சிந்திப்போம்... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிந்திப்போம்... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வியாழன், 13 செப்டம்பர், 2018
ஞாயிறு, 15 ஏப்ரல், 2018
யார் குற்றவாளி..?
உன்னை பெற்றவளும் உன் உடன் பிறந்தவளும் பெண் தானே அவர்களிடம் யாரேனும் இப்படி செய்தால் ஒப்புக் கொள்வாயா.?
நான்கு சுவர்களின் நடுவில் நடக்கும் இரகசியமான புனிதமான கலவியை என்றைக்கு நான்கு திரைகள் போட்டு கூத்தாடிகளும் ஊடகங்களும் திரையிட ஆரம்பித்தோ அன்றே அந்த புனிதம் தோல்வி அடைந்தது...
மேலும் பாலியல் கல்வியை வழங்க தவறிய பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோரின் கவனக் குறைவும் இதற்கு ஒரு காரணம் தான்..
பெண்களை தசைகளாவும் ஆண்களை தவறாகவும் சித்தரித்த ஊடகமே பெண்களுக்கு எதிராக தொடரும் வன்கொடுமைகளுக்கு மற்றொரு காரணம்..
விருப்பத்துடன் தொடுவதால் ஒரு பெண் தாயாக மாறுகிறாள்.. விருப்பமின்றி தொடுவதால் ஒரு பெண் விலைமகள் ஆகிறாள்.. வற்புறுத்தி தொடுவதால் ஒரு பெண் கற்பை மட்டுமின்றி உயிரையே இழக்கிறாள்...
பாரதி காண விரும்பிய புதுமை பெண்ணாக வெளி வர நினைக்கும் பெண்களுக்கு இவைகளை காணும் போது அச்சம் மட்டுமே வெளி வருகிறது.. யாருடைய பிழை.? காதலுக்கும் காமத்துக்கும் வேறுபாடு தெரியவில்லையா.? இல்லை பெண்மைக்கு பாதுகாப்பு இல்லையா.?
போதும் கலாச்சாரத்தை மாற்றியதற்கு தண்டனையாக கருதுகிறேன்.. ஆடை குறைந்தது ஆண்மை பெருகியது பெண்மையை அழிந்தது.. போதும் இனியாவது விழித்துக் கொள் தமிழினமே... மேலை நாட்டவர்கள் கற்புடனும் உயிருடனும் இருக்கிறார்கள்..
நமது நிலை.? நமது நிகழ்காலம்.? நமது அடுத்த தலைமுறை.? இன்னும் அப் டேட் என்று சொல்லியது போதும்.. தந்தை களுக்கு ஒரு வேண்டுகோள் தங்களின் மனைவி மற்றும் குழந்தைகள் ஆகியோரின் ஆடையிலும் கலாச்சாரத்திலும் கவனமாக இருங்கள்.
டைட் லெக்கின்ஸ் டாப்ஸ் ஜீன்ஸ் மிடி என்று போட்டது போதும்.. உடலை மறைக்கவே ஆடை.. உடலை அழகுப் படுத்த ஆடை இல்லை..
ஆதங்கத்துடன் வைசாலி செல்வம்..
புதன், 7 பிப்ரவரி, 2018
நவீன இந்தியாவின் சிறப்பு அம்சங்கள்...
ரூபாய் மாற்றம்.
ஜி.எஸ்.டி
ஆதார் அட்டை அமைப்பு.
ஜல்லிக்கட்டு தடை.
தமிழ்நாட்டின் முதலமைச்சர்கள்.(குழப்பம்)
அனிதா மரணம்.
அம்மா இட்லி சாப்பிட்டாரா. ?இல்லையா.?
தர்மகோல் சாகசம்.
விவசாயிகள் மரணம்.
கூத்தாடிகளும் அரசியலில்.
ஜியோ சிம் அதிரடி சலுகைகள்.
+1 பொதுத் தேர்வாக அறிவிப்பு.
ஸ்மார்ட் ரேசன் கார்டு.
10 இலட்சம் சம்பளம் பெறுபவர்களுக்கு ரேசன் பொருட்கள் ரத்து.
பெரியார் விருது.
( டாக்டர் )தமிழிசை சவுந்தரராஜன்.
ஓட்டுநர் ஊதிய உயர்வு.
பேருந்து பயணச்சீட்டு விலை உயர்வு.
இலவச ஸ்கூட்டர்.
மதுபானங்கள் மூலம் இலாபம்.
பல்கலைக்கழக ஊழல்.
பட்ஜெட் தாக்கல்.
இன்னும் பல அம்சங்களை உள்ளடக்கியது டிஜிட்டல் இந்தியா. இது சிரிப்புக்கு அல்ல சிந்திக்க.. நமக்கு தெரிந்து இவ்வளவு நடைபெற்று வருகிறது. நமக்கு தெரியாமல் நமது உழைப்பை திருடும் கார்ப்பரேட் நிறுவனங்கள்,அரசியல்வாதிகள், அரசு மற்றும் ஊடகங்கள்.. இவற்றிற்கு விலை போன மக்கள்..
இதுவா சுதந்திர இந்தியா. ?
இதற்கு ஆங்கிலேயர் ஆட்சியிலே இருந்திருக்கலாம்..
ஊழல் இலஞ்சம் இலாபம் கொலை கொள்ளை.. இன்னும் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்று தெரியாமல் ஆட்டு மந்தையை போல ஒரு வாழ்க்கை..
இந்தியா வல்லரசு பிறகு முதலில் இந்தியாவில் நல்லரசு தான் முக்கியம்..மாற்றத்தின் மாய நிறங்களை கண்டறிய முற்படுங்கள்.
புதன், 24 ஜனவரி, 2018
அவருக்கான உலகம்..
இங்கு தான் எங்காவது
அவரைப் பார்த்திருப்பீர்கள்...
வாட்டர் பாட்டிலை எடுத்தபடி..
குப்பையைக் கிளறியபடி..
அதில் ஒரு பேப்பரைப்
படித்துச் சிரித்தபடி
இயலாமையில் அதைக் கிழித்தபடி..
வெறிச்சோடி தாடியைக் கோதியபடி
இறுகிப் போன முடியை நீவியபடி..
இங்கு தான் எங்காவது பார்த்திருப்பீர்கள்...
கடந்த மாதமோ
சென்ற வாரமோ
மூன்று நாட்களுக்கு முன்போ
அல்லது இன்று காலையிலோ பார்த்திருப்பீர்கள்...
ஒருவேளை உங்களில்
யாரேனும் பார்க்கவில்லை என்றால்
உடனே போய்ப் பார்த்துவிடுங்கள்
அவர் இன்னும் சாகவில்லை
நிச்சயமாக அவர் இன்னும் சாகவில்லை...
மற்றுமொன்று
போகும் போது
தனியாகச் செல்லுங்கள்
குழந்தைகளை அழைத்துச் செல்லாதீர்கள்..
குழந்தைகளைக் கண்டதும்
அவர் மனிதனாக மாறிவிடுவார்...
தயவுசெய்து
அவரை அப்படியே
விட்டுவிட்டு வாருங்கள்..
அது அவருக்கான உலகம்..
ம.லோகேஸ்வரன்
தமிழ் உதவிப் பேராசிரியர்
சனி, 2 டிசம்பர், 2017
பெண் காமத்துக்கா.? காதலுக்கா.?
India's daughter documentary film..
இன்று தான் இந்த குறும்படத்தை பார்த்தேன்.என்னுள் அடக்க முடியாத அளவுக்கு கோபமும் தாங்கி கொள்ள முடியாத அளவுக்கு கோபம் கலந்த கண்ணீருமே இந்த பதிவுக்கு காரணம்.
பெண்களுக்கும் உணர்வுகள் உண்டு. ஆனால் அவளை காமப் போதைக்கு ஊறுகாயாகப் பயன்படுத்துவது தனது அம்மாவை விற்றுக் குடிப்பதற்கு சமம். இதற்கு காரணம் யார். ? ஒரு குழந்தை நல்லவன் ஆவதும் தீயவன் ஆவதும் அன்னையின் வளர்ப்பு தான் என்று நாம் யாவரும் அறிவோம். ஆனால் ஒரு குழந்தையின் வளர்ப்புக்கு அன்னையை தவிர இன்னும் சிலருக்கு பங்கு உண்டு. ஆம் அது அந்த குழந்தையின் தந்தை அவரை அடுத்து அவளது ஆசிரியர்கள் இவர்கள் மூவரின் வளர்ப்பில் தான் ஒரு குழந்தை வளரும்.கல்வி இல்லாத குழந்தைகளும் இந்த சமூகத்தால் வளர்க்கப்பட்டு வருகின்றன.
சமீபத்தில் லட்சுமி குறும்படம் நம்மை கோவத்திலும் சிந்திக்க வைத்தது.ஒரு சராசரி அலுவலகம் சென்று நடுத்தர வாழ்க்கையை நடத்தும் பெண்ணை குறித்து இருந்தது.
இந்த இரண்டு குறும்படத்தையும் பார்த்த பிறகு தான் எனக்கு புரிந்தது ஒவ்வொரு பெண்ணையும் தசையாக மட்டுமே பார்க்கும் ஆண்களுக்கு மத்தியில் ஒரு இலட்சுமி உருவாக்கப்படுகிறாள். உணர்வுகளையும் அன்பையும் சேர்த்து ஒரு ஆண் பெண்ணை நெருங்கும் போது அவள் தாய்மை அடைகிறாள். ஆனால் அதே பெண்ணை வெறும் காமத்தோடு மட்டும் நெருக்கடி கொடுக்கையில் அவள் விலைமகளை விட இழிவான நிலைக்கு தள்ளப்படுகிறாள்.
பெண்ணியம் பற்றி இன்று நிறைய பேசுகிறோம். பெண்ணின் சுதந்திரம் அவளிடம் உள்ளது ஆனால் சில பெண்களின் சுதந்திரம் சமூகத்தை சார்ந்தே உள்ளது. பெண்மையை சதையாகவும் ஆண்மையை தவறாகவும் சித்தரிக்கும் ஊடகங்களின் விளைவும் ஆசிரியர்களின் கவனக் குறைவும் தான் இதற்கு காரணம் என்பது எனது கருத்து. ஆம் ஆசிரியர்களை நான் குறிப்பிடுவதற்கு காரணம் பாலியல் என்பது உடலை மட்டும் அல்ல உணர்வுகளையும் குறித்தது.
பெரும்பாலும் அறிவியல் பாடத்தில் பாலியல் குறித்த விவரங்களை அடக்கிய பாடங்களை கற்றுத் தரும் ஆசிரியர்கள் அதனை மேற்கொள்ளும் போதே சீ... ஐ..யோ... என்றும் அதனை மாணவர்களுக்கு எடுக்க கூச்சப்படுவதால் தான் அவர்களுக்கு பாலியல் என்றாலே பெரும் குற்றாமகவும் பெண்களிடம் தான் அதனை அடைய முடியும் அதற்காக அவர்களை பயன்படுத்தலாம் என்ற தாக்கமும் ஆண்கள் மத்தியில் ஏற்படுகிறது ( ஒரு சில ஆண்களுக்கு மட்டும் ) என்பது எனது கருத்து.
பெண்களை போற்றும் பெண்ணியம் தான் வேண்டும்.. பெண்களின் சுதந்திரம் அவளிடம் தான் உள்ளது.. கல்வியின் மூலம் தான் தீர்வு காண முடியும்.. இன்று பெரும்பாலும் இணையத்தில் தான் உலவுகிறோம். சினிமாவிலும் சரி, விளம்பரத்திலும் சரி, படுக்கையறை காட்சிகளை ஆபாசமாக காட்டுவதே இதற்கு முக்கியக் காரணம். முத்தக் காட்சியில் ஆரம்பித்து பாலியல் வரை அனைத்தும் ஒவ்வொரு சிறுவர்களையும் பாதிக்கிறது. இரண்டு வயது சிறுவன் முதல் கட்டையில் போகும் மனிதன் வரை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது இந்த மாதிரியான காட்சிகள்.
இது மட்டுமல்லாமல் ஒவ்வொரு பெற்றோர்களும் தனது குழந்தைகளின் முன்பு சண்டைகள் மட்டுமின்றி பாலுறவு வைத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். இன்றைய குழந்தைகளுக்கு வீட்டில் கற்று தரும் பாடத்தை விட இணையத்திலும் சமூகத்திலும் கற்று கொள்ளும் பாடமே அதிகம்.
ஆசிரியர்கள் மட்டும் இதை கற்றுத் தர வேண்டும் என்று இல்லை. பெற்றோர்களும் தனது குழந்தைகளுக்கு ஆண் பெண் உடலமைப்பு, ஹார்மோன் மாற்றங்கள், ஆண் பெண் வித்யாசம், ஆண் பெண் பருவமடைதல் மற்றும் உடலுறவு பற்றிய விழிப்புணர்வை போன்ற நல்ல முறைகளை சொல்லிக் கொடுத்து வளர்க்கவும்.
இன்னும் எழுதவே நினைக்கிறேன்.. இதற்கு முற்றுப்புள்ளி வைப்பதும் ஆச்சிரியக்குறி வைப்பதும் ஒவ்வொருவரின் மனதில் தான் உண்டு..
வெள்ளி, 27 அக்டோபர், 2017
உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்களே..
வணிக நோக்கில் கல்வியா.?
கல்வியை வைத்து வணிகமா.?
அறிவை பெறுபவர்கள் குறைவா. .?
அறிவை விற்பவர்கள் அதிகமா. ?
அரசும் சட்டங்களும் மக்களுக்கா. ?
மக்கள் அரசுக்கும் சட்டத்திற்குமா.?
இது ஜனநாயக நாடா. .?
பணநாயகர்கள் நாடா. .?
ஏழ்மையை ஒழிக்க தேர்வுகளா. ?
ஏழையை ஒழிக்க தேர்வா. ?
அரசு வேலைக்கு போட்டித் தேர்வுகள் தேவையா. ?
அரசியல் வேலைக்கு தேர்வுகள் தேவையில்லா போட்டியா. .?
ஒரு பக்கம் நீலத் திமிங்கலம் விளையாட்டு மூலம் தற்கொலை. ?
மறு பக்கம் நீட் தேர்வு என்ற பெயரில் தற்கொலை. ?
ஒருபுறம் கந்துவட்டி.?
மறுபுறம் ஜிஎஸ்டி.?
இத்தனை கேள்விகளுக்கு காரணம் என்ன தெரியுமா. ?
நமது மூளையும் உரிமையும் கார்ப்பரேட் நிறுவனங்களிடமும் அரசியல்வாதிகளிடமும் விலை போனதே அதன் தொடர்ச்சி தான் இவைகள் அனைத்தும்...
புதன், 25 அக்டோபர், 2017
மூன்று மணிநேரம் தேர்வுகள்.
மூன்று மணிநேரம் தேர்வுகள்...
மூன்றாண்டுகளுக்கு பிறகு..?
மாணவர்களின் எதிர்காலம்..?
இதற்கு யார் காரணம்..?
கல்வி நிறுவனங்களா..?
பெற்றோர்களின் பேராசையா அல்லது அவர்களின் முட்டாள்தனமா ..?
மாணவர்களின் கவனக் குறைவா..?
கல்வி சேவையா அல்லது முதலீடா..?
இவர்களில் யார் மீது தவறு..?
சனி, 22 ஜூலை, 2017
வாசிப்பை நேசிப்போம்
நூல்களே நம்மை செதுக்கும் சிற்பியாகவும், நம்மை நல்வழியில் இட்டுச்செல்லும் நண்பனாகவும், வாழ்க்கையை போதிக்கும் ஆசானாகவும், நம்மை நமக்கே அடையாளம் காட்டும் அகக்கண்ணாடியாகவும் இருக்கின்றன.இத்தகைய எழுத்துகள் அன்று ஓலைச்சுவடிகளாகவும் பிற்காலத்தில் நூல்களாகவும் வடிவம் பெற்றன.இன்றோ நூல்கள் எல்லாம் மின்னூல்களாக மாற்றம் பெற்று உள்ளன.இனிவரும் காலத்தில் நூல் வாசிப்பு என்பது இருக்குமா..?? என்பது இன்றைய தலைமுறைக்கும் நாளைய தலைமுறைக்கும் புரிய வைக்க வேண்டிய நிலையே இன்று ஏற்பட்டுள்ளது.
இதனை விளக்கும் விதமாக வாசிப்பு குறித்து திரு.கலியமூர்த்தி எஸ்.பி அவர்கள் பேசிய காணொளியை இங்கு பகிர்ந்துள்ளேன்.
ஞாயிறு, 28 மே, 2017
நல்லதை விதைப்போம்..
நாம் என்ன விதைக்கிறோமோ அதை தான் நாளை அறுவடை செய்ய போகிறோம் என்பதை உணர்ந்தால் இன்று நீதியா..? ஆட்சியா..? மாட்டு இறைச்சியா..? கார்ப்பரேட்டா..? பணமா..? நடிகனா..? தலைவனா..? தலைமையா..? என்ற பேச்சுக்கு இடமில்லாமல் இருக்கும்.
இன்றைய அரசியல் கட்சிகள் நாட்டை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்வதாக தெரியவில்லை.
மக்களால் மக்களுக்காக மக்களே தேர்தெடுப்பது மக்களாட்சி என்ற நிலைமாறி பணத்தால் மக்களே பணத்துக்காக நாட்டை கட்சிகளுக்கு விற்றது என்ற நிலையில் இன்றைய (பண)ஆட்சிமுறை.
காமராசர் போன்ற மாமனிதன் விதைத்து சென்ற நல்லாட்சிக்கு இன்றைய சமூகம் செயற்கை உரங்களை தூவிக் கொண்டு வருகிறது. இதன் விளைவு நமக்கும் நமது தலைமுறைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை அறியாத பேதமை மக்கள் தங்களின் அறியாமையை உணர முற்படுவதில்லை.
ஐந்நூறு ரூபாய்க்கும் ஒரு குவாட்டரும் ஒரு பிரியாணியும் இதற்கு ஆசைப்பட்டு குறிப்பாக இலவசம் என்பதற்கு அடிமையாகி தனது ஓட்டையும் உரிமையும் விற்பனை செய்து விட்டு இப்போது ஆட்சி சரியில்லை தலைமை சரியில்லை அரசு செயல்படவில்லை என்று குற்றம் சாட்டி வருகிறார்கள்.. ஆனால் இதில் என்ன வேடிக்கை என்றால் தன்னை தானே விலைக்கு விற்பனை செய்துவிட்டு என் ஓட்டு என் உரிமை என்று பேசிக்கொண்டு இருப்பது தான்.
ஒற்றுமையே பலம் என்றனர் ஆனால் நமக்குள்ளேயே ஒற்றுமை இல்லை.யாதும் ஊரே யாவரும் கேளீர் என்றனர் ஆனால் அண்டை மாநிலத்தில் இருந்து தண்ணீர் கூட தருவதற்கு தயாராக இல்லை. ஒன்றே குலம் ஒருவனே தெய்வம் என்றனர் ஆனால் பள்ளிக்கூடங்களில் சாதிச் சான்றிதழ் கேட்கிறார்கள்.விவசாயம் இந்தியாவின் முதுகெலும்பு என்றனர் ஆனால் நிலங்கள் எல்லாம் கார்ப்பரேட் நிறுவனத்திற்கு என்கிறார்கள்.விளை நிலங்கள் விலை நிலங்களாக உள்ளது.
அரசு மற்றும் அரசியல்வாதிகளிடம் நான் கேட்டுக் கொள்வது கல்வி மருத்துவம் தண்ணீர் மின்சாரம் இவைகளை இலவசமாக வழங்குங்கள் நாடு செழிப்புடன் இருக்கும்.குறிப்பாக தாய்மொழிக் கல்வியை கட்டாயமாக்க வேண்டும்.
நமது பாட்டன் பாரதியின் எண்ணங்கள் படி எல்லா துறைகளின் அறிவும் தமிழில் இருக்க வேண்டும் என்பதை நிஜமாக்க வேண்டும். கலாமின் தொலைநோக்கு படி அறிவியலும் தொழில்நுட்பங்களும் அழகுற தமிழில் எழுதப்பட வேண்டும்.
சிந்தியுங்கள் எனது உறவுகளே இதுவரை நமது மூளை பிறரின் கட்டுப்பாட்டில் செயல்பட்டது போதும்.இந்தியா 2020 என்றார் எனது கலாம் ஐயா இன்று அவர் இல்லையென்றாலும் அவரின் நம்பிக்கை விதைகள் நாம் தான் என்பதை உணர வேண்டும். இந்தியா வல்லரசு அவரின் இலட்சியம் இந்தியா நல்லரசு இதுவே நமது முதல் இலட்சியமாக இருக்க வேண்டும்.
நல்லாட்சி மலர்ந்திட நல்ல தலைமையை உருவாக்கிட நல்லரசு அமைத்திட உங்களில் ஒருவராக நான்.
வைசாலி செல்வம்.
புதன், 3 மே, 2017
வாழ்க்கையை மேம்படுத்தக்கூடியவை
மனைவியை ஆற்றங்கரைக்கு அழைத்துச்சென்ற கணவர்!
👉 நடந்தது என்ன?
ஆற்றங்கரைக்குத் தன் மனைவியை அழைத்துப் போயிருந்தார் கணவர்…
அவளிடம் ஒரு பையைக் கொடுத்தார்.
பெரிய பெரிய கற்களைக் காண்பித்தார்.
இந்தப் பையை அந்தக் கற்களால் நிரப்பு என்றார்.
மனைவி நிரப்பி எடுத்து வந்தாள்.
இதற்கு மேல் நிரப்ப முடியாது என்றாள்.
கணவர் கீழே கிடந்த கூழாங்கற்களில் சிலவற்றை எடுத்தார்.
அதே பையில் போட்டுக் குலுக்கினார்.
அவை பெரிய கற்களுக்கு நடுவில் இருந்த இடைவெளிகளில் உள்ளே இறங்கின.
ஒரு கட்டத்தில் மேற்கொண்டு கூழாங்கற்களைப் போட இடம் இல்லை.
இப்போதாவது நிரம்பிவிட்டதாக ஒப்புக் கொள்வீர்களா ?
” கேட்டாள் மனைவி.
கணவர் அங்கேயிருந்த மணலை அள்ளிப் பையில் போட்டார்.
பையை மேலும் குலுக்கினார்.
கற்கள், கூழாங்கற்கள் இவற்றுக்கு இடையில் இருந்த இடைவெளிகளில் மணல் இறங்கியது.
இதே பையை முதலில் மணலால் நிரப்பியிருந்தால்,
பெரிய கற்களுக்கு இடம் இருந்திருக்குமா ?
என்று கணவர் கேட்டபோது இருந்திருக்காது என்று ஒப்புக் கொண்டாள் மனைவி.
வாழ்க்கையை மேம்படுத்தக்கூடிய
1). அன்பு,கருணை,
உடல்நலம்,மனநலம், போன்ற உன்னதமான விஷயங்கள்,
பெரிய கற்கள் போன்றவை.
2). வேலை,வீடு,கார், போன்ற செல்வங்கள் கூழாங்கற்களுக்குச் சமமானவை.
3). கேளிக்கை,வீண் அரட்டை போன்ற அற்ப விஷயங்கள் இந்த மணல் போன்றவை.
முதலில் பெரிய விஷயங்களுக்கு வாழ்க்கையில் இடம் கொடுங்கள்
அதன் பின்னும் சின்ன சின்ன விஷயங்களுக்கு இடம் இருக்கும்.
ஆனால்,
உங்கள் வாழ்க்கையை அற்பமான விஷயங்களுக்காகச் செலவழித்துவிட்டால்,
👉முக்கியமான விஷயங்களுக்கு இடம் இருக்காது.
👉 நடந்தது என்ன?
ஆற்றங்கரைக்குத் தன் மனைவியை அழைத்துப் போயிருந்தார் கணவர்…
அவளிடம் ஒரு பையைக் கொடுத்தார்.
பெரிய பெரிய கற்களைக் காண்பித்தார்.
இந்தப் பையை அந்தக் கற்களால் நிரப்பு என்றார்.
மனைவி நிரப்பி எடுத்து வந்தாள்.
இதற்கு மேல் நிரப்ப முடியாது என்றாள்.
கணவர் கீழே கிடந்த கூழாங்கற்களில் சிலவற்றை எடுத்தார்.
அதே பையில் போட்டுக் குலுக்கினார்.
அவை பெரிய கற்களுக்கு நடுவில் இருந்த இடைவெளிகளில் உள்ளே இறங்கின.
ஒரு கட்டத்தில் மேற்கொண்டு கூழாங்கற்களைப் போட இடம் இல்லை.
இப்போதாவது நிரம்பிவிட்டதாக ஒப்புக் கொள்வீர்களா ?
” கேட்டாள் மனைவி.
கணவர் அங்கேயிருந்த மணலை அள்ளிப் பையில் போட்டார்.
பையை மேலும் குலுக்கினார்.
கற்கள், கூழாங்கற்கள் இவற்றுக்கு இடையில் இருந்த இடைவெளிகளில் மணல் இறங்கியது.
இதே பையை முதலில் மணலால் நிரப்பியிருந்தால்,
பெரிய கற்களுக்கு இடம் இருந்திருக்குமா ?
என்று கணவர் கேட்டபோது இருந்திருக்காது என்று ஒப்புக் கொண்டாள் மனைவி.
வாழ்க்கையை மேம்படுத்தக்கூடிய
1). அன்பு,கருணை,
உடல்நலம்,மனநலம், போன்ற உன்னதமான விஷயங்கள்,
பெரிய கற்கள் போன்றவை.
2). வேலை,வீடு,கார், போன்ற செல்வங்கள் கூழாங்கற்களுக்குச் சமமானவை.
3). கேளிக்கை,வீண் அரட்டை போன்ற அற்ப விஷயங்கள் இந்த மணல் போன்றவை.
முதலில் பெரிய விஷயங்களுக்கு வாழ்க்கையில் இடம் கொடுங்கள்
அதன் பின்னும் சின்ன சின்ன விஷயங்களுக்கு இடம் இருக்கும்.
ஆனால்,
உங்கள் வாழ்க்கையை அற்பமான விஷயங்களுக்காகச் செலவழித்துவிட்டால்,
👉முக்கியமான விஷயங்களுக்கு இடம் இருக்காது.
படித்ததில் பிடித்தது
கர்ப்பமாக இருந்த தாய், தன் மகளிடம் கேட்டாள். "உனக்குத் தம்பி வேண்டுமா அல்லது தங்கை வேண்டுமா?"
♥மகள், "தம்பி வேண்டும்" என்றாள்.
"யாரைப் போல் தம்பி இருக்க வேண்டும்?" என்று தாய் கேட்க, "ராவணனைப் போல் இருக்க வேண்டும்" என்றாள் மகள்.
♥திடுக்கிட்ட தாய், "உனக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறதா என்ன? ராமனைப் போல் ஒரு சகோதரன் வேண்டும் என்று சொல்லாமல், ராவணனைப் போல் வேண்டும் என்கிறாயே!" என்றாள்.
♥"அம்மா! நான் சொன்னதில் என்ன தவறு இருக்கிறது? உடன் பிறந்த சகோதரி அவமானப்பட்டாள் என்பதற்காக, ராவணன் தன் அரியணை, ராஜ்ஜியம், உயிர் அனைத்தையும் இழந்தானே! தன் எதிரியின் மனைவியைச் சிறை பிடித்த போதிலும், அவளை ஒரு போதும் தீண்டவில்லையே!
♥ஆனால் ராமன், யாரோ ஒருவன் சொன்னான் என்பதற்காக, கர்ப்பவதியாக இருந்த தன் மனைவியை ஒதுக்கி வைத்தானே! அவளை தீக்குளித்துத் தன் புனிதத்தை நிரூபிக்கச் செய்தானே!
உனக்கு வேண்டுமானால் ராமனைப் போல் மகன் பிறக்கட்டும். ஆனால் எனக்கு ராவணன் போன்ற சகோதரன் தான் வேண்டும்" என்றாள் மகள்.
♥தாயால் பதில் கூற முடியவில்லை. அதிர்ந்து போனாள்.
♥இக்கதை ஒரு விவாதத்தைத் துவக்கலாம். ஆனால் கதையின் உட்பொருளைக் கூர்ந்து நோக்கினால், ஒரு உண்மை புலப்படும்.
♥இவ்வுலகில் நல்லவர், கெட்டவர் என்பது நாம் நம் தனிப்பட்ட அனுமானங்களால் முடிவு செய்வதே.
கேளிக்கைகளில் திளைப்பவன் என்பதால், ஒருவன் கெட்டவன் என்றில்லை. கோவிலுக்குச் செல்பவன் என்பதால், ஒருவன் நல்லவனும் இல்லை.
♥கோவிலுக்கு வெளியே இருக்கும் ஏழையும் சரி, கோவிலுக்கு உள்ளே இருக்கும் பணக்காரனும் சரி - கேட்பதென்னவோ பிச்சை தான்.
நம் எண்ணங்கள் தராசின் முள் போல் இருத்தல் வேண்டும்.
♥மகள், "தம்பி வேண்டும்" என்றாள்.
"யாரைப் போல் தம்பி இருக்க வேண்டும்?" என்று தாய் கேட்க, "ராவணனைப் போல் இருக்க வேண்டும்" என்றாள் மகள்.
♥திடுக்கிட்ட தாய், "உனக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறதா என்ன? ராமனைப் போல் ஒரு சகோதரன் வேண்டும் என்று சொல்லாமல், ராவணனைப் போல் வேண்டும் என்கிறாயே!" என்றாள்.
♥"அம்மா! நான் சொன்னதில் என்ன தவறு இருக்கிறது? உடன் பிறந்த சகோதரி அவமானப்பட்டாள் என்பதற்காக, ராவணன் தன் அரியணை, ராஜ்ஜியம், உயிர் அனைத்தையும் இழந்தானே! தன் எதிரியின் மனைவியைச் சிறை பிடித்த போதிலும், அவளை ஒரு போதும் தீண்டவில்லையே!
♥ஆனால் ராமன், யாரோ ஒருவன் சொன்னான் என்பதற்காக, கர்ப்பவதியாக இருந்த தன் மனைவியை ஒதுக்கி வைத்தானே! அவளை தீக்குளித்துத் தன் புனிதத்தை நிரூபிக்கச் செய்தானே!
உனக்கு வேண்டுமானால் ராமனைப் போல் மகன் பிறக்கட்டும். ஆனால் எனக்கு ராவணன் போன்ற சகோதரன் தான் வேண்டும்" என்றாள் மகள்.
♥தாயால் பதில் கூற முடியவில்லை. அதிர்ந்து போனாள்.
♥இக்கதை ஒரு விவாதத்தைத் துவக்கலாம். ஆனால் கதையின் உட்பொருளைக் கூர்ந்து நோக்கினால், ஒரு உண்மை புலப்படும்.
♥இவ்வுலகில் நல்லவர், கெட்டவர் என்பது நாம் நம் தனிப்பட்ட அனுமானங்களால் முடிவு செய்வதே.
கேளிக்கைகளில் திளைப்பவன் என்பதால், ஒருவன் கெட்டவன் என்றில்லை. கோவிலுக்குச் செல்பவன் என்பதால், ஒருவன் நல்லவனும் இல்லை.
♥கோவிலுக்கு வெளியே இருக்கும் ஏழையும் சரி, கோவிலுக்கு உள்ளே இருக்கும் பணக்காரனும் சரி - கேட்பதென்னவோ பிச்சை தான்.
நம் எண்ணங்கள் தராசின் முள் போல் இருத்தல் வேண்டும்.
நம் உடம்பிலே மிக முக்கியமான உறுப்பு
'நம் உடம்பிலே மிக முக்கியமான உறுப்பு' என்ற தலைப்பில் ஆசிரியர் தன் மாணவர்களை ஒரு கட்டுரை எழுதச் சொன்னார்.
அந்த வகுப்பில் உடல் ஊனமுற்ற ஒரு சிறுமியும் இருந்தாள்.
கட்டுரைக்கான தலைப்பே அவளுக்கு பிடிக்கவில்லை. தவிர, சக மாணவர்கள் அந்தச் சிறுமியின் ஊனத்தைச் சொல்லி கிண்டல் செய்ய.. அன்றைய வகுப்பு பாவம் அவளுக்கு நரகமாகக் கழிந்தது.
மாலை வீடு திரும்பியதும் அந்தச் சிறுமி தன் தாயின் தோள்களில் சாய்ந்து அழுதபடியே கேட்டாள்..
"நம் உடம்பில் முக்கியமான உறுப்பு எதும்மா?"
"உடம்பிலே கண் தான் மா முக்கிய உறுப்பு! ஏன் என்றால், கண் இல்லையெனில் உலகமே இருட்டாகி விடுமே" என்று சொன்னாள் அம்மா.
ஆனால், அதைச் சரியான பதிலாக அந்தச் சிறுமியால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
"அப்படியானால் கைகள் தான் முக்கியமான உறுப்பு. அது இல்லையென்றால் நம்மால் எழுதவோ, வேறு எந்த வேலையும் செய்ய முடியாது இல்லையா" ..
அம்மாவின் இந்த பதிலையும் சிறுமியால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
கடைசியில் அந்தச் சிறுமியே ஒரு பதிலைச் சொன்னாள்.."
நம் உடம்பில் தோள்கள் தான்மா முக்கியமான உறுப்பு. மற்ற உறுப்புக்கள் எல்லாம் நமக்கு உதவியாக இருக்கும்.
ஆனால், தோள்கள் தான் ஆதரவு தேடும் அன்பு முகங்கள் புதைந்து கொள்ள இடம் கொடுக்கும்.
இதோ, நான் கூட இப்போது உன் தோள்களிலே முகம் புதைந்து அழுகிறேன்.
என்னைப் பொறுத்தவரை அடுத்தவர் அழுவதற்கு இடம் கொடுக்கும் தோள்கள் தான் உடம்பிலே முக்கியமான உறுப்பு மா!"
கட்டுரைக்கான தலைப்பே அவளுக்கு பிடிக்கவில்லை. தவிர, சக மாணவர்கள் அந்தச் சிறுமியின் ஊனத்தைச் சொல்லி கிண்டல் செய்ய.. அன்றைய வகுப்பு பாவம் அவளுக்கு நரகமாகக் கழிந்தது.
மாலை வீடு திரும்பியதும் அந்தச் சிறுமி தன் தாயின் தோள்களில் சாய்ந்து அழுதபடியே கேட்டாள்..
"நம் உடம்பில் முக்கியமான உறுப்பு எதும்மா?"
"உடம்பிலே கண் தான் மா முக்கிய உறுப்பு! ஏன் என்றால், கண் இல்லையெனில் உலகமே இருட்டாகி விடுமே" என்று சொன்னாள் அம்மா.
ஆனால், அதைச் சரியான பதிலாக அந்தச் சிறுமியால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
"அப்படியானால் கைகள் தான் முக்கியமான உறுப்பு. அது இல்லையென்றால் நம்மால் எழுதவோ, வேறு எந்த வேலையும் செய்ய முடியாது இல்லையா" ..
அம்மாவின் இந்த பதிலையும் சிறுமியால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
கடைசியில் அந்தச் சிறுமியே ஒரு பதிலைச் சொன்னாள்.."
நம் உடம்பில் தோள்கள் தான்மா முக்கியமான உறுப்பு. மற்ற உறுப்புக்கள் எல்லாம் நமக்கு உதவியாக இருக்கும்.
ஆனால், தோள்கள் தான் ஆதரவு தேடும் அன்பு முகங்கள் புதைந்து கொள்ள இடம் கொடுக்கும்.
இதோ, நான் கூட இப்போது உன் தோள்களிலே முகம் புதைந்து அழுகிறேன்.
என்னைப் பொறுத்தவரை அடுத்தவர் அழுவதற்கு இடம் கொடுக்கும் தோள்கள் தான் உடம்பிலே முக்கியமான உறுப்பு மா!"
வியாழன், 6 ஏப்ரல், 2017
பெண் குழந்தை வேண்டாம்.
என் சின்னஞ்சிறு கண்மணிக்கு,
உன்னை எவ்வாறு நான் பாதுகாப்பேன்.. உன்னை நான் எதை கொண்டு
மறைப்பேன் ..,எந்த ஆடை உடுத்தி அழகு பார்பேன்..உன்னை நான் எங்கு
விளையாட விடுவேன்..,எந்த பள்ளிகூடம் பாதுகாப்பானது என்று அனுப்புவேன்..,உன்னை மாமன், நண்பன் என்று யாரை நம்பி அனுப்புவேன்..,
இந்த பொல்லா உலகில் உன்னை எவ்வாறு பாதுகாப்பேன்?
ஆண்மகனே ( சில) எப்படி இவ்வாறு மாறி போனாய்? உன்னை எளிதில்
வந்தடையும் சீர்கெட்ட ஊடகங்களா..?
தாயாக கலங்குகிறேன் உன்னை எவ்வாறு பாதுகாப்பேன் என்று..?
கடவுளே மகள் வேண்டாம் என்றால், எனக்கு குழந்தையே வேண்டாம்.
சுவையான குடிநீர்
''சுமார் 100 ரூபாய்க்குள் ஆரோக்கியமான, சுவையான குடிநீரைப் பெற முடியும். மூன்று மண் பானைகளை வாங்குங்கள். ஆனால், அவற்றை ஸ்பெஷலாக வடிவமைக்கச் சொல்லிக் கேட்டு வாங்குங்கள்.
மண் பானையைச் செய்யும்போதே இரண்டு பானைகளில் தலைமுடி அளவுக்கு நுண்ணிய துளையை ஏற்படுத்தித் தரச் சொல்லுங்கள். பானையைத் தயாரித்த பின்பு அப்படித் துளையிட முடியாது. உடைந்துவிடும். மூன்றாவது பானையில் குழாய் இணைப்பு வைக்கச் சொல்லுங்கள். குழாய் இணைப்பு வைத்த பானையின் மேல் துளையிடப்பட்ட இரண்டு பானைகளையும் அடுக்கிவையுங்கள். நடுப் பானையில் தேங்காய் சிரட்டையை எரியவைத்துப் பொடித்தோ அல்லது கரித் துண்டுகளாகவோ சுமார் ஒன்றரை கப் அளவுக்கு நிரப்பிக்கொள்ளுங்கள். மேல் பானையில் சுமார் 20 கூழாங்கற்களை நிரப்புங்கள். இப்போது, மேல் பானையில் கொதிக்கவைத்து ஆறவைத்த தண்ணீரை மெதுவாக ஊற்றி நிரப்புங்கள். இரவில் தண்ணீர் ஊற்றினால், விடிந்த பின்பு அடிப்பானையில் குடிநீர் சேகரமாகிவிடும். ப்ளோரைடு உள்ளிட்ட நச்சுக் கனிமங்களை அகற்றி சுமார் 250 டி.டி.எஸ்ஸுக்குக் கீழே இருக்கும் கிரிஸ்டல் கிளியர் குடிநீர் இது. குடிக்கும்போது ஏதாவது ஒரு ஃப்ளேவர் வேண்டும் என்பவர்கள், தேங்காய் சிரட்டைக்குப் பதில் எலுமிச்சை அல்லது ஆரஞ்சுப் பழத் தோல்களைக் காயவைத்து எரித்து அந்தக் கரித்தூளை நிரப்பலாம். கரித்தூளையும் கூழாங்கற்களையும் 15 நாட்களுக்கு ஒருமுறை மாற்றுவது அவசியம்.
தர்மபுரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஃப்ளோரைடு தன்மை அதிகம் இருக்கும் தண்ணீரைக்கூட இந்த முறையில் சுத்தமான குடிநீராக மாற்றிக் குடிக்கிறார்கள். ஆனால், கடல் நீர் ஊடுருவிய நிலத்தடி நீர் மற்றும் தொழிற்சாலை ரசாயனக் கழிவுகள் கலந்த நீரை இந்த முறையில் சுத்தம் செய்ய முடியாது.
உருவத்தை பார்த்து யாரையும் எடை போடக்கூடாது...!!
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது.
கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய ஜப்பானில் இருந்து ஒரு குழு வந்திருந்தது.
அதில் ஒரு 20 வயது மதிக்கத்தக்க ஒருவன். துறுதுறுவென்று எல்லாரிடமும், பேசிக்கொண்டும் சிரித்துக் கொண்டுமிருக்கிறான்.
இங்கிலாந்து கம்பெனியின் நிர்வாகிக்கு அந்தச் சிறுவனைக் கண்டதுமே ஏனோ பிடிக்கவில்லை. இரண்டொரு நாளில் இன்ஸ்டலேஷன் பணிகள் துவங்க இருக்க, ஜப்பான் நிறுவனத்திற்கு மின்னஞ்சல் அனுப்புகிறார்.
“ஏப்பா.. அவ்ளோ துட்டுப் போட்டு வாங்கிருக்கோம். சர்வீஸ் டீம்ல சின்னப்பையனைலாம் சேர்த்தி அனுப்பிருக்கீங்க? என்ன டூர் வந்திருக்காங்களா? ஏர்போர்ட்ல இருந்து ரூமுக்கு அனுப்ச்சாச்சு.
நாளைன்னைக்கு இன்ஸ்டால் பண்றப்ப அந்தப் பையன் மிஷின்ல கைய வைக்கக்கூடாது ஆமா. அதென்ன சின்னப்புள்ளைக சமாச்சாரமா?” - இதுதான் அவர் அனுப்பிய மின்னஞ்சலின் சாராம்சம்.
உடனடியாக பதில் அஞ்சல் வந்தது. “மன்னிக்க வேண்டும். தவறுதான். நாங்கள், அந்தச் சிறுவனுக்கு பதில் கொஞ்சம் சீனியரை டீமுக்கு அனுப்புகிறோம். அந்தச் சிறுவன் அங்கே இருப்பான். ஆனால் கருவியைக் கையாள மாட்டான்” என்று பதில் வருகிறது.
சொன்னபடியே கொஞ்சம் வயதில் மூத்தவர் வருகிறார். குழுவுடன் இணைந்து பணியாற்றுகிறார். அந்தச் சிறுவனும் அவர்களுடன்தான் இருக்கிறான். ஆனால் அந்த மிஷின் வேலை செய்யும் இடத்திலிருந்து கொஞ்சம் தள்ளியே அமர்ந்திருக்கிறான்.
இந்தக் குழுவினார் டீ ப்ரேக், லஞ்ச் ப்ரேக்கெல்லாம் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்து, இரண்டு நாட்களில் இயந்திரத்தை நிறுவிவிடுகிறார்கள். வேலை வெற்றிகரமாக முடிந்துவிடுகிறது.
வழியனுப்பும்போது, இந்த இங்கிலாந்து கம்பெனி நிர்வாகிக்கு சின்னதாக ஒரு குற்ற உணர்வு. என்ன இருந்தாலும் அவ்வளவு கடுமையாக மின்னஞ்சல் அனுப்பியிருக்கக்கூடாது என்று தோன்றுகிறது.
அந்தச் சிறுவன் அவன் பாட்டுக்கு சிரித்த முகத்துடனேயே வளைய வருகிறான். அவனிடம் இதைச் சொல்லிவிட்டால் மனது லேசாகிவிடும் என்று உணர்கிறார். குழுவினர் எல்லாரும் இருக்க, சொல்கிறார்....
“ஸாரி.. ஆக்சுவலி பலகோடி ரூபாய் ப்ராஜக்ட். இன்ஸ்டால் பண்றப்ப எதும் சிக்கல் வந்தா அப்பறம், பணம் நேரம்னு பெரிய நஷ்டமாகிடும். அதான் கொஞ்சம் சீனியர் வேணும்னு கேட்டேன்.
மத்தபடி ஐ லைக் த பாய். துறுதுறுன்னு இருக்கான். ஆனா இந்த டீம்ல இப்படி ஒரு சின்னப்பையன் வந்தது எனக்கு சரின்னு படலை. அதான்..” என்று பாலிஷாகச் சொல்கிறார்.
அந்தச் சிறுவன் அதே புன்னகையுடனே இருக்க, புதிதாக வந்தவர் சொல்கிறார். “இட்ஸ் ஓகே சார்.
நாங்க வாடிக்கையாளர் கருத்துக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுப்போம். நீங்க சொன்னதுமே என்னை அனுப்பி வெச்சாங்க. இப்ப மிஷின் நல்லபடியா இன்ஸ்டால் செஞ்சு, ஓடிட்டிருக்கு. ஆனா ஒரு விஷயம்..” தயங்குகிறார்.
”பரவால்ல.. எதாருந்தாலும் சொல்லுங்க”
“நான் அந்தக் கம்பெனில அக்கவுண்ட்ஸ்ல வொர்க் பண்ற ஆளுதான். எனக்கு இந்த மிஷின் பத்தி ஏபிசிடிகூட தெரியாது”
நிர்வாகி அதிர்ச்சியாகிறார். “அப்பறம் இன்ஸ்டலேஷனப்ப வேலை செஞ்சுட்டிருந்தீங்க?”
“இந்தப் பையன்கிட்ட போய்ப் போய்க் கேட்டு அவன் சொல்றத மட்டும் பண்ணினேன் அவ்ளதான்”
“அந்தப் பையன் எப்படி மிஷின் பக்கமே வராம, உங்களுக்கு இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் குடுத்திருக்கமுடியும்?”
“முடியும். ஏன்னா, இந்த மிஷினைக் கண்டுபிடிச்சதே அவன்தான்”
நீதி:
உருவத்தை பார்த்து யாரையும் எடை போடக்கூடாது...!!
கவனம் தேவை
ஒரு எளிமையான கதை அதே சமயத்தில் ஆழமான சிந்தனை
தற்போது நல்ல நிலையிலிருக்கும் சில மூத்த மாணவர்கள் ஒன்றாக சேர்ந்து தாங்கள் படித்தப் பல்கலைக் கழகத்தின் பேராசிரியரை சந்திக்க சென்றனர். சந்திப்பின் போது சுவாரஸ்யமாக சென்றுக்கொண்டிருந்த உரையாடல் திடீரென்று வேலை மற்றும் வாழ்க்கையில் ஏற்படும் மன அழுத்தம் பற்றிய விவாதமாக மாறியது.
வந்தவர்களுக்கு காபி கொடுக்க சமையலறைக்கு சென்ற பேராசிரியர் திரும்ப வரும்போது ஒரு பெரிய கூஜாவில் காப்பியையும் பலவிதமான கோப்பைகளையும் எடுத்து வந்தார். அவை பீங்கான், பிளாஸ்டிக், வெள்ளி, எவர்சில்வர், கண்ணாடி கோப்பையென சில விலை உயர்ந்தவைகளாகவும், வேலைப்பாடுகளுடனும் சில சாதாரணமாகவும் பலவிதங்களில் இருந்தன. பேரசிரியர் அவற்றை மேஜை மீது வைத்துவிட்டு, எல்லோரையும் சூடான காப்பியை தாங்களாகவே ஊற்றி குடிக்க சொன்னார்.
எல்லோரும் ஆளுக்கொரு கோப்பையில் காப்பியை ஊற்றி அருந்த தொடங்கும்போது பேராசிரியர் சொன்னார், நண்பர்களே கவனியுங்கள்
"நீங்க எல்லோரும் விலை உயர்ந்த, அழகான கோப்பைகளில் காப்பியை எடுத்திருக்கிறீர்கள். மேஜையில் மீதி இருப்பது மிக சாதாரணமான, விலை மதிப்பற்ற கோப்பைகள். உங்கள் அனைவருக்கும் மிகச் சிறந்த பொருட்கள்தான் தேவைப்படுகின்றன. அதைத்தான் எதிர்ப்பார்க்கிறீர்கள். அது தான் உங்கள் பிரச்சினனகளுக்கும் மன அழுத்தத்திற்கும் காரணம்."
"உண்மையில் நம் அனைவருக்கும் வேண்டியது காப்பி, கோப்பையல்ல. ஆனால் நீங்கள் எல்லோரும் நல்ல விலையுயர்ந்த கோப்பையை தான் எடுக்க முயற்சித்தீர்கள், மேலும் அடுத்தவர் எப்படிப்பட்ட கோப்பையை எடுத்திருக்கிறார் என்பதையும் நோட்டமிட்டீர்கள்."
"இப்பொழுது வாழ்க்கை என்பதை காப்பி என்று வைத்துக்கொண்டால் வேலை, பணம், சமூகத்தில் நமக்குள்ள பொறுப்பு, அந்தஸ்து ஆகியவை கோப்பைகள். இவையெல்லாம் வாழ்க்கையை வாழ்வதற்காக நம்மால் பயன்படுத்தப்படும் கருவிகள். இவற்றால் எல்லாம் வாழ்க்கையின் தரம் மாறாது."
"பொதுவாக நாம் கோப்பையின் மீதே கவனம் வைப்பதால் காப்பியின் சுவையை அனுபவிக்காமல் போய்விடுகிறோம்."
"ஆகவே நண்பர்களே கோப்பையில் உங்கள் கவனத்தை சிதறவிடாமல் காப்பியின் சுவையை அனுபவியுங்கள்."
கல்வி
இன்றைய காலக்கட்டத்தில் கல்வி என்பது வியாபாரமாக
உள்ளது. கல்வி என்பது விலை மதிக்கமுடியாதது.
ஆனால் விலை கொடுத்து
வாங்க வேண்டிய சூழ்நிலை. கல்வியை எப்படி
கற்க வேண்டுமென்றால்,
”கற்க கசடற கற்பவை கற்றப்பின்
நிற்க அதற்கு
தக”
கல்வியை கசடு இல்லாமல் கற்க வேண்டும்.
கசடு இல்லாமல் கற்றால் மட்டுமே
அது மனதில் அழுத்தமாய்
பதியும். எனவே, தவறில்லாமல் கல்வியை கற்போம்.
அறிவை பெருக்குவோம்.
சமூக ஊடகங்கள்
சமூக ஊடகங்களான வாட்ஸ்அப், பேஸ்புக், டிவிட்டர் போன்ற ஊடகங்கள் தகவல் பரிமாற்றத்திற்காக மட்டுமல்ல தேடலின்
முயற்சியில் ஈடுபடுவதற்காகவும் தான். சமூக ஊடகங்களில் வரும் எந்த ஒரு செய்தியையும் அப்படியே நம்பாமல் அந்த செய்தி உண்மையா? இல்லையா?
என்பதைத் தெரிந்துக்கொள்வதற்காக தேடலின் முயற்சியில் ஈடுபட வேண்டும். தேடலின் முயற்சியில்
ஈடுபடுவது தான் சமூக ஊடகங்களின் நோக்கம். தேடலில் ஈடுபடும் போது நம்மால்
பல விஷயங்களை தெரிந்துக்கொள்ள முடியும். எனவே, தேடலில் ஈடுபடுங்கள்! அறிவை வளர்த்துக்
கொள்ளுங்கள்!.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)