்..

"நம் உடம்பில் முக்கியமான உறுப்பு எதும்மா?"

"உடம்பிலே கண் தான் மா முக்கிய உறுப்பு! ஏன் என்றால், கண் இல்லையெனில் உலகமே இருட்டாகி விடுமே" என்று சொன்னாள் அம்மா.

ஆனால், அதைச் சரியான பதிலாக அந்தச் சிறுமியால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

"அப்படியானால் கைகள் தான் முக்கியமான உறுப்பு. அது இல்லையென்றால் நம்மால் எழுதவோ, வேறு எந்த வேலையும் செய்ய முடியாது இல்லையா" ..

அம்மாவின் இந்த பதிலையும் சிறுமியால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
கடைசியில் அந்தச் சிறுமியே ஒரு பதிலைச் சொன்னாள்.."

நம் உடம்பில் தோள்கள் தான்மா முக்கியமான உறுப்பு. மற்ற உறுப்புக்கள் எல்லாம் நமக்கு உதவியாக இருக்கும்.
ஆனால், தோள்கள் தான் ஆதரவு தேடும் அன்பு முகங்கள் புதைந்து கொள்ள இடம் கொடுக்கும்.

இதோ, நான் கூட இப்போது உன் தோள்களிலே முகம் புதைந்து அழுகிறேன்.
என்னைப் பொறுத்தவரை அடுத்தவர் அழுவதற்கு இடம் கொடுக்கும் தோள்கள் தான் உடம்பிலே முக்கியமான உறுப்பு மா!"

கற்பது எளிமையே..




கற்பது பசுவை போன்றது.
அது எல்லா காலங்களிலும் பால் சுரக்கும். அது தாயை போன்றது எங்கு சென்றாலும் நம்மை காக்கும்.ஆதலால் கற்காமல் ஒரு நாளும் வீணாக செல்ல வேண்டாம்.

-சாணக்கியன்

கே. எஸ். ஆர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2017-2018 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வரு‌கிறது.

Students Admission open for the academic year of 2017-2018.