அரசே நல்ல காட்சியை மங்களமாக முடிக்கவேண்டும் ஆகவே ஒரு திருமணக் காட்சியுடன் முடிக்க அனுமதி தேவை என்கிறான். உங்கள் மகளைப் போலவே அலங்கரிக்கப்பட்ட ஒரு மணமகளை வரவைக்கிறேன் என்றான். மன்னனும் திகைப்பிலிருந்து வெளியே வரவில்லை. ஆகவே என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள் என்கிறான். ஒரு அழகான இளைஞன் மணப் பெண்ணுடன் வருகிறான். ஐயர் ஹோமம் வளர்த்து கல்யாணம் செய்துவைக்கிறார். எல்லாம் மாயாஜாலக் காட்சி போலவே நடக்கிறது. ஆனால் உண்மையில் மணப் பெண் போல வந்தது அவந்தி சுந்தரி. அவளை மணந்தவன் ராஜவாஹனன்.
கல்யாணம் முடிந்தவுடன், சூ! மந்திரக் காளீ! இரண்டு பேரும் மறைந்து போங்கள் என்கிறான். பெண்ணும் மாப்பிள்ளையும் அரண்மனையில் இருந்த ரகசிய சுரங்கக் கதவு மூலம் தப்பித்து ஓடிவிடுகிறார்கள். கதை எப்படிப் போனாலும் அந்தக் காலத்தில் மாயாஜாலக் காட்சிகள் அரண்மனையில் நடத்தப்பட்டதை நாம் அறிய இந்தக் கதை உதவுகிறது.
கயிறு வித்தை தவிர, மந்திரத்தால் மாங்காய் மரம் உண்டாக்குவது, கலர் நூல்களைப் பயன்படுத்தி (சூத்திர க்ரீடா) தந்திரங்கள் செய்வது, கணக்கு வித்தைகளைச் செய்வது, கைகளை லாகவமாகப் பயன்படுத்தி காசுகளை மறைப்பது (ஹஸ்த லாகவம்) முதலியன அக்காலத்தில் தந்திரக் காட்சிகளில் இடம்பெற்றன.
(சுபம்)
குறிப்பு; எனவே
மாயா ஜாலாம் என்பது நேரத்தை போக்குவது மட்டும் அல்லமல் ஒரு ஏமாற்று வேலையும் கூட…
நன்றி!!!!
அட..... கல்யாணம் நடந்துடுச்சா....
பதிலளிநீக்குஇதை ஒரே பதிவாவே எழுதி இருக்கலாம்!
ஆம் ஐயா !!!!
நீக்குபக்கம் அதிகமாக இருப்பதால் நான் அதை தொடர்கதையாக மாற்றிவிட்டேன்!!!