சனி, 2 பிப்ரவரி, 2019

என் விடியல் .🌅🌅🌅




  என்  வீட்டை சுற்றி பூங்காவாக மாற்றிய என் அம்மாவின் வீட்டு தோட்டத்தில் காலை வணக்கம் சொல்லும் குருவிகளின் ஆரவாரம் இல்லாத இனிமையான ஓசையில் என் விடியல் தொடங்க,வீட்டு அருகில் உள்ள புளிய மரத்தில் உள்ள புளியை உலுக்கி பறிக்கும் பாட்டிகளின் பேச்சு சத்தம்.காலையில் கண்களுக்கு குளிர்ச்சியாக உள்ள மலர்கள் அதன் மேல் உள்ள பனி துளிகள்.என் அம்மா தூவிய அரிசியை தின்ன காலையில் கூடும் மயில் கூட்டம். அதில் வெறும் பெண் மயில்கள், ஆண் மயில் வருமா என்று எதிர்பார்க்கும் என் கண்கள். நெல்லுக்கு போகும் நீர் புல்லுக்கும் செல்வது போல மயில்கள் திண்ணு மீதம் உள்ள  அரிசியை  திங்கும் மைனாக்களும், கொவ்தாரிகளும் அதனை துரத்தி விளையாடும் நாய் குட்டிகள்.இரவு என் வீட்டில் உள்ள பாலை குடித்து விட்டு ஒன்றும் தெரியாதது போல் காலையில் அமர்ந்து இருக்கும் என் பக்கத்து வீட்டு பூனை குட்டி.  இதை அனைத்தையும் ரசித்து நின்று போது,  நந்து கல்லூரிக்கு நேரமாகிறது கிளம்பு என்றது என் தாயின் குரல். கிராமத்து வாழ்க்கை மட்டும் இன்பம் அளிக்காது கிராமத்தை போல் நம் நகரத்து வீட்டை மாற்றினாலும் இன்பம் கிடைக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக