வியாழன், 28 ஜனவரி, 2016

ஆண்டுவிழா


 23.01.2016 அன்று கே.எஸ்.ரங்கசாமி கலை அறிவியல் கல்லூரி மற்றும் கே.எஸ்.ஆா் மகளிர் கலை அறிவியல் கல்லூரி ஆகியன இணைந்து நடத்திய ஆண்டுவிழா இனிதே நடைபெற்றது. இவ்விழாவில் கல்வி நிறுவனங்களின் தலைவா் அரிமா டாக்டா் கே.எஸ்.ரங்கசாமி அவா்கள் தலைமை தாங்கினாா். செயலாளா் திரு ஆா் சீனிவாசன் அவா்களும், செயல் இயக்குநா் திருமதி கவிதா சீனிவாசன் அவா்களும் முன்னிலை வகித்தனா். புகழ்பெற்ற பட்டிமன்றப் பேச்சாளா் கவிஞா் திரு.நா. முத்துநிலவன் அவா்கள் சிறப்புரை ஆற்றினாா். மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட எந்தத் துறை படித்தாலும் அந்தத்துறையில் அறிஞராகலாம் ஆனால் தமிழ் இலக்கியங்களைப் படித்தால் மனிதனாகலாம் என்று இலக்கியங்களின் வாழ்வியல் தேவையை அழகுபட எடுத்துரைத்தாா். வேலைவாய்ப்பை தேடுவவா்களாக இருப்பதைவிட வேலைவாய்ப்பை உருவாக்குபவா்களாக இருக்கவேண்டும் என்று மாணவா்களிடம் நம்பிக்கை மொழிகளை விதைத்தாா். நட்பின் சிறப்பையும் சிறந்த நட்பைத் தேர்ந்தெடுக்கும் வழிமுறைகளையும் நயம்பட எடுத்துரைத்தாா். தொடர்ந்து சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கும், விளையாட்டில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கப்படன. மாணவிகளுக்கான உதவித்தொகையும் வழங்கப்பட்டது. நிறைவாக மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவை கே.எஸ்.ரங்கசாமி கலை அறிவியல் கல்லூரியின் முதல்வா் முனைவா் வி. இராதாகிருஷ்ணன் மற்றும் கே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூரியின் முதல்வா் முனைவா் மா.கார்த்திகேயன் அவா்களும் சிறப்பாக ஏற்பாடுசெய்திருந்தனா்.

1 கருத்து:

  1. அருமையான தருணம் அழகான பாடலோடு ஆரம்பித்தார் முடிவும் அருமையாக இருந்தது.

    பதிலளிநீக்கு