ஞாயிறு, 31 ஜனவரி, 2016

உலகை அச்சுறுத்தும் ஜிகா வைரஸ்                       உலகை அச்சுறுத்தும் ஜிகா வைரஸ் உலகம் முழுவதும்  ஜிகா வைரஸ் என்ற புதிய கிருமி பரவி வருகிறது. இதுவும் டெங்கு காய்ச்சல் போலவே, ஏடிஸ் வகை கொசுக்களால் ஏற்படும். இதற்கு தடுப்பூசி கிடையாது. இதுவரை யாரும் குணமானது இல்லை.  

ஜிகா வைரஸ்

      ஒருபுறம் விஞ்ஞானம் வளர வளர மறுபுறம் புதிய புதிய நோய்க்கிருமிகள் உருவாகி வருகின்றன. டெங்கு, சிக்கன்குனியாவைத் தொடர்ந்து, கொசுக்கடியால் புதிய கிருமி தொற்றி வருவது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.       அந்த கிருமியின் பெயர் ஜிகா வைரஸ்   1947 – ம்  ஆண்டு உகாண்டாவில் குரங்குகளை தாக்கியபோதுதான், இந்த கிருமி பற்றி தெரிய வந்தது. பிறகு, 1952–ம் ஆண்டு உகாண்டாவிரலும், டான்சியாவிலும் மனிதர்களையும் தாக்கியது.    சமீபகாலத்தில் , 2007 மற்றும் 2013-ம் ஆண்டுகளில் , பசுபிக் நாடுகளில்  ஜிகா வைரஸ்  தாக்கியது.  அதையடுத்து, கடந்த  ஆண்டு அமெரிக்க நாடுகளான பிரேசில் மற்றும் கொலம்பியாவிலும், ஆப்பிரிக்காவிலும் அக்கிருமி தாக்கியது. 13 அமெரிக்க நாடுகளில் இதன் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மூளை பாதிப்புடன் பிறக்கும் குழந்தைகள்

        பிரேசில் நாட்டில் கடந்த சில மாதங்களில், எண்ணற்ற குழந்தைகள் உடல் குறைபாடுடன் பிறந்து வருகின்றன. சிறிய தலையுடனும், மூளை பாதிப்புடனும் பிறந்துள்ளன. 3 ஆயிரத்து 500 குழந்தைகள் இதுபோன்று பிறந்திருப்பதால், இதற்கும் ஜிகா வைரசுக்கும் தொடர்பு இருக்கிறதா என்று விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். தொடக்க காலத்தில் அங்கொன்றும், இங்கொன்றுமாக ஜிகா வைரஸ் தாக்குதல் இருந்ததால், மூளை பாதிப்புக்கும் அதற்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழவில்லை. சமீபகாலமாகவே, இந்த சந்தேகம் எழுந்துள்ளது. ஏனென்றால், கர்ப்பிணி பெண்களின் தொப்புளை தாக்கும் ஜிகா வைரஸ், அதன் வழியாக, கருவில் இருக்கும் சிசுவின் மூளைக்கு செல்லக்கூடியது.

உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

       ஜிகா வைரஸ், அமெரிக்கா முழுவதும் பரவ வாய்ப்புள்ளதாக உலக  சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகம் முழுவதும் பரவக்கூடும் என்ற அச்சமும் எழுந்துள்ளது. இந்த கிருமி தாக்கியவர்கள், இதுவரை குணமானது இல்லை. இதற்கு தடுப்பூசியும் கிடையாது.   இந்தியாவில், இக்கிருமி தாக்கியதாக இதுவரை எந்த செய்தியும் இல்லை. அதனால் மத்திய அரசு எந்த உஷார் நடவடிக்கையும் பிறப்பிக்கவில்லை.
ஏடிஸ் கொசுக்கள்

 டெங்கு, சிக்கன்குனியாவைப் போன்று    ஜிகா  கிருமியும், ஏடிஸ் வகை கொசுக்கள் மூலம் பரவக்கூடியது. இந்த வகையான கொசுக்கள் பகலில்தான் கடிக்கும். பாத்திரம், டயர் போன்றவற்றில் தேங்கி உள்ள நன்னீரில், இக்கொசுக்கள் முட்டையிடும். ஆகவே, பாத்திரங்களை மூடி வைக்குமாறும், தேவையற்ற பொருட்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளுமாறும் அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
அறிகுறிகள்
  ஜிகா வைரஸ் தாக்கினால், டெங்கு காய்ச்சலுக்குரிய அறிகுறிகளே காணப்படும். அதாவது, ஒரு வாரத்துக்கு கடுமையான காயச்சல் நீடிக்கும். தோலில் கொப்புளம் ஏற்படும். கண்கள் சிவந்து விடும்ழ மூட்டு வலி, உடல் அசதி, தலைவலி ஏற்படும்.


கல்லாதவனுக்கு உபதேசிப்பதும் தீங்கே பழமொழி

                                           முன்றுறையரையனார்

கல்லா   தவரிடைக்   கட்டுரையின்  மிக்கதோர்

பொல்லாத   தில்லை   ஒருவற்குநல்லாய்!

இழுக்கத்தின்   மிக்க   இழிவில்லை;   இல்லை,

ஒழுக்கத்தின்   மிக்க   உயர்வு.

ஒழுக்கத்தின் மிக்க உயர்வு என்பது பழமொழி. ஒழுக்கத்தின் சிறப்பினால் வரும் உயர்வைவிட சிறந்த உயர்வு ஒருவர்க்கு எதுவுமில்லை. இழுக்கத்தை விட மிகவும் இழிவானது ஒன்றுமில்லை. ஒழுக்கத்தை விட மிகவும் உயர்வானது இவ்வுலகில் எதுவுமில்லை. ஆதலால் கல்லாதவர் முன்பு கட்டுரையைப் படித்துக் காட்டுவதைப் போல ஒரு இழிவான செயல் இவ்வுலகில் வேறொன்றுமில்லை.

சனி, 30 ஜனவரி, 2016

கற்றவர் எந்நாட்டினும் சிறப்படைவர்

                                         - முன்றுறையரையனார்

இது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. 400 வெண்பாக்களைக் கொண்டது. ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் பழமொழி ஒன்றைப் பெற்று வருவதால் இந்நூல் “பழமொழி” எனப் பெயர் பெற்றது. 

ஆற்றவும் கற்றார் அறிவுடையார் அஃதுடையார்

நாற்றிசையும் செல்லாத நாடில்லைஅந்நாடு;

வேற்றுநா டாகா தமவேயாம் ஆயினால்

ஆற்றுணா வேண்டுவ தில்.  (பாடல் எண் - 40)

ஆற்றுணா வேண்டுவது இல் என்பது பழமொழி.
ஆற்றுணா – கட்டுச்சோறு. இல் – தேவையில்லை.
கற்க வேண்டிய நூல்களை தேர்ந்ததெடுத்து கற்று அறிந்தவர்களே அறிவுடையவர்கள் ஆவார்கள். அத்தகைய அறிவுடையவர்கள் நான்கு திசைகளிலும் செல்லாத நாடில்லை. அந்நாடுகள் அவர்களுக்கு வேற்று நாடாக இராது. அவர்களின் சொந்த நாடுகளாகவே அவை விளங்கும். அத்தகையோர் செல்லும் வழிக்குக் கட்டுச்சோறு கொண்டுபோக வேண்டியது இல்லை. கற்றவர்களுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு ஏற்படும்.வேலைவாய்ப்பு


வேலைவாய்ப்பினைப் பெற்ற மாணவிகளை வாழ்த்துக்கிறோம்


Proud Moment........
Our students had Placement Drive by Infosys BPS on 28.01.2016 at Periyar University. Our twelve students have placed in the company. Our Principal Dr. M. karthikeyan appreciated our students. Our Placement coordinators Mr. Arul Prabhu, Asst.Prof, Dept of BCA, Mr. S. Hariharan, Asst.Prof & Head, Dept of Maths have guided our students effectively. our students are bringing laurels to our college esp in the Placement Achievement. Way To Go!.......

வேலைவாய்ப்புவேலைவாய்ப்பினைப் பெற்ற மாணவிகளுக்கு வாழ்த்துக்கள்

Proud Moment........
Our students had Placement Drive by Infosys BPS on 28.01.2016 at Periyar University. Our twelve students have placed in the company. Our Principal Dr. M. karthikeyan appreciated our students. Our Placement coordinators Mr. Arul Prabhu, Asst.Prof, Dept of BCA, Mr. S. Hariharan, Asst.Prof & Head, Dept of Maths have guided our students effectively. our students are bringing laurels to our college esp in the Placement Achievement. Way To Go!.......

வியாழன், 28 ஜனவரி, 2016

வேற்றுமையில் ஒற்றுமை..!!
சிவன்,இயேசு,அல்லா  என்ற 
தெய்வங்களின்  பெயர்கள் மூன்றெழுத்து..!!


விபூதி,சிலுவை,தொப்பி  என்ற
மத சின்னங்கள் மூன்றெழுத்து..!!

கோவில்,சர்ச்,மசூதி  என்ற
வழிபாட்டுத் தலங்கள் மூன்றெழுத்து..!!


மனிதர்களான நம்மிடையே ஏன்
பகைமை,சண்டை,குண்டு  என்ற மூன்றெழுத்து..??

இவைகளை தவிர்த்து இனி நாம்
அன்பு,உதவி,நட்பு என்ற மூன்றெழுத்து நேசத்தோடு


சேர்ந்து வாழ்வோம்..!!
தேசத்தை காப்போம்,,!!
மெல்லினம் இரண்டாவது இதழ் வெளியீடு


முதல் இதழ்


முதல் முயற்சி என் முதல் விருது..!!


    எங்கள் கல்லூரியில் நடைப்பெற்று வரும் கணித்தமிழ் பேரவையின் சிறந்த மாணவியாக கடந்த வாரம் 23.01.2016 அன்று  என்னை தேர்ந்து எடுத்து விருது வழங்கி பெருமைப்படுத்தினர்.மேலும் இது எனது முயற்சி மட்டுமல்ல என் தமிழ் ஆசிரியர் முனைவர்.இரா.குணசீலன் ஐயாவும் முக்கியக் காரணம்.நான் இவ்வளவு சிறிய நேரத்தில் இந்த உயரத்தை எட்டிப்பிடிக்க  தோள் கொடுத்தும்,தூண்டுதலாகவும்.உறுதுணையாகவும் இருந்தது ஐயா மட்டுமே.என்னுடை இந்த வெற்றி ஐயாவுடையது தான் என்பது உண்மை.சிறப்பு விருந்தினராக வந்தவர் திரு.நா.முத்து நிலவன் ஐயா அவரைப் போன்றோர் என்னை நினைவில் வைத்து எனக்கு ஒரு புத்தகத்தை பரிசாக தந்தார் என்பதை பேரின்பத்தோடு தெரிவிக்கிறேன் இங்கு.மேலும் அதே சமயம் நான் ஒன்று சொல்லுவேன் என்ற வலைப்பூவில் எழுதும் ஆசிரியரான திரு.செல்வக்குமார் ஐயாவும் அன்று என்னை சந்தித்து சில வாழ்த்துக்களைக் கூறினார்.இவர்களைப் போன்றோர் என்னை நினைவில் வைத்தது எனக்கு பேரின்பம் தான்.
   


இந்த வரிகள் உங்களுக்கு ஐயா, குருவிற்கு நிகரில்லை;குருவின்றி நிறைவில்லை; இது உங்களுக்கு நான் பறைசாற்றுக்கிறேன் ஐயா.என் முன்னேற்றமும் முயற்சியும் தங்களின் தூண்டுதலே காரணம் ஐயா.தங்களின் மாணவியாக தங்களை பெருமிதம் அடையச் செய்வேன் ஐயா.நன்றிகள் கோடி என்னுடைய இன்னொரு வழிக்காட்டும் குரு  நீங்கள் என்பது மிகையே ஐயா.


இந்த வரிசையில் என் தோழிகளையும் இடம் பெற செய்வேன்.

ஆண்டுவிழா


 23.01.2016 அன்று கே.எஸ்.ரங்கசாமி கலை அறிவியல் கல்லூரி மற்றும் கே.எஸ்.ஆா் மகளிர் கலை அறிவியல் கல்லூரி ஆகியன இணைந்து நடத்திய ஆண்டுவிழா இனிதே நடைபெற்றது. இவ்விழாவில் கல்வி நிறுவனங்களின் தலைவா் அரிமா டாக்டா் கே.எஸ்.ரங்கசாமி அவா்கள் தலைமை தாங்கினாா். செயலாளா் திரு ஆா் சீனிவாசன் அவா்களும், செயல் இயக்குநா் திருமதி கவிதா சீனிவாசன் அவா்களும் முன்னிலை வகித்தனா். புகழ்பெற்ற பட்டிமன்றப் பேச்சாளா் கவிஞா் திரு.நா. முத்துநிலவன் அவா்கள் சிறப்புரை ஆற்றினாா். மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட எந்தத் துறை படித்தாலும் அந்தத்துறையில் அறிஞராகலாம் ஆனால் தமிழ் இலக்கியங்களைப் படித்தால் மனிதனாகலாம் என்று இலக்கியங்களின் வாழ்வியல் தேவையை அழகுபட எடுத்துரைத்தாா். வேலைவாய்ப்பை தேடுவவா்களாக இருப்பதைவிட வேலைவாய்ப்பை உருவாக்குபவா்களாக இருக்கவேண்டும் என்று மாணவா்களிடம் நம்பிக்கை மொழிகளை விதைத்தாா். நட்பின் சிறப்பையும் சிறந்த நட்பைத் தேர்ந்தெடுக்கும் வழிமுறைகளையும் நயம்பட எடுத்துரைத்தாா். தொடர்ந்து சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கும், விளையாட்டில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கப்படன. மாணவிகளுக்கான உதவித்தொகையும் வழங்கப்பட்டது. நிறைவாக மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவை கே.எஸ்.ரங்கசாமி கலை அறிவியல் கல்லூரியின் முதல்வா் முனைவா் வி. இராதாகிருஷ்ணன் மற்றும் கே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூரியின் முதல்வா் முனைவா் மா.கார்த்திகேயன் அவா்களும் சிறப்பாக ஏற்பாடுசெய்திருந்தனா்.

ஞாயிறு, 24 ஜனவரி, 2016

தலைவனை எண்ணி தலைவியின் வருத்தம்

    
  பாலை

           
உள்ளது சிதைப்போ ருளரெனப் படாஅர்  
இல்லோர் வாழ்க்கை யிரவினு மிளிவெனச் 
சொல்லிய வன்மை தெளியக் காட்டிச்  
சென்றனர் வாழி தோழி யென்றும் 
கூற்றத் தன்ன கொலைவேன் மறவர்  
ஆற்றிருந் தல்கி வழங்குநர்ச் செகுத்த 
படுமுடை பருந்துபார்த் திருக்கும் 
நெடுமூ திடைய நீரி லாறே.
               - பாலை பாடிய பெருங்கடுங்கோ(பா.எ-283) 

     
                        
திணை
       பாலை
துறை
    

    
            தலைமகன் பொருள்வயிற் பிரிந்தவழி ஆற்றாளெனக் கவன்ற தோழிக்கு, "அவர் பிரிய, ஆற்றேனாயினேன் அல்லேன்” அவர் போயின கானத்துத் தன்மை நினைந்து வேறுபட்டேன்" என்று கிழத்தி சொல்லியது,
                             


துறை விளக்கம்
      தலைவன் பொருள் ஈட்டச் சென்ற காலத்தில் ஆற்றான் எனக் கவன்ற தோழியை நோக்கி, "அவர் பிரிவு கருதி வருந்தேன்; அவர் சென்ற பாலை நிலத்தில் உள்ளார் செய்யும் தொழில் கொடுமை எண்ணி அஞ்சினேன்" என்று தலைவி கூறியது.
பாடல் விளக்கம்
        தம் முன்னோரால் தேடி வைக்கப்பட்ட செல்வத்தை செலவு செய்பவர் செல்வர் என்று உலகத்தாரால் மதிக்கப்படமாட்டார்.  தாமாக
பொருள் இல்லாதார் முந்தையோர் பொருளை செலவு செய்தல்
இரத்தலைக் காட்டினும் இழிவு உடையது என்று சொன்ன ஆண்மைத் தன்மையை யாம் தெளியும்படி எடுத்துக் கூறி பொருள் தேட தலைவர் சென்றார் அவர் வாழ்க! எமனை போன்ற கொலைத் தொழிலைச் செய்யும் வேலை உடைய மறச் சாதியார் வழியின் இடத்தே தங்கி, வழிப் போவாரைக் கொன்றதனால் உண்டான புலாலை பருந்துகள் எதிர்நோக்கித் தங்கி இருக்கின்ற  பழமையான அச்சம் தரும் வழியே தலைவர் சென்றுள்ளார் என தலைவி தன் வருத்தத்தை தோழியிடம் கூறுகிறாள்.

தலைவியின் உடல் மெலிவு

                     நெய்தல்
           மாரி அம்பல் அன்ன கொக்கின்
           பார்வல் அஞ்சிய பருவரல் ஈர்ஞெண்டு
           கண்டல் வேரளைச் செலீஇயர்அண்டர்
           கயிறு அரி எருத்தின்கதழும் துறைவன்
           வாராது அமையினும் அமைக!
           சிறியவும் உள  ஈண்டு விலைஞர் கைவளையே.
                                -குன்றியனார்(பா.-117)
              


திணை
       நெய்தல்
துறை
      வரைவு நீட்டித்தவிடத்து தலைமகட்கு தோழி சொல்லியது,
துறை விளக்கம்

        தலைவன் திருமணம் செய்யாமல் காலம் தாழ்த்துவதை கண்டு வருந்திய தலைவிக்கு தோழி கூறியது.


பாடல் விளக்கம்
          மாரிக்காலத்து மலரும் அம்பல் மலரின் தண்டினைப் பார்த்து கொக்குகள் என்று எண்ணி அஞ்சிய நண்டுகள் தாழையின் வேர்களிடையே சென்று மறையும்,இடையரால் பிணிக்கப்பட்ட அறுத்துச் செல்லும் எருதைப் போல விரைந்து செல்லுதற்கு இடமாகிய கடற்றுரை உடையவன் தலைவன்,அவன் உன்னை திருமணம் செய்யாமல் காலம் தாழ்த்துவதால் உன் உடல் மெலிந்து உன் கைவளையல் தானே நவிழும்.அம்மெலிவை பிறரிடமிருந்து மறைப்பதற்காக விற்பவரிடமிருந்து சிறிய வளையல்களை வாங்கி அணிகிறாய் என்று தலைவியிடம் தோழி கூறுகிறாள்.