பறக்கும் சைக்கிள்
பெரிய நகரங்களில் வாகனங்களில் செல்வது சாகசம் நிறைந்த ஒன்றாக மாறி வருகிறது.சைக்கிளில் செல்வதுகூட முடியாத ஒன்றாக உள்ளது.போக்குவரத்தில் சிக்கித்தவிக்கும் அந்த நேர்த்தில், அப்படியே பறந்து போனால் எப்படி இருக்கும் என்ற எண்ணம் பலருக்கும் தோன்றும். அப்படியொரு எண்ணம்தான் லேரிநீல் என்பவருக்கும் தோன்றியது.அந்த விளைவாக பறக்கும் சைக்கிளை கண்டுபிடிக்க அவர் விரும்பினார். டெக்சாஸ் மாநிலத்தின் அரோரோ பகுதியை சேர்ந்த இவரது விடாமுயற்சியில் உருவானதுதான் பறக்கும் சைக்கிள்.
இந்த சைக்கிளை தயாரிக்க லேரிநீலுக்கு பல வருடங்கள் தேவைப்பட்டன. ஏகப்பட்ட தடைகளை கடக்க வேண்டியிருந்தது இடையில் கண்டுபிடிப்பு நின்றுவிடுமோ என்று கூட பயந்தார்.ஆனாலும் எதற்கும் கலங்காமல், தளராத மனதுடன் போராடி இருதியில் கண்டுபிடித்துவிட்டார்.
பறக்கும் சைக்கிளை தரையிறக்கிய பின் அதன் இறக்கைகளை மடக்கி சாலைகளில் சாதாரணமாக செல்வதற்கு ஏற்ப மாற்றுவதுதான் மிகவும் கடினமாக இருந்தது . இந்த பறக்கும் சைக்கிளுக்கு'சூப்பர் ஸ்கை சைக்கிள்' ஏன்று பெயர் வைத்தார்.இதன் பவர் 582சிசி. இது 68அங்குலம் நீளமுள்ள இருகைகளை கொண்டுள்ளது. மணிக்கு 56 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும். இதை இறக்குவதற்கு 20 அடி நீளம் கொண்ட சமதளம் இருந்தால் போதும். அதிக பட்ச வேகம் மணிக்கு 104 கிமீ. ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் 5 மணி நேரம் பறக்கலாம். இந்த விலை 46ஆயிரம் பவுண்ட் இந்திய மதிப்பில் ரூ.37 லட்சத்து 46 ஆயிரத்து 750. இந்த சூப்பர் சைக்கிளை எல்லோரும் ஓட்டிவிட முடியாது. இதை ஓட்டுவதற்கு விமான பைலட் லைசென்சும் தரையில் ஓட்டுவதற்கு டிரைவிங் லைசென்சும் வேண்டும். 'பட்டர்பிளை ஏர் கிராப்ட்' என்ற நிறுவனம் இதன் தயாரிப்பு உரிமையை பெற்றுள்ளது. இதை அதிக அளவில் உற்பத்தி செய்வதற்கான பேட்டன்ட் உரிமையை அமெரிக்கா வழங்கியுள்ளது.
இந்த சூப்பர் ஸ்கை சைக்கிள் வேண்டும் என்று இப்போதே பல நாடுகளில் இருந்து ஆர்டர்கள் குவிந்து வருகின்றன். எல்லைப் பாதுகாப்பு படைக்கு இது மிகவும் உதவியாக இருக்கும் என்பதால் டெக்சாஸ் மாகாண ராணுவம் இந்த சைக்கிளுக்கு நிறைய ஆர்டர் கொடுத்துள்ளது.