புதன், 1 ஜூன், 2016

பென் டிரைவில் வைரஸ் தாக்கினால்..!!!






தற்போது தகவல்களைச் சேமிக்கப் பயன்படுத்தப்படுவை யு.எஸ்.பி,பென் டிரைவ்கள்.இதில் முக்கியமான பிரச்சனை ’வைரஸ்’ தான்.வெவ்வேறான கணினிகளில் உபயோகிப்பதால் வைரஸ்கள் சுலபமாக பென் டிரைவில் புகுந்து உள்ளே இருக்கும் பைல்களை பாதிக்கும் வாய்ப்பு அதிகம்.
அவ்வாறு பாதிக்கும் போது உங்கள் பென் டிரைவில் உள்ள பைல்கள்  மறைக்கப்பட்டு விடும்.கணினியில் பென் டிரைவை திறந்தால் எந்த பைலும் இருக்காது.காலியாக இருக்கும்.ஆனால் ‘பிராப்பர்டீஸ்’ சென்று பார்த்தால் பைல்கள் இருப்பது போன்றே அளவு காட்டும்.காரணம் நம் தகவல்களை வைரஸ் மறைத்து வைத்துவிட்டது.
பென் டிரைவில் முக்கியமான தகவல்கள் ஏதும் இல்லை என்றால் பார்மட்(format) செய்து பென் டிரைவை திரும்பப் பெறலாம்.ஆனால் ஏதேனும் முக்கியமான தகவல்கள் இருந்தால் எப்படி அந்தப் பைல்களை பத்திரமாக மீட்பது என்று பார்ப்போம்.
இதற்கு நீங்கள் எந்த மெனபொருளையும் உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்து உபயோகிக்க வேண்டியதில்லை.உங்கள் கணினியிலேயே சுலபமாகச் செய்துவிடலாம்.கீழே உள்ள வழிமுறைகளை கவனமாகப் பின்பற்றி பைல்களை மீட்டெடுக்கலாம்.
 



1.முதலில் பென் டிரைவை உங்கள் கணினியில் செருகிக் கொள்ளுங்கள்.
2.Start-Run-CMD-Enter கொடுக்கவும்.
3.இப்பொழுது பென் டிரைவ் எந்த டிரைவில் உள்ளது என்று பாருங்கள்.மை கம்ப்யூட்டர் செல்வதன் மூலம் அதைக் கண்டறியலாம்.
4.உதாரணமாக E என்ற டிரைவில் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்.அதற்கு நீங்கள் E என்று கொடுத்து ‘என்டர்’ அழுத்த வேண்டும்.
5. attrib s h/s/d *.* என டைப் செய்யுங்கள்.ஒவ்வொரு பகுதிக்கும் சரியான ஸ்பேஸ் கொடுக்கவும் .நீங்கள் சரியாகக் கொடுத்துள்ளீர்கள் என்று உறுதி செய்துகொண்டு என்டரை அழுத்துங்கள்.சில வினாடிகள் பொறுத்திருங்கள்.இப்போது உங்கள் பென் டிரைவை சோதித்துப் பாருங்கள்.பைல்கள் அனைத்தும் திரும்ப வந்திருக்கும்.

4 கருத்துகள்:

  1. இதுவும் மிக மிக அருமையான தகவல். பதிவு. வைசாலி அவர்களே 2 அது ஸ்டெப்பை அடிக்கும் போதெ அதிலேயே எந்த ட்ரைவ் என்பதை அடிக்க வேண்டுமா இல்லை 2 ஸ்டெப்பை அடித்துவிட்டு அப்புறம் கணினி எந்த ட்ரைவ் என்று கேடுகுமா? அப்போது கொடுக்க வேண்டுமா?. வழி முறைகளை இன்னும் கொஞ்சம் விரிவாக, அடுத்தடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை ஆர்கனைஸ்டாட கொடுத்தீர்கள் என்றால் எங்களைப் போன்ற அத்தனை டெக்னலாஜிக்கல் அறிவு இல்லாதவர்களுக்கு உபயோகமாக இருக்குமே.

    மிக்க நன்றி சகோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஐயா.ஆமாம் இரண்டாவது வழிமுறைக்கு பிறகு தான் எந்த டிரைவ் என்று கேட்கும் ஐயா.இதனை பற்றி அடுத்த பதிவில் விரிவாக கூறுகிறேன் ஐயா.நன்றி.

      நீக்கு