பத்துப்பாட்டு
ஆன்றோர் புகழ்ந்த அறிவினிற் றெரிந்து
சான்றோர் உறைத்த தண்டமிழ்த் தெரியல்
ஒருபது பாட்டும். –என நச்சினார்கினியரின் உரையும்,
பத்துப்பாட்டாதி மனம் பற்றினார் பற்றுவாரோ
எத்துணையும் பொருட்கிசையா இலக்கணமில் கற்பணையே --என சுந்தரம்பிள்ளை உரையும் கூறுகிறது.
”மூத்தோர்கள் பாடியருள் பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும்” என தமிழ்விடுதூது கூறுகிறது. பத்துப்பாட்டிலுள்ள பாடல்களை பா என்றும் பாட்டு என்றும் சுட்டுவர்.பத்துப்பாட்டு பத்து வகைப்படும். அற்றில் 4 அகப்பொருள் பற்றயன,6 புறப்பொருள் பற்றயன ஆகும் .நச்சினார்கினியர் எழுதிய உரையால் சங்ககாலப்புலவர்களே இதனைத தொகுத்தவர் என அறிய முடிகிறது. பத்துப்பாட்டு எனும் தொகுப்பு 13ஆம் நூற்றாண்டின் பின்னரே தோன்றியிருக்க வேண்டும்.பாடியோர் 8பேர் .பாடப்பட்டோர் 8பேர். இதற்க்கு பலர் உரை எழுதியுள்ளனர்.
ஆற்றுப்படை பாடல்கள்
பரிசில் பெற்ற கலைஞர் ஒருவர்,எதிர்ப்பட்ட கலைஞர்களைத் தமக்கு பரிசில் ஈந்த வள்ளலிடம் செல்லுமாறு வழிப்படுததுவது ஆற்றுப்படை ஆம். ஆற்றுப்படை என்னும் இலக்கிய மரபினை வேறு எம்மொழி இலக்கியத்திலும் காண இயலாது.ஆற்றுப்படை பரிசில் பெறும் கலைஞர் பெயரால் பெயர் பெறும்.
திருமுருகாற்றுப்படை
பாடிய புலவர்: நக்கீரர்
பாடப்பட்டோர்:முருகன்
அடிகள்:317
பொருள்:புறம்
பா :ஆசிரியப்பா
வேறு பெயர்:முருகு, புலவராற்றுப்படை
திணை :பாடான்திணை
துறை:ஆற்றுப்பாடை
உரையாசிரியர்: பரிதி, பரிமேலழகர்
"வீடு பெறுதற்குச் சமைந்தானோர் இரவலனை,வீடு பெற்றானொருவன் முருகனிடத்தே ஆற்றுப்பாடுத்துவது''--என்பது நச்சினார்கினியர் உரையாகும்.இது கீபி 300பிற்பட்டது என்பர்.இது 5பகுதிகளை கொண்டது.
உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு
பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங்கு —என தொடங்கி
இழுமென இழிதம் அருவிப்
பழமுதிர் சோலை மலைகிழ வோனே —என முடியும்.
பொருநராற்றுப்படை
பாடிய புலவர்: முடத்தாமக்கண்ணியார்
பாடப்பட்டோர்:கரிகாலன்
அடிகள்:248
பொருள்:புறம்
பா :ஆசிரியப்பா
திணை :பாடான்திணை
துறை:ஆற்றுப்பாடை
பரிசில் பெறப்பபோகும் பொருநனைப் புரவலனிடம் பரிசில் பெற்றபொருநன் ஆற்றுப்படுத்துவதாக அமைவதால், பொருநராற்றுப்பாடை எனப் பெயர் பெற்றது.இது போர்க்களம் பாடும் பொருநனை ஆற்றுப்படுத்துவது. கரிகாலனின் வீரம், கொடை, நாட்டு வளம்,காவிரியின் சிறப்பு ஆகியவை போற்றப்பட்டுள்ளன.
விறலியர் முடிமுதல் அடிவரை வருணிக்கப் பெறல்,மணமக்களுக்கு யாழை உவமையாக்கல் நெசவின் அருமை கூறல் முதலியன இப்பாடலில் குறிப்பிடத்தக்கதாகும்.
சிறுபாணாற்றுப்படை
பாடிய புலவர்: நல்லூர் நத்தத்தனார்
பாடப்பட்டோர்:நல்லியக் கோடன்
அடிகள்:269
பொருள்:புறம்
பா :ஆசிரியப்பா
திணை :பாடான்திணை
துறை:ஆற்றுப்பாடை
பரிசில் பெறவிருக்கும் பாணனை ஓய்மாநாட்டு நல்லியக் கோடனிடம் ஆற்றுப்படுத்துவதாக அமைவது, இப்பாடல். இது சிறு பாணரை ஆற்றுப்பத்துவதாக அமைந்தது.
விறலி வண்ணனை , மூவேந்தர் தலைநகரச் சிரப்பு,கடையெழு வள்ளல்களின் கொடைத்திறன்,சிறுபாணரின் வறுமை, யாழ் பண்ணின் சிறப்பு பற்றியும்
நல்லியக் கோடனின் வீரம், கொடை, விருந்தோம்பல், பரிசளிக்கும் திறன் ஆகியன விளக்கப்பட்டுள்ளன. ஆமூர், வேலூர், விலங்கை போன்ற ஊர்கள் சுட்டப்பட்டுள்ளன.
பெரும்பாணாற்றுப்படை
பாடிய புலவர்: உருத்திரங்கண்ணனார்
பாடப்பட்டோர்:இளத்திரையன்
அடிகள்:500
பொருள்:புறம்
பா :ஆசிரியப்பா
திணை :பாடான்திணை
துறை:ஆற்றுப்பாடை
பரிசில் பெறவிருக்கும் பெரும் பாணனை பரிசில் பெற்ற பாணன், தொண்டைமான் இளந்திரையனிடம் அற்றப்படுத்தியது.
இடனுடைப் பேரியாழ் முறையுளிக் கழிப்பி
என்ற தொடர் இடம் பெறலாலும், மிக்க அடிகளைப் பெற்றித்தலும், பெரும்பாண்குடியினரை ஆற்றுப் படுத்தியதாலும் இது பெரும்பாணாற்றுப்படை எனப்பட்டது.
யாழ் வருணனை, ஐந்நிலத்தார் ஒழுகலாறு, வாணிக மகளிர் உப்புப்பார வண்டி ஓட்டல், கழுதை மேல் வணிகர் மிளகுபொதி கொண்டேகல், எயின் குடியிருப்பு போன்ற பல செய்திகளும் இடம் பெற்றுள்ளன.கனலி(சூரியன்) ,ஞெகிலி(தீக்கடைகோல்), வல்சி (உணவு) போன்ற அரிய சொற்கள் இடம் பெற்றுள்ளன.
இதனை தமிழண்ணல் "சமுதாயப்பாட்டு " என்பார்.
மலைபடுகடாம்
பாடிய புலவர்: பெருங்கௌசிகனார்
பாடப்பட்டோர்:
அடிகள்:583
பொருள்:புறம்
பா :ஆசிரியப்பா
வேறு பெயர்:கூத்தாற்றுப்படை
திணை :பாடான்திணை
துறை:ஆற்றுப்பாடை
பரிசில் பெற்ற கூத்தனொருவன் பெறவிருக்கும் கூத்தனைப் பல்குன்றக் கோட்டத்துச் செங்கண் மாத்துவேள் நன்னன் சேய் நன்னனிடம் ஆற்றுப்படுத்திது.
அலகைத் தவிர்த்த எண்ணருந் திறத்த
மலைபடு கடாஅம் மாதிரத்தியம்ப
நன்னன் நாட்டிற்குச் செல்லும் வழி, வழியில் கிட்டும் உணவுகள், சோலை அழகு,மலைவளம், நாட்டின் சிறப்பு , சிவனின் அருள் போன்ற பல இதில் குறிப்பிடப் பட்டுள்ளன.
நன்று
பதிலளிநீக்குதகவல் பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்கு