செவ்வாய், 7 ஜூன், 2016

ஜூனியர் மார்ட்டின் லூதர் கிங்

                                                       
     Image result for ஜூனியர் மார்ட்டின் லூதர் கிங்


அமெரிக்காவில் இனவெறியை எதிர்த்து போராடியவர். அமெரிக்காவில் அந்த காலக்கட்டத்தில் ஆப்பிரிக்க – அமெரிக்கர்கள் கருப்பர்கள் என்று அழைக்கப்பட்டனர். இவர்களுக்கு பள்ளிகளில் தனி இடம், ஓட்டல்களில் தனி இடம், பேருந்துகளில் கூட தனி இடம் தான்.
இப்படிப்பட்ட காலக்கட்டத்தில் பிறந்த மார்ட்டின் லூதர் கிங், இத்தகைய வேறுபாடுகள் நியாமானது அல்ல இவற்றிற்கு முடிவு காண வேண்டும் என்று தீவிரமாக சிந்தித்து செயல்பட்டு வந்தார்.
மகாத்மா காந்தி காட்டிய வழியில் சாத்வீகமான போராட்டங்கள் நடத்தினார். மக்களின் ஆதரவைத் திரட்டி கூட்டங்கள் நடத்துவது, பத்திரிக்கைகள் மற்றும் இதர ஊடகங்களின் ஆதரவைத் திரட்டுவது, அநீதிக்கு எதிராக போராடுவது இது போன்ற வழிகளில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுத்தினார்.
அவரது வரவேற்பு அறையில் மகாத்மா காந்தியின் படம் இருந்தது. 1955 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் நாள் இவர்கள் இனத்தை சார்ந்த ரோஸாபார்க்ஸ் என்னும் பெண்மணி, ஒரு வெள்ளையனுக்கு பேருந்தில் தான் உட்காந்திருந்த இருக்கையில் இருந்து எழுந்து இடம் தர மறுத்தது பெரிய போராட்டத்தை உருவாக்கியது. மார்ட்டின் லூதர் கிங் தலைமையில் போராட்டம் நடந்தது.
1956 ஆம் வருடம் இது மாதிரி வித்தியாசம் பாராட்டுவதை சட்டப்பூர்வமாக அனுமதிக்கக் கூடாது என்று நீதி மன்றம் தீர்ப்புக் கூறியது.
1963 ஆம் ஆண்டில் வேறு பல துறைகளிலும் வெள்ளையர்களுடன் சம உரிமை வேண்டும் என்று போராடுவதற்கு, வாஷிங்டனில் உள்ள லிங்கன் மெமோரியல் ஹால் எதிரே 2,50,000 பேர்களைத் திரட்டி போராட்டம் நடத்தினார். “ நான் ஒரு கனவு காண்கிறேன் ” என்று தொடங்கும் இவரது உரை உலக புகழ் பெற்றது.
     வாஷிங்டன் சரித்திரத்திலேயே ஒரு போராட்டத்திற்காக அவ்வளவு பேர் கூடியது அந்த சம்பவத்தில் தான். இன்று அமெரிக்காவில் ஆப்பிரிக்க – அமெரிக்கர்கள் சம உரிமைகளைப் பெறுவதற்கு மார்ட்டின் லூதர் கிங் அவர்களின் சாத்வீகமான போராட்டங்கள் பெரிதும் உதவின.
     இவரது சேவையை பாராட்டி இவருக்கு சமாதானத்திற்கான நோபல் பரிசு 1964 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. அப்போது அவருக்கு வயது 35 தான். நோபல் பரிசு வாங்கியவர்களிலேயே அத்தகைய காலக்கட்டத்தில் மிகவும் வயது குறைந்தவர் இவர் தான்.
     1968 ஜனவரி மூன்றாம் நாள் இவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இவரது நினைவு நாள் அன்று அமெரிக்காவில் தேசிய விடுமுறை நாளாக நடைமுறையில் உள்ளது.

                                ( படித்ததில் பிடித்தது )

2 கருத்துகள்:

  1. மகாத்மா காந்தி காட்டிய வழியில் போராடி வெற்றி பெற்றவர் என்பது நமக்கும் பெருமை...
    https://www.scientificjudgment.com/

    பதிலளிநீக்கு