செவ்வாய், 28 ஜூன், 2016

பூத வாத சருக்கம்

நீலகேசி பூதவாத சருக்க விளக்கம்

வேதவாதியை வென்று நிலகேசி வெற்றிகரமாகத் திரும்பிவரும் வழியில், உலோகாயத (அனாத்ம நாஸ்திக) நெறியாகிய பூதவாதத்தின் பேர்போன தலைவனான பிசாசகனைச் சந்தித்தாள். அவன் மதனஜிதனென்ற அரசன் ஆதரவுபெற்று அவன் அரண்மனையிலிருந்தான். எனவே, அவ் அரசன் அவையிலேயே வாதம் தொடங்கிற்று. (இந்நெறியின் முதல்வன் சார்வாகனாதலால் இது சார்வாகம் எனவும் பெயர்பெறும்.
பூதவாதத்தின் அடிப்படைக் கொள்கைகள் யாவை என்று நீலகேசி வினவ, பிசாசகன் அதை விளக்கிக் கூறலானான்.
பிசாசகன் : பொருள் வேறு, பண்பு வேறு என்ற மயி¡¢ழைப் பாகுபாடுகளை நாங்கள் ஏற்பதில்லை. எங்களுக்கு அடிப்படை உண்மைகளாவன ஐந்து பூதங்களே. உலக நடைமுறைகள் எல்லாம் அவற்றினிடமிருந்தே தோன்றி இயங்கபவை. அனல், மண், நீர், காற்று, வெளி என்ற இவ்வைந்து பூதங்களும் நிலையாயன; மெய்ம்மைகள். இவற்றிலிருந்து முறையே கண்கள், மூக்கு, நாக்கு, உடல் காதுகள் அகிய பொறிகள் தோற்றுகின்றன. அவற்றினிடமிருந்து நிறம், மணம், சுவை, ஊறு; ஓசை ஆகிய புலணுணர்வுகள் எழுகின்றன. மா, வெல்லம் முதலாய ஐம்பொருட்களின் சேர்க்கையால் வெறிதரும் சாராயம் உண்டாவதுபோலவே, இவ் ஐந்தின் சேர்க்கையால் அறிவுதோற்றமெய்துகின்றது. அதனிடமாக இன்ப துன்பமுண்டாய், ஐம்பூதங்களின் செறிவுக்கியைய வளர்ச்சியுற்று வேறுபட்டுப் பி¡¢ந்தொழிதலால் இவை யனைத்தும் அறிவுறுகின்றன.
உயிர் என்ற ஒன்று இல்லை. சூழ்ச்சிமிக்கவர் கற்பனையில் தோன்றிய இப்பொய்ம்மையை அறிவற்ற ஆயிரமாயிர மக்கள் நம்பி ஏமாறுகின்றனர். முக்காலத்தும் உயிர் என்ற பொருள் இல்லை; இருப்பவை, இருந்தவை, இருக்கப்போகின்றவை எல்லாம் ஐம்பூதங்களே.
நீலகேசி : உங்கள் முடிந்த உண்மையை நீங்கள் கண்டறிந்தவகை யாது? புலனுணர்வாலறிந்தீர்களா? உய்த்துணர்வாலா? அல்லது நிறையறிவுடைய உங்கள் தலைவர் அறிவாலா? உங்கள் சமயத்தைத் தோற்றுவித்த முதல்வர் யாருமில்லாததால், அதற்கு வாய்மொழியும் இருக்க முடியாது. நிறையறிவுடைய முதல்வர் மட்டுமே வாய்மொழி போன்ற நிறை அறிவுரை தரமுடியும். வினைச்சார்பற்ற அத்தகைய முதல்வருக்கு உங்கள் கோட்பாட்டிலும் இடமிருக்க முடியாது. நீங்கள் ஏற்கும் அளவை கண்கூடு (புலனறிவு) ஒன்றே. அதன் வாயிலாய் புலனறிவுக்கு மூலமான உடல், அதற்கு மூலமான முடிந்த உண்மைகள் ஆகியவற்றை அறிவதெவ்வாறு? பூதங்கள் ஒன்று சேர்வதால் புதிதான உயிர்த் தன்மையுடைய அறிவு தோன்றுவதெவ்வாறு? பூதங்கள் முதற்காரணமா, (மூலப்பொருளா) நிமித்தகாரணமா (செய்வோனா)? முதற் காரணமானால், புலனன்றி அறிவும் உணர்வும் தோன்றுமா?
பிசாசகன் : விறகிலிருந்து தீ தோன்றுவது போலவே தான் புலன்களிலிருந்து உணர்வும்.
நீலகேசி : விறகில் தோன்றும் தீ, விறகைப்போலவே உணர்வற்றது. விறகுடன் எ¡¢ந்து அதனுடன் ஒழிவதேயன்றித் தன் செயலாக எதுவும் உடையதன்று. பூதங்கள் சேர்க்கையில் உயிர் தோன்றுவது அவ்வாறன்று. பூதங்கள் அறிவும் உணர்வும் அற்றவையாயினும் உயிர் அற்றவை உடையது. அப்படியிருக்க, பூதங்களிலிருந்து உயிர் எவ்வாறு தோன்றும்.
மேலும் விறகு மிகுதிப்பட்டால் தீ வளரும். ஆனால் உடல் வளர்ச்சியுடன் உணர்வு வணர்ச்சியடைவதில்லையே. பூதச் சேர்க்கையாலுண்டாகும் புலனறிவு, பூதச் சார்பான பொருள்களை உணர்ந்தும் உயிர், உணர்வு, அறிவு ஆகியவற்றை உணர்வதில்லை.
நல்வினை உணர்வு, தீவினையச்சம், அகச்சான்று ஆகியவைகள் புலனுடன் தொடர்பற்றவை.
ஐம்பூதங்கள் சேர்க்கையால் அறிவு உண்டாகும் என்கிறீர்கள். ஆனால் புலன்கள் அவ்வப்பொறிகள் வாயிலாக மட்டும் அறியப்படுவானேன்? ஐம்பொறிகளுள் சிலபொறிகளே உடைய கீழுயிர்கள் ஐம்பூதங்களில் சில பூதங்கள் குறைய உண்டானவையா? சில பூதங்கள் குறைந்தும் ஒரு பூதமே தனித்தும் புலனறிவுண்டாமெனில், ஐம்பூதமும் ஐம்பொறியும் சேர்ந்தே அறிவுண்டாமெனும் கோட்பாடு வீழ்ச்சியுறுகிறது. இவற்றுக்கும் மேலாகப் பொருளுண்டெனின், ஆன்மாவை ஒப்புக்கொண்டாக வேண்டும்.
பூதங்கள், புலனுணர்வு இல்லாதபோது முன்நினைவு ஏற்படுகிறதே. மனம் என்ற ஒன்றின்றி அது எவ்வாறு ஏற்படும்? பசி, சினம், அவா, சிற்றின்பம் ஆகியவை புலனுணர்விலடங்குபவை அல்லவே? சிறு குழந்தை அழுவது, பால் குடிக்க முனைவது எவ்வறிவின்பாற்படும்? இவை இயற்கையானால், அவை வளர்ச்சிப் பருவந்தோறும் மாறுபடுவானேன்? உயிர்வகைதோறும் வேறுபடுவானேன்?
உயிர்கள் உணர்விழந்த நிலையில் புலனுணர்வில்லாமலும் உயிர் நிலவுகிறதே. புலனுணர்வு கடந்த உயிர் இருக்கவேண்டுமன்றோ? உடலில் பூதச் சேர்க்கை அழியாமலே உயிர் போவதெவ்வாறு?
பிறப்புக்கு முன்னும் இறப்புக்குப் பின்னும் உயிர் இல்லை. அவ்வுணர்வு இல்லாததனால் என்கிறீர்கள். பிறப்புக்கு முன்னும் இறப்புக்குப் பின்னும் பூத உணர்வில்லாததால் பூதங்களுமில்லை என்று கொள்ளலாமா?
ஒரேவகை உடலுடைய உயிர்கள் பலபடி அறிவு, பல்வகை அறிவுநிலை, இன்பதுன்ப நுகர்வு உடையவையாயிருப்பானேன்?
பொருள் சேமித்துப் புதைத்துவைத்து இறந்தவன் பிள்ளைகளுக்கு இடமறிவிக்கும் நிகழ்ச்சிகள் ஆங்காங்கு ஏற்படுகின்றனவே? இறப்புக்குப்பின் உயிர் இல்லை என்றால், இது எவ்வாறு கூடும்.
பிசாசகன் : (விலாப்புடைக்க நகைத்து) புலனாலறியப் படாதவை பொய்யாகும். பொய்யைப்பற்றி ஏன் இவ்வளவு மயி¡¢ழை ஆராய்ச்சி!
நீலகேசி : ஆசியை நம்பாத உனக்கு நேரிடையாக ஆவியைக் காட்டுகிறேன் என்று கூறித் தன் தெய்வ ஆற்றலால் பிசாசகன் முன் ஒரு பேய் வடிவுடன் தோன்றினாள். பிசாசகன் அஞ்சி உணர்வற்று நின்றான். நீலகேசி அவனைத் தேற்றி, அஞ்சவேண்டாம். இது உன் தாயுருவம்; வேறன்று. நீ பிசாசகன் என்று பெயர்பெற்றதே அதனால்தான்! என்றாள்.
பிசாசகன் நீலகேசியின் அறநெறி ஏறினான். நீலகேசியும் தன் அறப்பணியால் மனநிறைவடைந்து தன் அறிவு நிலையில் நின்று வீடுபேறுற்றாள்.

திங்கள், 27 ஜூன், 2016

ஆப் ட்ரூத்


ஆப் ட்ரூத்
                                          --ப்ரான்சிஸ் பேகன்
பேகனது ஆப் ட்ரூத் என்பது மிக பிரபலமான படைப்பாகும்.பேகன் உண்மையை பேச மறுக்கும் மக்களை கெளி செய்கிறார்.மக்கள் பொய்யையே விரும்புகின்றனர்,எனினும் அந்த போய்யால் இவர்களுக்கு எந்த லாபமும் இல்லை.உண்மை என்பது விளக்கை போல ஒளி வீசக்கூடியதாகும் ஆனால், பெரும்பாலானோர் இருட்டில் அடைபட்டுக் கொள்ளவே விரும்புகின்றனர். உண்மையே மனிதனது பெரிய சொத்து என்கிறார் பேகன்.

            இதிகாசங்களில் வரும் பைலேட் என்பவர் உண்மைக்கு முரண்பட்டவன்.மறுபக்கம் கடவுள் உண்மையை படைத்து கொண்டாடுபவர். இந்த கட்டுரை கிறுஸ்த்துவர்களின் பார்வைக்கு சற்று ஒற்று போகக் கூடியது. பேகன் கவஞ்ர்கள் கூறும் பொய்யை தடுக்கவில்லை.உண்மை என்பது மனிதனதுக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட மிகப் பெரிய சொத்து என்கிறார். உண்மை என்பது முத்துகளை போல, ஆனால் வைரம் போல பல ஒலிகளால் மின்னக்கூடியவை அல்ல என்கிறார்.

சனி, 25 ஜூன், 2016

பெண் குழந்தைகளுக்கு சிறுவயதிலேயே கற்றுக்கொடுக்க வேண்டியவைகள்...!!!\

1. பெண் குழந்தைகள் யாருடைய மடியிலும் அமரக்கூடாது என்று சொல்லிக் கொடுக்க வேண்டும்.

2. இரண்டு முதல் மூன்று வயதுக்கு மேல் ஆன குழந்தைகள் முன்னிலையில் உடை மாற்றிக் கொள்ளுவதைத் தவிர்க்க வேண்டும்.

3. குழந்தைகளுக்கு யாரும் இது உன்னுடைய கணவன் என்றும், வருங்காலத்தில் இவரைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றோ குறிப்பிடுவது, மனதில் பதிய வைப்பது தவறு.

4. குழந்தை விளையாடப் போகும்போது உங்கள் பார்வை அவர்கள் மீது இருந்து கொண்டே இருக்கட்டும். மேலும் அவர்கள் என்ன விளையாடுகிறார்கள் என்பதையும் கவனித்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் குழந்தைகள் தங்களுக்குள்ளாகவே பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக நேரிடும்.

5. உங்கள் குழந்தையால் சரியாக பொருந்தியிருக்க முடியாத நபரை ஒருபோதும் சந்திக்க அனுமதிக்காதீர்கள்.

6. சுறுசுறுப்பாக இருக்கக் கூடிய ஒரு குழந்தை திடீரென்று களையிழந்துவிடும்போது பொறுமையாக அவர்களிடம் பல கேள்விகளைக் கேட்டு அவர்களின் பிரச்சனை என்னவென்று கேட்டறிய வேண்டும்.

7. வளரும் பருவத்திலேயே உடலுறவு மற்றும் அதன் நன்மதிப்பீடுகளை பக்குவமாக கற்பியுங்கள்.

8. தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் இணையதளங்களில் குழந்தைகள் பார்க்க அவசியமற்ற சேனல்களை பேரண்டல் கன்ட்ரோல் மூலம் செயலிழக்கச் செய்துவிட்டோமா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது நல்லது. மேலும், குழந்தைகள் அடிக்கடி செல்லும் நம் நண்பர்களின் வீடுகளிலும் இதை செய்து வைக்க அறிவுருத்துவது நல்லது.

9. மூன்று வயது ஆனவுடனேயே குழந்தைகளுக்கு தங்கள் உடலின் அந்தரங்கப் பகுதிகளை சுத்தம் செய்ய கற்றுக் கொடுக்க வேண்டும். உடலின் அந்தப் பகுதிகளை பிறர் யாரும் தொடுவதற்கு அனுமதிக்கக் கூடாது என எச்சரிக்கை செய்து வைக்க வேண்டும். நீங்களும் அந்த வேலையை செய்யக் கூடாது. ஏனென்றால், அவசியமற்ற உதவிகளை செய்யும் போக்கு வீட்டிலிருந்துதான் தொடங்குகிறது

10. குழந்தையை அச்சுறுத்தக் கூடிய அல்லது அவர்களின் மனநிலையை பாதிக்கக் கூடியவற்றை முற்றாகத் தவிர்க்கவும். இதில் இசை, படங்கள், நண்பர்கள் மற்றும் குடும்பங்களும் அடங்கும்.

11. குழந்தை ஒருவரைப் பற்றி ஒருமுறை குற்றச்சாற்றைக் கூறினாலே, அதை கவனிக்கத் தொடங்குங்கள். கேட்டுவிட்டு அமைதியாக இருக்க வேண்டாம். நீங்கள் அதற்காக நடவடிக்கை எடுத்தீர்கள் என்பதை குழந்தைக்கு உணரச் செய்யுங்கள்.

நன்றி: மாலை மலர்

மாய மந்திரம்! இந்திர ஜாலம்!

Image result for maaya jalam photoமாயா ஜாலாம் தொடர்கிறது..
அரசே நல்ல காட்சியை மங்களமாக முடிக்கவேண்டும் ஆகவே ஒரு திருமணக் காட்சியுடன் முடிக்க அனுமதி தேவை என்கிறான். உங்கள் மகளைப் போலவே அலங்கரிக்கப்பட்ட ஒரு மணமகளை வரவைக்கிறேன் என்றான். மன்னனும் திகைப்பிலிருந்து வெளியே வரவில்லை. ஆகவே என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள் என்கிறான். ஒரு அழகான இளைஞன் மணப் பெண்ணுடன் வருகிறான். ஐயர் ஹோமம் வளர்த்து கல்யாணம் செய்துவைக்கிறார். எல்லாம் மாயாஜாலக் காட்சி போலவே நடக்கிறது. ஆனால் உண்மையில் மணப் பெண் போல வந்தது அவந்தி சுந்தரி. அவளை மணந்தவன் ராஜவாஹனன்.
கல்யாணம் முடிந்தவுடன், சூ! மந்திரக் காளீ! இரண்டு பேரும் மறைந்து போங்கள் என்கிறான். பெண்ணும் மாப்பிள்ளையும் அரண்மனையில் இருந்த ரகசிய சுரங்கக் கதவு மூலம் தப்பித்து ஓடிவிடுகிறார்கள். கதை எப்படிப் போனாலும் அந்தக் காலத்தில் மாயாஜாலக் காட்சிகள் அரண்மனையில் நடத்தப்பட்டதை நாம் அறிய இந்தக் கதை உதவுகிறது.

கயிறு வித்தை தவிர, மந்திரத்தால் மாங்காய் மரம் உண்டாக்குவது, கலர் நூல்களைப் பயன்படுத்தி (சூத்திர க்ரீடா) தந்திரங்கள் செய்வது, கணக்கு வித்தைகளைச் செய்வது, கைகளை லாகவமாகப் பயன்படுத்தி காசுகளை மறைப்பது (ஹஸ்த லாகவம்) முதலியன அக்காலத்தில் தந்திரக் காட்சிகளில் இடம்பெற்றன.
                                                                           (சுபம்)
குறிப்பு; எனவே மாயா ஜாலாம் என்பது நேரத்தை போக்குவது மட்டும் அல்லமல் ஒரு ஏமாற்று வேலையும் கூட…
                                நன்றி!!!!

வியாழன், 23 ஜூன், 2016

ஹிஸ் டிசரேசன் அபான் ரோஸ்ட் பிக்


ஹிஸ் டிசரேசன் அபான் ரோஸ்ட் பிக்
                              --ச்சார்லஸ் லேம்ப்
லேம்ப் உலகரிந்த விமர்சகரும் கட்டுரையாளருமாவார்.அவரது கட்டுரைகள் நகைச்சுவைக்கு பெயர் போனவை.எப்படி பன்றி இறைச்சி சமைக்கப்பட்டது என்ற முறையை இக்கட்டுரையில் கூறியிருப்பார்.சீன பழங்குறிப்பில் இவை தற்செயலாக கன்டுபிடிக்கப்பட்ட பரிசு என்று கூறுகிறது.
            ஒரு காலத்தில் போ—போ(bo-bo)என்ற சிறுவன் தன் தந்தையான ஹோ—டி(ho—ti)யின் பன்றி மந்தையில் இருந்தான்.பன்றிகளுக்கு ஹோ—டி அப்போது உணவு வாங்க சென்றான்.மந்தையை தன் மூத்த மகனான போ—போவிடம் விட்டு சென்றான்.அவனோ சுட்டி அங்கும் இங்குமாய் திரிந்து நெருப்புடன் விளையாடிக் கொண்டிருந்த அவனுக்கு ஓர் அதிர்ச்சி.
அந்த நெருப்பின் ஒரு சிறு துளி தனது மூன்று பன்றி மந்தையில் பட்டு இடத்தையே சாம்பல் ஆக்கிவிட்டது.சில பன்றிகள் ஒடி தப்பித்துவிட்டன.சில பன்றிகள் காயத்துடனும் ஓடின.ஆனால் ஒன்பது பன்றிகள் முழுவதும் எறிந்து போயின.செய்வதறியாது திகைத்து தந்தையிடம் என்ன கூறுவது என்று எண்ணிக்கொண்டிருந்த அவனுக்கு தன் வாழ்நாளில் நுகராத அப்படி ஒரு அற்புதமான மணம் வீசியது.அது என்னவென்று காப்பகறிகள்,கோதுமை, மரக்கட்டை என பலவற்றை நுகர்ந்து பார்த்து இருதியில் பன்றி என்று கண்டரிந்தார்.அதனை அருகில் சென்று தன் விரலால் தொட்டான்.கையில் பட்ட நெருப்பை அனைக்க தன் விரல்களை சூப்பினான்.அவனுக்கு அதில் அற்புதமான சுவை கிடைத்தது.
            பிறகு அதில் மெதுவாக ஒரு கறித்துண்டை எடுத்து தன் வாயில் ருசித்தான்.ஹோ—டி வந்த பின் தன் மகனை திட்டினான்.எதையும் பொருட்படுத்தாமல் தின்றுகொண்டே இருந்தான்.போ—போ பின்பு தன் தந்தையும் சுவைத்து பார்க்க சொல்லி இருவரும் சேர்ந்து அனைத்து பன்றியையும் சுவைத்தனர்.இந்த விஷயம் வெளியே தெரிந்து நீதிமன்றம் வரை சென்றது.நீதிபதி அந்த கரியை சுவைத்து பார்த்து அவர்களுக்கு விடுதலை அளித்தார்.பின்பு அதனை எப்படி செய்வது என்று தெரிந்து கொண்டு போ—போவை போல தன் பன்றி மந்தை முழுவதையும் எரித்தார். பின்னர்,அனைத்து இடங்களிலும் சீன பன்னி மந்தைகள் எரிக்கப்பட்டன.சில நாட்களுக்கு பிறகு இதனை முறையாக சமைக்க அடுப்பு கண்டுபிடிக்கப்பட்டன.


                              

சர் ரோஜர் அட் சர்ச்


                                                            சர் ரோஜர் அட் சர்ச்
                                    --ஜோசப் அடிசன்
பதிணெட்டாம் நூற்றாண்டின் கட்டுரையாளர்களுள் அடிசன் முக்கியமான பங்களிப்பவர்.அவரது கட்டுரைகள் அனைத்தும் தன் நன்பரால் நடத்தப்படும் ``ஸ்பேக்டேடர்`` வார இதழுக்கு கொடுப்பார்.இவர்களது கற்பனை கதாப்பாத்திரமான ``சர் ரோஜர் டி கவர்லி`` படிப்பவர்களிடையே புகழ் பெற்ற ஒன்றவராவார்.
            ஜோசப் அடிசனின் இக்கட்டுரையில் புனித நாளை நாட்டுப்புற மக்களும் ரோஜராலும் எவ்வாறு உணரப்படுகிறது என்று கூறியிருப்பார்.சர் ரோஜர் ஒரு சிறந்த பக்தர்.பல புனித புத்தகங்கள்,அழகான பல்பிட் துனி மற்றும் கலந்துரையாடல்களுக்கான மேஜை போன்ற பலவற்றை தேவாலத்திற்கு அளித்து அதற்க்கு மெழுகூட்டினார்.தனது வேலையாட்களிடம் புத்தகம்,முட்டியிடுவதற்கு அழகிய துணி மற்றும் கலந்துறையாடல்களுக்கான மேஜை போன்ற பலவற்றை தேவாலத்திற்கு அளித்து அதற்க்கு மெழுகூட்டியுள்ளார்.தனது வேலையாட்களிடம் ப்ராத்தனை புத்தகம், முட்டியிடுவதற்கு அழகிய துணி,மற்றும் ஒரு பாடகரயும் தனது பணியாளர்களுக்கு சரியான முறையில்``சாம்ஸ்``பாட நியமித்தார்,
ரோஜர் அந்த நிலத்தின் தலைவராயின் அந்த மக்கள் கீழ்பணிந்து நடப்பர். ப்ராத்தனையின் போது ரோஜரின் சில சிறப்பு அம்சங்களை எழுத்தர் இங்கு குறிப்பிடுகிறார்.ஒரு பாடலை நீலமாக பாடுவதும்,மற்றவர்கள் அமர்ந்திருக்கும்போது எழுந்து நின்று அந்த ப்ராத்தனைக்கு வராதவர்களை தன் பணியாட்கள் உதவியாலும் கவனிக்கிறார்.பின்னர் மறுநாள் பிராத்தணை முடிந்த பின் வெளி வரும்போது வராதவர்களின் தந்தை அவர்களது மனைவி, மக்கள் உடல் நலத்தை விசாரித்து காரணம் கொள்வார்.

            மேலும் சில சிறுவர்களுக்கு பைபிளை உள்நுழைப்பதற்கு சில போட்டிகள் வைத்து பரிசலிப்பர்.இப்பொழுது பணியில் இருக்கும் குமாஸ்தாவிற்கு வருடன் ஐந்து பவன்ஸ் சம்பளம் உயர்த்தி பணியில் அதிகமாக ஈடுபடுத்துவார்.மேலும் அவர் இறந்த பின் அவரை விட சிறந்த ஒருவரை நியமிப்பார்.ரோஜர் வாழும் பகுதிக்கு அருகாமையிலேயே பார்சன், ஸ்குவைரி என்ற இறு பிரிவினரும் அடிக்கடி வாக்குவாதப் செய்து கொணெடே இருப்பர்.ஸ்குவைரி இண மக்கள் பார்சன் இணத்தை பழிவாங்க தம் மக்களை நார்தீகவாதியாக மாற்றுவர்.பார்சன் இணத்தவர் இவர்களைப் புறங்கூறுவர்.இவர்களை எழுத்தர் ச்சேப்லியன் மற்றும் சர் ரோஜர் இடையிலான நட்புறவைக் கொண்டு தொடர்பு படுத்துகிறார்.அமைதியாக இருப்பவரே என்றும் சிறந்தவர் என்கிறார். 

புதன், 22 ஜூன், 2016

மாய மந்திரம்! இந்திர ஜாலம்!

                                                                     
Image result for maaya jalam inthara jalam photo

மாயா ஜாலாம் தொடர்கிறது..   

இதுபற்றி எண்ணி எண்ணிக் கவலைப் பட்டுக் கொண்டிருந்தபோது, வித்யேஸ்வரா என்ற மந்திரவாதியின் தொடர்பு கிடைக்கிறது. அவன் உதவி செய்ய முன்வருகிறான். இருவரும் ஒரு திட்டம் தீட்டுகின்றனர். அதன்படி அவந்திசுந்தரி தனது தந்தை மானசாரனிடம் சொல்லி ஒரு மாயாஜாலக் காட்சியை ஏற்பாடு செய்கிறாள். அதில் அற்புதமான காட்சிகள் வருகின்றன.

தாரை ,தம்பட்டைகள் முழங்குகின்றன. ஒளி வெள்ளம் பாயும்போது விண்ணிலிருந்து பாம்புகளும் கழுகுகளும் இறங்குகின்றன. இரண்டு கழுகுகள் இரண்டு பாம்புகளைப் பிடித்துச் செல்லுகையில் மற்ற பாம்புகள் விஷம் கக்கி அரண்மனையை வலம் வருகின்றன. விஷ்ணுவானவர், நரசிம்ம வேடத்தில் வந்து இறங்கி ஹிரண்யகசிபுவைக் கிழித்து வதம் செய்கிறார். மக்கள் எல்லோரும் திகைப்புடன் பார்க்கையில் மந்திரவாதி மெதுவாக மன்னனிடம் சொல்கிறான்:
                                             (தொடரும்…)

நீண்ட நேரம் கணினியை பயன்படுத்துவோருக்கு..!!!

அன்றாடம் நீண்ட நேரம் கணினியை பயன்படுத்துவோருக்கு உடலில் சோர்வு,பின் கழுத்து,முதுகு மற்றும் தலைவலி,கைகள்,மணிக்கட்டு மற்றும் தோள்பட்டை வலி போன்ற  பாதிப்புகள் ஏற்படுகின்றன.தொடர்ந்து கணினித் திரையைப் பார்த்துக் கொண்டிருப்பதால் இமைகளில் சிமிட்டல் குறைந்து கண்கள் உலர் தன்மை அடைகின்றன.இதனால் கண்களில் உறுத்தல்,எழுத்துகள் இரண்டாகவும் பலவாகவும் தெரிதல்,பார்வைத் தெளிவற்றுத் தோன்றுதல் போன்ற சிரமங்கள் ஏற்படுகின்றன.இந்நிலைகளை தவிர்க்க என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.

செவ்வாய், 21 ஜூன், 2016

மாய மந்திரம்! இந்திர ஜாலம்!


மாயா ஜாலாம் தொடர்கிறது..                
           இந்த இந்திர ஜாலம் பற்றி 1300 ஆண்டுகளுக்கு முன் தண்டி என்ற கவிஞர் எழுதிய தசகுமார சரித்திரம் என்ற வடமொழிக் கதைப் புத்தகத்தில் ஒரு சுவையான கதை வருகிறது.
சுவையான மாய மந்திரக் கதை
மகத நாட்டில் ராஜவாஹனன் என்ற இளவரசன் வசித்து வருகிறான். அவனுடைய தந்தையை மாளவ மன்னன் மானசாரன் தோற்கடித்து காட்டுக்கு விரட்டி விடுகிறான். ராஜவாஹனன் தாய் தந்தையரின் அனுமதி கேட்டு நாட்டைச் சுற்றிப் பார்க்கப் புறப்படுகிறான். அவனுடன் வந்த பத்துப் பேரையும் இடையில் தவற விடுகிறான். பின்னர் அவன் மட்டும் தனியாகப் பயணம் செய்து உஜ்ஜையினி நகரை அடைகிறான். அதுதான் மானசார மன்னனின் தலை நகரம். அந்த மன்னனுக்கு அவந்திசுந்தரி என்ற அழகிய மகள் உண்டு.எதிர்பாராத விதமாக உஜ்ஜையினி நகரில் அவனுடைய பழைய நண்பனைச் சந்திக்கிறான். அவன், அவந்தி சுந்தரியின் தோழியைத் திருமணம் செய்துகொண்டு செல்வாக்குடன் விளங்குபவன். அவர்கள் மூலமாக அவந்தி சுந்தரியைச் சந்திக்கிறான். காதல் மலர்கிறது. ஆனால் தந்தையைக் காட்டிற்கு விரட்டிய மன்னனின் மகளைக் காதலிப்பதால் வெளிப்படையாக எதுவும் செய்ய முடியாது.இதுபற்றி எண்ணி எண்ணிக் கவலைப் பட்டுக் கொண்டிருந்தபோது, வித்யேஸ்வரா என்ற மந்திரவாதியின் தொடர்பு கிடைக்கிறது. அவன் உதவி செய்ய முன்வருகிறான். இருவரும் ஒரு திட்டம் தீட்டுகின்றனர். அதன்படி அவந்திசுந்தரி தனது தந்தை மானசாரனிடம் சொல்லி ஒரு மாயாஜாலக் காட்சியை ஏற்பாடு செய்கிறாள். அதில் அற்புதமான காட்சிகள் வருகின்றன.


                                                                (தொடரும்..)