தெருவோரம் உதிரும் உயிர்ப்பூக்கள்..!!!
மார்கழி
மாத குளிரும்,
பங்குனி
மாத வெய்யிலும்,
பழகிபோச்சு..!!
பருவத்தில்
இருக்கும்
வித்தியாசம்
மறந்துபோச்சு..!!
கொட்டும்
மழையையும்,
அடிக்கும் வெய்யிலையும்
அடிக்கும் வெய்யிலையும்
தாங்கிக்கொள்ளும்
பக்குவம் வந்துருச்சு-
குடிசை போட காசு இல்லை என்பதனால்..!!
குடிசை போட காசு இல்லை என்பதனால்..!!
கால்
தேய உழைச்சாலும்-இருக்க
ஒரு
இடம் கிடைக்கவில்லை..!!
சிலரோ
பரிதாபப் படுகிறார்கள்..!!
பலரோ
ஏளனப்படுத்துகிறார்கள்..!!
என்னடா
வாழ்க்கை என்றாலும்;
இருக்க
கூடவா இடம் கிடைக்காது இந்த உலகில்
என்னும்
நம்பிக்கையில் வந்த
சிறு நிம்மதியோடு ஓடுகிறது
எங்கள்
வாழ்க்கை..!!
பகலே
அதிகம் என நினைத்தானோ என்னவோ
இரவை படைத்தான்
அந்த இறைவன்..!!
நித்திரையில்
நிம்மதியை
தொலைத்தோம்
நாங்கள்..!!
தெருவோரம்
கிடைக்கும் எங்களை-இறைவனே
ஏரெடுத்து
பார்க்கவில்லை..!!
அந்த
வழியே வரும்-வாகனம்
ஓட்டுபவன்
கண்களுக்கு
கண்களுக்கு
நாங்கள்
குப்பைகளாகவே
தெரிவோம் போல..!!
குப்பைகளாகவே
தெரிவோம் போல..!!
அவன்
சில நேரங்களில் எருமை
வாகனம்
ஓட்டி வருபவனாய் இருப்பதனால்
எமலோகமே
கொண்டுபோய் சேர்த்துவிடுகிறான்..!!
உயிரை
வருபவன் கையில் கொடுத்து
கண்
மூடுகிறோம்-அவன்
மனம்
வைத்தால் கண்திறப்போம்..!!
இல்லையென்றால்,
அவனே
பத்திரமாக கொண்டுபோய்
சேர்த்துவிடுவான்,
கைலாசத்துக்கோ..!!வைகுந்தத்துக்கோ..!!
- கீர்த்தனா
இரண்டாமாண்டு கணிதவியல்
அருமையான கவிதை கீர்த்தனா...
பதிலளிநீக்குவாழ்த்துகள் கீா்த்தனா. சிறந்த கவிதைகள் சிறப்பான மாற்றத்தை ௨ருவாக்கும். ௨ங்கள் எழுத்துகள் தொடர்ந்து நல்ல மாற்றத்தை ௨ருவாக்க வேண்டும். நன்றி.....
பதிலளிநீக்குஇங்ஙனம்:
கு. கந்தசாமி, வேதியியல் துறை ௨தவிபேராசிரியர்,
கே.எஸ்.ஆா் மகளிா் கல்லூாி.