செவ்வாய், 7 ஜூன், 2016

எனது ஐயங்களுடன் தி.தமிழ் இளங்கோ ஐயா...!!

அன்புடையீருக்கு வணக்கம்,

இப்பதிவில்  வலைப்பதிவர்  தி.தமிழ் இளங்கோ ஐயா அவர்களுடன் எனது ஐயங்களுக்கான விடையை காண உள்ளோம்.




1.வங்கி பணிக்கான தேர்வுக்கு எப்படி  தயாராவது..?

எங்களது காலத்தில் அரசாங்க வேலைக்கு ” மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் (District Employment Exchange Office)” பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்த அலுவலகத்திலிருந்துதான் வங்கித் தேர்வுக்கான அழைப்பு எனக்கு வந்து எழுதினேன். அப்போதெல்லாம் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மட்டுமே. தேர்வு முறைகளும் பொதுவானவை. அப்புறம் BSRB எனப்படும் Banking Service Recruitment Board நடத்திய தேர்வுகள் மூலம் ஊழியர்களைத் தேர்வு செய்தார்கள். இப்போது கம்ப்யூட்டர், இண்டர்நெட், ஆன்லைன் என்று தேர்வு முறையே மாறிவிட்டது. மேலும் எல்லா வேலை வாய்ப்பு தேர்வுகளுக்கும் இப்போது பயிற்சி வகுப்புகள் நடத்தப் படுகின்றன. பொதுத்துறை வங்கிகளும் வேலை வாய்ப்பு அலுவலகங்களும் இலவசமாகவே பயிற்சிகள் தருகின்றன.   
இது சம்பந்தமாக நான் எனது வலைத்தளத்தில் எழுதிய பதிவு இது:

வேலை வாய்ப்பு தேர்வுகளும் பயிற்சி வகுப்புகளும் http://tthamizhelango.blogspot.com/2015/09/blog-post_5.html

நமது வலைப்பதிவர் சகோதரி அபயா அருணா (நினைவுகள்) அவர்கள் வங்கியில் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். வங்கித் தேர்வு எழுதும் மாணாக்கர்களுக்கு வேண்டி  சில இணையதள இணைப்புகள் உள்ள வலைப்பதிவு ஒன்றை தனது வலைத்தளத்தில் http://abayaaruna.blogspot.in/2015/09/blog-post_19.html  எழுதியுள்ளார்.. சென்று பார்க்கவும்.

2.விவசாயத்திற்கும்,கல்விக்கும் பெற்ற கடன் தொகையை தள்ளுபடி செய்வதால் வங்கிக்கு எவ்வித நட்டம் ஏற்படும்..?

கடன் தள்ளுபடி என்பது, அரசு கொள்கை சார்ந்த முடிவு என்பதால், இந்த தொகை அரசாங்கக் கணக்கிலிருந்து வங்கிகளுக்கு ஒரு Paper Transaction மூலம் வரவு வைக்கப்பட்டு விடும். வங்கிகளுக்கு இதனால் பெரும் நட்டமில்லை. ஆனாலும் லாப விழுக்காடு குறையும்.

3.வங்கியில் எதனை அடிப்படையாகக் கொண்டு வட்டி நிர்ணயிக்கப்படுகிறது..?

ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு மைய வங்கி உண்டு. நமது நாட்டிற்கு ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியா, நாட்டின் பொருளாதார நிலைமை, குறிப்பாக பணவீக்கம் போன்றவற்றின் அடிப்படையில் சில  வழிகாட்டுதல்களைச் செய்கிறது. இதில் வட்டி நிர்ணயமும் அடங்கும். கீழே உள்ள இணையதளத்தில் இன்னும் தகவல்கள் உண்டு.

Who sets the fixed deposit rate in India?                    http://www.keralabanking.com/who-sets-the-fixed-deposit-rate-in-india

4.ரிசர்வ் வங்கியின் கீழ் இயங்கும் வங்கிகளுக்கும்,தனியார்
வங்கிகளுக்கும் என்ன வேறுபாடுகள்..??

இந்தியாவில் பொதுத்துறை வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் என்று எல்லா வங்கிகளும் ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியாவின் கட்டுப்பாட்டின் கீழ்தான் இயங்குகின்றன.

பொதுத்துறை வங்கிகளின் லாப நஷ்டம் என்பது அரசாங்கத்தின் (பொது மக்களின்) பணம் ஆகும். அரசாங்கம் செயல்படுத்தும் நலத் திட்டங்கள் யாவும் பொதுத்துறை வங்கிகளின் மூலம்தான் செயல்படுத்தப் படுகின்றன. 

5.இன்றைய இளைய சமுதாயத்தின் முன்னேற்றங்கள் குறித்த தங்களின் கருத்து என்ன..?

முதலில் தன்னலம்; அப்புறம் குடும்ப நலன்; அப்புறம் ஊர் நலன். அப்புறம் நாட்டு நலன், உலக நலன் என்று விரிகின்றது. இதனைத்தான் வீடு, வாசல், உலகம் என்றார்கள். எனவே நாமும் வாழ்ந்து மற்றவர்களையும் வாழ வைப்போம். மனிதனை மனிதனாக நினைப்போம்.

எனது ஐயங்களுக்கு விடையளித்த தி.தமிழ் இளங்கோ ஐயா அவர்களுக்கு எனது அன்பு கலந்த நன்றிகள். 


தொடரும்.



13 கருத்துகள்:

  1. சகோதரி வைசாலி செல்வம் அவர்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக ஐயா.தங்களின் பதிலுறைக்கு மிக்க நன்றிகள் ஐயா.

      நீக்கு
  2. பயனுள்ள கேள்வி பதில்கள் நன்று இருவருக்கும் நன்றி

    பதிலளிநீக்கு
  3. நல்ல கேள்விகள், சிறப்பான பதில்கள். பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் ஐயா.

      நீக்கு
  4. best website for banking exam preparation:
    www.bankersadda.com

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஐயா.தாங்கள் அனுப்பி வைத்துள்ள முகவரியை பார்வையிடுகிறேன் ஐயா.

      நீக்கு

  5. வைசாலியின் முயற்சிகள் பாராட்டக் கூடிய ஒன்று. இது போல பல துறைகளில் உள்ளவர்களிடம் இப்படி கேள்வி கேட்டு பதிவு எழுதினால் அது பலருக்கும் பயன்படும் இதை அவர் செய்ய வேண்டும் என்பது என் வேண்டுகோள்

    பதிலளிநீக்கு

  6. உங்கள் தளத்தில் பாலோவராக இணைய இணைப்பு கொடுத்தால் அதை தொடர வாய்ப்பு கிடைக்கும் அதை முடிந்தால் செய்யுங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக ஐயா.தங்களின் வருகைக்கும் மறுமொழியின் ஊக்குவிப்பிற்கும் நன்றிகள் ஐயா.நாங்கள் கூறியப்படியே செய்கிறேன் ஐயா..

      நீக்கு