ஞாயிறு, 28 மே, 2017

நல்லதை விதைப்போம்..நாம் என்ன விதைக்கிறோமோ அதை தான் நாளை அறுவடை செய்ய போகிறோம் என்பதை உணர்ந்தால் இன்று நீதியா..? ஆட்சியா..? மாட்டு இறைச்சியா..? கார்ப்பரேட்டா..? பணமா..?  நடிகனா..?  தலைவனா..? தலைமையா..? என்ற பேச்சுக்கு இடமில்லாமல் இருக்கும்.

இன்றைய அரசியல் கட்சிகள் நாட்டை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்வதாக தெரியவில்லை.
மக்களால் மக்களுக்காக மக்களே தேர்தெடுப்பது மக்களாட்சி என்ற நிலைமாறி பணத்தால் மக்களே பணத்துக்காக நாட்டை கட்சிகளுக்கு விற்றது என்ற நிலையில்  இன்றைய (பண)ஆட்சிமுறை.

காமராசர் போன்ற மாமனிதன் விதைத்து சென்ற நல்லாட்சிக்கு இன்றைய சமூகம் செயற்கை உரங்களை தூவிக் கொண்டு வருகிறது. இதன் விளைவு நமக்கும் நமது தலைமுறைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை அறியாத பேதமை மக்கள் தங்களின் அறியாமையை உணர முற்படுவதில்லை.

ஐந்நூறு ரூபாய்க்கும் ஒரு குவாட்டரும் ஒரு பிரியாணியும் இதற்கு ஆசைப்பட்டு குறிப்பாக இலவசம் என்பதற்கு அடிமையாகி தனது ஓட்டையும் உரிமையும் விற்பனை செய்து விட்டு இப்போது ஆட்சி சரியில்லை தலைமை சரியில்லை அரசு செயல்படவில்லை என்று குற்றம் சாட்டி வருகிறார்கள்.. ஆனால் இதில் என்ன வேடிக்கை என்றால் தன்னை தானே விலைக்கு விற்பனை செய்துவிட்டு என் ஓட்டு என் உரிமை என்று பேசிக்கொண்டு இருப்பது தான்.

ஒற்றுமையே பலம் என்றனர் ஆனால் நமக்குள்ளேயே ஒற்றுமை இல்லை.யாதும் ஊரே யாவரும் கேளீர் என்றனர் ஆனால் அண்டை மாநிலத்தில் இருந்து தண்ணீர் கூட தருவதற்கு தயாராக இல்லை. ஒன்றே குலம் ஒருவனே தெய்வம் என்றனர் ஆனால் பள்ளிக்கூடங்களில் சாதிச் சான்றிதழ் கேட்கிறார்கள்.விவசாயம் இந்தியாவின் முதுகெலும்பு என்றனர் ஆனால் நிலங்கள் எல்லாம் கார்ப்பரேட் நிறுவனத்திற்கு என்கிறார்கள்.விளை நிலங்கள் விலை நிலங்களாக உள்ளது.

அரசு மற்றும் அரசியல்வாதிகளிடம் நான் கேட்டுக் கொள்வது  கல்வி மருத்துவம் தண்ணீர் மின்சாரம் இவைகளை இலவசமாக வழங்குங்கள் நாடு செழிப்புடன் இருக்கும்.குறிப்பாக தாய்மொழிக் கல்வியை கட்டாயமாக்க வேண்டும்.

நமது பாட்டன் பாரதியின் எண்ணங்கள் படி எல்லா துறைகளின்  அறிவும் தமிழில் இருக்க வேண்டும் என்பதை நிஜமாக்க வேண்டும். கலாமின் தொலைநோக்கு படி அறிவியலும் தொழில்நுட்பங்களும் அழகுற தமிழில் எழுதப்பட வேண்டும்.

சிந்தியுங்கள் எனது உறவுகளே இதுவரை நமது மூளை பிறரின் கட்டுப்பாட்டில் செயல்பட்டது போதும்.இந்தியா 2020 என்றார் எனது கலாம் ஐயா இன்று அவர் இல்லையென்றாலும் அவரின் நம்பிக்கை விதைகள் நாம் தான் என்பதை உணர வேண்டும். இந்தியா வல்லரசு அவரின் இலட்சியம் இந்தியா நல்லரசு இதுவே நமது முதல் இலட்சியமாக இருக்க வேண்டும்.

நல்லாட்சி மலர்ந்திட நல்ல தலைமையை உருவாக்கிட நல்லரசு அமைத்திட உங்களில் ஒருவராக நான்.

வைசாலி செல்வம்.

12 கருத்துகள்:

 1. அருமை சகோ இன்றைய அவலநிலையை சவுக்கடி கொண்டு தாக்கி இருக்கின்றீர்கள் ஸூப்பர்

  பதிலளிநீக்கு
 2. உணரச் சொன்னது
  உணர வேண்டியவர்களின்
  காதுகளில் விழ வாய்ப்பே இல்லை
  காரணம் அவர்கள் எல்லாம்
  பதவி மற்றும் பணமோகத்தில்
  டமாரச் செவிடாகிப் போனார்களே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மை தான் ஐயா.வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி ஐயா.

   நீக்கு
 3. நாளையை குறித்து - நாளைய தலைமுறையை குறித்து கவலைப்படுவதாக இருந்தால் நம்மில் பலரும் குடிநீரை வீணாக்கமாட்டோமே.

  அரசியல்வாதிகளும் ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் இப்போது மனசாட்சியின் குரலை கேட்டு நடப்பவர்களாக இல்லையே.

  என்னை பொறுத்தவரை, ஒரே ஒரு துறை மட்டும் யாருக்கும் அடிபணியாமல், நேர்மையாக தமது கடமையை மக்கள் நலன், , சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டாலே நாடு தூய்மையாகும். அந்த துறை நமது காவல்துறை.

  உங்களின் ஆதங்கம் நேர்மையானதும் நியாயமானதுமாக ஒலிக்கின்றது.

  அருமையான கருத்து தூவல்.

  வாழ்த்துக்கள்.

  கோ
  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் கருத்துகளுக்கு மிக்க நன்றி நண்பரே.நம்மில் பலர் நாமாக இருக்கவே முற்படுவதில்லை என்பது என்னுடைய பெரிய ஆதங்கம். வருகைக்கு நன்றி.

   நீக்கு
 4. மழையுமில்லாமல் தண்ணியுமில்லாமல் பூமி வறண்டு கிடப்பது போல் மனிதர்களின் மனமும் வறண்டு பாலைவனமாக இருக்கிறது..இதில் என்னத்த விதைச்சு ..அது முளச்சு......வளர்ந்து.....?????

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நாம் என்ன விதைக்கிறோமோ அதை தானே அறுவடை செய்ய இயலும் ஐயா.

   நீக்கு