இங்கோ,
அந்த பிஞ்சு விரலை கொஞ்சி விளையாடவும்,
கண்ணத்தில் அன்பு முத்தமிடவும்,
நிலாச் சோறு ஊட்டி மகிழ்ந்திடவும்,
குறும்புத் தனத்தை கண்டு ரசித்திடவும்,
அம்மா என்ற வார்த்தையை செவி வழி கேட்டிடவும்
ஏங்குது அவளின் உள்ளம்!
அங்கோ,
கீழே விழுந்தால் தூக்கி விடவும்,
அன்போடு கொஞ்சி விளையாடவும்,
பாசத்தோடு கண்டிக்கவும்,
யாருமில்லாத தனிமை!
தன்னந்தனிமையில் அன்பைத் தேடி
தவிக்குது பிஞ்சு நெஞ்சம்!
அவளின் ஏக்கம்
இந்த குழந்தைக்கு தெரியவில்லையா?
இல்லை அந்த குழந்தையின்
தவிப்பு இவளுக்கு புரியவில்லையா?
ஏன் இந்த இடைவெளி? இவர்களை தடுப்பது எது?
அருமை.
பதிலளிநீக்குகன்னத்திலா, கண்ணத்திலா!
பேசாமல் அநாதை இல்லங்களையும், முதியோர் இல்லங்களையும் இணைத்து விட்டால் பெரிய மாற்றம் ஏற்படும்!
மனதை உருக்கும் கவிதை தோழி
பதிலளிநீக்குஅருமையான கவிதை தோழி, தொடரட்டும்!!!
பதிலளிநீக்குமனதை உருக்கும் கவிதை
பதிலளிநீக்கு