இரண்டும் ஒன்றல்ல!
சட்ட மன்ற உறுப்பினரோ, பாராளுமன்ற உறுப்பினரோ மறைந்தால் அந்த தொகுதியில் நடத்தப்படுவது
இடைத்தேர்தல் (பைஎலக்சன்), சட்டமன்றமோ, நாடாளுமன்றமோ குறிப்பிட்ட காலத்துக்கு முன்
கலைக்கப்படுவதால் வருவது இடைக்கால தேர்தல் (மிட்டர்ம் எலக்சன்)
நைஜூரீயா நாட்டினர் Nigerian என்றும், நஜைர் நாட்டினர் Nigerien என்றும் குறிப்பிடுகிறார்கள்.
பொலிவியானோ என்பது பொலிவியா நாட்டு நாணயம். பொலிவர் என்பது வெனிசுலா நாட்டு
நாணயம்.
ஒரு நாளில் ஏற்படும் தட்ப வெப்ப மாற்றங்களை weather என்றும்,
பல மாதங்கள் நிலவும் தட்ப வெப்ப நிலையை climate என்றும் குறிப்பிடுகிறோம்.
இந்திய அரசின் தலைவர் குடியரசுத் தலைவர் ஆவார். இந்திய அரசாங்கத்தின் தலைவர்
பிரதமர் ஆவார்.
அமெரிக்க விண்வெளி வீரர் அஸ்ட்ராநாட் என்றும், ரஷிய விண்வெளி வீரர் காஸ்மோநாட்
என்றும் அழைக்கப்படுகிறார்கள்.
காமன்வெல்த் நாடு ஒன்றுக்கு நியமிக்கப்படும் இந்திய பிரதிநிதி
“ஹை கமிஷனர்” என்றும், காமன்வெல்த் நாடல்லாத பிற வெளிநாடுகளுக்கு நியமிக்கப்படும்
இந்திய பிரதிநிதி “அம்பாசிடர்” என்றும் அழைக்கப்படுகிறார்கள்.
நன்று
பதிலளிநீக்கு