ஞாயிறு, 6 மார்ச், 2016

பத்துப்பாட்டு தொடர்ச்சிமுல்லைப்பாட்டு
பாடிய புலவர்: நப்பூதனார்
பாடப்பட்டோர்:நெடுஞ்செழியன்
அடிகள்:103
பொருள்:அகம்
பா :ஆசிரியப்பா
வேறு பெயர்:முருகு, புலவராற்றுப்பட
திணை:குறிஞ்சி
துறை:ஆற்றுப்பாடை
உரையாசிரியர்:மரைமலையடிகள்
போருக்கு சென்ற தலைவன் வருகைக்கு தலைவி காத்திருந்தால் ஆகையால் இது முல்லை திணைக்கு உரியது. மன்னன்  பாசறையில் வாளுடைய மகளிர் விளக்கு அணையாது காத்தல் தொடங்கி சகுனம் கேட்டல் போன்ற பல செய்திகளை கூறுகிறது.
பட்டினப்பாலை
பாடிய புலவர்:உருத்திரங்கண்ணனார்
பாடப்பட்டோர்:கரிகாலன் (திருமாவளவன்)
அடிகள்:301
பொருள்:அகம்
பா :ஆசிரியப்பா
வேறு பெயர்:பாலைப்பாட்டு,வஞ்சி நெடும் பாட்டு
திணை :பாலைத்திணை
இஃது அகப்பொருள் பாடல் எனினும் புறப்பொருள் செய்திகளையே பெரும்பாலூம் விளக்கி உரைக்கிறது.கரிகாலன் வீரம், உயர்ந்த உள்ளம்,பரத்தவர் வாழ்கை, கடல் வாணிகம் போன்ற பல ஓவிய மமாக்கப்பட்டுள்ளன.
குறிஞ்சிப்பாட்டு

பாடிய புலவர்: கபிலர்
பாடப்பட்டோர்:ஆரிய அரசன் பிரகத்தன்
அடிகள்:301
பொருள்:அகம்
பா :ஆசிரியப்பா
வேறு பெயர்:பெருங்குறிஞ்சி
திணை :குறிஞ்சித்திணை
ஆரிய அரசன் தமிழின் பெருமை பாடுவதாக கபிலர் பாடியுள்ளார்.கபிலர் குறிஞ்சித்திணை பாடுவதில் வல்லவன். செங்காந்தள் மலர் முதல் மலை யெருக்கம் பூ வரை 99 பூக்கள் ஒரே இடத்தில் 36வரிகளில் தொகுத்துள்ளார்.
பின்னைய கோவை நூல்களுக்கு குறிஞ்சிப் பாட்டு வழிகாட்டிது எனலாம்.
நெடுநல்வாடை
பாடிய புலவர்: நக்கீரர்
பாடப்பட்டோர்:நெடுஞ்செழியன்
அடிகள்:188
பொருள்:அகம்
பா :ஆசிரியப்பா
வேறு பெயர்:
திணை :பாலைதிணை
இதனை நச்சினாக்கினிர் புறப்பாடல் எனவும், பண்டிதமணி அகப்பாடல் எனவும் கூறுவர்.தலைவனை பிரிவால் வருந்தும் தலைவியின் துயர் தீர வேண்டி அரசவைப் பெண்டிர் கொற்றவையை வழிபடுவது இப்பாடலின் துறை ஆகும்.இதில் வடமொழியும் பிராகிருதமும் ஆங்காங்கு காலந்துள்ளன.துயருறும் தலைவிக்கு நெடுவாடையாகவும், போரில் வெற்றி பெறும் தலைவனுக்கு நல்வாடை யாகவும் வாடைகாற்று விளங்குதலைக் கூறுவதால் இப் பெயர் பெற்றது.
மதுரைக்காஞ்சி
பாடிய புலவர்: மாங்குடி மருதனார்
பாடப்பட்டோர்:நெடுஞ்செழியன்
அடிகள்:782
பொருள்:புறம்
பா :ஆசிரியப்பா
வேறு பெயர்:கூடற்றமிழ், காஞ்சிப்பாட்டு
திணை :காஞ்சித்திணை
நிலையாமை கூறி அரசனை உயர்நெறிக் கண்செழுத்துவதாக இயற்றப்பட்டுள்ளது.பாண்டிய நாட்டு ஐந்திணை வளம், மதுரையின் சிறப்பு,அங்காடிகள் மற்றும் நெடுஞ்செழியன் வீரம்,கொடை,கடமை போன்ற பல செய்திகளும் கூறப்பட்டுள்ளன.

1 கருத்து: