சனி, 5 மார்ச், 2016

தண்ணீா் மோசம்


    

      முந்தைய காலத்தில் வாழ்ந்த மக்கள் ஆரோக்கியமாகவும்  நோய்கள் தாக்காமலும், நீண்ட நாள்கள் வாழ்வதற்கு காரணமானவை அவர்கள் மேற்கொண்ட உணவு முறைகளும் சுத்தமான தண்ணீருமே ஆகும்.  அவர்கள் நன்னீரை அருந்தி ஆரோக்கியமான வாழ்வை மேற்கொண்டனர்.
     அப்போதெல்லாம் மக்கள் தனியாக சுத்திகரிப்பானைக் கொண்டெல்லாம் தண்ணீரை சுத்தம் செய்வதில்லை.  ஆனால், தற்போது தண்ணீரை சுத்தம் செய்வதற்காக பற்பல நவீன கருவிகளை பயன்படுத்துகின்றனர்.  இதன்மூலம் நீரில் உள்ள பல சத்துக்கள் (மினரல்ஸ்) நீக்கப்படுகிறது.
     இவ்வாறு சுத்திகரிக்கப்பட்ட நீரை பருகுவதால் அதில் உள்ள மினரல்கள் நீக்கப்படுவதாலும் மனிதனுக்கு சிறுநீரககல் ஏற்படுகிறது.  சிறுநீரககல் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் மினரல் வாட்டரே என்கிறார்கள்.
         முந்தைய காலத்தில் எல்லாம் பானையில் நீரை ஊற்றி வைப்பார்கள்.  நீரில் உள்ள கசடுகள் அனைத்தும் பானையின் துவாரங்களில் சென்று தங்கிவிடும் அதுவே உண்மையில் சுத்திகரிக்கப்பட்ட நீர் ஆகும். ஆனால் தற்போது சுத்திகரிப்பு என்ற பெயரில் நீரை மாசுபடுத்துகிறோம்.  மேலும் அந்த நீரை நெகிழி பொருள்களில் சேமித்து வைத்துக்கொள்கிறோம்.  இதுதான் நம் இந்திய கலாச்சார முறையா?
     மேலும், நம் முன்னோர்கள் அனைவரும் இயற்கையாக கிடைக்கும் ஆறு, கிணறு நீரையே குடிக்கப் பயன்படுத்தினர்.  ஆனால், தற்போது அவையனைத்தும் கழிவு நீர்களாகவே நமக்கு கிடைக்கின்றன.
    
     “ஒவ்வொரு ஒரு லிட்டர் தண்ணீரிலும் ஒரு துளி கழிவு(மலம்) உள்ளது” என கூறுகின்றனர்.  இதற்கு காரணம் இந்தகால தலைமுறை மக்கள் ஆறு, கடல்களில் தான் அனைத்து வகையான கழிவும் பொருள்களையும் சோ்க்கின்றனர்.  உடை துவைப்பது, கால்நடைகளை குளிப்பாட்டுவது, மேலும் சாக்கடைக் கழிவுகள் போன்ற எல்லா வகையான கழிவும் இதில் சேர்க்கப்படுகிறது.
     “கறந்த பாலை போல சுத்தமானது மழைநீர்” ஆனால், அந்த மழைநீரிலும், அதற்கு உதாரணமாக சொல்லப்படும் இந்த பாலிலும் கூட கலப்படமும், கழிவும் கலந்துவிட்டன.  அமிலமழை போன்ற மழைகளும் மேலும் செயற்கையான மழைகளும் கூட வந்துவிட்டன.  ஆண்டு மும்மாரி மழைப்பொழியும் என்பது மாறி நினைத்த போதெல்லாம் பெய்கிறது.  சில நேரம் மழை பெய்யாமல் பொய்த்துவிடுகிறது.
         முந்தைய காலத்தில் நம் மக்கள் வழிப்போக்கர்கள் இளைப்பாறுவதற்காகவே தண்ணீர் பந்தல் அமைத்து இலவசமாக தண்ணீர் வழங்கினார்.  ஆனால் தற்போது பணம் கொடுத்து தண்ணீர் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.  இதற்கு காரணம் நாம் தண்ணீரைப் பாதுகாக்காமல் விட்டதும், மரங்களை அழித்து மழையை தடுத்ததே ஆகும்.
     மேலும் மனித உடலில் 70% நீரால் ஆனது.  அந்த 70% நீரும் அசுத்தத்தால் நிரப்பப்பட்டால் உடல் எவ்வாறு பாதிக்கப்படும் என்பதை சிந்திக்க வேண்டும்.
     மேலும் உலகில் 1% மட்டுமே நன்னீர் உள்ளது.  நாம் அந்த 1% நீரையும் பல கழிவுகள் மூலம் அசுத்தம் செய்கிறோம்.  பின் உப்புநீரை குடிநீராக்கும் திட்டம் என ஆரமித்து மீண்டும் அந்த நீரை சுத்தம் செய்யும் பெயரில் அனைத்து நல்ல மினரல்களையும் அழித்துவிடுகிறோம்.
     நம் முந்தைய தலைமுறைகள் நமக்கு விட்டுச் சென்ற இயற்கையை சிறிதாவது நாம் நமக்கு அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்வோம்.  இனியாவது இயற்கையையும், நன்னீரையும் மாசுபடுத்தாமல் பாதுகாப்போம்.
         மரங்களை வளர்த்து, இயற்கையை காப்போம்!!!
         நன்னீரை காத்து தலைமுறையை வளர்ப்போம்!!!

1 கருத்து:

  1. தண்ணீரை நாம் எவ்வாறு எல்லாம் சுத்தம் என்ற பெயரில் அசுத்தப்படுத்திக் கொண்டிருக்கிறோம் என அழகாக கூறினாய் தோழி

    பதிலளிநீக்கு