செவ்வாய், 19 ஜனவரி, 2016

தலைவி கூந்தலின் நறுமணம்


                   
          எட்டுத்தொகையில் ஒன்று குறுந்தொகை.நான்கு அடி சிறுமையும் எட்டடிப் பெருமையும் உடையது.இந்நூலைத் தொகுத்தவர் பூரிக்கோ. தொகுப்பித்தவர் பெயர் தெரியவில்லை.இந்நூல் 401 செய்யுட்களை உடையது. எட்டுத்தொகை நூல்களைத் தொகுத்துக் கூறும் வெண்பா இந்நூலை நல்ல குறுந்தொகை எனச் சிறப்பித்துக் கூறுகிறது.இந்நூலுக்கு பேராசிரியர்ரும்,நச்சினார்க்கினியரும் உரைவகுத்திருந்தனர்.
                   குறிஞ்சி
        கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
        காமம் செப்பாது கண்டது மொழிமோ;
        பயிலியது கெழீஇய நட்பின் மயில்இயல்
        செறி எயிற்று அரிவை கூந்தலின்
        நறியவும் உளவோ,நீ அறியும் பூவே?
                                -இறையனார்(பா.-2)
               
திணை
       குறிஞ்சி
துறை
           இயற்கைப் புணர்ச்சி புணர்ந்தவழி, தலைமகளை இயற்கைப் புணர்ச்சிகண் இடையீடுபட்டு நின்ற தலைமகன் நாணின் நீக்குதற் பொருட்டு,மெய் தொட்டுப் பயிறல் முதலாயின அவள் மாட்டு நிகழ்த்திக் கூடி,தனது அன்பு தோற்ற நலம் பாராட்டியது.
துறை விளக்கம்
           தலைவன் தலைவியின் நாணத்தை நீக்குதற் பொருட்டு அவளை சிரிக்க வைக்க முயலுகிறான்.
பாடல் விளக்கம்
               தேனை ஆராயந்து உண்ணுகின்ற அழகிய சிறகினை உடைய தும்பியே நீ என் நிலத்து வண்டாதலின் எனக்கு சாதகமாக கூறாமல் நீ அறிந்த உண்மையை கூறுவாயாக என்னோடு பழகிய பழக்கத்தால் பொருந்திய காதலையும்,மயில் போன்ற மென்மையையும், நெருங்கிய பற்களையும் உடைய இத்தலைவியின் கூந்தலை போல நறுமணமுடைய பூக்கள் வேறு உள்ளனவோ?

5 கருத்துகள்:

  1. நல்ல பதிவு ..தங்களின் தமிழ் எழுத்துக்களை அன்புடன் வரவேற்கிறேன் தொடர்ந்து முயற்சிக்கவும் லாவண்யா அக்கா..

    வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்.

    எளிய இனிய தமிழில் சங்க இலக்கியங்கள்.

    எம்போன்றோர்க்குப் பெரிதும் உதவும்.

    தங்கள் சேவை தொடரட்டும்.

    தொடர்கிறேன்.

    நன்றி.

    பதிலளிநீக்கு