சிறு வயதில் சர்கஸ், பொருட்காட்சி, விழாக்கள் போன்றவற்றில் மாயா ஜாலக் காட்சிகளைப் பார்த்திருக்கிறோம். டெலிவிஷன் வந்த பிறகு அதிலும் பல ‘மாஜிக்’ தந்திரக் காட்சிகள் வந்தன. இந்திர ஜாலம் என்பது இதற்கான வடமொழிச் சொல். தமிழில் இதற்குக் கண்கட்டு வித்தை என்று பெயர். ஆனால் அதிலும் வித்தை என்பது சம்ஸ்கிருதம்! மாயாஜால தந்திரக் காட்சிகள் என்றால் எல்லோருக்கும் எளிதில் விளங்கும். காமசூத்திர நூல் எழுதிய வாத்ஸ்யாயனர், இதையும் பெண்களுக்கான 64 கலைகளில் ஒன்றாகச் சேர்த்திருக்கிறார்.
ஆதிகாலம் முதற்கொண்டு இந்தியர்கள் செய்துவந்த மிகப்பெரிய மாயாஜாலக் காட்சி ‘கயிறு வித்தை’ என்பதாகும். இதைப் பற்றி பல வெளி நாட்டு யாத்ரீகர்கள் எழுதி வைத்துள்ளனர். மந்திரவாதி ‘’\சூ! மந்திரக் காளி!’’ சொன்னவுடன் ஒரு கயிறு தானாகவே மேலே எழும்பும். அதைப்பிடித்துக் கொண்டு ஒரு மந்திர வாதி வானத்தை நோக்கி மேலே மேலே செல்வான். பிறகு மறைந்து போய் விடுவான். சில காட்சிகளில் அவன் பெயரைக் கூப்பிட்டவுடன் கீழே வந்து நிற்பான். இபின் படூடா என்ற யாத்ரீகர் 700 ஆண்டுகளுக்கு முன் இதே போல ஒரு காட்சியை சீனாவில் பார்த்ததாக எழுதிவைத்துள்ளார்.
ஆதிசங்கரர் எழுதிய வேதாந்த பாஷ்யத்தில் இந்த கயிற்று வித்தையைக் குறிப்பிட்டு இதை மாயம் என்கிறார். ஆக அவரது காலத்துக்கு முன்னரே 2000 ஆண்டுகளாக இந்த வித்தை இந்தியாவில் காட்டப்பட்டு வருகிறது!! இதற்கும் இந்திரனுக்கும் ஒரு தொடர்பும் இல்லை. ஆனால் வானவில்லை இந்திரனின் வில் (இந்திர தனுஸ்) என்று சம்ஸ்கிருதத்தில் அழைப்பர். அது போல இந்த ‘’மாஜிக் ஷோ’’வும் வண்ணம் நிறைந்ததாக இருந்ததால் இப்பெயர் வந்திருக்கலாம்.

(தொடரும்..)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக