இன்றைய காலக்கட்டத்தில் மக்களின் கவனத்தைக்
கவரும் இந்தியாவின் கோடீஸ்வரர்களான அனில் அம்பானி, முகேஷ் அம்பானி ஆகியாரின் தந்தை
திருபாய் அம்பானி ஆவார்.
சினிமாவில் ஆரம்பத்தில் ஏழையாக தோன்றும் கதாநாயகன்,
படம் முடிவதற்குள் திடீரென்று மிகப்பெரிய பணக்காரனாகி பார்ப்பவர்களுக்கு அதிசியத்தைத்
தருவது போல அமைந்தது திருபாய் அம்பானியின் வாழ்க்கை.
‘இருபதாம் நூற்றாண்டின் தலைச்சிறந்த மனிதர்’
என்று பல தொழிற்நுட்பக் கழகங்களாலும் பாராட்டப்பட்டவர். ‘ இருபதாம் நூற்றாண்டில் மிக
அதிகமாக செல்வத்தை சேர்த்த மனிதர் ’ என்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
செய்யும் தொழிலில் விடாமுயற்சியுடனும் நம்பக்கையுடனும்
முழுமையாக ஈடுபட்டால் வெற்றி நிச்சயம் என்று நம்பியவர்.
இளைஞர்களை ஊக்குவித்து அவர்கள் பணிபுரிய
தேவையான சூழ்நிலையை ஏற்படுத்தி, உற்சாகப்படுத்தினால் அதன் விளைவு கணக்கில் அடங்காதது
என்று நினைத்ததே அவரது தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்குக் காரணமாகும்.
இன்றைய தினத்தில் முப்பது லட்சத்திற்கும்
மேற்பட்டவர்கள் ரிலையன்ஸ் சம்பந்தப்பட்ட தொழில் நிறுவனங்களில் தங்களின் பணத்தை முதலீடு
செய்திருக்கிறார்கள்.
சாதாரண மக்களும் பங்கு சந்தையில் ஈடுபட்டு
அதிக லாபம் சம்பாதிக்கலாம். தங்கள் வாழ்க்கை வளத்தைப் பெருக்கிக் கொள்ளலாம் என்னும்
ஆர்வத்தை தூண்டியது ரிலையன்ஸ் என்று கூறினால் அது மிகையல்ல.
தற்சமயம் குஜராத் மாநிலத்தில் இருக்கும்
ஜீனகத் என்னும் நகரத்தில் 1932 ஆம் ஆண்டு பிறந்தவர். தந்தை ஒரு பள்ளி ஆசிரியர். இளமையிலேயே
பணம் சம்பாதிப்பதில் அதிக நாட்டத்துடன் காணப்பட்டார். விடுமுறை நாட்களில் அதிக அளவில்
டூரிஸ்ட்டுகள் வரும் இடங்களுக்குச் சென்று உணவுப் பண்டங்களை விற்கும் பணியிலும் ஈடுபட்டிருந்தார்
என்றும் கூறப்படுகிறது.
படித்தது பள்ளி இறுதி வகுப்பு வரை தான்.
தனது பதினாறாவாது வயதில் ஓமன் நாட்டில் உள்ள ஓடன் என்னும் இடத்திற்குச் சென்று அங்குள்ள
பெட்ரோல் பங்கில் பணிபுரிந்தார். தன்னுடைய திறமையால் அந்த நிறுவனத்தில் முக்கிய பதவியை
வகித்தார்.
அவர் வேலையில் இருந்தாலும் அவருடைய எண்ணமெல்லாம்
ஒரு தொழிலதிபராக ஆக வேண்டும் என்பதிலேயே இருந்தது.
இந்தியா திரும்பிய அவர் 1962 ஆம் ஆண்டில்
‘ ரிலையன்ஸ் கமர்ஷியல் கார்ப்பரேஷன் ’ என்னும் நிறுவனத்தை தனது உறவினரான சம்பக்லால்
தமானி என்பவருடன் சேர்ந்து வெறும் 15000 ரூபாய் ( ஆம் வெரும் பதினைந்தாயிரம் ரூபாய்த்தான்
அந்த எண்ணோடு லட்சங்களோ கோடிகளோ இல்லை ) முதலீட்டுடன் தொடங்கினார்.
அப்போது அவருக்கு வயது முப்பது தான். அந்த
நிறுவனம் 350 சதுர அடி அளவே உள்ள ஒரு அறையைல் ஒரே ஒரு தொலைபேசி, ஒரு மேஜை, மூன்று நாற்காலிகளுடனும்
தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் இரண்டு உதவியாளர்கள் அவர்களுடன் சேர்ந்து பணி புரிந்தனர்.
அந்த காலகட்டத்தில் அம்பானியின் குடும்பம்
ஒரே ஒரு படுக்கையறையுள்ள ஒரு இடத்தில் வசித்து வந்தது. இன்று அம்பானி குடும்பத்தின்
வளர்ச்சி எல்லாரும் அறிந்ததே.
இதற்கு எல்லாம் வழிகாட்டியவர் திருபாய் அம்பானி
என்பதும் அவர் முதல்முதலில் சொந்தமாக தொழில் புரியத் தொடங்கியபோது அவருக்கு வயது முப்பது
என்பதும் குறிப்பிடத்தக்கது.
(படித்ததில்
பிடித்தது)
தெரிந்த தகவல். பலருக்கும் உதவும்.....
பதிலளிநீக்குஅருமையான தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள் ...
பதிலளிநீக்கு