· படிக்காதவன்
ஒரு பயனும் தராத உப்பு நிலத்திற்கு சமம். அவனது உடலழகு மண் பொம்மைக்கு சமமானது.
·
படித்தவர்கள்
ஒருவரை ஒருவர் சந்தித்தால், இன் இவரை என்று காண்போமோ? என்று வருந்தும் விதத்தில் பிரிவர்.
இதுவே படித்தவர்களின் குணமாகும்.
·
பணக்காரனின்
முன், ஏழை பணிந்து நடப்பது போல, ஆசிரியரிடம் மாணவன் பணிவுடன் பாடம் கற்க வேண்டும்.
அவ்வாறு செய்யாவிட்டால் இழிவாக வாழ நேரிடும்.
·
தோண்டும்
அளவிற்கு ஏற்ப கிணற்றில் தண்ணீர் சுரக்கும். அது போல , மனிதன் எந்த அளவுக்கு படிக்கிறானோ,
அந்த அளவுக்கு அறிவாளியாக திகழ்வான்.
·
படித்தவனுக்கு
எந்த நாடும் சொந்த நாடாகி விடும். எந்த ஊரும் சொந்த ஊராக மாறும். இப்படியிருக்க, மனிதர்கள்
உயிர் பிரியும் வரை படிக்காமல் இருப்பது ஏனோ தெரியவில்லை.
·
மனிதன்
மகிழ்ச்சியாக வாழ உதவும் படிப்பு, உலகிலுள்ள மற்றவர்களும் மகிழ்ச்சியாக வாழ துணை பரிவதால்,
படித்தவர்கள் கல்வியை பெரிதும் விரும்புவர்.
·
தம்மை
விட தன் குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்குவது, அந்த குழந்தையின் பெற்றொருக்கு மட்டுமில்லாமல்
உலகத்திற்கே நன்மை தருவதாக அமையும்.
·
தன்
மகனை சான்றோர் என பலரும் புகழக் கேட்டால், அவனை பெற்ற பொழுதைவிட தாய் பெரிதும் மகிழ்வாள்.
நல்ல சிந்தனை.... பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
பதிலளிநீக்கு