வியாழன், 3 மார்ச், 2016

தமிழ்-99 விசைமுகத்தில் புள்ளி..!!

தமிழ்-99 விசைமுக அமைப்பு, தமிழில் அதிகமாகத் தட்டெழுதும் (டைப் செய்யும்) பயனர்களுக்குப் பல வசதிகளைத் தருகின்றது. அவற்றில் புள்ளி சேர்க்கையும் (auto-pulli) ஒன்று.

இந்த விதியின் சுருக்கம்:

1. ஒரு அகரமேறிய உயிர்மெய் எழுத்து இருமுறை வந்தால், முதலில் வந்த எழுத்தில் தானாகப் புள்ளி சேரும். சில எடுத்துக்காட்டுகள்:
முதல் தட்டு2வது தட்டுவிழைவு
க்க
ய்ய
ர்ர
ங்ங
ஜ்ஜ
2. கீழ்க்காணும் எழுத்துகள் இணையாக வந்தால் முதல் எழுத்தில் தானாகப் புள்ளி சேரும்:
முதல் தட்டு2வது தட்டுவிழைவு
ண்ட
ஞ்ச
ங்க
ந்த
ம்ப
ன்ற
தமிழ்-99 அமைப்பு முறையில் விதிமுறைகள் உள்ளன. இந்த அமைப்பு முறையை நடைமுறைப் படுத்தும் செயலிகள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகளில் மேற்குறிப்பிட்ட இரண்டும் அடங்கும். செல்லினத்தில் உள்ள தமிழ்-99 விசைமுகமும் இவ்விரு விதிகளையும் முழுமையாகக் கடைப்பிடித்து வருகின்றது.

புள்ளி தவிர்ப்பு

தானாகச் சேர்க்கப்படும் புள்ளி வசதி, தட்டெழுத்தை எளிமைப் படுத்தினாலும், சில சொற்களை எழுதும் போது சிக்கலை ஏற்படுத்துகிறது. குறிப்பாக வேற்று மொழி சொற்களைத் தமிழில் எழுதும் போது இந்தச் சிக்கல் தோன்றலாம்.
‘பூதத்தின்’, ‘சமமாக’, ‘சுந்தரராஜன்’, ‘மனனம்’, ‘கெமமான்’ (மலேசியாவில் உள்ள ஊர்), போன்ற சொற்களை எழுதும்போது, தேவை இல்லாத இடத்தில் புள்ளி சேந்து விடும். ‘பூதத்தின்’ என்று எழுதினால் ‘பூத்ததின்’ என்றும் ‘மனனம்’ என்று எழுதினால் ‘மன்னம்’ என்றும் வந்துவிடும். இதைத் தவிர்ப்பதற்கு புள்ளி தேவையற்ற இடத்தில் ‘‘ எழுத்தைத் தட்டலாம்.
எழுத்துக்காட்டுகள்:
சொல்தட்டு
பூதத்தின்ப ஊ த  த த இ ன புள்ளி
சமமாகச ம  ம ஆ க
சுந்தரராஜன்ச உ ந த ர  ர ஆ ஜ ன புள்ளி
மனனம்ம ன  ன ம புள்ளி
கெமமான்க எ ம  ம ஆ ன புள்ளி

சொல்லின் தொடக்கத்தில் ஏற்படும் சிக்கல்

‘சச்சின்’, ‘சச்சரவு’, ‘தத்துவம்’, ‘பப்பி’, ‘பப்புவா’ (நியூகினி) போன்ற சொற்கலில் ஒரே எழுத்தை தொடக்கத்தில் மும்முறை தட்டவேண்டும்.
எ.கா:  ச ச ச இ ன புள்ளி எனத் தட்டினால், ‘சச்சின்’ என்பதற்கு பதில் ‘ச்சசின்’ என்று தவறாகத் தோன்றும்.
‘ச’ அடுத்தடுத்து வருவதால், முதல் எழுத்தில் புள்ளி தானாகச் சேந்துவிடுகிறது. இதைத் தடுப்பதற்கும் ‘‘ எழுத்தைப் பயன் படுத்தலாம்.
சொல்தட்டு
சச்சின்ச  ச ச இ ன புள்ளி
சச்சரவுச  ச ச ர வ உ
தத்துவம்த  த த உ வ ம புள்ளி
பப்பிப  ப ப இ
பப்புவாப  ப ப உ வ ஆ
குறிப்பு: சொல்லின் தொடக்கத்தில் ஏற்படும் இச்சிக்கல் ஆண்டிராய்டு-செல்லினத்தின் 4.0.4ஆம் பதிகையில் தீர்க்கப்பட்டு எளிமையாகப்படும். எனினும் இவ்வழிமுறையை தொடர்ந்து பின்பற்றலாம்.
நான் இங்கு பகிர்ந்துள்ள பதிவு ஆரம்பத்தில் நானும் இந்த பிரச்சனையை  மேற்கொண்டேன்.அதன் காரணமாக தான் இன்று இதை பகிர்ந்துள்ளேன்.இனி புதியதாக தமிழ் தட்டச்சு செய்யும் அனைவருக்கும் உதவும் என்ற நோக்கில் பகிர்ந்துள்ளேன்.
நன்றி.

4 கருத்துகள்:

 1. புதியதாக தமிழ் தட்டச்சு செய்யும் அனைவருக்கும் உதவும். தங்கள் முயற்சிக்குப் பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 2. பதில்கள்
  1. தங்களின் தொடர் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் ஐயா.தொடர்ந்து இணைந்திருங்கள்.
   நன்றிகள்.

   நீக்கு