கற்பனையை முதலெழுத்தாய்
கொண்டிருப்பாய் !
உள்ளே தூங்கிக்
கொண்டிருக்கும் இயக்குனரை
தூக்கத்தில் வெளிக்கொணர்வாய்
!
எண்ணுவன எல்லாம்
நிறைவேறுவது உன்னில் மட்டுமே !
கடவுளின் கற்பனை
இந்த உலகமென்றால் – அந்த
கடவுளும்
கனவு கண்டிருப்பாரோ !
சில
நேரங்களில் நித்திரையில் வருகிறாய் ;
சில
நேரங்களில் நித்தம் நித்தம் வருகிறாய் !
அந்த
ஆதி மனிதனும் சக்கரத்தை
முதலில்
உன்னில் தான் கண்டானோ !
மனிதனின்
நினைவளைகள் நீ என்றால்
உன்னுடைய
நினைவளைகள் தான் மனிதனா ?
கனவு
என்னும் மூன்றழுத்தும் ,
கற்பனை
என்னும் நான்கெழுத்தும் சேர்ந்துதான்
கண்டுபிடிப்பு
என்னும் ஏழெழுத்தை உருவாக்கியதோ ?