வியாழன், 28 பிப்ரவரி, 2019

புதன், 27 பிப்ரவரி, 2019

சிறிது சிரித்துவிடு

சிரிக்க மறந்தவன் எல்லாம்
சிறிது சிந்தித்து விடு
உன் வாழ்க்கையில் மட்டுமா
கஷ்டம் இருக்கிறது என்று
பின்பு புரிந்து கொள்வாய்
கஷ்டம் இன்றி வாழ்க்கை
இல்லை என்று
இஷ்டம் போல வாழ  வேண்டுமென்றால்
சிறிது கஷ்டப்படுவது ஒன்றும் தவறில்லை
இன்று கஷ்டத்தோடு கைகோர்த்துக் கொள்
நாளை வெற்றியே இஷ்டப்பட்டு
உன்னை வந்து அடையும்

செவ்வாய், 26 பிப்ரவரி, 2019

The Delight Of Life

Around me a big hall
With buds and blossoms
People in festive mood
Except two people-
Bride and groom
Facing a big stuffy strike
Without knowing each other
Have not such big conversation
So is this called as love??
Or a commitment??

என் கடினமான பாதை

என்னை சிதைத்த வாழ்க்கையை விட சிந்திக்க செய்த வாழ்க்கை
கடுமையாக இருந்தது, ஏன்
இந்த தவறினை இளைத்தேன் என்று
மணித்துளிகள் அனைத்தும் சிந்தனையில் கடந்தது, கடந்த பாதைகள் கடுமையாக இருப்பினும்
கற்றுக்கொடுத்த போதனைகள்
கசப்பாக இருப்பினும், தற்போதைய நிலைக்கு என்னை வலிமை படுத்தி இருக்கிறது, போதனைகளும் தற்போதைய நிலைக்கு கசப்பாக தெரியவில்லை.......

ஞாயிறு, 24 பிப்ரவரி, 2019

தமிழ் உணவின் சிறப்பு 🌶️🍋🥘


பொதுவாக நம் தமிழ் உணவில் சேர்க்கப்படும் ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு காரணம் உண்டு. அதுபோல தான் நம் இலையில் ஓரத்தில் உள்ள ஊறுகாய்கும் ஒரு அர்த்தம் உண்டு. ஆம் நமது வயிற்றில் சாப்பிட்ட உணவு செரிமானம் ஆக நம் வாயில் எச்சில் நன்றாக சுரக்க வேண்டும். அதனால் தான் இந்த பண்டம் இலையில் வைக்கப்படுகிறது ஏனென்றால் இதில் தான் காரம், உப்பு, புளிப்பு என்ற மூன்று விஷயங்கள் சேர்ந்து உள்ளன. மேலும் இவை அந்த காலத்தில் சுத்தமான நல்லெண்ணெய் மற்றும் கலபடம் இல்லாத பொருளை கொண்டு செய்து ஜாடியில் அடைத்து வைத்தனர் அது நீண்ட காலத்திற்கு கெடாமல் இருந்தன. ஆனால் இப்போது செய்யப்படும் ஊறுகாய் சுத்தம் இல்லாத பொருள்கள் மற்றும் வினிகர் சேர்க்கபடுவதால்  உடலுக்கு தீங்கு விளைவிக்கும். எனவே எந்த பொருளையும் அளவுக்கு மீறி சேர்த்து கொண்டால் ஆபத்து தான்.

வாகை🏆🏆🏆🏆

             

நம் வாழ்வில் வெற்றியை தேடி ஓடி கொண்டிருக்கிறோம் ஆனால் இந்த சில விஷயங்களை பின் பற்றினால் நிச்சயம் வெற்றி கிட்டும் என்பதை அனுபவத்தால் உணர்ந்த சில குறிப்புகள் இதோ
1. எந்த பொருளின் மீடும் பற்று கொள்ளாதே. அதற்காக குறிக்கோளை விட்டுவிடாதே.
2.யாரையும் சார்ந்து இருக்காதே. முக்கியமாக நண்பர்களை போல இருக்ககும்  வஞ்சகர்களை நம்பாதே.
3. தாய், தந்தை, இறைவன் இவர்களை தவிர வேறு யாரும் உனக்கு நல்லது எண்ண மாட்டார்கள் என்பதை புரிந்து கொள்.
4. காதல், காதல் மாயை இந்த இரண்டிற்கும்உள்ள வேற்றுமையை புரிந்து கொள்.
5.அறிவுரை கூறுபவர்கள் மீது கோபம் கொள்ளாமல் அதை கேட்க பழகு.
6.கோபம் ஏற்படும் நிலையில் கண்களை மூடி பெருமூச்சு விட்டு பின்பு கண்களை விழித்து புன்னகையுடன் அதை எ திர் கொள்.

திங்கள், 18 பிப்ரவரி, 2019

எண்ணத்தில் இன்று நீ


                     எண்ணத்தில்  இன்று  நீ


சிந்தித்து பார்க்கிறேன்  சித்திரமே!!
நாம்  காணும் கணம் தன்னை பற்றி
முந்தி என் அருகிலே நின்று
வந்தனை செய்ய வழி வகுத்திட. .
என்று உன்னை பார்த்தேனோ
அன்று தொடங்கிய  ஊடல் ...
இன்றும்  நடக்க வில்லை கூடல். 

ஞாயிறு, 17 பிப்ரவரி, 2019

கடந்து செல்ல வேண்டும்

காற்றை போல் அனைத்தையும் நொடியில் கடந்து செல்ல முயல்கிறேன் அது இன்பமோ துன்பமோ ஆனால் முடியவில்லை

வியாழன், 14 பிப்ரவரி, 2019

அன்புள்ள அப்பா🏃🏃🏃🏃

 
         நான் உன் மகளாய் பிறந்தது நான் பெற்ற பாக்கியம் என்று எண்ணினேன்.
நீயோ உன் தாயிற்குச் சமமாய் என்னை எண்ணினாய்,
என்னை தாலாட்டி,வழிநடத்தி,என்னை சீர்தூக்கி வாழவைத்தாய்.
நான் தவறு செய்யும்போது என்னை கண்டித்தாய்,நான் மனம் வருந்தினேன் ,
ஆனால் இன்றோ நான் பிறரால் மனம் வாடாமல் தலைநிமிர்ந்து நிற்கிறேன்.
எல்லாம் உன்னாலே !
நான் பிறந்த முதல் நாளில் இருந்து 
நான் நேசித்த ஒரே ஆண் நீ மட்டும் தான்,
நான் உனக்கு மகளாய் பிறந்தது நீ செய்த புண்ணியம் என்று கருதினாய்,
நான் உன் மனம் நோகடித்து பாவம் புரிவேனோ?
மகளாய் பிறந்த ஒவ்வொரு பெண்ணிற்கும் இது சமர்ப்பணம்.✍️✍️✍️

செவ்வாய், 5 பிப்ரவரி, 2019

சிறு புறாக்கள்🕊️🕊️🕊️       

    நம் வீட்டில் பாசமாக வளர்க்கும் புறாக்கள் வெளியே இரை தேடி செல்லும் ஆனால் மீண்டும் வரும் போது சில புறாக்கள் இருக்காதம்.  வழியில் கழுகுகள் அதை பிடித்து தின்று தன் பசிக்கு உணவாக்கி கொள்ளும். அது போல தான் இன்று மனிதன் என்னும் முகமூடி அணிந்து கொண்டு இருக்கும் பல இரக்கம் இல்லாத கழுகுகள், குழந்தைகளாகிய சிறு புறாக்களின் வாழ்க்கையையும் அவர்களின் கணவுகளையும் சிதைத்து அவர்களின் பசிக்கு உணவாக்குகின்றனர்.இந்நிலை மாற சட்டங்கள் கடுமையாக்க பட வேண்டும்.

சனி, 2 பிப்ரவரி, 2019

My college

Place of Unity
Place of Humour
Place of Estacy
Place of Knowledge
Place of Interest
Place of Honour
Place of Humanity &
The place...
    Where I identified the real me.

என் விடியல் .🌅🌅🌅
  என்  வீட்டை சுற்றி பூங்காவாக மாற்றிய என் அம்மாவின் வீட்டு தோட்டத்தில் காலை வணக்கம் சொல்லும் குருவிகளின் ஆரவாரம் இல்லாத இனிமையான ஓசையில் என் விடியல் தொடங்க,வீட்டு அருகில் உள்ள புளிய மரத்தில் உள்ள புளியை உலுக்கி பறிக்கும் பாட்டிகளின் பேச்சு சத்தம்.காலையில் கண்களுக்கு குளிர்ச்சியாக உள்ள மலர்கள் அதன் மேல் உள்ள பனி துளிகள்.என் அம்மா தூவிய அரிசியை தின்ன காலையில் கூடும் மயில் கூட்டம். அதில் வெறும் பெண் மயில்கள், ஆண் மயில் வருமா என்று எதிர்பார்க்கும் என் கண்கள். நெல்லுக்கு போகும் நீர் புல்லுக்கும் செல்வது போல மயில்கள் திண்ணு மீதம் உள்ள  அரிசியை  திங்கும் மைனாக்களும், கொவ்தாரிகளும் அதனை துரத்தி விளையாடும் நாய் குட்டிகள்.இரவு என் வீட்டில் உள்ள பாலை குடித்து விட்டு ஒன்றும் தெரியாதது போல் காலையில் அமர்ந்து இருக்கும் என் பக்கத்து வீட்டு பூனை குட்டி.  இதை அனைத்தையும் ரசித்து நின்று போது,  நந்து கல்லூரிக்கு நேரமாகிறது கிளம்பு என்றது என் தாயின் குரல். கிராமத்து வாழ்க்கை மட்டும் இன்பம் அளிக்காது கிராமத்தை போல் நம் நகரத்து வீட்டை மாற்றினாலும் இன்பம் கிடைக்கும்.

ஒரு வாழ்க்கை


       

இந்த உலகத்தில் நல்லவர் கெட்டவர் என்று எவரும் கிடையாது. ஒரு நாள் என்றால் இரவு பகல் இருப்பது போல, ஒரு மனிதற்குள்ளும் நல்லதும் இருக்கும் கேட்டதும் இருக்கும்.ஒருவனின் சூழ்நிலை தான் ஒருவனை மாற்றுகிறது. மேலும் நீ ஒருவருக்கு ஆதரவாக பேசினால் நல்லவர் ஆனால் ஒருவர் செய்த தவறை சுட்டிக்காட்டி அவரை எதிர்த்து பேசினால் நீ கெட்டவர். அதனால் இந்த உலகத்தின் பேச்சுகளை கேட்காமல் நாம் வாழும் இந்த ஒரு நிரந்தரம் இல்லாத வாழ்க்கையை நம் மனதிற்கு பிடித்த படி , உண்மையாகவும் நேர்மையாக வாழ்வோம்.

வெள்ளி, 1 பிப்ரவரி, 2019

காலம் மாறிவிட்டது

                   காலம் மாறிவிட்டது
       35வயது மகன் 77 வயதுடைய தன் தந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற காலம் மாறி........
      77 வயதுடைய தந்தை தன் 35 வயது மகனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் காலமாக மாறி.........
    பணம் வைத்து இருப்பவகளை கண்டு பொறாமை கொண்ட காலம் மாறி.....
    ஆரோக்கியமானவர்களை கண்டு பொறாமை கொள்ளும் காலம் இனி வரும்.....!!!!
                                                   திவ்யாதுரை

சிந்தனை துளி

                            சிந்தனை துளி
               வெற்றி என்பது இறுதியும்                      கிடையாது....!!
              தோல்வி என்பது உறுதியும்                கிடையாது...!!
             போராடுபவனுக்கே வெற்றியும் தோல்வியும்....!!!
                                             திவ்யாதுரை