எம்.கோமதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எம்.கோமதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 26 ஏப்ரல், 2016

ஏக்கம்

               Image result for நிலா

வற்றிப்போன குளங்கள்….
முகம் பார்க்க முடியாத ஏக்கத்தில்
நிலா!

ஞாயிறு, 10 ஏப்ரல், 2016

பழங்களின் பெயர்

       
Image result for ஹிந்தி மற்றும் தமிழ்

ஹந்தி -ப்பல்                                தமிழ் - பழம்

1.ஆம்                                         மாம்பழம்
2.அங்கூர்                                      திராட்சை
3.கேலா                                       வாழைப்பழம்
4.அனார்                                       மாதுளம்பழம்

5.அம்ருத்                                      கொய்யாப்பழம்

சனி, 5 மார்ச், 2016

கொசு யாரை கடிக்காது?

   

Image result for mosquito


உலக்கத்தின் ஆதி உயிரினங்களுள் ஒன்று கொசு. அது நமக்குத் தரும் தொல்லைகள் சொல்லி மாளாது. 2.5 மில்லி கிராம் மட்டுமே எடை கொண்ட கொசுவுக்குப் பற்கள் மட்டும் 47 உள்ளனவாம்.
3 ஆயிரம் வகை கொசுக்கள் இருந்தாலும், 80 வகை கொசுக்கள் மட்டுமே நம் ரத்தத்தை உறிஞ்சுகன்றன. ஒரு கொசு, முட்டையிலிருந்து, முழு வளர்ச்சி அடைந்த கொசுவாக மாறுவதற்கு தேவைப்படும் காலம்,5 நாட்கள் மட்டுமே முட்டைலயிலிருந்து வெளிவந்த சில நிமிடங்களுக்கு பின், கொசுக்கள் இனப் பெருக்கம் செய்ய முடியும், மேலும், கொசுவுக்கு முள் போன்ற கூரிய முனையுடைய இரத்த உறிஞ்சுக்குழல் உண்டு.உலகின் அபாயகரமான பூச்சியினம் என்று பெரும் பாலான நாடுகளில் அறிவிக்கப்பட்டது கொசு தான்.

ஆண் கொசுவைவிட பெண் கொசுவே பெரியது.ஆண் கொசு சைவம்,இலை தழைகளையே அது உணவாக உட்கொள்கிறது.கடிப்பதும் ரத்தம் குடிப்பதும் பெண் கொசுதான்
.
 அதேபோல், கொசுக்கள் பெண்களைத்தான் அதிகமாக கடிக்கின்றன. காரணம் அவர்கள் உடலில் உள்ள ஈஸ்ட்ரோ ஐன்கள், கொசுக்களை கவருகின்றன.பெண் தான் பெண்ணுக்கு எதிரி என்பது கொசுக்கள் விஸயத்தில் உண்மையே.

 அதேநேரம் “வைட்டமின் பி” கொசுவின் எதிரி.இந்த வைட்டமின் பி சத்து உடலில் அதிகமாக இருப்பவர்களை கொசு நெருங்குவதில்லை.
கொசுக்களை விரட்ட நாம் பயன்படுத்தும் பொருட்களில் கொசுக்களை அழிக்கும் ரசாயனம் அலெத்ரின் சார்பு பொருட்கள் உள்ளன. இது கொசுக்களை மட்டும் அழிப்பதில்லை மனிதனின் சுவாசப்பையில் நச்சுப்பொருளாக கலந்து நாளடைவில் மார்புச்சளி, தும்மல்,தலைவலி போன்ற கேடுகளை உண்டாக்குக்கின்றனர்.


உடலில் தேங்காய் எண்ணெய் அல்லது வேப்ப எண்ணெய் தடவி கொண்டால் இரவில் கொசுக்கள் மட்டுமல்ல வேறு சில பூச்சிகளும் நம்மை கடிக்காது.

வெள்ளி, 4 மார்ச், 2016

நாலடியார்

         கல்வியே சிறந்த செல்வம்;

Image result for naladiyar tamil

         பாடல்:

                கல்வி கரை இல; கற்பவர் நாள் சில;
                மெல்ல நினைக்கின், பிணி பல; தெள்ளிதின்
                ஆராய்ந்து அமைவுடைய கற்பவே, நீர் ஒழியப்
                பால் உண் குருகின் தெரிந்து.
         
           பொருள்:

                  கல்வி வைத்த இடத்திலிருந்து பிறரால் கவர்ந்து கொள்ள முடியாது. தமக்கு கிடைத்த கல்வியை பிறருக்கு கொடுப்பதால் கல்வி அறிவு பெருகுமே தவிர அழிய வாய்ப்பு இல்லை.மேலான படை வலிமையுடை மன்னர் சினத்தாலும் கவர்ந்து கொள்ள முடியாது.



தாயன்பு

                              தாயன்பு


     





தாய் குழந்தையிடத்தில் வைக்கும் அன்பு மேலானது. தாய் பதில் பலனை எதிர்பாராது குழந்தையிடத்தே அன்பு வைக்கின்றார். அது மகிழ்வதைப் பார்த்து அவளும் மகிழ்கின்றாள்.அது வருந்துவதை கண்டு தானும் வருந்து கின்றாள்.பதில் பலனை எதிர்பாராது செலுத்தும் அன்பு கடவுள் தன்மை உடையது. தன்னலம் கருதாது இவ்வுலகில் சிலவற்றைச் செய்கின்றவர்களைப் புனிதமுடையவர்களாக வைத்து உலகம் போற்றுகின்றது. “தனக்கென வாழாப் பிறர்க்குரியாளன்” என்னும் உயர்ந்த பண்பு காரணமாக புத்தர் உலக மக்களால் போற்றப்பட்டார்.ஒவ்வொரு தாயும் தன் குழந்தைகளுக்குத் தெய்வம் ஆவள். “அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்” என்பதும் இக்கருத்து பற்றியதேயாகும். கடவுள் ஒவ்வொரு வீட்டிலும் இருப்பதற்கு பதில், தாயை அங்கு அனுப்பியுள்ளார்.

வெள்ளி, 26 பிப்ரவரி, 2016

அன்னை தெரசா

                                                     

  அன்பு சுரக்கும் உள்ளமே
  அருளும் கருணை இல்லமே!

   ஆதரவற்றவர்களை தழுவுமே
  அன்னை தெரசா கரங்களே!

  தாயை இழந்த மழலைக்கும்!
  நோயில் புரளும் மனிதர்க்கும்!

  சேவை செய்ய நீளுமே
  அன்னை தெரசா கரங்களே!

  உயிர்களிடத்தில் அன்பினை
  மீட்ட வந்த தேவதை!

  தியாக மெனும் சேவையை
  காக்க வந்த தாய்மையே!
  நீ மீண்டும் வந்து பிறக்கணம்
  ஆதரவற்றோர் அனைவரும்

  உன் அன்பு மழையில் நனையணும்!