வாழ்க தமிழ் அ.யுவராணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வாழ்க தமிழ் அ.யுவராணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 3 ஆகஸ்ட், 2017

தமிழை காப்போம்





          நம்மில் பலர் ஆங்கிலம் தான் பெரியது என்று எண்ணி தமிழ் மொழியை கண்டுகொள்ளாமல் அலட்சியம் செய்கின்றோம். ஆங்கிலம் என்பது மொழி தமிழ் என்பது நம்முடைய அடையாளம் என்பதை நாமும் மறந்து நம்முடைய சந்ததியினரும் மறக்க ஏதுவான வழியை உருவாக்கி கொண்டிருக்கிறோம். தமிழை வளர்க்க ஒரு சிறந்த வழி நம்முடைய தொலைக்காட்சியில் சன்சிங்கர், சூப்பர் சிங்கர் போன்று பாடும் நிகழ்ச்சிகளில் சினிமா பாடலை பாடுவது போல தமிழில் உள்ள “ திருக்குறள், இராமாயணம், பாரதியார், பாரதிதாசன் பாடல் தேவாரம்” போன்ற தமிழ் இலக்கிய பாடல்களை தன் சொந்த நடையில் பாடினால் தமிழ் வளர பெரிய உதவியாக இருக்கும்.