வியாழன், 2 ஜூன், 2016

எங்கள் வலைப்பூவின் வண்ணங்கள்..!!
பேரன்புடையீருக்கு வணக்கம்,

எங்கள் வலைப்பூவின்  இப்பதிவு மிகவும் முக்கியமான ஒன்றாக அமையவுள்ளது.வலைப்பதிவர்களுக்கும்,வாசகர்களுக்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றிகள்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் நாங்கள்,எங்களது நூறாவது பதிவை வெளியிட்டோம்.தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் நல்ல முயற்சியால் எங்களது கல்லூரியிலும் கணித்தமிழ்ப்பேரவை என்ற ஒரு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.ஆரம்பத்தில் இதுக் குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது.எனது தமிழ் ஆசிரியர் முனைவர்.இரா.குணசீலன் ஐயா அவர்கள் பொறுப்பேற்று மாணவிகளை தேர்ந்தெடுத்து எங்களுக்கு  பயிற்சி அளித்து வருகிறார்கள்.அவர்களுக்கு மிக்க நன்றிகள்.

இதுவரைக்கும் எங்களுக்கு தெரிந்தவற்றை அருகில் இருப்பவர்களோடு மட்டுமே பகிர்ந்துக் கொண்டு வந்தோம்.இப்போது வலைப்பூவில் எங்களுக்கு தெரிந்ததை தெளிவாகவும், தெரியாதவற்றை தெரிந்துக் கொண்டும் பயனுள்ள பதிவுகளை பகிர்ந்து வருகின்றோம்.எனது சகோதரிகளுக்கு ஆரம்பத்தில் என்ன எழுதுவது..??நாம் எழுதினால் யாரு படிப்பார்கள்..?? என்று பல ஐயங்கள் எழுந்தன.எனக்கும் அதே ஐயங்கள் எழுந்தது.பிறகு நாங்கள் ஆரம்பத்தில் எங்கள் பாடம் தொடர்பாக எழுதினோம்.பிறகு நூறு பதிவுகள் வெளியிட்ட பிறகு தான் தெளிவாக இதன் பயனை உணர்ந்தோம்.நாங்கள் ஒவ்வொருவருமே ஒவ்வொரு பதிவு எழுதும் போது கவனமாகவும்,மகிழ்ச்சியாகவும் பகிர்ந்து வருகிறோம்.வலை உலகில் ஆண் எழுத்தாளர்கள் அதிகமாக உள்ள நிலையில் பெண் எழுத்தாளர்கள் என்பது குறைவு தான்.ஆனால் ஒரு பெண்கள் கல்லூரியில் அதுவும் பெண்கள் ஒருங்கிணைந்து ஒரு (ஆண்) ஆசிரியர் (தந்தையாக) வழிநடத்தியும்  இவ்வலை உலகில் எங்களின் எழுத்துகளை ஊக்குவித்துக் கொண்டும் இருக்கிறார்.

முனைவர்.இரா.குணசீலன் ஐயா


எங்கள் வலைப்பூவில் மொத்தமாக 25 ஆசிரியர்கள் இருக்கின்றோம்.ஆனால் அதில் மிகவும் ஆர்வத்தோடும் தேடல்களோடும் ஒரு சில வண்ணத்துப் பூச்சிகளே தொடர்பதிவு எழுதி வண்ணம் தீட்டி வருக்கின்றனர்.அவர்களை நான் இங்கு அடையாளப்படுத்த உள்ளேன்.

1.கு.நந்தினி(துறைச் சார்ந்தும்,சாராமலும் எழுதி வருகிறார்)

2.ஜெ.ஜனனி(ஆங்கிலத் துறைச் சார்ந்த கவிஞர்களை தமிழில் எழுதி வருகிறார்)

3.கே.கீர்த்தனா(அவர்களது கவிதை திறமைகளையும்,துறைச் சார்ந்தும் எழுதுகிறார்)

4.அ.கோகிலா(தெரியாத சிலவற்றை பகிர்ந்து வருகிறார்)

5.ஜோதி லட்சுமி(அவர் படித்ததில் பிடித்ததை பகிர்ந்து வருகிறார்)

6.தேவி சாந்தி(தகவல்கள் துளிகளை பகிர்ந்து வருகிறார்)

இவர்களே  நாங்கள் இன்று தொட்ட சிறிய இலக்கு 300-வது பதிவிற்கு முக்கியமாக விளங்கி வருபவர்கள்.எங்கள் வலையில் எழுதுபவர்கள் சிலர் தமிழ்மணம் பக்கத்தில் அறிமுகமாகி வருகின்றனர்.நாங்கள் இவ்வளவு சிறிய காலத்தில் 300 என்ற இலக்கை அடைந்துவிட்டோம்.இது ஆரம்பமே முடிவு என்பது இல்லை.

தமிழ்மணம், முன்னனி வலைகளின் தரவரிசையில் எங்களது வலைப்பூ ஆரம்பத்தில் 325-வது தரத்தில் இருந்தது,பிறகு  இரண்டு மாதத்தில் இப்பொழுது 175-வது தரத்தை பெற்றுள்ளோம்.இன்னும் கூடிய விரைவில் அறிந்த சிலவற்றையும் அறியாத பலவற்றையும் தங்கள் அனைவரோடும் பகிரவுள்ளோம்.இங்கு துறைச் சார்ந்தும்,இணைத்தளம் குறித்தும் எனது அன்பு சகோதரிகள் எழுதி வருகிறார்கள்.இங்கு நாங்கள்,எங்கள் துறைப் பற்றி அல்லாமல் மற்ற துறைகளை குறித்த அறிவுச் செல்வத்தையும் பெற்று வருகிறோம்.

ஆம் இப்பதிவு எங்களின் 300-வது இடுக்கை.இதற்கு நாங்கள் மட்டும் காரணம் இல்லை.வலைப்பதிவர்கள் மற்றும் வாசர்களாகிய தங்களின் தொடர் வருகையும் மறுமொழியின் ஊக்கமும் தான்.எனது தமிழ் ஆசிரியர் (தந்தை) முனைவர்.இரா.குணசீலன் ஐயா அவர்களே எங்களின் வெற்றிக்கு ஏணிப் படியாக இருக்கிறார்.அவர்களுக்கு எனது சகோதரிகளின் நன்றிகளும் எனது பணிவன்பான நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.எங்கள் கல்லூரி முதல்வர் ம.கார்த்திகேயன் ஐயா அவர்கள் எங்களுக்கு தேவையான வசதிகளை செய்துக் கொடுத்தும் ஊக்குவித்தும் வருகிறார்.அவருக்கும் எங்களின் நெஞ்சார்ந்த நன்றிகள்.


10 கருத்துகள்:

 1. மனம் நிறைந்த வாழ்த்த்துகள் உங்கள் அனைவருக்கும். மிக மிக நல்லதொரு முயற்சியை நீங்கள் எடுத்துவருகின்றீர்கள். உங்களை வழி நடத்தும் முனவர் குணசீலன் அவர்களுக்கு வாழ்த்துகள். பாராட்டுகள். அவரது வலைத்தளத்தையும் நாங்கல் தொடர்கின்றோம்.

  உங்கள் பதிவுகள் எல்லாமே நன்றாக இருக்கின்றன. இன்னும் ஆழ்ந்தும் எழுதலாம். மேலும் மேலும் பல பதிவுகள் படைத்து வலையுலகில் வெற்றி நடை போட எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக ஐயா.தங்களின் வருகைக்கும் மறுமொழியின் ஊக்கிவிப்பிற்கும் மனம் நிறைந்த நன்றிகள் ஐயா.தொடர் ஆதரவு அளிப்பவரில் தாங்களும் ஒருவரே ஐயா.மீண்டும் நன்றி ஐயா.

   நீக்கு
 2. பதில்கள்
  1. வருக ஐயா.தங்களின் மறுமொழியின் ஊக்குவிப்பிற்கு மிக்க நன்றிகள் ஐயா.

   நீக்கு
 3. Blog Archive Gadjet இணையுங்கள். என்னென்ன பதிவுகள் எழுதபட்டிருக்கிறது அறிந்து கொள்ள முடியும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தாங்கள் கூறியபடியே இணைக்கின்றோம் ஐயா.மீண்டும் நன்றிகள்.

   நீக்கு
 4. நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள் விரைவில் தமிழ் மணத்தில் முதலிடம் பிடிக்க வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக ஐயா.தங்களின் தொடர் மறுமொழியின் ஊக்கத்திற்கு நன்றிகள் ஐயா.

   நீக்கு
 5. இந்த இலக்குக்கு முக்கிய காரணமான தங்கள் பெயரை இந்த பதிவில் குறிப்பிடவில்லை வைசாலி.. இதே ஒற்றுமையோடும் தமிழ் ஐயாவின் வழிகாட்டுதலோடும் மேலும் பல சாதனைகள் புரிவோம் வைசாலி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோ.தாங்கள் வேறு நான் வேறு அல்ல சகோ.தங்களின் அடையாளமே இந்த வைசாலியின் வெற்றி தான்.நிச்சயம் ஒற்றுமையோடும் ஐயாவின் உறுதுணையோடு சாதனை புரிவோம் சகோ.

   நீக்கு